5 March 2015

சொ. ஞானசம்பந்தன் ஐயாவின் பார்வையில் என்றாவது ஒரு நாள்




என்றாவது ஒரு நாள் என்னும் என் புத்தகத்திலும் என் மனத்திலும் நன்றிக்குரியவராய் நான் அடையாளம் காட்டியுள்ளவர் என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய மாமனார் திரு.சொ.ஞானசம்பந்தன் அவர்கள். இலக்கியச்சாரல் என்னும் வலைப்பதிவில் எழுதிவரும் அவரே பதிவுலகில் மூத்த பதிவராக இருப்பார் என்று நினைக்கிறேன்.

இளவயதினரே கொஞ்சநேரம் இருக்கையில் தொடர்ந்து உட்கார்ந்திருந்தால் முதுகுவலியும் கழுத்துவலியும் வந்து வேதனைப்படுகையில், எண்பத்தொன்பது வயதிலும் தொடர்ந்து தமிழ்ச்சேவை ஆற்றுவது பாராட்டுக்குரியது. தமிழ், ஆங்கிலம், லத்தீன், பிரெஞ்சு, இந்தி ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்த அவர் தம் அனுபவங்களையும் ஆய்வுகளையும் மொழிபெயர்ப்புகளையும் பிற ஆக்கங்களையும் தானே தட்டச்சு செய்து தன் வலைப்பூவில் பகிர்ந்துவருகிறார்.

தன்னால் இயன்ற அளவுக்கு எழுதுவதிலும் வாசிப்பதிலும் பெரும்பாலான நேரத்தைச் செலவிடும் அவர், என்னுடைய இந்த நூலை பொறுமையாக வாசித்து கருத்துரைத்திருப்பதை அறிய மனம் உவகையில் நிறைகிறது. மூல ஆசிரியரைப் பாராட்டியிருப்பதோடு மொழிபெயர்ப்பையும் பாராட்டியிருப்பது பெருமகிழ்வைத் தருகிறது. வயதிலும் அறிவிலும் அனுபவத்திலும் மூத்தவரான அவர் என்னுடைய நூலுக்கு கருத்துரை வழங்கி சிறப்பித்திருப்பதை என் பெரும்பேறாகக் கருதி மனம் நிறைந்த நன்றியை நவில்கிறேன்.

நூல் குறித்த சொ.ஞானசம்பந்தன் ஐயா அவர்களின் கருத்துரையைக் காண இங்கு வருமாறு அன்புடன் அழைக்கிறேன். நன்றி.



26 comments:

  1. அய்யாவின் தளம் சென்று, பார்த்துக் கருத்திட்டு வந்தேன் நன்றி சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. உடனடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா.

      Delete
  2. அருமை தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி புதுவை வேலு.

      Delete
  3. //சொ. ஞானசம்பந்தன் ஐயா//

    மிகவும் பொருத்தமான அழகான பெயர். :)

    >>>>>

    ReplyDelete
  4. //என்றாவது ஒரு நாள் என்னும் என் புத்தகத்திலும் என் மனத்திலும் நன்றிக்குரியவராய் நான் அடையாளம் காட்டியுள்ளவர் என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய மாமனார் திரு.சொ.ஞானசம்பந்தன் அவர்கள். இலக்கியச்சாரல் என்னும் வலைப்பதிவில் எழுதிவரும் அவரே பதிவுலகில் மூத்த பதிவராக இருப்பார் என்று நினைக்கிறேன்.//

    இதனைப்படிக்கவும் கேட்கவும் மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. மிகவும் மகிழ்ச்சி சார்.

      Delete
  5. //தன்னால் இயன்ற அளவுக்கு எழுதுவதிலும் வாசிப்பதிலும் பெரும்பாலான நேரத்தைச் செலவிடும் அவர், என்னுடைய இந்த நூலை பொறுமையாக வாசித்து கருத்துரைத்திருப்பதை அறிய மனம் உவகையில் நிறைகிறது. மூல ஆசிரியரைப் பாராட்டியிருப்பதோடு மொழிபெயர்ப்பையும் பாராட்டியிருப்பது பெருமகிழ்வைத் தருகிறது. வயதிலும் அறிவிலும் அனுபவத்திலும் மூத்தவரான அவர் என்னுடைய நூலுக்கு கருத்துரை வழங்கி சிறப்பித்திருப்பதை என் பெரும்பேறாகக் கருதி மனம் நிறைந்த நன்றியை நவில்கிறேன்.//

    வயதில் மிகவும் மூத்தவரும், மிகவும் திறமையும், பொறுமையும் வாய்ந்த அனுபவசாலியான தங்கள் மாமனார் அவர்களுக்கு என் வணக்கங்கள். ஒட்டுமொத்தக் குடும்பமும் இலக்கியப்பணியாற்றுவது கேட்க மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது. பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

    அன்புடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வணக்கத்தை அவரிடம் தெரிவிக்கிறேன் கோபு சார். தங்களுடைய மகிழ்வான பாராட்டுக்கும் நல்வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் சார்.

