11 March 2012

உயிரின் வலி



பெற்றதைப் பறிகொடுத்து
பெருந்துன்பத்துக்கு ஆளாகி
பித்தெனத் திரிந்தவேளை
பேதையென் மடிசேர்ந்தாய் மகளே!

நீயும் ஒருநாள், உன் தாய்போல
உணவின் பொருட்டோ, அன்றி
உன் குணத்தின் பொருட்டோ
என்னைக்கொல்லவும் துணியக்கூடும்!

ஆயினும் கண்ணே, அதுபற்றி
எனக்கு கவலையில்லை
இன்றைய என் தாய்மைக்கு
இறவாவரம் தந்துவிட்டாய்!
இன்னல்தனைத் தீர்த்து
இன்பக்கண்ணீர் சொரியச்செய்தாய்!

வேதனையில் விம்மிநிற்கும்
என் மார்பகங்களூடே
வழிகின்ற அமுதம் பருகி
என் வலியைப் போக்குகிறாய்!

இதற்குக் கைம்மாறாய்
தருவேனடி என் உயிரையே
உனக்குக் காணிக்கையாய்!



(படத்தை இணையத்தில் பார்த்தபோது தோன்றியது)

54 comments:

  1. படத்தைப் பார்த்தவுடன் தோன்றிய கவிதை அருமை....

    //இதற்குக் கைம்மாறாய்
    தருவேனடி என் உயிரையே
    உனக்குக் காணிக்கையாய்!// ஒவ்வொரு தாயும் இப்படித்தானே பல விஷயங்களை இழக்கிறாள் தன் பிள்ளைகளுக்கென எனத் தோன்றியது....

    ReplyDelete
    Replies
    1. உடனடி வருகைக்கும் அருமையானக் கருத்துக்கும் நன்றி வெங்கட்.

      Delete
  2. நிகழ்காலத்தில் வாழ்தலே சுகம்
    அதைத் தாங்கள் சொன்னவிதம் அருமை..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி முனைவரே.

      Delete
  3. அன்போ, இன்றைய அவஸ்தைக்குத் தீர்வோ, தாய்மையைக் கூறும் அழகிய கவிதை காட்டியுள்ள படத்திற்கு மிகவும் பொருத்தமாக. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி வை.கோ.சார்.

      Delete
  4. தான் கொடுத்த உயிரே தனக்கு
    உதவி செய்ததை எண்ணும் மனது
    தாய்க்கு மட்டுமே வரும்...

    அழகுக் கவிதை சகோதரி..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மகேந்திரன்.

      Delete
  5. படம் பார்த்து தோன்றிய கவிதையா?மிகவும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஆச்சி. வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

      Delete
  6. Anonymous12/3/12 01:48

    தாய்மையின் சிறப்பு நன்று எடுத்தாளப் பட்டுள்ளது. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி.

      Delete
  7. படக்கவிதை பிரமாதம்.

    ReplyDelete
  8. வேதனையில் விம்மிநிற்கும்
    என் மார்பகங்களூடே
    வழிகின்ற அமுதம் பருகி
    என் வலியைப் போக்குகிறாய்!-வீரியம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மதுமதி.

      Delete
  9. படத்துக்குப் பொருத்தமான தாய்மை பொங்கும் கவிதை மிக அற்புதம்! வார்த்தைகள் ஒவ்வொன்றும் செதுக்கப்பட்ட கூர்மை! அருமை!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ஊக்கமிகுக் கருத்துக்கும் நன்றி கணேஷ்.

      Delete
  10. தாயினும் சாலப் பரிந்தூட்டும் தாயின் மடியினில் தவழும் கவிதை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் இனியக் கருத்துரைக்கும் மிகவும் நன்றி.

      Delete
  11. வலைச்சரப் பணிக்கு வாழ்த்துக்கள் சகோதரி....

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி மகேந்திரன்.

      Delete
  12. கவிதை அருமை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஆஸியா.

      Delete
  13. கொடுத்தல் பேரின்பம் கீதா.படத்துக்கேற்ற கவிதை.அருமை.வலைச்சரப் பணிக்கு வாழ்த்துகள் !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி ஹேமா.

      Delete
  14. கண்ணில் பட்ட படமே-மனக்
    கருத்தில் பதித்த தடமே
    எண்ணில் தோன்றிய கவிதை-நல்
    இதயத்தில் போட்ட விதை
    மண்ணில் முளைக்கும் மரமே-எம்
    மனதில் நிலைக்க வளமே
    விண்ணில் தவழும் அலையில்-மகிழ
    வீசும் தென்றல் வலையில்

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. பாவால் பாராட்டப்பெறும் பெரும்பேறு பெற்றேன். நெகிழ்வோடு நன்றி கூறுகிறேன் ஐயா.

