3 April 2011

நிராகரிக்கப்படும் சரணாகதிகள்


நான் எதிர்கொள்ளவிருக்கும் உன்னைப்பற்றிய
எவ்வித முன்னெச்சரிக்கைக் குறிப்புகளும் தரப்படாமலேயே
கவசம் தரிக்கப்பட்டும், கையில் வாள் திணிக்கப்பட்டும்
வியூகத்துக்குள் விரட்டப்படுகிறேன்,
ஒற்றை வீரனாய்!
தினவெடுத்த உன் தோள்களையும்,
திசையெங்கும் விரவி நிற்கும்
உன் பராக்கிரமப் படைகளையும்
பார்த்துப்பதறி,
உயிர்ப்பயம் மேலோங்க,
மருண்டு நிற்கும் என்நிலையை
நீ பரிகசித்துச் சிரிக்கிறாய்!
எதிர்ப்பதுன்னை எந்நாளும் சாத்தியமில்லை
என்பதை உணர்ந்ததாலும்,
புறமுதுகிட்டோடுதல் போராளிக்கழகில்லை
என்பதை அறிந்திருப்பதாலும்
வீரமரணம் ஏற்கும் விவேகமில்லாததாலும்
சமயோசிதமாய் உன்னிடம்
சரணாகதி அடைகிறேன்.
ஒப்படைக்கப்பட்ட என் தோல்விகளை
ஒப்புக்கும் பரிசீலனை செய்கிறாயில்லை!
மண்டியிட்டுக் கிடக்கும் என்னை
மயிர்பிடித்தெழுப்பி நிறுத்துகிறாய்!
குரூரப் புன்னகையுடன்
குத்துவாளொன்றை என் கரங்களில் திணித்து
கொல்லென்று சொல்லி
கொல்லென்று நகைக்கிறாய்!
கத்தியை விட்டெறிந்துவிட்டு மீண்டும்
உன் காலடி பற்றுகிறேன்.
என் சரணாகதிகள் யாவும்
நிர்தாட்சண்யத்துடன் நிராகரிக்கப்படுகின்றன.
யுத்தகைதியென்று முத்திரைகுத்தி
அவமானச் சின்னங்களை அணிவித்து
ஊர்வலமாய் இழுத்துவருவதிலேயே
உளம்நிறை சுகம் காண்கிறாய்!
கதியற்ற நானும் வழியற்று உடன்படுகிறேன்,
போரிலே என்னைப் பெருவெற்றி கொண்டதாய்
முரசறைந்து நீ முழங்கும் முழக்கத்துக்கு!

13 comments:

  1. ம்ம்ம்....வீரமான கவிதை.நீங்களும் கோழையல்ல.பல கோணங்களில் வைத்துப் பார்த்தாலும் அதற்கேற்றமாதிரிப் பொருந்துகிறது நிகழ்வு.வார்த்தைகளின் கோர்வைச் சாமர்த்தியம் ரசித்தேன் கீதா !

    ReplyDelete
  2. மாற்றுக்கோணத்தை மனதில் கொண்டே புனையப்பட்ட கவிதை இது. வருகைக்கும் கருத்திட்டு ஊக்குவிப்பதற்கும் நன்றி ஹேமா.

    ReplyDelete
  3. நம் மக்கள் தான் என்னமாய் எழுதுகிறார்கள்,கவிதை!!

    ReplyDelete
  4. யுத்தகைதியென்று முத்திரைகுத்தி
    அவமானச் சின்னங்களை அணிவித்து
    ஊர்வலமாய் இழுத்துவருவதிலேயே
    உளம்நிறை சுகம் காண்கிறாய்!
    கதியற்ற நானும் வழியற்று உடன்படுகிறேன்,
    போரிலே என்னைப் பெருவெற்றி கொண்டதாய்
    முரசறைந்து நீ முழங்கும் முழக்கத்துக்கு!

    ஆழமான கருத்து இக்கவியில் நிலைத்துள்ளது... ரசித்தேன் கவிதையை அதைவிட கலங்கினேன் அந் சூழ்நிலையை எண்ணி...

    ReplyDelete
  5. கவித..கவித..

    ஹய்யோட..
    எல்லாம் செமைய எழுதறாய்ங்கப்பா..

    ReplyDelete
  6. ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

    //நம் மக்கள் தான் என்னமாய் எழுதுகிறார்கள்,கவிதை!!//

    வருகைக்கும் கருத்திட்டதற்கும் ரொம்ப நன்றி சார். பாராட்டறீங்கதானே?

    logu.. said...

    //கவித..கவித..

    ஹய்யோட..
    எல்லாம் செமைய எழுதறாய்ங்கப்பா..//

    நன்றிங்க லோகு. நீங்களும் இதைக் கவிதைன்னு ஒத்துக்கறீங்க. அப்படித்தானே?

    ReplyDelete
  7. தோழி பிரஷா said...

    //ஆழமான கருத்து இக்கவியில் நிலைத்துள்ளது... ரசித்தேன் கவிதையை அதைவிட கலங்கினேன் அந் சூழ்நிலையை எண்ணி...//

    கலங்கிய உள்ளம் சொல்கிறது உங்கள் இளகிய மனத்தை.வருகைக்கும் கருத்திட்டதற்கும் நன்றி தோழி பிரஷா.

    ReplyDelete
  8. >>>வீரமரணம் ஏற்கும் விவேகமில்லாததாலும்
    சமயோசிதமாய் உன்னிடம்
    சரணாகதி அடைகிறேன்.

    hi hi hi

    ReplyDelete
  9. சி.பி.செந்தில்குமார் said...
    >>>வீரமரணம் ஏற்கும் விவேகமில்லாததாலும்
    சமயோசிதமாய் உன்னிடம்
    சரணாகதி அடைகிறேன்.

    hi hi hi

    நன்றி...நன்றி...

    ReplyDelete
  10. ## எதிர்ப்பதுன்னை எந்நாளும் சாத்தியமில்லை
    என்பதை உணர்ந்ததாலும்,
    புறமுதுகிட்டோடுதல் போராளிக்கழகில்லை
    என்பதை அறிந்திருப்பதாலும்
    வீரமரணம் ஏற்கும் விவேகமில்லாததாலும்
    சமயோசிதமாய் உன்னிடம்
    சரணாகதி அடைகிறேன்.
    ##
    நீங்கள் எதை நினைத்து எழுதினீர்களோ தெரியவில்லை...சமூகத்தின் பல அவலங்களுக்கு இது சரியாகப் பொருந்துகிறது.

    ReplyDelete
  11. @ezhil

    கவிதையை வாசித்தமைக்கும் அதன் கருவைக் கண்டுணர்ந்து பின்னூட்டமிட்டதற்கும் மிக்க நன்றி எழில்.

    ReplyDelete
  12. வேறுவழியின்றி சரணடைந்தாலும்.பாதிப்பு நமக்குத்தான் மா

    ReplyDelete
    Replies
    1. பாதிப்பு உணர்ந்தும் சரணாகதியாகும்போது அந்த சரணாகதியும் நிராகரிக்கப்படுவதுதான் வேதனை.. கருத்துக்கு மிகவும் நன்றி கீதா.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.