பார், பகலும் கழிந்தது இரவும் போனது,
சூரியன் மேற்கை அடைந்து மறைந்தது.
அந்திப்பொழுது வந்து ஆக்கிரமித்தது.
முந்தைய அந்திப்பொழுதுகள் போலவே
அந்தப்பொழுதும் இருந்தது.
எழுந்தது முதலாகவே ஏனோ எண்ணியிருந்தேன்,
பகலில் ஏதேனும் புதுமை நிகழுமென்று!
பார், பகலும் கழிந்தது
இரவும் போனது.
பையப் பையப் புறப்பட்ட விண்மீன்கள்
மெல்ல மெல்லப் பரவின வானமெங்கும்.
முந்தைய இரவுகளைப் போலவேதான்
அந்த இரவும் இருந்தது.
அந்திவேளையில் ஏனோ சிந்தித்திருந்தேன்,
இரவில் ஏதேனும் அதிசயம் நிகழும் என்று.
பார், பகலும் கழிந்தது இரவும் போனது.
பறவைகள் கீச்சிட்டன,
அரும்புகள் மலர்ந்து மணம்வீசின.
கிழக்கிலிருந்து மீண்டும் கதிரவன்
எழுந்தது.
வழக்கம்போல்
வைகறைப்பொழுது புலர்ந்தது.
உறங்கும்வேளையில் ஏனோ உத்தேசித்திருந்தேன்,
விடியலில் ஏதேனும் விநோதம் நிகழும் என்று.
பார், பகலும் கழிந்தது இரவும் போனது.
*******************
(மூலம்: ஹரிவம்ஷ்ராய் பச்சன் அவர்கள்
எழுதிய ‘lo dhin beetha hai, lo raat gayee’ என்னும் இந்திக் கவிதை, வல்லமை இதழில் வெளிவந்தது. மூலக்கவிதை கீழே....)
लो दिन बीता,
लो रात गई
लो दिन बीता, लो रात गई,
सूरज ढलकर पच्छिम
पहुँचा,
डूबा, संध्या आई, छाई,
सौ संध्या-सी वह
संध्या थी,
क्यों उठते-उठते
सोचा था,
दिन में होगी कुछ
बात नई।
लो दिन बीता,
लो रात गई।
धीमे-धीमे तारे
निकले,
धीरे-धीरे नभ में
फैले,
सौ रजनी-सी वह
रजनी थी
क्यों संध्या को
यह सोचा था,
निशि में होगी
कुछ बात नई।
लो दिन बीता,
लो रात गई।
चिड़ियाँ चहकीं,
कलियाँ महकी,
पूरब से फिर सूरज
निकला,
जैसे होती थी
सुबह हुई,
क्यों सोते-सोते
सोचा था,
होगी प्रातः कुछ
बात नई।
लो दिन बीता,
लो रात गई,
ரசித்தேன்... படங்களும் அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமுன்பொரு முறை வெங்கட் நாகராஜ் ஹரிவன்ஷ்ராய் பச்சனின் கவிதை ஒன்றை மொழிபெயர்த்து தந்திருந்தார். அதைப் போலவே இந்தக் கவிதையும் பிரமாதமான ரசனைக்கு விருந்தாக இருக்கிறது! சூ்ப்பர் ஸ்டாரின் அப்பா ஒரு சூப்பர் கவிஞராக இருந்திருக்கிறார். இவரின் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் புத்தகம் எதும் இருந்தால் அவசியம் வாங்கிப் படிக்க வேணுமென்று தோணுது.
ReplyDeleteபறவைகள் கீச்சிட்டன,
ReplyDeleteஅரும்புகள் மலர்ந்து மணம்வீசின.
கிழக்கிலிருந்து மீண்டும் கதிரவன் எழுந்தது.
வழக்கம்போல் வைகறைப்பொழுது புலர்ந்தது.
விநோதம் நிகழ்த்தாவிட்டாலும்
மகிழ்ச்சியுடன் கவிதை வரிகள் அருமை ..!
நல்ல கவிதை. சிறப்பான கவிதையை தமிழில் பகிர்ந்தமைக்கு நன்றி......
