மலைமுகட்டில் எழுந்த
மனமுரசும் உற்சாகக் கூப்பாடுகள்
அங்குமிங்கும் எதிரொலித்தபடியே
அடிவாரம் வந்தடைந்திருந்தன...
ஆர்வத்தை மிகைப்படுத்தி
அண்ணாந்துநோக்கவைக்கும்
ஆரவாரக் களிப்புகள் யாவும்…
உயரங்கள் எப்போதும் எனக்கு
உச்சபட்ச பீதியுருவாக்குமென்னும்
உண்மையை மறக்கச்செய்ய....
அனிச்சையாய் துளிர்த்தெழுந்தது,
அல்ப ஆவலாதியொன்று!
உச்சியினின்று தளும்பி வழிந்து
உயிர் நனைத்த சிநேகத்தின்
உடனே ஏறிவாவென்னும்
உளப்பூர்வ அழைப்புகளையும்
இறங்கும்வரை உறுதுணையாயிருப்போமென்னும்
உருக்கமான உறுதிமொழிகளையும்
உடும்பெனப் பற்றியபடியே
விடுவிடுவென்று பயணிக்கத்
துவங்குகின்றன
என் பாதங்கள், பழகாத பாதைதனில்!
ஏற்றக்கோணத்தில் மலைமுகடு மறைந்து
மனமுகடுகள் மட்டுமே இலக்காக....
இலகுவில் எட்டிவிட்டேன்....
சிகரம் தொட்டுவிட்ட இறுமாப்புடன்
இறுகியணைத்து உரமேற்றும் கரங்களைத்
தேடுகின்றன, என் தோள்கள்!
அவர்களோ....
நாப்பிறழ்ந்த நம்பிக்கைமொழிகளை
காற்றில் பறக்கவிட்டபடியே
என்னை மறந்து
ஏதேதோ பேசியபடி
இறங்கிக் கொண்டிருக்கின்றனர்.
தன்னம்பிக்கையை தனக்குள் ஊட்டவும் ஒரு கூட்டம் வேண்டும் உண்மைதான்...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி தினேஷ்குமார்.
Deleteஇந்த மாதிரி பின்னூட்டப் பெட்டிகளில் கருத்து எழுத முடிவதில்லை. என் ப்ரௌசர் கூகிள் க்ரோம். இண்டர்நெட் எக்ஸ்ப்லோரரில் வந்தால் மட்டுமே கருத்திட முடிகிறது. ஆனால் பெரும்பாலான நேரங்களில் இந்த ப்ரௌசரில் பதிவுகளே திறப்பதில்லை. இந்த முறை என் அதிர்ஷ்டம். என்னால் அநேக பதிவுகளைப் படிக்க முடியும். ஆனால் பின்னூட்டங்கள் ஏற்கப் படுவதில்லை.
ReplyDeleteஎப்படியோ ஏறத் தெரிந்தவன் இறங்கிக் கொள்வான் என்று எண்ணுகிறார்கள் போலும். இப்போதெல்லாம் அடிக்கடி காண முடிவதில்லையே.(பதிவுகளில்) வாழ்த்துக்கள்.
தங்கள் வருகையால் மகிழ்ந்தேன் ஐயா. உடல்நிலை காரணமாக சில நாட்களாய் வலைப்பக்கம் வர இயலவில்லை. இனி தொடர்வேன் என்று நம்புகிறேன்.
Deleteஎன்னுடைய பல தளங்களுக்கான பின்னூட்டங்களும் சில நாட்களுக்கு முன் ஏற்கப்படாமல் ஸ்பேமுக்குச் சென்று பயமுறுத்திவிட்டன. இப்போது எப்படியென்று தெரியவில்லை. முடியும்போது வந்து கருத்திடுங்கள். தங்கள் அன்புக்கு நன்றி.
வழமை உலகைக் கூறியுள்ளீர்கள். பிள்ளைகள் பிறரைச் சாராது வாழப்பழக்க வேண்டும் சுய நம்பிக்கையே பலமாக....
ReplyDeleteஅருமையான சொல் நடை. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
தங்கள் வருகைக்கும் அருமையான விமர்சனத்துக்கும் நன்றி தோழி வேதா.