      Delete
  15. வலைச்சரப் பணிக்கு வாழ்த்துக்கள் !

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி ஐயா.

      Delete
  16. நல்லுணர்வு! தியாகத்தின் எல்லை! சிறந்த கவிதை!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

      Delete
  17. மனித உணர்வுகளை விலங்கு சொல்வதுபொல் இருப்பது( படம் பார்த்து தெரிவது )எங்கேயோ இடறுகிறதே.

    ReplyDelete
    Replies
    1. படத்தில் புலிக்குட்டியுடன் விளையாடிக்கொண்டிருக்கும் அந்தக் குரங்கை ஒரு தாயாய் பாவித்து கற்பனை செய்து அதன்வாய்மொழியாய்க் கொண்டு எழுதிய கவிதை இது. என்னவோ தாய்மையை எங்கு பார்த்தாலும் தன்னைப் புகுத்திக்கொள்கிறது என் மனம்.

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  18. Anonymous12/3/12 18:08

    எனக்கு வார்த்தைல சொல்லத் தெரியல அக்கா எவ்வளவு நல்ல இருக்கு எண்டு .... ரொம்ப நல்லா இருக்கு ...

    என்னோவூ இருக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு படமும் அதைவிட உங்க எழுத்தும்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் படமும் எழுத்தும் பிடிச்சிருக்குன்னு பாராட்டியதற்கும் மிகவும் நன்றி கலை.

      Delete
  19. தாய்மையை வெளிப்படுத்தும் கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஆதி.

      Delete
  20. Anonymous13/3/12 05:03

    படத்தைப் பார்த்தவுடன் தோன்றிய கவிதை அழகு...வலைச்சரப் பணிக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரெவெரி.

      Delete
  21. தாய்மையின் மொழியை தமிழ் மொழியில் சொன்ன விதம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. அழகானப் பின்னூட்டத்துக்கு நன்றி தீபிகா.

      Delete
  22. ஹிந்தியாவே முடிவு செய்.
    தமிழ்நாடு வேண்டுமா? சிங்கள நாடு வேண்டுமா?

    -------------------
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள் - மார் '2012)

    ReplyDelete
  23. கைமாறு கருதாது கடமை செய்யும்
    தாயன்பு கைமாறாய் தனத் இன்னுயிரையும்
    கையளிக்கத் தயங்காத தாயன்பை
    அற்புதமாக வெளிப்படுத்துகிறது.
    சிறப்பான படைப்பு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் அருமையான விமர்சனத்துக்கும் நன்றி டாக்டர்.

      Delete
  24. தாய்மையை வெளிப்படுத்திய கவிதை மிக அருமை!

    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

      Delete
  25. இன்றைய என் தாய்மைக்கு
    இறவாவரம் தந்துவிட்டாய்!

    அழகாய தாய்மை வரம் பொங்கும் இனிய கவிதை..
    பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி மேடம்.

      Delete
  26. பதித்தீர் உயிரின் வலியைப் பறித்து
    பதித்தேன் வலையில்பா ராட்டு!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகானப் பாராட்டுக்கும் மனம் நிறைந்த நன்றி அருணா.

      Delete
  27. Anonymous27/3/12 03:00

    ஒரு தாய்மை பொங்கும் கவிதை வாசித்தேன் வாழ்த்துகள் சகோதரி. முகப்புப் பக்கம் அலுமேலு சிறுகதை உண்டு. எனக்கு சிறு கதைகள் வாசிக்கக் கொஞ்சம் கள்ளம். அது தான் கவிதையைத் தேடி கருத்திடாததைப் படித்தேன் சகோதரி. குறை எண்ண வேண்டாம்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி வேதா. குறை எண்ணமாட்டேன். கவிதை சிலருக்குப் பிடித்தமானது. கதை சிலருக்குப் பிடிக்கும். கட்டுரைகள் சிலருக்குப் பிடிக்கும். பிடித்தமானதைப் படித்துக் கருத்திடுவதில் எப்படிக் குறை காணமுடியும்? தங்கள் வருகையால் மகிழ்கிறேன். இணைய இணைப்பில் பிரச்சனை காரணமாக சமீப காலமாக பல வலைத்தளங்கள் திறப்பதில் சிக்கல் இருக்கிறது. விரைவில் அனைவரது தளங்களுக்கும் வருவேன். நன்றி.

      Delete
  28. தாய்மையின் உணர்வை இதைவிட அழகாக ஆழமாக சொல்லிவிட முடியாது
    மெய் சிலிர்கிறது உங்கள் கவிதை .........பாராட்டுக்கள் கீதமஞ்சரி

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.