மதியவேளையொன்றில் பொம்மைகளுடன்
விளையாடிக்கொண்டிருக்கிறாள் நிலா.
நேற்றைய கோயில் பயணம்
நினைவில் இன்னும் பயணம்.
டெடிபேருக்குப் பூக்கள் தூவி
புது வஸ்திரமும் சாத்தி
அவதரிக்கச் செய்துவிட்டாள்
ஆதிக்கடவுளரில் ஒன்றாய்.
மதிய உணவுக்காய் வீடுவந்த மாமனிடம்
சாமி கும்பிட்டுக்கொள் மாமா என்கிறாள்.
கரடியெல்லாம் சாமியாகுமா?
கேலியை அலட்சியம் செய்து கேட்கிறாள்,
யானையும் குரங்கும் சாமியாகுமென்றால்
கரடி ஏன் சாமியாகாது?
வாயடைத்து நிற்கிறான் மாமன்,
மருமகளின் வாய்சாலம் கண்டு.
******************
எல்கேஜி படிக்கும் நிலாவிடம்
தன் பெயரை எழுதச் சொல்லி
ஆசையுடன் கேட்கிறார் தாத்தா.
ரொம்பச் சுலபம் என்றபடியே சொல்கிறாள்,
J போட்டு ஒரு ball வரைந்துவிடவேண்டும்.
திகைத்து நிற்கும் தாத்தாவிடம் கேட்கிறாள்,
ஜேபால்தானே உங்க பெயர்?
சுதாரிப்புக்குப் பின் மெச்சுகிறார் தாத்தா,
பேத்தியின் பேச்சுவன்மையை!
பெயர் சொல்லத்தானே பேரப்பிள்ளைகள்?
*********************
ஊரிலிருந்து தாத்தாவால் அழைத்துவரப்பட்டு
தன் பள்ளியில் சேர்த்துவிடப்பட்டப்
புதிய பொம்மைப்பிள்ளைகளுக்கு
மும்முரமாய்ப் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறாள் நிலா.
சாப்பிட வாம்மா நிலா..
தாத்தா.. நான் டீச்சர் விளையாட்டு விளையாடிட்டிருக்கேன்...
சாப்பிட்டுப் போய் விளையாடம்மா..
மாட்டேன்.. சாப்பாடு வேணாம்.
அப்படிச் சொல்லக்கூடாது. வந்து புவ்வா
சாப்பிட்டுப்போம்மா..
புவ்வாவா? தோ.. வரேன்.
தட்டில் சோறு கண்டு மிரள்கிறாள்.
அம்மா… எனக்கு சோறு வேண்டாம்.
தாத்தா சொன்ன புவ்வாதான் வேணும்.
இதுதானம்மா புவ்வா..
இல்லை. இது இல்லை. எனக்கு புவ்வாதான்
வேணும்...
அடம்பிடிக்கும் நிலாவை அடக்கும் நோக்கில்
தாத்தா கேட்கிறார்,
நிலா நல்லபிள்ளையா? கெட்டபிள்ளையா?
நான்.. நான்…
நல்லபிள்ளை மாதிரி கெட்டபிள்ளை!
இப்படியொரு பதில் எதிர்பார்த்திராதத் தாத்தா
அடக்கமாட்டாமல் சிரித்துவைக்கிறார்.
என்னைக்கும் குழந்தைகளோட குறும்புத்தனமும், புத்திக்கூர்மையும் அவங்களோட கேள்விக்கு விடைதெரியா நம்மோட அசட்டுத்தனங்களும் ரொம்ப அழகானவை... வாழும் மனித கடவுள் குழந்தைகள் தான் சகோ, படிக்கையில புன்னகையோட தான் படிச்சேன், ரசிச்சேன்...
ReplyDeleteவருகைக்கும் ரசித்துக் கருத்திட்டதற்கும் நன்றி ரேவா.
Deleteதலைப்பே பார்த்தவுடன் இது குழந்தைகள் சம்பந்தமாக இருக்கும் என்று கனித்தேன்
ReplyDeleteசரியாகத்தான் இருந்தது ஆனால் இன்னும் அழகாக
இயல்பாக இருக்கு சேட்டைகள்
வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் நன்றி ஹைதர் அலி.
