8 February 2015

மன்னியுங்கள் என்னை...



மன்னியுங்கள் என்னை
இதுவரை எழுதியவற்றுக்காகவும்
எழுதவியலாமற் போனவற்றுக்காகவும்
இப்போது எழுதவிருப்பவற்றுக்காகவும்
இனி ஒருபோதும் என்னால் எழுதப்படாதிருப்பவற்றுக்காகவும்.

மன்னியுங்கள் என்னை
பூத்துக்குலுங்கும் மரங்களுக்காகவும்
பூக்கள் வழங்கும் கனிகளுக்காகவும்
மண்ணுக்குள் புதைந்திருக்கும்
பொன்னுக்கும் நீருக்கும் ஊற்றுக்குமாய்..

மன்னியுங்கள் என்னை
தேயும் நிலவுக்காகவும்
மறையும் கதிருக்காகவும்
உயிர்களின் சலனத்துக்காகவும்
ஜடங்களின் நிச்சலனத்துக்காகவும்.

மன்னியுங்கள் என்னை
வண்ணங்கள் குழைத்த வையத்துக்காகவும்
குருதியில் கூட்டிய செந்நிறத்துக்காகவும்
வனங்கள் நிறைத்த இலைகளுக்காகவும்
வானம் நிறைத்த மழைக்காகவும்
மணல் நிறைத்த விண்மீன்களுக்காகவும்
நீலம் நிறைத்த கனவுகளுக்காகவும்!

மன்னியுங்கள் என்னை
அர்த்தங்களைப் பொதித்த வார்த்தைகளுக்காகவும்
அந்நாட்களைப் பொதித்த வரலாற்றுக்காகவும்
நேற்றில் ஒளிந்திருந்த இன்றைக்காகவும்
இன்றில் ஒளிந்திருக்கும் நாளைக்காகவும்
அபிநயங்களால் பரதத்தையும்
அடையாளங்களால் பிரபஞ்சத்தையும் நிறைத்த
பரம்பொருளைப் படைத்தமைக்காகவும்.

மன்னியுங்கள் என்னை
நிலம் பிளக்கும் பூகம்பத்துக்காகவும்
சுழன்றடிக்கும் சூறைக்காற்றுக்காகவும்
பற்றியெரியும் காட்டுத்தீக்காகவும்
கொந்தளித்து சீறும் பெருங்கடலுக்காகவும்.

இப்பூமியொரு பழுதடைந்த எந்திரம்!
அதை சீராக்க வந்தவனல்லன் நான்!
நானொரு நாடிழந்த மன்னன்
ஆயுதமிழந்த கடவுள்
நாவிழந்த வாழ்வு

உங்கள் தலையைக் காவுகேளாத
கடவுளைக் கண்டுபிடியுங்கள்.
பயந்தொலைத்த மனிதனைக் கண்டுபிடியுங்கள்
அகரந்துவங்கியொரு அருமொழியைக் கண்டுபிடியுங்கள்.

*********************

எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுக்கு பிரபல மலையாளக்கவிஞர் கே.சச்சிதானந்தன் அவர்கள் சமர்ப்பித்துள்ள மலையாளக் கவிதையின் ஆங்கில மொழியாக்கத்தைப் (மொழியாக்கம்: கே.சச்சிதானந்தன்) பகிர்ந்துகொண்ட முகநூல் தோழி கவின்மலர் அவர்களுக்கும் அதைத் தமிழாக்கத் தூண்டிய நண்பர் பேனா மனோகரன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. ஆங்கிலக் கவிதை கீழே…

PARDON
------------
- K. Satchidanandan

Pardon me
for what I have written,
for what I could not write,
what I am likely to write
and what I may never write.

Pardon me for the trees’ flowering,
for the flowers’ fruiting,
for having hoarded so much of
gold and water and spring
inside the earth.

Pardon me for the waning moon,
for the setting sun,
the movement of the living,
the stillness of the non-living.

Pardon me for filling earth
with so much of colour,
blood with so much red,
leaf with forest,
rain with sky,
sand with star
and ink with dreams.

Pardon me for filling words
with so much meaning,
dates with so much of history,

for having hidden today inside yesterday
and tomorrow inside today,
for creating the Creator
who fills gestures with dance
and nature with symbols.

Pardon for the earthquake
and the tempest,
the wild fire and the raging sea.

Earth is a damaged machine.
I am not the one to repair it.
I am the king without a country,1
the god without a weapon,2
life without a tongue.

Invent a god
that doesn’t ask for your head.
Invent the fearless man.

Invent
language,
alphabet.


30 comments:

  1. ஒரு எழுத்தாளனை கொன்று புதைக்க துடிக்கிற சமூகத்தை நோக்கி ஒரு இரங்கல் பா போல:((( வழக்கமான தேர்ந்த நடை அருமை!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா மைதிலி.

      Delete
  2. மூலமும் அருமை. மொழிபெயர்ப்பும் அருமை.

    ReplyDelete
  3. மூலமும் அருமை. மொழிபெயர்ப்பும் அருமை.

