2 May 2015

கீதமஞ்சரி வலைப்பூவில் சில சேர்க்கைகள்!





கீதமஞ்சரியின் தொடர்வாசகர்களான அனைவருக்கும் அன்பான வணக்கம். இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென்று என்னுடைய பல பதிவுகள் தங்களுடைய டாஷ்போர்டில் வரிசையாக வந்துநிற்பதைப் பார்த்து பலருக்கும் வியப்பு. எப்படி தவறவிட்டோம் இத்தனைப் பதிவுகளை என்று அல்லது எப்படி இத்தனைப் பதிவுகள் அதுவும் பிப்ரவரி, மார்ச் மாதப்பதிவுகள் இப்போது என்று. அனைத்துப் பதிவுகளுக்கும் சலிக்காமல் பின்னூட்டமிட்டு ஊக்கமளித்த கோபு சார் அவர்களுக்கும் ஜிஎம்பி ஐயா அவர்களுக்கும் அன்பான நன்றி. இருவரும் இந்த சந்தேகத்தைக் கேட்டிருந்தார்கள். விளக்கம் அளிக்கவேண்டியது என் கடமை அல்லவா?




நான்கைந்து மாதங்களுக்கு முன் 'விசும்பின்கீழ் விரியும் உலகு' என்ற பெயரில் வலைப்பூ ஒன்று துவங்கி அதில் நான் எடுக்கும் புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு வந்தேன். அவ்வப்போது புகைப்படங்கள் குறித்த சிற்சிறு தகவல்களும் வெளியிட்டுவந்தேன். எதற்கு தனித்தனியாக வலைப்பூக்கள் என்று நினைத்து என்னுடைய ஆக்கங்கள் அனைத்தையும் ஒரே வலையில் சேகரிக்கும் முயற்சியாக அவ்வலைப்பூவையும் கீதமஞ்சரியுடன் இரண்டுநாட்களுக்கு முன் இணைத்துவிட்டேன். அதன்காரணமாகவே அந்தப் பதிவுகள் புதிதாக தங்களுடைய டாஷ்போர்டில் தொடர்பதிவுகளாக காட்சியளித்திருக்கின்றன. இப்படி வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. பதிவுகளைப் பார்வையிட்ட கருத்திட்ட பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் மிகவும் நன்றி. 



வலைப்பூ சேர்க்கையுடன் இன்னொரு சேர்க்கையும் கீதமஞ்சரியில் நிகழ்ந்திருக்கிறது. ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் (ATBC) என்னும் இணைய வானொலியில் காற்றினிலே வரும் கீதம் என்ற பெயரில் வாரந்தோறும் ஒருமணி நேர திரையிசை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதாக முன்பே தெரிவித்திருந்தேன் அல்லவா? அந்த நிகழ்ச்சியைக் கேட்க நேரம் ஒத்துவராத பல நண்பர்கள் அவற்றை வலையில் பகிர்ந்தால் கேட்டு மகிழமுடியும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்கள். அவர்களுக்காக இந்த வலையின் விட்ஜெட்களில் ஒன்றாக காற்றினிலே வரும் கீதம் என்ற தலைப்பில் வானொலி நிகழ்ச்சிகள் (ஏற்கனவே ஒலிபரப்பானவை) சிலவற்றை இணைத்திருக்கிறேன். வாரமொருமுறை புதிய நிகழ்ச்சிகள் மாற்ற உத்தேசம்.  



நேரமும் ஆர்வமும் உள்ளவர்கள் கேட்டு மகிழுங்கள். வானொலி நிகழ்ச்சி பற்றிய கருத்தோ திருத்தமோ ஆலோசனையோ தெரிவிக்க விரும்புபவர்கள் கீதமஞ்சரியின் எந்தப் பதிவின் பின்னூட்டத்திலும் வானொலி நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு தெரிவிக்கலாம் அல்லது jgeetham71@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தெரிவிக்கலாம். அனைவரின் ஆதரவையும் அன்புடன் எதிர்நோக்குகிறேன். நன்றி. 




34 comments:

  1. விளக்கம் அளித்துத் தனிப்பதிவு வெளியிட்டுள்ளதற்கு மகிழ்ச்சி+ நன்றி. பாராட்டுகள். வாழ்த்துகள். தொடரட்டும் தங்களின் இதுபோன்ற இனிய பல சேவைகள். வாழ்க !

    பிரியமுள்ள நட்புடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் உடனடி வருகைக்கும் உற்சாகம் தரும் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி கோபு சார்.