Deleteகுழந்தைகளுடனான பேச்சு நமக்கு இன்னொரு உலகத்தை அறிமுகம் செய்யும்.. இந்தக் கவிதைகளில் நிகழ்வது போல.
ReplyDeleteவருகைக்கும் அழகான விமர்சனத்துக்கும் நன்றி ரிஷபன் சார்.
Deleteநிலாவின் சேட்டைகள்
ReplyDeleteபடித்தேன்
ரசித்தேன்
நிறைய சிரித்தேன்
நிலாவின் சேட்டைகளை தொடர்ந்து பகிருங்கள் தோழி
தங்கள் வருகைக்கும் ரசித்தமைக்கும் மிகவும் நன்றி செய்தாலி.
Delete//யானையும் குரங்கும் சாமியாகுமென்றால்
ReplyDeleteகரடி ஏன் சாமியாகாது?//
வாஸ்தவம் தானே.....டெடிபேர் உம்மாச்சி...
குழந்தைகளின் கேள்விகளும், பதில்களும் என்றுமே வித்தியாசமானவை தான்.
ரோஷ்ணி ஊருக்கு போயிருக்கும் போது கோவிலில் கருடாழ்வாரை BIRD உம்மாச்சி என்றாள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதி. ரோஷ்ணிக்குட்டி பற்றிச் சொன்னதும் வியக்கவைக்கிறது. குழந்தைகளின் பார்வையிலிருந்தும் பார்க்க நாம்தான் கற்றுக்கொள்ளவேண்டும்.
Deleteகுழந்தை நிலாவின் பேச்சுக்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன.
ReplyDeleteஅழகானதோர் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
தங்கள் வருகைக்கும் ரசித்துப் பாராட்டியமைக்கும் நன்றி வை.கோ. சார்.
Deleteநான்.. நான்…
ReplyDeleteநல்லபிள்ளை மாதிரி கெட்டபிள்ளை!////////////////////
அஹா ஹா ஹாஆஆஆஆ .
சேம் சேம் ஸ்வீட் நிலா
.சரியான சேட்டை நிலாக் குட்டி ...
ரொம்ப சுப்பரா எழுதுறிங்க
வருகைக்கும் சிரித்து ரசித்ததற்கும் நன்றி கலை.
Deleteஅடக்கமாட்டாமல் சிரித்துவைக்கச் செய்யும் நிலா மனதில் பிரகாசிக்கிறாள்..
ReplyDeleteதங்கள் வருகைக்கும் அழகான விமர்சனத்துக்கும் நன்றி மேடம்.
Deleteநாங்களும் 1.வாயடைத்து நின்றோம்.
ReplyDelete2. மெச்சினோம்.
3.அடக்க மாட்டாமல் சிரித்தோம்!
பலே! பலே !
kbjana.blogspot.com
தங்கள் வருகைக்கும் நிலாவுடனேயே பயணித்து மகிழ்ந்ததற்கும் நன்றி.
Deleteரசித்ததும் ரசிக்கும் படியான அருமையான
ReplyDeleteபதிவாக்கித் தந்ததும் அருமை
மகிழ்வூட்டும் பதிவு
தொடர்ந்து தர வேண்டுகிறேன்
தங்கள் வருகைக்கும் தமிழ்மண வாக்குக்கும், உற்சாகம் தரும் கருத்துரைக்கும் நன்றி ரமணி சார்.
Deletetha.ma 5
ReplyDeleteகுட்டி நிலா...சுட்டி நிலா...கெட்டி நிலா...
ReplyDeleteரசனையானப் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி ரெவெரி.
Deleteநல்ல கவிதை.... சுட்டி நிலா அழகு நிலா....
ReplyDeleteகுழந்தைகளின் பேச்சை வெல்ல இன்னும் யாரும் பிறக்க வில்லை எனவே தோன்றுகிறது.....
மிகச் சரியாக சொன்னீர்கள். தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி வெங்கட்.
Deleteநிலாவின் சேட்டைகள் ரசிக்கும் படி இருக்கின்றன. கேள்விகளோ நம்மை யோசிக்க வைப்பவை! பழைய சம்பவங்களை இன்னும் நினைவில் வைத்து எழுதியுள்ளமை அறிந்து வியக்கிறேன்!பாராட்டுக்கள் கீதா!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி அக்கா.
