முடிவிலியாய் நீண்டுதொடரும்
கோடுநிறைப் புள்ளிகளுக்கு நிகராக
மனப்பரப்பெங்கும் இறைந்துகிடக்கும்
எண்ணங்களின் விதைப்புகள்!
இண்டுகளிலும் இடுக்குகளிலும்
இறுகப்பற்றி வேர்விடும் ஆலமரமென
அழுந்திப் படரும் நினைவுகளின் முடிச்சுகளில்
முரண்பட்டு நிற்கும்
மனமுவந்த நிகழ்வுகளின் நெருடல்கள்!
விழிநீரின் வெம்மையில் வெந்தபடி வெளியேறும்
சில வைராக்கியங்களை விழுங்கத் தலைப்படும்
சொல்லொணாத் துயரம் விழுங்கி,
தொலைதூர அடர்வனமொன்றில்
துணையற்றுத் தனித்தொலிக்கும்
ஒற்றைப்பறவையின் சோகத்துக்கிணையாக
உள்ளாடும் உயிர்த்துடிப்பைச் சுமந்தபடி
அலையும் மனதிற்கு ஆதரவாய்….
நோக்கமெதுவுமற்றுத் திரிந்து
திசைமாறிச்சொரியும் அன்பின் சாரல்களும்,
அதில் திளைத்தபடி ஆசுவாசப்படுத்தும்
அறிமுகமற்ற சில நட்புகளும்!
உங்கள் கவிதை அருமையாக உள்ளது
ReplyDelete//நோக்கமெதுவுமற்றுத் திரிந்து
ReplyDeleteதிசைமாறிச்சொரியும் அன்பின் சாரல்களும், //இதயத்திலிருந்து நிம்மதியின் வெளிப்பாடாக ஒரு துளி கண்ணீர் வருகிறது. அருமையான கவிதை.
romba nalaikapram vanthen..nalla kavitha vaasiththa nimmathi.
ReplyDelete@ kobiraj
ReplyDeleteவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி கோபிராஜ்.
@ சாகம்பரி,
ReplyDeleteஅயல்நாடுகளில் உறவுகளைப் பிரிந்து வாழும் வாழ்க்கையில் இதுபோன்று அடிக்கடி எழும் உணர்வுகளை ஆசுவாசப்படுத்துவது உம் போன்ற இணைய நட்புகளே... நன்றி சாகம்பரி.
@ logu,
ReplyDeleteஉங்கள் வருகையும் பாராட்டும் கண்டு மிகவும் மகிழ்ச்சி லோகு.
தனிமைக்குத் தோள் தரும் நட்பொன்று வரிகளில் !
ReplyDeleteவருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி ஹேமா.
ReplyDeleteநோக்கமெதுவுமற்றுத் திரிந்து
ReplyDeleteதிசைமாறிச்சொரியும் அன்பின் சாரல்களும்,
அதில் திளைத்தபடி ஆசுவாசப்படுத்தும்
அறிமுகமற்ற சில நட்புகளும்!
ஆஹா.. வாழ்வின் அர்த்தம் புலப்படுத்திய வரிகள்.
மிக மிக நன்றி ரிஷபன் சார். ஒரே சமயத்தில் இத்தனைப் பதிவுகளைப் படித்துப் பின்னூட்டமிட்டு ஊக்கமளிப்பதற்கு என் மனமார்ந்த நன்றி.
ReplyDeleteஎன் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (4/11/11 -வெள்ளிக்கிழமை) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/
ReplyDeleteவலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி மென்மேலும் ஊக்கம் தரும் உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி சாகம்பரி.
ReplyDelete//நோக்கமெதுவுமற்றுத் திரிந்து
ReplyDeleteதிசைமாறிச்சொரியும் அன்பின் சாரல்களும்,
அதில் திளைத்தபடி ஆசுவாசப்படுத்தும்
அறிமுகமற்ற சில நட்புகளும்! //
arumai...
chandhan-lakshmi.com
நன்றாக இருக்கிறது கவிதை!
ReplyDeleteநல்ல கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
@ Dhanalakshmi,
ReplyDelete@நம்பிக்கைபாண்டியன்,
முதல் வரவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.
@Rathnavel,
முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ஐயா.