31 March 2015

பூக்களும் பூச்சிகளும்

மகரந்தசேர்க்கைக்கு உதவும் 
மகத்தான பூச்சிகள்


கருப்பு வெள்ளையில் இருந்தாலும்
வண்ணத்துப்பூச்சி என்றே பெயர்!
Cabbage white butterfly

ஆண்வண்டானாலும் ladybug என்றே பெயர்!
Ladybug

ஆஸ்திரேலிய சிப்பாய் வண்டு
யாருடன் சண்டை இன்று?
Australian soldier beetle


நான் ஈ!
House fly


  நான் தேன் ஈ!
Honeybee

உற்றுப் பார்க்கும் கண்களுக்கு
புலப்படலாம் ஒரு குளவி!
Little wasp

வீட்டு ஈக்கும் வந்ததோ தேன் குடிக்கும் ஆசை!
House fly

கருப்பு வெள்ளையோடு கொஞ்சம் மஞ்சள்... 
கொஞ்சும் அழகு!
Dingy swallowtail butterfly

வண்டுக்கும் எறும்புக்கும் 
கண்ணாமூச்சி விளையாட்டு!
Ladybug and ant

எறும்பூ...!
Ant

கருமமே கண்ணாக... 
Honeybee

பறக்கும் இலைபோல் 
பச்சை வண்ணத்துப்பூச்சி!
Black and Green Butterfly

சண்டைக்குத் தயார்!
சிப்பாய் வண்டு வரார்!
Australian soldier beetle

அலையும் வண்ணத்துப்பூச்சி என்று பெயராம்
அலைக்கழிக்கும் வண்ணத்துப்பூச்சி என்பதே பொருத்தம்..
Wanderer butterfly

21 comments:

  1. Replies
    1. ரசித்தமைக்கு மிக்க நன்றி மகேஸ்வரி.

      Delete
  2. அழகான படங்கள். ஆறு மாதங்களுக்கு முன் என் பால்கனிக்கு வந்த கருப்பு பட்டாம்பூச்சியைப் பற்றி ஒரு கவிதை எழுதினேன். அதன் க்ளோசப் போட்டோ கிடைக்காததால் பதிவிடாமல் வைத்திருக்கிறேன்... இந்தப் பதிவு அந்தக் கவிதை தூங்குவதை நினைவூட்டியது.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...ஆறுமாதங்களாய் தூங்கும் கவிதையை நினைவூட்டியதில் மிகுந்த மகிழ்ச்சி. படங்களை ரசித்தமைக்கு நன்றி மோகன்ஜி. கருப்புப் பட்டாம்பூச்சி துயில் களைந்து கவிதையாய் சிறகடித்து வரும் காலம் பார்த்திருக்கிறேன்.

      Delete
  3. பூச்சிகளின் படங்களும் அதற்கேற்ற தலைப்புக்களும் வெகு அருமை!

    ReplyDelete
    Replies
    1. படங்களையும் தலைப்புகளையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி அக்கா.

      Delete
  4. படங்களும் அதற்கு உங்களின் கருத்துகளும் கண்ணைக் கவர்கின்றன.
    த ம 1

    ReplyDelete
    Replies
    1. படங்களையும் கருத்துகளையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி சார்.

      Delete
  5. சில மாதங்களுக்கு முன் Frontline இதழில் வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றிப் படித்தேன். தற்போது தங்களது பதிவில் அழகான புகைப்பங்களுடன் வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றி அறிந்தேன். தெரிந்தெடுத்த புகைப்படங்கள் பதிவிற்கு அழகு சேர்க்கின்றது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வண்ணத்துப்பூச்சிகளை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  6. சில மாதங்களுக்கு முன் Frontline இதழில் வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றிப் படித்தேன். தற்போது தங்களது பதிவில் அழகான புகைப்பங்களுடன் வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றி அறிந்தேன். தெரிந்தெடுத்த புகைப்படங்கள் பதிவிற்கு அழகு சேர்க்கின்றது.

    ReplyDelete
  7. அழகான macro shots... கண்களுக்கு விருந்து. மிகவும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி கீதா. உங்களுடைய வலைப்பக்கம் கண்டேன். படங்களும் கவிதைகளும் மனம் தொடுகின்றன.

      Delete
  8. அழகான படங்கள் + அதற்கேற்ற தலைப்புகள். மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

    //ஆண் வண்டானாலும் ladybug என்றே பெயர்!//

    :))))) ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! இருக்கட்டும். இருக்கட்டும். பெயரிலாவது அது லேடியாகவே, உண்மையான லேடி வண்டுகளைக் குடைந்துகொண்டு இருந்துவிட்டுப்போகட்டும். :)))))

    ReplyDelete
    Replies
    1. தங்கள் நகைச்சுவை ரசனைக்கு சொல்லவா வேண்டும். ரசித்ததற்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி கோபு சார்.

      Delete
  9. கீதா,

    படங்கள் எல்லாம் பளிச்பளிச் எனக் கண்ணைக் கவருகின்றன. படங்களைப் போலவே அவற்றிற்கான விளக்கங்களும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. உங்களுடைய படங்கள் பலவும் என் ரசனைக்குரியவை. உங்கள் பாராட்டு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. நன்றி சித்ரா.

      Delete
  10. நாம் தினம் கடந்து போகும் பூக்களும் பூச்சிகளுமுங்கள் புகைப்படங்களில்நிமிர்ந்து நோக்க வைக்கின்றன பாராட்டுக்கள் இது மார்ச் கடைசிப்பதிவு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் படங்களை ரசித்து இட்ட பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ஐயா. பதிவுகள் தாமதமாய் டாஷ்போர்டில் தெரிவதற்கான காரணத்தை ஒரு பதிவாகவே இப்போது போட்டிருக்கிறேன்.

      Delete
  11. ஒவ்வொரு படமும் மிக அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நல்ல தேர்ந்த புகைப்படக் கலைஞரான உங்களுடைய பாராட்டு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. நன்றி வெங்கட்.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.