Deleteசிறு பிள்ளையாய் மாற்றிய பதிவு அருமை .
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசிகலா.
Deleteநிலா கேட்கும் கேள்விகள் ஒவ்வொன்றுமே சிந்திக்க வைத்தன. வயதுக்கு மீறிய ஞானம். யானையும் குரங்கும் சாமியாகுமென்றால் கரடி ஏன் சாமியாகாது?. வாயடைத்து நின்றது மாமன் மட்டுமல்ல. நானும்தான். இந்க் குழந்தைகள் உலகம் அற்புதமானது. உணர்வுகளைக் கிளறிச் செல்லும் அழகுக் கவிதை. அசத்துங்க.
ReplyDeleteவலைச்சரப்பணிக்கிடையிலான தங்கள் வருகையும் விமர்சனமும் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி. மிகவும் நன்றி துரைடேனியல்.
Deleteசூழலை இதமாக்கும் நிலாவின் சேட்டைகள் உள்ள பூரிப்பை ஏற்படுத்துகிறது.
ReplyDeleteநிலா நிலா ஓடி வா..!! நில்லாமல் ஓடி வா..!!
வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் நன்றி ராஜி.
Deletej ball இப்படியும் எழுதலாமா?
ReplyDeleteball என்று எழுதவும் வேண்டாம். வரைந்தால் போதுமாம். ஜெயபால் என்பதைத்தான் அவள் அப்படி எளிதாய் எழுதிவிட்டாள்.
Deleteஎவ்வளவு எழுத்துச் சிக்கனம் பாருங்கள்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விச்சு.
குழந்தைகளின் உலகமே தனி. அவர்களின் சிந்தனைகளும் தனி. நிலாவின் குறும்புகள் ரசித்துச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தன. பார்க்கப் பார்க்க, ரசிக்க ரசிக்க சலிக்காதது மழை, நிலா. இந்த நிலாவும் அடிக்கடி வரட்டும். நன்று!
ReplyDeleteவருகைக்கும் ரசனையுடன் இட்டக் கருத்துக்கும் நன்றி கணேஷ்.
Deleteஅய்யய்யோ கவிதை மாதிரி இருக்கே...நமக்கு புரியாதேனு நினைச்சுட்டே வாசிச்சேன்... முடிந்துவிட்டது.....(அதாவது எனக்கு புரிஞ்சிடுச்சு...ஹி..ஹி) நல்லாருக்கு கீதா... உண்மையிலேயே குழந்தைகளின் பெற்றொரைவிட அதன் பாட்டி-தாத்தா அவர்களுடைய குறும்புகளை அதிகமாகவே ரசிப்பார்கள்... அவர்களும் அவர்களுடன் குழந்தைகளாகிவிடுவார்கள்.... நல்ல பகிர்வு.
ReplyDeleteதங்கள் முதல் வருகைக்கும் அழகான விமர்சனத்துக்கும் நன்றி.
Deleteநிலாவுக்கு பதில் சொல்ல இன்னும் நிறையப் படிக்கவேணும்போல.சந்தோஷமாயிருக்கு இப்ப உள்ள குழந்தைகளின் புத்திசாலித்தனத்தை நினைக்க !
ReplyDeleteவருகைக்கும் மகிழ்வானக் கருத்துரைக்கும் நன்றி ஹேமா.
Deleteமழலைக் குறும்புகள் மனதை மயக்கும்!
ReplyDeleteஅருமை!
தங்கள் வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் நன்றி புலவர் ஐயா.
Deleteமழலை உலகம் மகத்தானது.அதனை படங்களுடன் பகிர்ந்ததுக்கு மிக்க நன்றி!
ReplyDeleteவருகைக்கும் ரசித்துப் பின்னூட்டமிட்டதற்கும் நன்றி ஸாதிகா.
Deleteபிள்ளைக் குறும்பு. உள்ளம் கொள்ளை கொள்ளுது. வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா.இலங்காதிலகம்.
தங்கள் வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் மிகவும் நன்றி.
