குளிர்காலம் இன்னும் முடியவில்லை
ஆனாலும் இப்போதே…
பாடுகின்றன
பறவைகள் கிளையமர்ந்து.
மூடுபனி
மறைந்துபோனது தடமில்லாது.
கதிரொளி வந்துவிட்டது
கதிரொளி வந்துவிட்டது
இந்நாளை இன்னும் அழகாக்க..
வாருங்கள்
என்னோடு…
வாட்டில்
மரத்தைக் கண்டுகளிக்க!
தங்கத்தைப்
பதுக்கிக் குவித்து
தாமே
வைத்துக்கொள்ளட்டும் கருமிகள்!
உண்மையில்
இங்கேதான் இருக்கிறது
வெளியில்
சொல்லப்படாத கருவூலம்!
பொன்மஞ்சள்
வண்ணத்தில் பூத்துக்குலுங்கி
பாதசாரிகளின்
பாதையெங்கும் பூவிரித்து
கண்ணையும்
நெஞ்சையும் நிறைக்குமிந்த
வாட்டில் மரத்துக்குதான்
எவ்வளவு வாஞ்சை!
ஆஹா.. நூதனம்! வியத்தகு விநோதம்!
மகிழ்ச்சி
வடிந்துவிட்ட கோப்பையொன்றில்
வழிய வழிய
பரவசத்தை நிறைத்தாற்போல்
கவலையும் எரிச்சலும் மறக்கடிக்கப்பட்டு
களிப்பேருவகை
கொள்கிறது மனம்,
மரங்காட்டும்
மாயவித்தையின் முன்!
ஏழையோ பணக்காரரோ…
மிளிர்கின்ற
மரத்தை சற்றே நின்று ரசித்து
நன்றிமிகுதியால் வாழ்த்துபவர்
எவரோ…
அவரே நண்பனாகிவிடுகிறார் அம்மரத்துக்கு!
கட்சியோ,
மதமோ, சாதியோ, நிறமோ
சார்ந்திருப்பது
எதுவானால் என்ன?
மரத்தை
நேசிப்பவர் மனிதம் நேசிப்பது உறுதி.
எல்லையில்லா
வானம் நோக்கி
எழுகின்றன மரங்கள்
பூமியினின்று.
சொர்க்கத்தின்
நீலத்துக்குப் போட்டியாய்
வாரிவழங்குகின்றன
வாழ்வின் குதூகலத்தை
தங்கள் மஞ்சள்
பச்சை வண்ணங்களால்!
மானுட
வினைப்பயனின் அடையாளமாகவே
மலர்கின்றன
வாட்டில் மரங்கள்!
குளிர்பருவம் இன்னும் முடியவில்லை
ஆனாலும் இப்போதே…
பாடுகின்றன பறவைகள்
கிளையமர்ந்து.
மூடுபனி
மறைந்துபோனது,
இந்நாளை இன்னும்
அழகாக்கிவிட்டு.
சூரியன்
வெளிப்பட்டுவிட்டது.
ஓ.. வாருங்கள்
என்னோடு…
வாட்டில்
மரத்தைக் கண்டுகளிக்க!
(தோரா வில்காக்ஸ் எழுதிய ‘The wattle tree’ என்னும்
ஆங்கிலக்கவிதையின் தமிழாக்கம். வெளியிட்ட அதீதம் இதழுக்கு நன்றி)
வாட்டில் மரம் பற்றி: ஆஸ்திரேலியாவின் அடையாள மலர்கள் வாட்டில் மலர்கள். ஆஸ்திரேலிய அரசு முத்திரையில் இடம்பெற்றுள்ள மரமும் இதுவே. வசந்தகாலத்தில் பூத்துக்குலுங்கி பச்சையும் மஞ்சளுமாய் காட்சியளிக்கும் இதன் நிறங்களே ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்களின் சீருடையில் இடம்பெறும் சிறப்பைப் பெற்றுள்ளன. 1954-இல் ஆஸ்திரேலியாவுக்கு வருகை புரிந்த இங்கிலாந்து அரசிக்கு ஆஸ்திரேலிய அரசு மற்றும் மக்கள் சார்பில் பரிசளிக்கப்பட்ட வாட்டில் மலர் வைரப்பதக்கம் கீழே.
படங்களுக்கு நன்றி: இணையம்
மிகவும் அழகிய தமிழாக்கம். பாராட்டுக்கள்.
