அன்றாடங்களை வரவேற்கும்
அப்பனே… முருகா… என்னும்
அதிகாலை விளிப்புகள்,
உட்காரவும் எழவும் உதவும்
முனீஸ்வரா… ஐயனாரப்பா…
என்னும் முன்மொழிதல்கள்,
படுக்கப்போகுமுன் பாவக்கணக்கு சரிபார்க்கும்
பகவானே… பரந்தாமா என்னும் பற்றுதல்கள்,
தவிர…
ராமா… கிருஷ்ணா…
பிள்ளையாரப்பா… விநாயகா…
ஆஞ்சனேயா… அனுமந்தேயா…
நமச்சிவாயா… கைலாசமூர்த்தீ…
மகமாயீ… மாரியாத்தா…
என எவருக்கும் குறை வையாது,
இச்சைக் கடவுளர் அனைவருக்கும் விடப்படும்
அனிச்சை அழைப்புகளுக்கிடையில்
நாட்களைக் கடத்தும் அம்மாச்சிக்கு
கோயில்கள் இன்னொரு தாய்வீடு.
அதிசயமாய் சர்ச்சைக்குள் சிக்காத
அதிர்ஷ்டக்காரக் கடவுளரைப்போல
சுதந்திரச் சிறகடிக்கும் சின்ன நிலாவுக்கு
கோயில்கள் எல்லாமே அம்மாச்சி வீடு.
*******
அம்மாச்சியின் கன்னம் கிள்ளி
முத்தமிட்டுக் கொஞ்சுவதும்
சத்தமின்றி அவள் தலைமயிரில்
சரம்சரமாய் துணி கவ்விகளைக்
கவ்வ விட்டுக் கைகொட்டிக் களிப்பதும்
என் சொப்புச் சோறுதான்
உன்னிலும் சுவையென்று சாதிப்பதும்
சட்டென்று துள்ளி அவள் மடிமேல்குதித்து
பக்கத்திலிருக்கும் ஜிம்மியை மிரண்டோடவைப்பதும்
நித்தமும் நடக்கும் கூத்துக்கள்.
கூட்டுக்காரிகளென குதூகலிக்கும்
அம்மாச்சிக்கும் பேத்திக்கும் இடையில்
எப்போதாவது உள்நுழையும்
பிணக்குகளின் இடுக்கில் உற்றுக் கவனியுங்கள்!
கட்டாயம் ஏதேனுமொரு கடவுள் ஒளிந்திருப்பார்.
*******
நவக்கிரகம் சுத்தும் அம்மாச்சியுடன்
நடைப்போட்டி வைத்துக்கொள்கிறாள் நிலா.
முந்திச் செல்லும்போதெல்லாம்
முறுவல் இறைத்துச் செல்கிறாள்.
முடித்ததும் கேட்கிறாள்,
எத்தனைச் சுற்றுகள் சுற்றினீர்கள்? என்று.
ஒன்பது என்றதும்
எள்ளிச் சிரிக்கிறாள்.
‘நான் உங்களைவிடவும் ஐந்து சுற்றுகள்
அதிகமாய்
சுற்றினேனே…’
‘நவக்கிரகத்துக்கு ஒன்பதுதானம்மா கணக்கு.’
சற்றே யோசித்த நிலா
சட்டென்று ஓடி எதிர்வரிசையில்
சுற்றத் தொடங்குகிறாள்.
எதுவும் புரியாமல் விழித்த அம்மாச்சியிடம்
கண்கள் இடுங்கிப் புன்னகைத்தபடியே சொல்கிறாள்,
‘கூடுதலாய் சுற்றியதை
கணக்கிலிருந்து கழிக்கிறேன்’
*******
சுற்றுக்களை கழிக்கும் சுட்டிப் பெண்ணின்
ReplyDeleteசாதுரியம் வியக்க வைக்கிறது.
பலவேளைகளில் பெரியவர்கள்
அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய
பாடங்கள் நிறைய இருக்கிறது.
தீபிகா.
என் மகள் சின்னவளாய் இருந்தபோது செய்த சேட்டைகள்தான் இவை. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தீபிகா.
Deleteதாய் தந்தையரை விட தாத்தா பாட்டிகளிடன்
ReplyDeleteபேரன் பேத்திகள் கொள்ளும் உரிமையும் அன்னியோன்யமும்
எழுத்தில் அத்தனை எளிதாக வடிக்க இயலாதவை
அதனை மிக அழகாக நேர்த்தியாக விளக்கிப் போகும் தங்கள் பதிவு
அருமையிலும் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
என் மகள் சிறிய வயதில் செய்த சில குறும்புகளை வெகுநாட்களாகவே எழுத நினைத்திருந்தேன். தங்கள் ரசனை கண்டு மகிழ்கிறேன். வருகைக்கும் வாழ்த்துக்கும் த.ம. வாக்குக்கும் நன்றி ரமணி சார்.
