26 July 2013

என் கதைமாந்தர்கள்…




காத்திருந்து காத்திருந்து
களைத்துப்போயிருக்கலாம்
என் கதைமாந்தர்கள்!

ஆட்டுவிக்கும் கர்வத்தில் நான்!
அலைக்கழிக்கப்படும் கலவரத்தில் அவர்கள்!

விதியை மாற்றுவதும் வீணே இழுத்தடிப்பதும்
இன்னாருடன் இன்னாருக்கு
இணக்கமா பிணக்கா என்பதை
இடைக்கிடை நிர்ணயிப்பதும்
நிர்ணயித்ததை நிராகரிப்பதும்....

இடைச்செருகல்களாய்
இன்னுஞ்சிலரை இணைப்பதும்,
இணைந்தோரை வலிந்து பிரிப்பதுமாய்
ஒரு பொம்மை விளையாட்டைப்போலத்தான்
ஆரம்பித்தது அது

துல்லியமாய் கணக்கிடவியலா
துளிப்பொழுதொன்றில்
நானும் அங்கோர் அங்கமாகிவிட
நகரமறுக்கிறது கதைக்களம்!

அம்மாந்தரோடு நாளெல்லாம்
செம்மாந்து திரியும் எனக்கு
நாட்பட நாட்பட
புற உலகம் என்பது
புளித்துதான் போய்விட்டது!

*********************


(வல்லமை இதழில் வெளியானது)

38 comments:

  1. நாட்பட நாட்பட அனைத்தும் அப்படித் தானோ…?

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அழகான படைப்பு.

    //அம்மாந்தரோடு நாளெல்லாம்
    செம்மாந்து திரியும் எனக்கு
    நாட்பட நாட்பட…


    பு ற உ ல க ம் எ ன் ப து
    பு ளி த் து த தா ன் போ ய் வி ட் ட து !//

    அருமையான வரிகள் முடிவில் முத்திரை பதிப்பதாக!

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. இந்தக் கவிதைக்குப் பொருத்தமான பொம்மலாட்டப் படத்தேர்வும் அருமை. ஸ்பெஷல் பாராட்டுக்கள். ;)

    ReplyDelete
  4. புற உலகம் என்பது
    புளித்துதான் போய்விட்டது
    >>
    உங்களுக்குன்னு ஒரு தனி உலகம் உருவான பின் இந்த புற உலகம் ஏன்?!

    ReplyDelete
  5. புற உலகம் என்பது
    புளித்துதான் போய்விட்டது!//அப்படி சொல்லாதீர்கள்

    ReplyDelete
  6. புற உலகம் கெட்டுபோகும் சாத்திய கூறுகள் நிரம்பி கிடக்கிறது எப்படி பதப்படுத்த பொருளும் அழுகிவிடும் அபாயம் நிறைந்து இருக்கிறது ஆகவே இவர்களோடு அகத்தில் ஐக்கியமாவது தான் ஆனந்தம் ....நல்லதொரு பதிவு வாழ்த்துக்கள் பாராட்டுகள் தோழி

    ReplyDelete

  7. உண்மை எது கற்பனை எது என்று துல்லியமாகத் தெரியவேண்டும். கற்பனை மாந்தருடன் கலந்து விட்டால் புற உலகம் புளித்துத்தான் போகும். கதை மாந்தரை நகர்த்துவது விட்டு, நாமே கதாமாந்தரானால்...... எண்ணங்கள் அழகாய் வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. துல்லியமாய் கணக்கிடவியலா
    துளிப்பொழுதொன்றில்
    நானும் அங்கோர் அங்கமாகிவிட
    நகரமறுக்கிறது கதைக்களம்!

    ஆட்டுவித்தால் ஆடும் மாந்தர்கள்..!

    ReplyDelete
  9. வாழ்வு பிடிக்காவிட்டாலும் ஒத்துபோதல்தான்.இல்லாவிட்டால் தனித்துவிடப்படுகிறோமே.அலுத்தாலும் சலித்தாலும் ஆடுவோம் இறுதிவரை !

    ReplyDelete
  10. அருமை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  11. என்னசொல்வதெனத் தெரியவில்லை
    அருமை என்பதைத் தவிர

    ReplyDelete
  12. துல்லியமாய் கணக்கிடவியலா

    துளிப்பொழுதொன்றில்

    நானும் அங்கோர் அங்கமாகிவிட

    நகரமறுக்கிறது கதைக்களம்!//
    இரசித்தேன்! நன்றி!

