லண்டனிலிருந்து வெளியாகும் காற்றுவெளி என்னும் கலை இலக்கிய இதழின் இம்மாதப் பதிப்பில் என்னுடைய 'என்றாவது ஒரு நாள்' நூலுக்கான விமர்சனம் வெளியாகியுள்ளதை அனைவரோடும் பகிர்ந்து மகிழ்கிறேன்.
தன்னுடைய தேர்ந்த விமர்சனத்திறமையால் மிக அருமையானதொரு விமர்சனத்தை வழங்கியுள்ள சிறீ சிறீஸ்கந்தராஜா ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
என்னுடைய என்றாவது
ஒரு நாள் என்னும் மொழிபெயர்ப்பு நூலைத் தம்முடைய விமர்சன ஆய்வுக்கு எடுத்துக்கொண்டமைக்கும்
திறம்பட அலசி நேரியதொரு விமர்சனம் அளித்துள்ளமைக்கும் காற்றுவெளி இதழில் வெளியிட்டு
நூலுக்கு சிறப்பு சேர்த்தமைக்கும் அவருக்கு என் நெகிழ்வான நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
அவர் வழங்கியுள்ள விமர்சனமானது
என்னுடைய எழுத்தின் மீதான பொறுப்பை அதிகரித்து மேலும் சிறப்பாக எழுதத் தூண்டும் வகையில்
அமைந்துள்ளது என்றால் மிகையில்லை.
மொழிபெயர்ப்பு
என்றால் என்ன என்று வாசகர்க்கு விவரமாகவும் எளிமையாகவும் விவரித்து அதன் பல்வேறு அளவுகோல்களையும்
கருத்தில் கொண்டு இந்நூலை அலசியமை சிறப்பு.
ஒரு பானை சோற்றுக்கு
ஒரு சோறு பதமாக ஒரு கதையை எடுத்துக்கொண்டு அதன் மொழிநடையை சிலாகித்துப் பாராட்டியுள்ளது அவருடைய தேர்ந்த விமர்சனத்திறனுக்கு சான்று.
\\இவரை மேலும்
ஊக்கப்படுத்துவதன் மூலம் இது போன்ற இன்னும் பல தொகுப்புகளை இவரால் கொண்டுவரமுடியும்
என்பதிலும் நாம் நம்பிக்கை கொள்வோமாக!.\\
அவருடைய ஊக்கம்
தரும் இவ்வார்த்தைகள் போதும்..மேலும் சிறப்புடன் செயலாற்ற வழித்துணையாகும். மிக்க நன்றி சிறீ சிறீஸ்கந்தராஜா ஐயா!
காற்றுவெளி இதழின் ஆசிரியர், பிரபல எழுத்தாளரும் நூலாசிரியருமான முல்லை அமுதன் ஐயா அவர்களுக்கும் இவ்வேளையில் என் அன்பான நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
மென்மேலும் இதுபோன்ற நூல்களை வெளியிட எமது மனமார்ந்த வாழ்த்துகள் சகோ.
ReplyDeleteதமிழ் மணம் 1
நேரமிருப்பின் எமது வலைப்பூவிற்க்கும் வருக.
வாழ்த்துக்கு மிகவும் நன்றி கில்லர்ஜி. தங்கள் வலைப்பூவுக்கும் வருகிறேன்.
Deleteகேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteகாற்றுவெளி இதழுக்கும், அதன் ஆசிரியருக்கும், விமர்சனம் செய்துள்ள ஐயாவுக்கும் நம் பாராட்டுக்கள், வாழ்த்துகள் + நன்றிகள்.
தங்களுக்கு மேலும் பல வெற்றிகள் தொடர்ச்சியாகக் கிட்டட்டும்.
தங்களுடைய ஊக்கம் தரும் கருத்துகளுக்கும் அன்பான பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோபு சார்.
Delete//இவருக்குப் பூக்கள் தூவி ....
ReplyDeleteபொன்னாடை போர்த்துவதன் மூலம்
என் தமிழ் பெருமை கொள்ளுகின்றது.
- சிறீ சிறீஸ் கந்தராஜா 16.02.2015 //
-=-=-=-
”எங்கே... எங்கே... பாம்பு?”
பாம்பிடமிருந்து காவல் காப்பதிலேயே அந்த இரவுப்பொழுது முடிந்துவிடுகிறது.
இருப்பினும் பிறகு நடந்த உரையாடல்கள் கதையை நன்கு நகர்த்துகின்றது.
காலை விடிந்ததும் பாம்பு தென்படுகிறது. அடித்துக்கொல்லப்படுவதுடன் கதையும் முடிகிறது :)
-=-=-=-
ஒரேயொரு கதையையே எடுத்துக்கொண்டுள்ள போதும் அதனை அற்புதமாகத் திறனாய்வு செய்து அருமையான முடிவுரை கொடுத்துள்ளார்கள்.