ReplyDelete//உண்மையில் இங்கேதான் இருக்கிறது
வெளியில் சொல்லப்படாத கருவூலம்!
பொன்மஞ்சள் வண்ணத்தில் பூத்துக்குலுங்கி
பாதசாரிகளின் பாதையெங்கும் பூவிரித்து
கண்ணையும் நெஞ்சையும் நிறைக்குமிந்த
வாட்டில் மரத்துக்குதான் எவ்வளவு வாஞ்சை!// ;)
இங்குள்ள இதுபோன்ற மரங்களை “சொரக்கொன்னை” என்று அழைக்கிறோம். இந்த மஞ்சள்நிற சொரக்கொன்னைப்பூக்கள் சிவபூஜைக்கு மிகவும் சிறந்தது என்பார்கள்.
வாட்டில் மலர் வடிவில் வைரப்பதக்கமா? ;))))
ReplyDeleteஆச்சர்யம் ... சூப்பர்.
தகவலுக்கு நன்றிகள்.
அறியாதன அறிந்தேன்
ReplyDeleteஅருமையான தமிழாக்கம்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
tha.ma 1
ReplyDeleteஅழகான மரம். கவிதை அதை விட அழகு.....
ReplyDeleteதொடரட்டும் மொழிபெயர்ப்பு கவிதைகள்.....
மரத்தை நேசிப்பவர் மனிதம் நேசிப்பது உறுதி.//உண்மைதான்
ReplyDeleteம்ரத்தின் அருமையை சொல்லும் கவிதை மொழிப்பெயர்ப்பாயிருந்தாலும் அருமை. பகிர்வுக்கு நன்றி கீதா!!
ReplyDeleteசிறப்பான கவிதை... தமிழாக்கத்திற்கு பாராட்டுக்கள்... நன்றிகள்...
ReplyDeleteதொடர்க.... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவசந்தகாலத்தில் பூத்துக்குலுங்கி பச்சையும் மஞ்சளுமாய் காட்சியளிக்கும் வாட்டில் மலராய் மிளிரும் வைரப்பதக்கம் ஜொலிக்கிறது ..
அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!
http://jaghamani.blogspot.com/2011/04/blog-post_6478.html
ஆஸ்திரேலியாவின் தேசீய மலர்..
ReplyDeleteபெங்களூரில் சிவப்பும் மஞ்சளுமாகப் பூத்துக்குலுங்கும் மரங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவற்றின் பெயர் தெரியவில்லை.
அருமையான கவிதை.
ReplyDelete/பொன்மஞ்சள் வண்ணத்தில் பூத்துக்குலுங்கி
பாதசாரிகளின் பாதையெங்கும் பூவிரித்து
கண்ணையும் நெஞ்சையும் நிறைக்குமிந்த
வாட்டில் மரத்துக்குதான் எவ்வளவு வாஞ்சை!/
அழகான தமிழாக்கம்.
வாட்டில் மலர் குறித்த தகவல்களும் நன்று கீதா.
மிகமிக அருமை!
ReplyDeleteகவிதையைத் தமிழாக்கம் செய்து தந்தமையால் இப்படி ஆழ்ந்து ரசிக்க முடிந்தது.
வாட்டில் மலர் குறித்த நல்ல தகவல்களும்!...
வாழ்த்துக்கள் தோழி!
மகிழ்ச்சி வடிந்துவிட்ட கோப்பையொன்றில்
ReplyDeleteவழிய வழிய பரவசத்தை நிறைத்தாற்போல்//
மரத்தை நேசிப்பவர் மனிதம் நேசிப்பது உறுதி.//
தமிழாக்கம் அழகு.
நிஜ மலரின் அழகு வைரப் பதக்கத்தைவிட அதிகம் தான்.
பொன்மஞ்சள் வண்ணத்தில் பூத்துக்குலுங்கி
ReplyDeleteபாதசாரிகளின் பாதையெங்கும் பூவிரித்து
கண்ணையும் நெஞ்சையும் நிறைக்குமிந்த
வாட்டில் மரத்துக்குதான் எவ்வளவு வாஞ்சை!//
ஆம், உண்மைதான் நீங்கள் சொல்வது.
மகிழ்ச்சியை அள்ளி தரும் கருவூலம் தான்.