      Delete
  2. சகோதரியின் தகவலுக்கு நன்றி! அய்யா வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் போல், சலிக்காது, என்னால் தொடர்ந்து பின்னூட்டம் போட முடியாது. ஆனாலும் பதிவுகளை படித்து விடுவேன். அவ்வப்போது வருவேன்.
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. நானும் தங்களைப் போல்தான் ஐயா. நேரம் கிடைக்கும்போதெல்லாம் நண்பர்களின் பதிவுகளைப் படித்துவிடுவதுண்டு. பிறகு கருத்துரை எழுத நினைத்து பல பதிவுகள் விட்டுப்போய்விடுவதும் உண்டு. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  3. அன்பின் கீத மஞ்சரிக்கு விளக்கத்துக்கு நன்றி. ATBC நிகழ்ச்சி காற்றினிலே வரும் கீதத்தில் உங்கள் குரல் கேட்டேன் பாரம்பரிய இசைக்கருவிகளில் நாதஸ்வரம் பற்றிய உங்கள் தகவல்கள் இதுவரை அறியாதவை நிகழ்ச்சி முடிந்து விட்டதா இல்லையா என்று அறியமுடியாதபடி அப்ரப்ட் ஆக முடிகிறது போல் தெரிகிறது. இல்லை என்றால் வெகு நேரம் கழித்துத் தொடருமா தெரிய வில்லை ஒரு மணி நேர நிகழ்ச்சியும் விட்ஜெட்டில் சொடுக்கினால் கேட்க முடியுமா? உங்களது பன் முகத் திறமை தெரிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வானொலி நிகழ்ச்சியைக் கேட்டு இட்டக் கருத்துக்கும் நன்றி ஐயா. ஒரு மணி நேர நிகழ்ச்சி முழுவதுமாக soundcloud தளத்தின் மூலம் பதிவேற்றியிருக்கிறேன். இணைய இணைப்பு சரியாக இருந்தால் தடையின்றி தொடர்ந்து கேட்கமுடியும். இல்லாவிடில் தடங்கல் ஏற்படும் என்று நினைக்கிறேன். தங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி ஐயா.

      Delete
  4. தங்கள் முடிவு நல்ல முடிவு ஒருவர் இரண்டு வலைப்பூ நடத்துவதால் பயன் ஏதுமில்லை. பார்வையாளர்கள் குழம்பாமல் இருக்க ஒரு வலைப்பூவே நல்லது வாழ்த்துகள்
    வை.கோ சார் பின்னூட்டப் புயல்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி முரளிதரன். வைகோ சாரின் வேகத்தை பதிவுலகமே அறியுமே.. :)

      Delete
  5. தகவலைத் தெரிந்து கோண்டேன்.
    தொடர்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தொடர்வதற்கு நன்றி விஜி சார்.

      Delete
  6. தங்களின் இந்த பதிவு என்னுடைய குழப்பத்தை தீர்த்து வைத்ததாகவே கருதுகிறேன். நானும் 'கூட்டாஞ்சோறு', 'தினம் ஒரு தகவல்', 'நம்ம மதுர' என்ற மூன்று வலைத்தளங்களை ஆரம்பித்தேன். இதில் கூட்டாஞ்சோறு தவிர மற்ற இரு தளங்களையும் நிர்வகிக்க முடியவில்லை. அதனால், நானும் உங்கள் பாணியை பின்பற்றி எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்துவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.

    ஆஸ்திரேலிய வானொலியில் தாங்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் நிலவுப் பாடல்கள் மட்டும் கேட்டேன். அருமையான குரல், நிலவுப் பற்றி பல தகவல்கள், பாடல் தெரிவும் நன்றாக இருந்தது. மிக்க மகிழ்ச்சி!

    த ம 3

    ReplyDelete
    Replies
    1. ஒன்றுக்கு மேற்பட்ட வலைத்தளங்களை நடத்தும்போது நிர்வகிக்க இயலாவிட்டால் ஒன்றாக இணைத்துவிடுவது நல்லது. என்னால் உங்கள் குழப்பம் தீர்ந்தமைக்கு மகிழ்கிறேன். வானொலி நிகழ்ச்சியை கேட்டு ரசித்தமைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

      Delete
  7. ஒரு வலைப் பூவே போதுமானது சகோதரியாரே
    தங்களின் முடிவு நல்ல முடிவு
    வாழ்த்துக்கள்
    தொடருங்கள் தொடர்கிறேன் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  8. வணக்கம்
    தகவலை தெரியப்படுத்தியமைக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன்.