Deleteஏற்றக்கோணத்தில் மலைமுகடு மறைந்து
ReplyDeleteமனமுகடுகள் மட்டுமே இலக்காக....
இலகுவில் எட்டிவிட்டேன்....
நம்பிக்கை தரும் நட்பு !
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி மேடம்.
Delete//இறங்கும்வரை உறுதுணையாயிருப்போமென்னும்
ReplyDeleteஉருக்கமான உறுதிமொழிகளையும்
உடும்பெனப் பற்றியபடியே
விடுவிடுவென்று பயணிக்கத் துவங்குகின்றன
என் பாதங்கள், பழகாத பாதைதனில்!//
அருமை. அதுவே நட்பின் வலிமை. பாராட்டுக்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி வை.கோ.சார்
Delete//சிகரம் தொட்டுவிட்ட இறுமாப்புடன்
ReplyDeleteஇறுகியணைத்து உரமேற்றும் கரங்களைத்
தேடுகின்றன, என் தோள்கள்!
அவர்களோ....
நாப்பிறழ்ந்த நம்பிக்கைமொழிகளை
காற்றில் பறக்கவிட்டபடியே
என்னை மறந்து
ஏதேதோ பேசியபடி
இறங்கிக் கொண்டிருக்கின்றனர்.//
ம் (:
தங்கள் வருகைக்கும் மௌன ஒப்புதலுக்கும் மிகவும் நன்றி செய்தாலி.
Deleteயதார்த்தத்தை அழுந்த உரைத்த கவிதை! தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள்! மிக நன்று!
ReplyDeleteவருகைக்கும் அழகிய விமர்சனத்துக்கும் நன்றி கணேஷ்.
Deleteநல்ல கவிதை... ரசித்தேன்.
ReplyDeleteவருகைக்கும் ரசிப்புக்கும் மிகவும் நன்றி வெங்கட். வலைச்சரத்தில் தாங்கள் ஆசிரியராய் இருந்தபோது வர இயலாமைக்கு வருந்துகிறேன்.
Deleteஇதைச் செய்வேன். அதைச் செய்வேன் என்பார்கள். அறிவுரை ஆயிரம் கூறுவார்கள். கடைசியில் பார்த்தால் முக்கியமான வேளையில் காத தூரம் போயிருப்பார்கள். இதுதான் உலகம் என்பதை உணர்த்தும் அழகான கவிதை.
ReplyDeleteவருகைக்கும் மனம் நிறைக்கும் விமர்சனத்துக்கும் மனமார்ந்த நன்றி துரை.
Deleteஇது வரை ஓட்டு எதுவும் விழவில்லையே. ஏன்? நான்தான் முதல் ஓட்டா? ஓ.கே. ஓ.கே. பரவாயில்லை. இருக்கட்டும்.
ReplyDeleteஓட்டுகளை விட்டுத்தள்ளுங்கள். தங்கள் அனைவரது கருத்துகளிலேயே மனம் நிறைகிறது. நன்றி துரைடேனியல்.
Deleteஇது போல் பாதியில் கை விட்டுச் செல்லும் உள்ளங்கள் எத்தனை எத்தனை! அழகான கவிதை!!
ReplyDeleteஅழகான விமர்சனம் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மனோ மேடம்.
Deleteஉலக மனிதங்களின் மற்று மொரு முகம் ...
ReplyDeleteவரிகள் உயிர்ப்பாக உள்ளது ..
வாழ்த்துக்கள் சகோ..
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அரசன்.
Deleteவணக்கம் சகோதரி,
ReplyDeleteஇப்போது உடல்நிலை நலம் தானா?
///சிகரம் தொட்டுவிட்ட இறுமாப்புடன்
இறுகியணைத்து உரமேற்றும் கரங்களைத்
தேடுகின்றன, என் தோள்கள்!///
சாதிக்க நினைப்பவர்களின் எண்ணத்தை
அப்படியே வடித்து விட்டீர்கள்.
நலமே மகேந்திரன். எல்லாம் குளிர்காலக் குடைச்சல்தான். அவ்வப்போது படுத்தி மீட்கும்.
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மகேந்திரன்.
வரிகள் அனைத்தும் அருமை. குறிப்பாக
ReplyDeleteசிகரம் தொட்டுவிட்ட இறுமாப்புடன்
இறுகியணைத்து உரமேற்றும் கரங்களைத்
தேடுகின்றன, என் தோள்கள்
இந்த வரிகள் அருமை...
