தீண்டிவிடும் தூரம்தான் எனினும்
அதை அறியாததுபோல்
இருவருமே பேச்சைத் தொடர்கிறோம்.
தொடர்பறுந்த வார்த்தைகளால்
மெளனம் அறுக்கிறோம்.
தற்செயல்போலவே சமயங்களில்
உரசிக்கொள்கிறோம்,
தவறுணர்ந்ததுபோல்
சம்பிரதாய மன்னிப்பும்
கேட்டுக்கொள்கிறோம்.
பக்கமிருந்தும் பற்றிக்கொள்ளாதபடி
நமத்துப்போன இச்சைகளைப் பற்றிய
பெருவியப்புடன் நகர மனமற்றிருக்கிறோம்,
முடிவாய் கையசைத்துப் பிரிகிறோம்
வெற்று உரையாடலுக்கொரு
முற்றுப்புள்ளி வைத்துவிட்டும்
ஆசைகளைக் கழுவிலேற்றிவிட்டும்!
அது எல்லை மீறப் பிடிக்காத பண்பாட்டின் வெளிப்பாடு அல்லவா? கழுவிலேற்றப்பட்ட ஆசைகள்தான் வாழ்க்கை விருட்சததிற்கான உரம். கவிதை அருமை
ReplyDeleteகவிதை உண்மையான காதலை வெட்கத்தோடு சொல்கிறது.ஆனால் சொல்லியே ஆகவேண்டும்
ReplyDeleteகாலம் தாழமுன் !
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சாகம்பரி.
ReplyDeleteதொடர்ந்து வந்து ஊக்குவிப்பதற்கு நன்றி ஹேமா.
இடுகைக்கு பாராட்டுகள். தேவையான செய்திகள் இடுகையை தொடர்க
ReplyDeleteநன்றி மாலதி.
ReplyDelete>>>பெருவியப்புடன் நகர மனமற்றிருக்கிறோம்,
ReplyDeleteமுடிவாய் கையசைத்துப் பிரிகிறோம்
சீக்கிரம் சொல்லிடுங்க... சொல்லாத காதல்கள் சொர்க்கத்தில் சேராது
நல்ல கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
//வெற்று உரையாடலுக்கொரு
ReplyDeleteமுற்றுப்புள்ளி வைத்துவிட்டும்
ஆசைகளைக் கழுவிலேற்றிவிட்டும்!//
Nice
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>>பெருவியப்புடன் நகர மனமற்றிருக்கிறோம்,
முடிவாய் கையசைத்துப் பிரிகிறோம்
//சீக்கிரம் சொல்லிடுங்க... சொல்லாத காதல்கள் சொர்க்கத்தில் சேராது//
அட... ஒரு கற்பனைதானே....
Rathnavel said...
ReplyDelete//நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.//
வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க.
தெய்வசுகந்தி said...
ReplyDelete//வெற்று உரையாடலுக்கொரு
முற்றுப்புள்ளி வைத்துவிட்டும்
ஆசைகளைக் கழுவிலேற்றிவிட்டும்!//
//Nice//
தெய்வசுகந்தி said...
//வெற்று உரையாடலுக்கொரு
முற்றுப்புள்ளி வைத்துவிட்டும்
ஆசைகளைக் கழுவிலேற்றிவிட்டும்!//
//Nice//
வருகைக்கு நன்றி தெய்வசுகந்தி.
நல்ல கவிதைமா
ReplyDeleteமிகவும் நன்றி கீதா.
Delete