Deleteஇளஞ்சிறார்களில் மனதில்
ReplyDeleteஎன்னென்ன ஓடுமென
யாவருக்குமே புரியாது !!
அன்று தான் அரபு நாட்டிலிருந்து வந்த
அன்புச்செல்லத்தை அக்ஷயாவை
ஆசையுடன் என் கோவிலுக்கு
அழைத்துச் சென்றிருந்தேன்.
குரு பெயர்ச்சி அன்று
கூட்டமாய் மக்கள் வெள்ளம்.
பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனத்தால்
பாங்காக குருவுக்கு அபிஷேகம்.
பக்தர்களிடையே பரவசம்.
பேத்தி என் காதுகளில் மட்டும் சொன்னாள்.
பாட்டி !! ஷேம் !! ஷேம் !!
திடுக்கிட்டேன். என்ன் என்றேன். !!
இந்தியாவில் என்ன !!
இறைவனுக்குக்கூட ஒரு பாத் ரூம் இல்லையா !!
பப்ளிக்காக குளிக்கிறார் என்றாள் !!
மீனாட்சி பாட்டி.
http://vazhvuneri.blogspot.com
பாட்டிகளுக்கும் பேத்திகளுக்கும் உள்ள பந்தம் சொல்லில் விளங்காதது என்பதற்கு உங்கள் அனுபவமும் ஒரு சான்று. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பேத்திக்கு. வருகைக்கும் அனுபவப் பகிர்வுக்கும் மிகவும் நன்றி.
Deleteரொம்ப சுப்பரா இருக்குங்க அக்கா...
ReplyDeleteநாங்களும் அப்புடித்தான் போட்டிப் போட்டு சுற்றுவோம் ...ஜாலி யா இருக்கும் ...
சுப்பரா எழுதியதுக்கு வாழ்த்துக்கள் akkaa
அப்படியா? நன்றி கலை. என் அம்மாவுக்கும் என் மகளுக்கும்தான் இந்தப் போராட்டமெல்லாம்.
Delete//கூடுதலாய் சுற்றியதை
ReplyDeleteகணக்கிலிருந்து கழிக்கிறேன்’ //
அருமையோ அருமை. மிகவும் ரஸித்தேன்.
தங்கள் வருகைக்கும் ரசித்துப் பாராட்டியதற்கும் மனம் நிறைந்த நன்றி வை.கோ. சார்.
Deleteஅம்மாச்சிக்கும் பேத்திக்கும் இடையில்
ReplyDeleteஎப்போதாவது உள்நுழையும்
பிணக்குகளின் இடுக்கில் உற்றுக் கவனியுங்கள்!
கட்டாயம் ஏதேனுமொரு கடவுள் ஒளிந்திருப்பார்.
உண்மையான வரிகள் .
வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி சசிகலா.
Delete"அம்மாச்சியின் கன்னம் கிள்ளி
ReplyDeleteமுத்தமிட்டுக் கொஞ்சுவதும்
சத்தமின்றி அவள் தலைமயிரில்
சரம்சரமாய் துணி கவ்விகளைக்
கவ்வ விட்டுக் கைகொட்டிக் களிப்பதும்
என் சொப்புச் சோறுதான்"
அப்பப்பா,
ஒவ்வொரு வரிகளும்
எனக்கு எனது அம்மம்மாவுடனான
காலங்களை கண்முன் கொண்டு வருகின்றன.
தங்கள் வருகைக்கும் இளவயது நினைவுகளை மீட்டெடுத்து மகிழ்வதற்கும் நன்றி டாக்டர்.
Deleteஅருமையாக இருந்தது கவிதை.
ReplyDeleteகடைசி வரிகளை மிகவும் ரசித்தேன்.
குழந்தைகள் வளர்ந்துவிட்டாலும் குறும்புகள் நினைவிலிருந்து மறைவதே இல்லை. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி ஆதி.
Deleteமிக அருமையான கவிதை
ReplyDelete(வலைச்சரத்தில் என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி)
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.
Deleteகுழந்தைகளிடம் குழந்தைமை விலகாதவரை அவர்களும் கடவுள்கள்தானே! அம்மாச்சிக்கும் நிலாவுக்குமான பாசப்பிணைப்பை ரசனையுடன் சொன்ன கவிதையை மிகமிக ரசித்தேன். அருமை!
ReplyDeleteவருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி கணேஷ். சின்ன நிலாவின் சேட்டைகள் இன்னும் உண்டு. அதையும் எழுதுகிறேன்.
Delete//கூட்டுக்காரிகளென குதூகலிக்கும்
ReplyDeleteஅம்மாச்சிக்கும் பேத்திக்கும் இடையில்
எப்போதாவது உள்நுழையும்
பிணக்குகளின் இடுக்கில் உற்றுக் கவனியுங்கள்!
கட்டாயம் ஏதேனுமொரு கடவுள் ஒளிந்திருப்பார்.//
அழகான வரிகள் கீதா! அன்பு ஒளிந்திருக்கும் இடத்தில்தானே கடவுளும் ஒளிந்திருக்கிறார்?
வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் நன்றி மேடம்.
Deleteமுதலில் அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள். குழந்தைகள் குழந்தைகளாக இருக்குபோது கூடி ரசித்த ஒவ்வொரு நொடியும், அவர்கள் வளர்ந்த பிறகு காட்டும் சில சமய அலட்சியங்கள்( அவர்களும் வளர்கிறார்களே)மனதை நோகடிக்கும். அளவோடு ரசித்து அன்பு பாராட்டுவதே பிற்காலத்தைய ஏமாற்றங்களைக் குறைக்க உதவும். பல நேரங்களில் குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கக் கூடாதா என்றும் எண்ணத் தோன்றும்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.
Deleteகுழந்தைகளின் வாழ்க்கை சுவாரஸ்சியமானது. எத்தனை முறை படித்தாலும் புதிதாக எதையேனும் புரிந்து கொள்ள முடிகிறது. கடவுள் மட்டுமல்ல இதம் தேடும் இதயங்களும் நிலாவுடன்தான். அழகு கவிதைக்கு நன்றி.
ReplyDeleteசின்ன நிலாவின் சேட்டைகளை ரசித்துச் சிலாகித்தமைக்கு நன்றி சாகம்பரி. இப்போது நிலா வளர்ந்துவிட்டாள் என்றாலும் குழந்தைமை இன்னும் குணத்தில் இருப்பதால் கொண்டாட முடிகிறது.
Deleteஒவ்வொரு குழந்தையிடமும் இப்படி அழகிய பொக்கிஷம்....
ReplyDeleteசுவாரசியான விஷயத்தினை அழகிய கவிதையாகச் சொன்னது அற்புதம்...
ஆமாம், ரோஷ்னியின் புகைப்பட ஆச்சரியம் கண்டு குழந்தைகள் இப்படியும் யோசிக்கிறார்களே என்று வியந்து ரசித்தேன். இங்கு கவிதையாய் விளைந்தவை யாவும் பதினைந்து வருடங்களுக்கு முன் நிகழ்ந்தவை. வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி வெங்கட்.
Deleteசிறு குழந்தையின் செயல்கள் எப்போழுதும் தனித்துவம் மிக்கவையாகவே/நன்றி வணக்கம்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி விமலன்.
Deleteசற்றே யோசித்த நிலா
ReplyDeleteசட்டென்று ஓடி எதிர்வரிசையில்
சுற்றத் தொடங்குகிறாள்.
எதுவும் புரியாமல் விழித்த அம்மாச்சியிடம்
கண்கள் இடுங்கிப் புன்னகைத்தபடியே சொல்கிறாள்,//
எதார்த்த நடையில் இலையோடுகிறது கவிதை. மிக அருமை..
இங்கு சின்ன நிலா! அங்கு கையருகே நிலா!
யதார்த்தம்தான் மலிக்கா. எல்லாம் என் மகளின் சேட்டைகள்தான்.
Deleteவருகைக்கும் ரசித்தமைக்கும் மிகவும் நன்றி.
பல வேளைகளில் பெரியவர்கள்
ReplyDeleteகுழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய
பாடங்கள் நிறைய...ரசித்தேன்...
வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி ரெவெரி.
Delete//உட்காரவும் எழவும் உதவும்
ReplyDeleteமுனீஸ்வரா… ஐயனாரப்பா…
என்னும் முன்மொழிதல்கள்,//
அசத்தலான வரிகள்!
வருகைக்கும் ரசித்தமைக்கும் மிகவும் நன்றி.