தமிழ் மொழியின் சார்பில்
பூக்கள் தூவி ....
பொன்னாடை போர்த்தி .....
அனைவரும் படித்து மகிழ்கின்றோம்.
தாங்கள் பிறந்த பொன்மலையால்
எங்கள் திருச்சிக்கே பெருமை !
வாழ்க ! வளர்க !!
கோபு சார், தங்கள் பாராட்டு கண்டு நெகிழ்கிறேன். மிக்க நன்றி தங்களுக்கு.
Deleteநீங்கள் எங்கள் ஊரா...??!!!
ReplyDeleteவாழ்த்துகள் சகோ!!
கலை இலக்கியப் படைப்புகளின் மொழியாக்கத்தில் உள்ள சிரமங்களை
Deleteஅறிந்திருக்கிறேன்.
விமர்சித்தும்..:))
தங்களுடைய படைப்பைக் மொழிபெயர்ப்புக்கும் மொழியாக்கத்திற்குமான வேறுபாடுகளை அவதானித்து விமர்சித்த
திரு. சிறீ சிறீஸ்கந்தராஜா அவர்களுக்குப் பாராட்டுகளும்... உங்களுக்கு வாழ்த்துகளும்.
த ம 2
\\நீங்கள் எங்கள் ஊரா...??!!!
Deleteவாழ்த்துகள் சகோ!!\\
தாங்களும் திருச்சிதானா? அறிய மிகவும் மகிழ்வாக உள்ளது. வாழ்த்துக்கு நன்றி விஜி சார்.
வாழ்த்துக்கள் மேடம்
ReplyDeleteவாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா.
Deleteவாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDeleteதம +1
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteமிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தனபாலன்.
Deleteமிகவும் மகிழ்ச்சி கீதா! அருமையான விமர்சனம்! காற்றுவெளியின் ஆசிரியர் அவர்களுக்கும் உனக்கும் பாராட்டுக்கள்! காற்று வெளியில் விமர்சனத்தை வாசிப்பதற்குள் இப்படியும் அப்படியும் நகர்ந்து போதும் போதும் என்றாகிவிட்டது. எனக்குத் தான் சரியான கோணத்தில் வைத்து வாசிக்கத் தெரியவில்லை போலும்! மொழிபெயர்ப்பு, மொழியாக்கம் இரண்டையும் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளது மிகவும் நன்று. பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அக்கா. காற்றுவெளி இதழில் வாசிக்க எளிதாகத்தான் எனக்கு இருந்தது. எழுத்தின் அளவைப் பெரிதாக்கினால் அப்படியும் இப்படியுமாக நகர்ந்து சிரமம் தருகிறது. அதுதான் பிரச்சனை என்று நினைக்கிறேன். சிரமத்தினூடும் விமர்சனத்தை வாசித்துக் கருத்திட்டதற்கு மிக்க நன்றி அக்கா.
Deleteவணக்கம்
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரூபன்.
Deleteமனம் நிறைந்த வாழ்த்துக்களும் இனிய பாராட்டுக்களும்!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் அன்பான நன்றி மேடம்.
Deleteமகிழ்ச்சி. வாழ்த்துகள்.
ReplyDeleteவிமர்சனம் வாசித்தேன். மிக அருமையானதொரு ஆய்வு.
வருகைக்கும் வாழ்த்துக்கும் விமர்சனம் வாசித்துக் கருத்தளித்தமைக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
Deleteபுத்தகம் இந்தப் பக்கம் எங்கே கிடைக்கும் கீதா
ReplyDeleteதங்கள் ஆர்வத்துக்கு மிகவும் நன்றி எட்வின் சார். விரைவில் புத்தகம் தங்களை வந்தடையும்.
Deleteகீதா ! சத்தமில்லாமல் பெரிய சாதனை புரிந்திருக்கிறீர்கள். என் மனங்கனிந்த பாராட்டுகள். நூல் எங்கு கிடைக்கும் ? படிக்க கண்களும், விமரிசனம்எழுத கைகளும் துடிக்கின்றன...
ReplyDeleteஇன்னமும் நிறைய நூல்கள் எழுத வாழ்த்துகிறேன்...
?
தங்களது அன்பான பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி மோகன்ஜி. தங்களுடைய விமர்சனம் அறிய என் மனம் துடிக்கிறது. விரைவில் புத்தகம் தங்களை வந்தடையும்.
Deleteதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி ஐயா. தங்களுக்கும் இனிய வாழ்த்துகள்.
Deleteவாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கு மிகவும் நன்றி வெங்கட்.
Delete