ReplyDeleteகணேஷ்... நான் பகிர்ந்தது ஹரிவன்ஷ்ராய் பச்சன் அவர்களின் மகன் அமிதாப் பச்சன் எழுதிய கவிதையின் தமிழாக்கம்.....
இங்கே: http://venkatnagaraj.blogspot.com/2013/01/blog-post_11.html
இயற்கை அழகினை ரஸித்து மிக அழகாக எழுதியுள்ள ஆக்கம் என்னை மிகவும் கவர்ந்தது. படத்தேர்வுகளும் அட்டகாசமாக உள்ளன. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ReplyDelete
ReplyDeleteமொழியாக்கம் செய்து இருப்பதாக எழுதி இருக்கிறீர்கள். எழுதியவர் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் புதுமை, அதிசயம் வினோதம் போன்றவற்றைக் காணாமல் எதையோ தேடுகிறார். எனக்கு என்னவோஎல்லா நிகழ்வுகளுமே ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் தோன்றுகிறது. I ALWAYS WONDER.! பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteவணக்கம்!
பகலும் கழியும் வெற்றாக!
இரவும் கழியும் எளிதாக!
அகலும் அணுகும் என்றெண்ணி
அடித்த பொருள்போல் தொங்காதே!
துகளும் மெல்லச் செயற்பட்டால்
துாண்போல் வளரும் உணா்ந்திடுக!
நிகழும் வாழ்வை மொழிபெயா்த்த
நின்னை வாழ்த்தி மகிழ்கின்றேன்!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
ReplyDeleteதமிழ்மணம் 4
நாளும் பொழுதும் அழகு.அதை ரசிக்கத்தான் நேரமில்லை இப்பொழுது.அழகான காட்சிப்படுத்தல் கீதா !
ReplyDeleteஅழகிய வரிகளில் அருமையான மொழிபெயர்ப்பு! வாழ்த்துக்கள்.-நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.
ReplyDeleteஏகாந்தமாய் மனது தேடும் தேடலை மிக அழகாய் கவிஞர் எழுதியிப்பதை மிக அருமையாக மொழியாக்கம் செய்திருக்கிறீர்கள் கீதமஞ்சரி!
ReplyDeleteஎவ்வளவு நயமிக்க கவிதை!
ReplyDeleteஆழ்ந்து அனுபவிக்க வைக்கின்றன அத்தனை வரிகளும்.
உங்கள் அயராத முயற்சியால் இப்படி அரிய படைப்புகளை நாமும் உணர்ந்து ரசிக்க முடிகிறது.
பாராட்ட வார்த்தைகள் இல்லை தோழி!
வாழ்த்துக்கள்!
த ம.6
காத்திருந்த விழிகளுக்கு கிட்டிய ஏமாற்றத்தின் வெளிப்பாட்டை மிகவும் சிறப்பாகச் சித்தரித்துள்ளது .கவிதை அருமை .பகிர்வுக்கு நன்றி தோழி .
ReplyDeleteவிடியலில் ஏதேனும் விநோதம் நிகழும் என்று.
ReplyDeleteபார், பகலும் கழிந்தது இரவும் போனது.//
அடுத்த விடியலில் ஏதேனும் விநோதம் நிகழட்டும் என்று சொல்ல தோன்றுகிறது.
கவிதை அழகாய் மொழியாக்கம் செய்து தந்தமைக்கு நன்றி.
அருமையான மொழி பெயர்ப்பு கவிதை.
ReplyDeleteஅந்த ஆங்கில பாடலையும் கீழே கொடுத்திருக்கலாம்.
இருப்பினும் நன்றி கீதமஞ்சரி அக்கா.
நல்ல கவிதை. அருமையான தமிழாக்கம் கீதா.
ReplyDelete@திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteஉடனடி வருகைக்கும் ரசித்து வாழ்த்தியமைக்கும் அன்பான நன்றி தனபாலன்.