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி சேகர்.
Deleteவாழ்வின் தத்துவத்தை
ReplyDeleteஅழகாய் வர்ணித்து இருக்கிறீர்கள்
நம்மால் முடியாவிட்டாலும் அடுத்தவர் செய்வதை அனுமதிக்காத கூட்டத்தில் தான் இருக்கிறோம்
வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் நன்றி சரளா.
Deleteஅழகான கவிதை....பாராட்டுகள்.
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஆதி.
Deleteஅத்தனை வரிகளிலும் எத்தனை அழுத்தம் நம்பிக்கை.இது ஒன்றே போதும் கீதா உலகை வென்றுவிடலாம் !
ReplyDeleteஉப்புமடச் சந்தியில் உங்கள் கவிவரிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் வாங்கோ !
வருகைக்கும் அழகானப் பின்னூட்டத்துக்கும் நன்றி ஹேமா.
Deleteஉங்கள் அன்பான அழைப்புக்கிணங்க, உப்புமடச் சந்தியில் என் கவிதைகள் பதியப்பட்டுள்ளன, ஹேமா. பாருங்கள்.
நல்ல கவிதை. நல்ல வரிகள்...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.
Deleteஇவ்வுலகில் கொடுத்த வாக்கைக் கடைசி வரைக் காப்பாற்றுபவரின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அவர்கள் பேச்சை நம்பிக் காரியத்தில் இறங்கினால் நம் கதி அதோ கதி தான்!
ReplyDeleteஏற்கெனவே ஒருவர் சொல்லியிருப்பது போல் ஏறத் தெரிந்தவனுக்கு இறங்கவும் தெரியும் என்று நினைக்கிறார்களோ என்னவோ? அல்லது ஒப்புக்குக் கூப்பிட்டால் இவன் ஏறி வந்து விட்டானே என்ற பொறாமையால் அவனது பெருமையில் பங்கு கொள்ளாமல் அலட்சியப்படுத்துகிறார்களோ? நல்லதொரு கவிதைக்குப் பாராட்டுக்கள்.
உடம்புக்கு என்ன கீதா? இப்போது நலம்தானே?
நலமே அக்கா. தங்கள் ஆழ்ந்த விமர்சனம் கண்டு மிகவும் மகிழ்ந்தேன் அக்கா. மனித மனங்கள் எப்போது எப்படி மாறும் என்பது நம்மால் யூகிக்க முடியாததாக இருக்கிறதே! இந்தப் பின்னூட்டம் ஸ்பேமில் போய் முடங்கிவிட்டிருந்தது. எடுத்துப் போட்டிருக்கிறேன். பின்னூட்டத்துக்கு மனமார்ந்த நன்றி.
Deleteஏற்றக்கோணத்தில் மலைமுகடு மறைந்து
ReplyDeleteமனமுகடுகள் மட்டுமே இலக்காக....
இலகுவில் எட்டிவிட்டேன்....
அருமை!
காரஞ்சன்(சேஷ்)
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி காரஞ்சன்.
Deleteநல்ல பகிர்வு கீதா .நலம்தானே.நம்பிக்கை எனும் உயிர்ச் சத்து
ReplyDeleteஉயிர்ப்பிக்கும் ..உரம் தரும் என உங்கள் பதிவே சொல்லிவிட்டதே
நலமே சக்தி. தங்கள் வருகைக்கும் அன்பான விசாரிப்புக்கும், அழகானக் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி.
Deleteபடமும் பாடலும் அருமை!
ReplyDeleteதங்கள் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்கிறேன். மிகவும் நன்றி ஐயா.
Deleteஅன்புத் தோழி... என் நடைவண்டிகள் தொடரின் முந்தைய பதிவுக்கு நீங்கள் இட்ட நல்ல உற்சாகமூட்டும் கருத்து SPAM என்ற டைரக்டரியில் மறைந்திருந்ததை இன்றுதான் பார்த்தேன். மகிழ்வூட்டும் கருத்துக்கு நன்றி சொல்வதோடு இனி இப்படி நிகழாமல் அடிக்கடி செக் செய்து விடுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். என் போன்றோருக்கு வேண்டும் தங்கள் தொடர் ஆதரவு.