    ReplyDelete
  13. ஆட்டுவிக்கும் கர்வத்தில் நான்!
    அலைக்கழிக்கப்படும் கலவரத்தில் அவர்கள்!//

    பொம்மலாட்டம் நடக்குது நூலு அவன் கையிலே !
    கவிதை அருமை கீதமஞ்சரி.

    ReplyDelete
  14. என்ன ஒரு எதார்த்தமான வரிகள் கீதமஞ்சரி! உள் அர்த்தம் புரிகிறது வியப்பாக இருக்கிறது!

    ReplyDelete
  15. @திண்டுக்கல் தனபாலன்

    உடனடி வருகைக்கும் ரசித்து வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி தனபாலன்.

    ReplyDelete
  16. @வை.கோபாலகிருஷ்ணன்

    தங்கள் வருகைக்கும் ரசித்து வாழ்த்தியமைக்கும் பாராட்டுக்கும் அன்பான நன்றி வை.கோ.சார்.

    ReplyDelete
  17. @வை.கோபாலகிருஷ்ணன்

    படத்தையும் ரசித்தது கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி வை.கோ.சார்.

    ReplyDelete
  18. @ராஜி

    அதானே... வருகைக்கும் ரசனையானப் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ராஜி.

    ReplyDelete
  19. @கவியாழி கண்ணதாசன்

    இது ஒருவிதமான மனநிலை. தானெழுதும் கதைக்குள் புகுந்துவிட்ட கதாசிரியனின் வெளிவரவியலாத நிலை. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  20. @கோவை மு சரளா

    வருகைக்கும் கருத்தாழமிக்க ரசனையானப் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி சரளா.

    ReplyDelete
  21. @G.M Balasubramaniam

    தொடர்கதையொன்றை ஆரம்பித்து பாதியில் நிறுத்திவைத்திருக்கிறேன். அதன் பாதிப்பே இக்கவிதை. தங்கள் வருகைக்கும் அழகானப் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  22. @இராஜராஜேஸ்வரி

    கதாசிரியராய் இருப்பதில் அதிலொரு வசதிதான் இல்லையா? தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  23. @வெங்கட் நாகராஜ்

    தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் மிக்க நன்றி வெங்கட்.

    ReplyDelete
  24. @ஹேமா

    கதாமாந்தரின் கோணத்திலிருந்து கவிதையை அலசியவிதம் அருமை. நன்றி ஹேமா.

    ReplyDelete
  25. @s suresh

    தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  26. @Ramani S

    தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் அன்பான நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  27. @Ramani S

    நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  28. @Seshadri e.s.

    தங்கள் வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

    ReplyDelete
  29. @கோமதி அரசு

    வாழ்க்கை என்னும் பொம்மலாட்டத்தில் பொம்மைகளாகிய நம் கைகளில் கதாமாந்தர்கள் என்னும் பொம்மைகள். கதை என்னும் பொம்மலாட்டம். வேடிக்கையாகத்தான் உள்ளது. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  30. @ஷைலஜா

    தங்கள் வருகைக்கும் கவிதையின் ஆழம் கண்டுகொண்டமைக்கும் அன்பான நன்றி ஷைலஜா.

    ReplyDelete
  31. Visit : http://jeevanathigal.blogspot.com/2013/07/21-to-27-07-013.html

    ReplyDelete
  32. மெகாத் தொடர் கதை மாந்தர் போலும்!!!!

    ReplyDelete
  33. @திண்டுக்கல் தனபாலன்

    தகவலுக்கு நன்றி தனபாலன். உங்கள் ஈடுபாடும் பதிவுலகத்தொண்டும் என்னை எப்போதும் வியப்பிலாழ்த்துகின்றன. மீண்டும் நன்றி தங்களுக்கு.

    ReplyDelete
  34. @புலவர் இராமாநுசம்

    உண்மைதான் ஐயா, மெகாத்தொடர்களின் பிடியிலிருந்து வெளிவர விரும்பாத சில மனிதர்களுக்கிருக்கும் மனோபாவம் போன்றதுதான் இதுவும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  35. ஆட்டுவித்தால் .. என்ற பாடல் வரிகளை நினைவுபடுத்தி சென்றன தங்கள் வரிகள் தோழி. அருமை அருமை.

    ReplyDelete
  36. @Sasi Kala

    வருகைக்கும் கவிதையை ரசித்தமைக்கும் மிக்க நன்றி சசிகலா.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.