@பால கணேஷ்
ReplyDeleteஹரிவம்ஷ்ராய் பச்சன் அவர்களின் கவிதைகளில் பெரும்பாலானவை ஒருவித விரக்தி வெளிப்பாட்டுடன் அமைந்திருந்தாலும் வாசிக்கும்போது நம்மையறியாமலேயே தன்னுள் ஈர்க்கும் திறம் கொண்டவை. வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி கணேஷ்.
@இராஜராஜேஸ்வரி
ReplyDeleteசரியாக சொன்னீர்கள். விநோதம் நிகழாவிட்டாலும் விபரீதம் நிகழாமல் மகிழ்ச்சியுடன் நாளொன்று கழிவதும் நலமானதுதானே... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.
@வெங்கட் நாகராஜ்
ReplyDeleteவருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி வெங்கட். நீங்கள் கொடுத்த சுட்டியில் சென்று விரைவில் வாசிக்கிறேன்.
@வை.கோபாலகிருஷ்ணன்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கவிதையை ரசித்து மகிழ்ந்தமைக்கும் கவிதையோடு தேர்ந்தெடுத்த படங்களையும் ரசித்துப் பாராட்டுவதற்கும் அன்பான நன்றி வை.கோ.சார்.
@G.M Balasubramaniam
ReplyDeleteஎண்ணங்கள் ஒருவருக்கொருவர் மாறுபடுதல் இயல்புதானே. இங்கே கவிஞர் எந்தப் புதுமையை, அதிசயத்தை எதிர்பார்க்கிறார் என்று தெரியவில்லை. நம்மைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஜாலம் காட்டுகிறது வாழ்க்கை. ரசனையில்தான் எவ்வளவு வேறுபாடு. தங்கள் வருகைக்கும் ரசனையானப் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
@கி. பாரதிதாசன் கவிஞா்
ReplyDeleteஅற்புதமானக் கருத்தை அழகாகச் சொன்னீர்கள் ஐயா. கவியால் எம்மை சீராட்டும் தங்கள் பண்புக்குத் தலைவணங்கி நன்றி கூறுகிறேன். நன்றி ஐயா.
@கி. பாரதிதாசன் கவிஞா்
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
@ஹேமா
ReplyDeleteவருகைக்கும் ரசனையான மறுமொழிக்கும் அன்பான நன்றி ஹேமா.
@Chellappa Yagyaswamy
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசித்து வாழ்த்தியமைக்கும் மனமாரந்த நன்றி ஐயா.
@மனோ சாமிநாதன்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கவிதையை ரசித்து மகிழ்ந்தமைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி மேடம்.
@இளமதி
ReplyDeleteசிலவற்றை வாசிக்கும்போது பிறரிடம் பகிரத்தோன்றுகிறது. அதன் விளைவே இவை போன்ற பகிர்வுகள். மொழியாக்கம் சிறப்பாக இல்லையென்றாலும் கவியின் மனநிலையை ஓரளவாவது காட்டியிருப்பேன் என்று நம்புகிறேன் இளமதி. வருகைக்கும் ரசனையானப் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி தோழி.
@Ambal adiyal
ReplyDeleteகவிஞரின் எதிர்பார்ப்பு பொய்த்துப்போனாலும் நமக்கு அழகான கவிதை கிடைத்துவிட்டது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்பாளடியாள்.
@கோமதி அரசு
ReplyDeleteநமக்கு விடியலே விநோதம்தான். ஆனால் கவிஞருக்கு எல்லா நாளும் ஒரேமாதிரிதான் தோன்றுகிறதாம். அதனால் என்ன? அழகான கவிதை கிடைத்துவிட்டதே. தங்கள் வருகைக்கும் ரசித்தமைக்கும் மிகவும் நன்றி மேடம்.
@அருணா செல்வம்
ReplyDeleteவருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி அருணாசெல்வம். இது ஒரு இந்திக்கவிதை. உங்கள் யோசனைப்படி அந்தக் கவிதையையும் கீழே இணைத்துவிடுகிறேன். இந்தி அறிந்தவர்கள் நேரடியாகவே புரிந்துகொள்ள ஏதுவாகும். நன்றி அருணாசெல்வம்.
@ராமலக்ஷ்மி
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.