ReplyDeleteசில நாள் முன்பு நான் இட்டப் பல பின்னூட்டங்களும் ஸ்பேமுக்கு போய்விட்டிருந்தன. ஏனென்று தெரியவில்லை. இப்போது என்னுடையதிலும் இரண்டு பின்னூட்டங்கள் அப்படி இருந்தன. இனி நானும் அடிக்கடி சோதிக்கவேண்டும். தங்கள் அன்புக்கு நன்றி கணேஷ்.
Deleteகீதா மேடம்,
ReplyDeleteசிறப்பான கவிதை.
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சத்ரியன்.
Deleteஏற்றக்கோணத்தில் மலைமுகடு மறைந்து
ReplyDeleteமனமுகடுகள் மட்டுமே இலக்காக....
இலகுவில் எட்டிவிட்டேன்....
சிகரம் தொட்டுவிட்ட இறுமாப்புடன்
இறுகியணைத்து உரமேற்றும் கரங்களைத்
தேடுகின்றன, என் தோள்கள்!//
அவரவர் தோள்களை தட்டிப் பார்த்து நம்பிக்கையூட்டும் வரிகள் அருமை .
தங்கள் வருகைக்கும் அழகான விமர்சனத்துக்கும் நன்றி சசிகலா.
Deleteசகோ தங்கள் நலன் அறிய ஆவல் .
ReplyDeleteநலமே சசிகலா. தங்கள் அன்புக்கு மிகவும் நன்றி.
Deleteநன்றாக யோசிக்கத் துர்ண்டிய பதிவு.
ReplyDeleteநிறைய யோசித்தேன்.
வாழ்த்துக்கள் கீதமஞ்சரி அவர்களே!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருணா.
Deleteநேற்றே பின்னூட்டமிருந்தேன். அது ஏன் வெளியாகவில்லை எனத் தெரியவில்லை.
ReplyDeleteஇவ்வுலகில் கொடுத்த வாக்கைக் கடைசி வரை காப்பாற்றுவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவு. நம்பியவரை நட்டாற்றில் விடுவோரிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லையேல் நம் கதி அதோகதி தான்.
உளப்பூர்வ அழைப்பு விட்டவர்கள் ஏன் அவனைப் பாதியில் கைவிட வேண்டும்?
ஏறுவதற்குத் தான் தெம்பு வேண்டும், இறங்குவதற்குத் தேவையில்லை என அவர்கள் நினைத்திருக்கலாம்.
(இவன் எங்கே ஏறப்போகிறான் என நினைத்து) ஒப்புக்குக் கூப்பிட்டால் ஏறி வந்து விட்டானே என்ற பொறாமையில் அவன் மகிழ்ச்சியில் பங்கு கொள்ளாமல் அலட்சியம் செய்கிறார்கள் என்றால் அதை உளப்பூர்வ அழைப்பு என்று எடுத்துக் கொள்ள இயலாது.
யோசிக்க வைத்த கவிதைக்குப் பாராட்டுக்கள் கீதா!
சுணங்காமல் மீண்டும் வந்து கருத்திட்டதற்கு நன்றி அக்கா.
Deleteஉயரத்தின் தனிமையை உணர்த்தும் அழகிய கவிதை..
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மோ.சி.பாலன்.
Deleteயதார்த்தமான வரிகளில் யோசிக்க வைத்த கவிதை படைத்த உமக்கு என் நன்றிகள் தோழி
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ராஜி.
Deleteஅருமை அருமை
ReplyDeleteஎதிர்பார்ப்பின்றி நம்பிக்கை விதைகளை விதைத்துச் செல்வோரைக் குறித்த
பாராட்டுக் கவிதையாகத்தான் நான் இதை புரிந்து கொள்கிறேன்
அருமையான பதிவு.தொடர வாழ்த்துக்கள்
தங்கள் வருகைக்கும் கவிதைக்கான புரிதலுக்கும் மிகவும் நன்றி ரமணி சார். தமிழ்மண வாக்கிட்டு ஊக்கமளிக்கும் அன்புக்கும் மனமார்ந்த நன்றி.
DeleteTha.ma 9
ReplyDelete