    ReplyDelete
  4. மனதை கனக்கச் செய்யும் வரிகள்
    மொழி பெயர்ப்பு அருமை சகோதரியாரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி ஐயா.

      Delete
  5. கவிதை நன்று. அதைவிட சொல்லப்பட்ட கருத்துக்கள் அருமை. மன்னியுங்கள் என்னை என்று ஒரு எழுத்தாளன் சொல்லத்தேவையே இல்லை. அவர் மனதுக்கு சரியென்று பட்டதை எழுதியிருக்கிறார். அந்தக் கதையை படித்தவர்களுக்கு புரிந்திருக்கும்.யாரையும் தாக்கியோ மனம் புண்படும்படியோ அந்த நூலில் இல்லை. எழுத்தாளனை தாக்கலாம் . ஆனால் அவரின் எழுத்துக்கள் இப்போது பலரது நெஞ்சங்களிலும் குடிகொண்டிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. சக படைப்பாளிக்குத் தோன்றிய உணர்வு. அதைத் தவறென்று சொல்வதற்கில்லைதானே.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விச்சு.

      Delete
  6. மொழிபெயர்ப்பு நன்று...

    ReplyDelete
  7. மொழிபெயர்ப்பு ஆக்கம் .....
    அதுவும் கவிதை நடையில் .....
    சிறப்பாகச் செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சார்.

      Delete
  8. மொழிபெயர்ப்பு ஆக்கம் .....
    அதுவும் கவிதை நடையில் .....
    சிறப்பாகச் செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. நேற்றில் ஒளிந்திருந்த இன்றைக்காகவும்
    இன்றில் ஒளிந்திருக்கும் நாளைக்காகவும்//

    அருமை.


    அழகான மொழிபெயர்ப்பு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி மேடம்.

      Delete
  10. மொழிபெயர்ப்பு நன்றாக,அழகாக இருக்கு கீதா.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. மீண்டும் ஒரு தடவை உங்கள் மொழிபெயர்ப்பு ஆழுமையை நிரூபித்திருக்கிறீர்கள் கீதா.

    உங்கள் ஆழுமைக்குத் தக்கதான பொருளையும் தேடி எடுத்துக் கொள்ளுகிறீர்கள் அது உங்களிடம் ஒளிந்திருக்கும்; ஒளிர்ந்து கொண்டிருக்கும் இன்னொரு திறமை!

    கவிதை அப்படியே சுவீகரித்து மனங்களைக் கொள்ளையடித்துப் போகிறது.
    பூத்துக்குலுங்கும் கவிதா விருட்சத்தை அப்படியே பெயர்த்தெடுத்து நம் மொழியில் நம் மனதில் அப்படியே நட்டு விட்டீர்கள்.வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!

    ஆனால் கீதா எனக்கொரு ஆட்சேபனை இருக்கிறது. அது எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களைப் பற்றியது. ஒருவர் ஒன்றை எழுதுகின்ற போது அதில் ஒரு தார்மீகப் பொறுப்பு இருக்க வேண்டும். எழுதி பிரசுரித்து விட்டால் அதிலிருக்கிற நியாயப் பாட்டிற்காக எழுந்து நிற்கிற ஓர்மம் இருக்க வேண்டும். உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி எனக்கதிகம் தெரியாது. ஆனால் இப்படி மண்டியிட வேண்டியதில்லை என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.அது தன்னம்பிக்கை அற்றோரின் மட்டகரமான செயல். குறிப்பாக கலை இலக்கியதாரர்களிடம் அண்டவே கூடாத பண்பு. அது வாசகர்களை மதிக்காத காரியம்.

    எழுத்தாளனின் அழகே அந்த தற்துணிச்சல் தானே!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துகள் ஏற்புடையவை என்றாலும் சில சந்தர்ப்பங்களில் எடுக்கப்படும் முடிவுகள் தற்துணிச்சலைத் தள்ளிவைத்துவிடுகின்றன. தமிழ் வளர்ச்சிக்குத் தடை என்ற பெயரில் சொ. ஞானசம்பந்தன் ஐயா எழுதியுள்ள பதிவை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இயலும்போது வாசித்துப் பாருங்கள். கருத்துக்கு நன்றி மணிமேகலா.
      http://www.sgnanasambandan.blogspot.com.au/2015/02/blog-post.html

      Delete
  12. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  13. உங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில். நேரம் இருக்கும்போது வந்து பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தாமதத்துக்கு வருந்துகிறேன். இப்போதே வந்துபார்க்கிறேன். வலைச்சர அறிமுகத்துக்கு மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

      Delete
  14. அருமையாக மொழி மாற்றம் செய்திருக்கிறீர்கள். உங்களின் சொற் சிலம்பத்திற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  15. அருமையான பதிவு. ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் ரசித்தேன்.

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. தமிழ் ஆங்கிலக் கவிதைகள் இரண்டையும் ரசித்தமைக்கு அன்பான நன்றி வெங்கட்.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.