இதோ கிளம்பிவிட்டேன் உங்களுடன் வருகிறேன் வாட்டில் மலர் கண்டு களிக்க.
@வை.கோபாலகிருஷ்ணன்
ReplyDeleteசரக்கொன்றை என்பதைத்தான் பேச்சுவழக்கில் சொரக்கொன்னை என்கிறோமோ? கண்ணுக்கும் மனத்துக்கும் இதம் தரும் அம்மலர்கள் சிவபூஜைக்குகந்தவை என்றறிய மிக்க மகிழ்ச்சி. தகவல் பகிர்வுக்கு நன்றி சார்.
@வை.கோபாலகிருஷ்ணன்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசித்து இட்டப் பின்னூட்டங்களுக்கும் அன்பான நன்றி வை.கோ.சார்.
@Ramani S
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்.
@வெங்கட் நாகராஜ்
ReplyDeleteவருகைக்கும் வாட்டில் மரத்தை ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி வெங்கட்.
@கவியாழி கண்ணதாசன்
ReplyDeleteகவிதையில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் அவை. தங்களையும் கவர்ந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா.
@ராஜி
ReplyDeleteவருகைக்கும் கவிதையை ரசித்து மகிழ்ந்தமைக்கும் நன்றி ராஜி.
@திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteவருகைக்கும் கவிதையை ரசித்துப் பாராட்டியதற்கும் அன்பான நன்றி தனபாலன்.
@இராஜராஜேஸ்வரி
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மேடம். வாட்டில் மரம் மற்றும் மலர்கள் பற்றிய தங்கள் பதிவை வாசித்து மகிழ்ந்தேன். சுட்டி கொடுத்து வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி.
@G.M Balasubramaniam
ReplyDeleteகுல்மொஹர் மரங்களைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு ஊருக்கும் அழகு சேர்ப்பவை அந்தந்த பகுதியைச் சார்ந்த இயற்கை வளங்களும் அவற்றை நேசிக்கும் மனங்களும்தாம் அல்லவா?
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
@ராமலக்ஷ்மி
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசித்தமைக்கும் அன்பான நன்றி ராமலக்ஷ்மி.
@இளமதி
ReplyDeleteவருகைக்கும் வாட்டில் மரத்தையும் கவிதையையும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி இளமதி.
@நிலாமகள்
ReplyDeleteஉண்மைதான் நிலாமகள். வைரத்தைவிடவும் நிஜமலர்கள் அழகுதாம். தங்கள் வருகைக்கும் ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி.
@கோமதி அரசு
ReplyDeleteவாங்க, வாங்க நாம் அனைவரும் சேர்ந்தே ரசிக்கலாம் வாட்டில் மரத்தின் அழகை. தங்கள் வருகைக்கும் ரசனைக்கும் அன்பான நன்றி மேடம்.
''..மகிழ்ச்சி வடிந்துவிட்ட கோப்பையொன்றில்
ReplyDeleteவழிய வழிய பரவசத்தை நிறைத்தாற்போல்
கவலையும் எரிச்சலும் மறக்கடிக்கப்பட்டு
களிப்பேருவகை கொள்கிறது மனம்,
மரங்காட்டும் மாயவித்தையின் முன்!...'''
good lines...நல்ல வரிகள். மிக நன்று. நல்ல பதிவு.
மிக்க நன்றி பதிவாக்கியதற்கு.
இனிய வாழ்த்து. (இதற்கு முந்திய பதிவு சிறு கதையாகும் போலும்.
வாசிக்க நேரம் எடுக்கும் என்று தவிர்த்து விட்டேன்.இங்கு வந்தேன்)
சரக்கொன்றை வேறு - வாட்டில் மலர் வேறு ..
ReplyDeletehttp://jaghamani.blogspot.com/2012/03/blog-post_28.html
தங்க மழை சொரியும் சரக் கொன்றை
படித்துப்பாருங்கள்..
@kovaikkavi
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்திட்டு பாராட்டியமைக்கும் மிக்க நன்றி மேடம்.
@இராஜராஜேஸ்வரி
ReplyDeleteசுட்டி கொடுத்து வாட்டில் மலர்களையும் சரக்கொன்றை மலர்களையும் படங்களுடன் வேறுபடுத்திக் காட்டியமைக்கு மிக்க நன்றி மேடம்.