பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
இலையும் பூவும் காயும் கனியும்
மொட்டும் முள்ளும்
இயல்பாய் தாவரப் படைப்பாம்.
இனிதே யாவும் இணைந்திருத்தலே
இயற்கையின் வசீகர வனப்பாம்.
இணையத்தின் மூலம் இணைந்த மனங்களும்
இதுபோல் இனிதாய் மனமொன்றி
இணையும் நன்னாளின் ஏற்புடை சிறப்பாம்.
இயலாமை எண்ணி ஏங்குவோர் தாமும்
இல்லத்திலிருந்தே கண்டுகளிக்க
ஏற்பாடு செய்தமை நமக்கு உவப்பாம்.
எண்ணும்போதே நினைவில் இனிப்பாம்.
எண்ணம் சாத்தியமானதின் பின்னணி
ஏற்றமிகு பதிவர் குழாமின் உழைப்பாம்.
காணொளி எண்ணி உள்ளத்தில் களிப்பாம்.
காணவாரீர் என்பதென் இனிய அழைப்பாம்.
சென்னையில் நடைபெற உள்ள இரண்டாவது உலகத் தமிழ்ப் பதிவர் திருவிழாவில் கலந்துகொள்ள இயலவில்லையே என்று வருந்தும் என்னைப் போன்ற பதிவர்களுக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நேரடி காணொளியின் மூலம் நிகழ்ச்சிகளை சென்றவருடம் போலவே இந்தவருடமும் கண்டுகளிக்க வலையகம் திரட்டி தளத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து அளவிலா மகிழ்ச்சி.
நன்றி நண்பர்களே.
உலகெங்கும் உள்ள தமிழ்ப் பதிவர்கள் அனைவரும் தமிழால் ஒன்றிணையும் திருநாள் இது.
சாதி, மத, இன, மொழி பேதங்களைக் கடந்து தமிழென்னும் உணர்வாலும் சகோதர உறவாலும் என்றும் இணைந்திருப்போம்.
நல்வாழ்த்துக்கள் நண்பர்களே!
காணொளி மூலம் பார்க்கலாம் என்று தகவல் சொல்லியிருப்பது நல்ல செய்தி. நன்றி. கவிதை அருமை.
ReplyDeleteகாணொளி உண்டெனச் செய்தி கேட்டு
ReplyDeleteகாணா இன்பம் யான் பெற்றேன்.
கண்ணும் கருத்தும் ஒன்றாக
காணும் பதிவர் இசை பாடும்
காணொளி காண அழைப்பிதழ்
கண்டேன். உவகை கொண்டேன்.
சுப்பு தாத்தா.
www,vazhuveri.blogspot.com
www.subbuthatha72.blogspot.com
www.subbuthatha.blogspot.com
www.menakasury.blogspot.com
and 12 other blogs .
எண்ணும்போதே நினைவில் இனிப்பாம்.
ReplyDeleteஎண்ணம் சாத்தியமானதின் பின்னணி
பதிவர் சந்திப்பு சிறக்க இனிய வாழ்த்துக்கள்.
அருமை.
ReplyDeleteதகவலுக்கும் பகிர்வுக்கும் நன்றி கீதா.
கவிதை அருமை!
ReplyDeleteபதிவர்கள் இணையும் விழ மிகச் சிறப்பாக நடந்தேற இனிய வாழ்த்துக்கள்!!
கவிபாடி அழைத்திட்ட கீத மஞ்சரிக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅழகிய கவிதையால் அழைப்பாம் !
ReplyDeleteகண்டு களிப்போம் என்பதெம் உறுதியாம் !
நலமா! சகோதரி! அழைப்பும் கவிதையும் அருமை!
ReplyDeleteஇயலாமை எண்ணி ஏங்குவோர் தாமும்
ReplyDeleteஇல்லத்திலிருந்தே கண்டுகளிக்க
ஏற்பாடு செய்தமை நமக்கு உவப்பாம்.
மிக சிறப்பாக பகிர்ந்து நிகழ்வில் பங்குகொள்ளதவர் ஏக்கத்தை தீர்த்துவைத்தீர்கள் தோழி.
இயலாமை எண்ணி ஏங்குவோர் தாமும்இல்லத்திலிருந்தே கண்டுகளிக்கஏற்பாடு செய்தமை நமக்கு உவப்பாம்.
ReplyDeleteஅருமை!
வாழ்த்துக்கள்... கண்டு மகிழ்வோம்.
ReplyDeleteகவிபாடி அழைத்தமைக்கு நன்றி! விழா வெற்றி பெற வாழ்த்துகள்! நன்றி!
ReplyDeleteகவிபாடி அழைத்தமைக்கு நன்றி! விழா வெற்றி பெற வாழ்த்துகள்! நன்றி!
ReplyDeleteகவிதை மிகவும் அழகு.
ReplyDeleteகாணொளி மூலம் பார்க்கலாம் என்று தகவல் சொல்லியிருப்பது நல்லதொரு செய்தி. நன்றி.
ReplyDeleteநேரடி ஒளி பரப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. அன்று முழுதும் கணினியோ மின்சாரமோ தடை செய்யாதிருக்க வேண்டி அழைப்புக்கு நன்றி கூறுகிறேன்
எண்ணும்போதே நினைவில் இனிப்பாம்.
ReplyDeleteஎண்ணம் சாத்தியமானதின் பின்னணி
ஏற்றமிகு பதிவர் குழாமின் உழைப்பாம்.//
நேரடி ஒளி பரப்பு மகிழ்ச்சி.
கவிதை அழைப்புக்கு நன்றி கீதமஞ்சரி.
நேரடி ஒளிபரப்பினை கண்டுகளிக்க நல்லதொரு வாய்ப்பினை ஏற்படுத்திய தங்களுக்கு நன்றி.
ReplyDeleteஆர்வத்துடன் வந்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றி. நேரடி ஒளிபரப்பு ஏமாற்றிவிட்ட நிலையில் நண்பர்களின் பதிவுகளின் மூலமே பதிவர் திருவிழா நிகழ்வுகளை அறிந்துகொள்ள இயல்கிறது. புகைப்படங்களும், ஒவ்வொரு பதிவர்களின் சந்திப்பு அனுபவங்களும் நேரிலே பார்த்த உணர்வைத் தருகின்றன என்பது உண்மை. அனைவருக்கும் என் மனம் நிறைந்த மகிழ்வான நன்றி.
ReplyDelete