Deleteஓ.....வேண்டுதல் கூடிப்போனா இப்பிடியும் கழிச்சுக்கலாமோ.இவங்ககிட்ட கற்றுக்கொள்ள நிறைய விஷயம் இருக்கு !
ReplyDeleteவருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி ஹேமா.
Deleteஎதிர்வரிசையில் சுற்றி கணக்கு சரியாகிவிட்டது. என்ன ஒரு புத்திசாலித்தனம்!! குறும்பு.
ReplyDeleteவருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி விச்சு.
Deleteசற்றே யோசித்த நிலா
ReplyDeleteசட்டென்று ஓடி எதிர்வரிசையில்
சுற்றத் தொடங்குகிறாள்.
எதுவும் புரியாமல் விழித்த அம்மாச்சியிடம்
கண்கள் இடுங்கிப் புன்னகைத்தபடியே சொல்கிறாள்,
‘கூடுதலாய் சுற்றியதை
கணக்கிலிருந்து கழிக்கிறேன்’
//
மிகவும் இரசித்தேன்!
-காரஞ்சன்(சேஷ்)
வருகைக்கும் ரசனைக்கும் நன்றி சேஷாத்ரி.
Deleteமிக மிக அருமையான கவிதை நடை இப்படித்தான் நானும்...பழசை புதிசாக எழுதுவேன் மறுபடியும் வாசிப்பேன் நாளை. வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
(அன்பின் கீதா. செவ்வாய் இரவு 10.45 தங்கள் வலைச்சரம் பார்த்த போது பல அறிமுகங்களுடன் நானும் அறிமுகப் படுத்தப் பட்டது கண்டேன் மிக மிக நன்றி சகோதரி. அதை விட புது புது அறிமுகங்கள் போல தெரிகிறது. பார்க்க முயற்சிப்பேன் தங்கள் கடும் உழைப்பிற்கு நல் வாழ்த்துகள். அற்றைய அறிமுகவர்களிற்கும் வாழ்த்துகள். இறை ஆசி கிட்டட்டும்.(வலைச்சர அந்தப் பக்கம் படமாக என் முகநூல் சுவரில் போடுவேன்.)
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி வேதா. முகநூல் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றி.
Deleteமிக அருமையான கவிதை
ReplyDeleteஅம்மாச்சியின் கன்னம் கிள்ளி
முத்தமிட்டுக் கொஞ்சுவதும்
சத்தமின்றி அவள் தலைமயிரில்
சரம்சரமாய் துணி கவ்விகளைக்
கவ்வ விட்டுக் கைகொட்டிக் களிப்பதும்
மிகவும் இரசித்தேன்!
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் மிகவும் நன்றி எஸ்தர்.
Deleteஅப்பப்பா..அந்த நிலாவைவிட இந்த நிலா ரசிக்க வெகு சுகம்.
ReplyDeleteஅற்புதம் கீதா
வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி சக்தி. சின்ன நிலாவின் சேட்டைகளை நினைக்கத் தூண்டிய அபிக்கும் என் நன்றி.
Deleteகூட்டுக்காரிகளென குதூகலிக்கும்
ReplyDeleteஅம்மாச்சிக்கும் பேத்திக்கும் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்.. மனதில் இனிமையாய் நிரம்பி மகிழ்ச்சி அளிக்கிறார்கள்..
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேடம்.
Deleteவரிக்கு வரி இரசித்தேன். அருமை
ReplyDeleteவருகைக்கும் ரசிப்புக்கும் மிகவும் நன்றி சந்திரகௌரி.
Deleteரசனைக்குரிய நிலா.பகிர்வாய் வந்த அதன் ஒளியும் அருமை
ReplyDeleteவருகைக்கும் அழகானப் பின்னூட்டத்துக்கும் நன்றி ராஜி.
Deleteநலம். நலமறிய ஆவல். சும்மா எட்டிப் பார்த்தேன். மீண்டும் சந்திப்போம்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
தங்கள் அன்புக்கு நன்றி வேதா.
Deleteஅழகான கவிதை...மிகவும் ரசித்தேன்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றிங்க.
ReplyDeleteவலைச்சரத்தில் என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றிங்க.
ReplyDeleteவருகைக்கும் ரசித்தமைக்கும் வரிசை கட்டி வந்து ஊக்கம்தரும் பின்னூட்டங்களுக்கும் நன்றி ஜி ஜி.
Deleteவேதா... உங்கள் கவிதையைப் படித்த என் மனம்
ReplyDeleteமீண்டும் குழந்தையாகிப் போனது. வாழ்த்துக்களுடன் நன்றி!
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அருணா.
Delete