      Delete
  9. சிறந்த முடிவு...

    வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  10. என்னுடைய டேஷ் போர்டில் தங்களின் புதிய பதிவு எதுவும் தென்படவில்லையே! பரவாயில்லை! நேரம் கிடைக்கையில் தேடிப்படிக்கிறேன்! ஒரே வலைப்பூவாக தொடர்வது சிறப்புதான். தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் டாஷ்போர்டில் பதிவுகள் வரவில்லையா? எல்லாம் புகைப்படங்கள்தாம். அதனால் நேரமிருக்கும்போது பாருங்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்.

      Delete
  11. வலைப்பூ சேர்க்கை பற்றிய விபரமறிந்தேன். நேரங்கிடைக்கும் போது காற்றினிலே வரும் கீதத்தைக் கேட்பேன்! வாழ்த்துடன் கூடிய பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அக்கா. நேரம் கிடைக்கும்போது வானொலி நிகழ்ச்சியைக் கேட்டுப்பாருங்கள்.

      Delete
  12. கீதா,

    நானும் அதேதான் நினைத்தேன்.

    மேலும் அழகிய படங்களை முழு அளவில் காணும் ஆவலில் my clicks ஐக் க்ளிக்'கினால் இந்தப் பதிவுதான் வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ரா. இப்போது படங்களுக்கு மேலே இணைப்பு கொடுத்திருக்கிறேன். இப்போது ஃப்ளிக்கர் பக்கம் போய் படங்களைப் பெரிதாக்கிப் பார்க்கலாம். நன்றி சித்ரா. உங்களால்தான் அதைச் செய்யமுடிந்தது.

      Delete
    2. பறவைகள் & விலங்குகளுக்காக நீங்கள் காத்திருந்து எடுத்தீர்களா ! அல்லது அவர்கள் உங்கள் காமிராவுக்காகக் காத்திருந்து போஸ் கொடுத்தார்களா ! என ஆச்சரியமாக இருந்தது.

      பார்த்து ரசிக்கத் தந்தமைக்கு நன்றி கீதா !

      Delete
    3. ஆஹா... உங்கள் பாராட்டு மிகுந்த மகிழ்வைத் தருகிறது சித்ரா. மிகவும் நன்றிப்பா.

      Delete
  13. ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பூவில் தொடர்ந்து எழுதுவது சற்றே சவாலான விஷயம் தான்.

    தமிழ் தெரியாத எனது வட இந்திய நண்பர்களுக்குகாக, எனது பயணக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் வெளியிட நினைத்து ஒரு வலைப்பூவினைத் துவங்கினேன். சில பதிவுகளும் வெளியிட்டேன். ஆனாலும் தொடர்ந்து அங்கே எழுத முடியவில்லை. ஒரு வலைப்பூவில் எழுதுவதற்கே நேரம் இருப்பதில்லையே....

    தொடர்ந்து இப்பக்கத்தில் எழுதிட எனது வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட். ஒரு வலைப்பூவுக்கே நேரம் போதவில்லை. சரிதான்.

      Delete
  14. ஒன்றே செய்யினும் நன்றே செய்வோம்! என்பதே என் கருத்து!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  15. ஒரே வலைப்பூவில் பயணித்தால் நன்மைதான் அக்காச்சி! வானொலியை செவிமடுத்து கருத்தினை பகிர்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தம்பி. soundcloud மூலம்தான் வானொலி நிகழ்ச்சிகளை வலையேற்றியிருந்தேன். மூன்று நிகழ்ச்சிகளுக்கு மேல் ஏற்றமுடியவில்லை. அதனால் முன்பு பதிந்தவற்றை நீக்கிவிட்டு வேறு எளிய வழியில் வலையேற்ற முயன்றுகொண்டிருக்கிறேன். விரைவில் வானொலி நிகழ்ச்சிகள் உங்கள் பார்வைக்கு வரும்.

      Delete
  16. Anonymous28/6/15 13:42

    பூக்களும் பறவைகளுமாய் உங்கள் வலைப்பக்கம் கண்குளிரக் காட்சி தருகிறது. ஆஸ்திரேலிய இயற்கைக்காட்சிகள் அள்ளுகின்றன மனதை. தொடருங்கள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வலையில் உள்ள படங்களை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி. தொடர்ந்து வாங்க.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.