Deleteநல்ல கவிதை
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.
Deleteஅழகான சேட்டைகள். குழந்தைகளின் ஒவ்வொரு அசைவுமே கவிதைதான். (வலைச்சரப் பதிவிற்கு நன்றி... இன்று தான் காண முடிந்தது)
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமுதா.
Deleteதென்றலில் தங்கள் பின்னூட்டத்தை காணாமல் நானும் நேற்று தேடினேன் . எனது மின் அஞ்சலில் மட்டும் பார்த்தேன் நன்றி கூற தேடித் தேடித் தோற்றேன் . நன்றி சகோ .
ReplyDeleteஉடனடி பதிலின்மைக்கு மன்னிக்கவும். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சில நாட்களாகவே வலைப்பக்கம் வர இயலவில்லை. தங்கள் அன்புக்கு நன்றி சசிகலா.
Deleteசெல்ல நிலா அழகுநிலா அறிவுநிலா வளர்பிறையே வாழ்க
ReplyDeleteநானும் நேற்று தேடினேன் இன்று மீண்டும் பெற்றேன் .நன்றியைப் பதிய விடாமல் இடக்கு நடக்கிறது.
நேரே வந்து சொல்லிவிட்டேன் கீதா
தங்கள் அன்புக்கு நன்றி சக்தி. இனி தொடர்ந்து வருவேன்.
Deleteஒருமுறை நான் ஊருக்கு புறப்பட தயாரானேன்..
ReplyDeleteஎன் மகன் ஐஸ்கிரீம் வேண்டும் என்றான்..
வாங்கிக்கொடுத்தேன்..
அப்புறம் கேட்டான்..
"நீங்க எதுக்கு ஊருக்கு போறீங்க என்று"
நான் சொன்னேன்
"என்னிடம் இருந்த பணம் எல்லாம் சரியாப்போச்சு
நான் போய் வேலை பார்த்து பணம் கொண்டு வாரேன்" என்று..
கொஞ்ச நேரம் யோசித்தவன்
" நீங்க போயி இந்த ஐஸ்கிரீம கொடுத்திட்டு திரும்ப
அந்த பணத்த வாங்கிட்டு வாங்க"
அப்புறம் காசு இருக்கும் ல
நீங்க இங்கேயே இருங்க என்றான்..
நான் திக்கித்துப் போனேன்...
குழந்தைகளின் சேட்டைகளும்
அவர்களின் பதிலளிக்கும் முறைகளும்
என்றும் அகராதிக்குள் அடங்காதவை..
நிலாக்குட்டியின் சேட்டைகளை படித்து ரசித்தேன் சகோதரி..
\\குழந்தைகளின் சேட்டைகளும்
Deleteஅவர்களின் பதிலளிக்கும் முறைகளும்
என்றும் அகராதிக்குள் அடங்காதவை\\
மிகவும் சரியாகச் சொன்னீர்கள். குழந்தைகளின் நிலைக்கு நம்மை இறக்கிக்கொண்டால் எல்லாமே சந்தோஷமயம்தான். தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி மகேந்திரன்.
சூப்பர் நிலாக்குட்டியின் சேட்டைகள்
ReplyDeleteரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?
வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி சதீஷ். உடல்நிலை சரியில்லாமல் சிலநாள் வலைப்பக்கம் வரவில்லை. விரைவில் உங்கள் தளத்துக்கு வருகிறேன்.
Deleteமனம் கொள்ளை போகிறது.
ReplyDeleteமகன் வளர்ந்து விட்டானே என்று தோன்றுகிறது.
சும்மாவா சொன்னான் பொய்யாமொழி
" குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர் " என்று.
மழலையை ரசிக்க , தம் மக்களாய் இருக்க வேண்டிய அவசியமில்லை .என்றே நினைக்கிறேன்.
அழகான வரிகள். தங்கள் வருகைக்கும் ரசனைக்கும் மனமார்ந்த நன்றி சிவகுமாரன்.
Deleteஅருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி அருணா.
Deleteநல்ல கவிதை சகோதரி
ReplyDeleteத/பெ-(தந்தை பெயர்)
http://vazhithunai.blogspot.in/2012/04/blog-post.html