      Delete
  6. "என்றாவது ஒரு நாள்" - நூல் பற்றிய சொ.ஞானசம்பந்தன் அய்யாவின் அற்புதமான திறனாய்வு கருத்துரை என்னை அவர்பால் இனம்காணாத புரிதலுக்கும் போற்றுதலுக்கும் உட்படுத்தி விட்டது.

    காரணம் யாதாக இருக்கும் எண்ணிப் பார்த்தேன்

    எனது மாநிலத்தை சேர்ந்த மண்ணின் மைந்தர் என்பதனாலா?
    அல்லவே அல்ல!
    தள்ளாத வயதிலும் துள்ளி விளையாடும் அவரது எழுத்தின் வலிமை வரிகளில் வசப்பட்டு கிடக்கின்றது.

    சகோதரி கீத மஞ்சரியின் வருகையால் இதை படிக்கவும் ,தங்களை பற்றிய செய்திகளை அறியவும் நல்ல வாய்ப்பு நாடி வந்தமைக்கு நவில்கிறேன் நன்றினை!
    நண்பர் சொக்கனிடம் சொல்லி அந்த நூலை அவசியம் வாங்கி படித்து அறிவேன்.
    நன்றி!
    தம வாக்கு 1
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய உற்சாகமும் ஊக்கமும் தரும் கருத்துரைக்கும் நூலை அவசியம் வாங்கிப் படிப்பேன் என்றதற்கும் மிகவும் நன்றி புதுவை வேலு.

      Delete
  7. எனக்கு எழுதிய பல பின்னூட்டங்களில் உங்கள் மாமனார் பற்றிக் கூறி இருக்கிறீர்கள். ஆனால் அப்பெருந்தகை திரு.ஞான சம்பந்தம் என்பதை அறியும் போது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. முன்பும் பல பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன் ஐயா. இப்போதும் குறிப்பிடுவதில் மகிழ்கிறேன். தங்கள் வாழ்த்துகளுக்கு அன்பான நன்றி.

      Delete
  8. ஐயாவின் தளத்திற்கு இன்று தான் சென்று வந்தேன்.
    இப்பொழுது புரிகிறது உங்களுக்கு எப்படி இந்த மொழிப்பெயர்ப்புக்கலை கைவந்த கலையாக விளங்குகிறது என்று.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். அவர்களுடைய மொழிபெயர்ப்புத் திறனும் எனக்கு ஒரு வழிகாட்டியாய் உந்துதலாய் அமைந்துள்ளது என்பது மறுப்பதற்கில்லை. கருத்துரைக்கு நன்றி சொக்கன்.

      Delete
  9. இணைப்பிற்கு செல்கிறேன்... வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. ஊக்கம் தரும் வாழ்த்துகளுக்கு நன்றி தனபாலன்.

      Delete
  10. மொழிபெயர்ப்பு: இப்போதைய ஆத்திரேலிய ஆங்கிலம் இங்கிலாந்துக்காரர்களுக்கே விளங்குவது கடினம் என்பர்; அப்படியிருக்க, முற்கால, ஒரு கலப்புக் கொச்சை மொழியைப் புரிந்து மொழிபெயர்ப்பது என்பது அறைகூவல் நிறைந்த பணி//
    இதைவிட வேறு என்ன வேண்டும் ? உங்களை மிக அருமையாக பாராட்டி விட்டார்கள் மாமா.

    கீதா மதிவாணனின் எழுத்துப் பணி மேன்மேலும் சிறக்கட்டும்! //
    இந்த வாழ்த்துக்களும் உங்களை மேலும் எழுத்து பணியை சிறப்பாக செய்ய உதவும்.
    வாழ்த்துக்கள் கீதமஞ்சரி.

    ReplyDelete
    Replies
    1. \\இந்த வாழ்த்துக்களும் உங்களை மேலும் எழுத்து பணியை சிறப்பாக செய்ய உதவும். \\
      நிச்சயமாக.. கோமதி மேடம். தங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும் ஊக்கம் தரும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

      Delete
  11. மனம் நிறைந்த நல்வாழ்த்துகள். அவரது தளத்தில் படிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி வெங்கட்.

      Delete
  12. ஐயா அவர்களின் தளத்திலேயே படித்து மகிழ்ந்தேன் சகோதரியாரே
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஐயா.

      Delete
  13. இரத்தினச் சுருக்கம் கீதா.

    நீங்கள் கொடுத்திருக்கிற விளக்கமோ இரத்தினத்தில் இருந்து மிளிர்கின்ற ஒளி. வாழ்த்துக்களும் பாராட்டுகளும் இருவருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் அன்பான நன்றி மணிமேகலா.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.