![]() |
| Pic 2 |
![]() |
| Pic 4 |
![]() |
| Pic 5 |
![]() |
| Pic 6 |
![]() |
| Pic 7 |
![]() |
| Pic 8 |
![]() |
| Pic 9 |
![]() |
| Pic 10 |
![]() |
| Pic 11 |
![]() |
| Pic 12 |
![]() |
| Pic 13 |
![]() |
| Pic 14 |
![]() |
| Pic 15 |
![]() |
| Pic 16 |
![]() |
| Pic 17 |
![]() |
| Pic 18 |
![]() |
| Pic 19 |
![]() |
| Pic - 20 |
![]() |
| Pic 2 |
![]() |
| Pic 4 |
![]() |
| Pic 5 |
![]() |
| Pic 6 |
![]() |
| Pic 7 |
![]() |
| Pic 8 |
![]() |
| Pic 9 |
![]() |
| Pic 10 |
![]() |
| Pic 11 |
![]() |
| Pic 12 |
![]() |
| Pic 13 |
![]() |
| Pic 14 |
![]() |
| Pic 15 |
![]() |
| Pic 16 |
![]() |
| Pic 17 |
![]() |
| Pic 18 |
![]() |
| Pic 19 |
![]() |
| Pic - 20 |
புகைவண்டிப்பயணம்
புகைவண்டி தூரத்தில் வரக்கண்டேன்
நிலையத்தில்
நின்றதும் ஏறிக்கொண்டேன்
ஜன்னல் ஓரத்தில் அமர்ந்துகொண்டேன்
சந்தோஷம்
நெஞ்சில் நிறையக் கண்டேன்.
அசையும்
பச்சைக்கொடி பார்த்தேன்
அனைத்தும் மெல்ல
நகரக் கண்டேன்.
முன்னால் ரயிலும்
விரையக் கண்டேன்
பின்னால் மரங்கள்
மறையக் கண்டேன்.
வழியில் பச்சை
வயல் பார்த்தேன்
வெள்ளைக்
கொக்குகள் பல பார்த்தேன்
சோளக்கொல்லை
பொம்மைகளும்
ஜோராய் நிற்கும்
அழகு பார்த்தேன்
கோணல் பனைமர
வரிசை கண்டேன்
குரங்குகள்
தாவும் சோலை கண்டேன்
குறுக்கிடும்
பாதையில் காத்திருக்கும்
கார் பஸ்
வரிசையும் நான் பார்த்தேன்.
டாட்டா காட்டி
ஓடிவரும்
குழந்தைகளுக்கு கை அசைத்தேன்.
அடடா அடடா என்பது
போல்
ஆற்றைக்கடக்கும் ஒலி ரசித்தேன்.
ரயிலுக்குள்
பலவும் விற்கக் கண்டேன்
ரசனையாய்ப்
பாடும் பாடல் கேட்டேன்.
பலப்பல நிலையம்
கடக்கக் கண்டேன்
பலகைப்
பெயர்களைப் படித்து வந்தேன்
அம்மாச்சி ஊரும்
வரக்கண்டேன்
மகிழ்ச்சியில்
மனமும் ஆடக்கண்டேன்
குஷியுடனே
குதித்திறங்கிக் கொண்டேன்
விசிலூதிய
ரயிலுக்கு விடைகொடுத்தேன்.
(ஆகஸ்டு 2020 பூஞ்சிட்டு இதழில் வெளியானது)
பூஞ்சிட்டு – இது குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள், நூல் அறிமுகம், பொது அறிவு,
புதிர்கள், விளையாட்டு போன்ற பல விஷயங்களைக் கொண்ட பல்சுவை மாத இதழ். அனைவரும் வாசித்துப்
பயன் பெறுக.
![]() |
| pigface flower |
பூத்துக் காய்த்து இப்பருவத்தின் முதல் விளைச்சலை தாராளமாய் வழங்கிக் கொண்டிருக்கும் snowpeas பூவும் காயும் கொடியும்.
![]() |
| snowpeas flowers |
![]() |
| snowpeas |
![]() |
| snowpeas |
தளதளவென்று பூத்துக் குலுங்கி தோட்டம் முழுவதும் நறுமணத்தால் நிரப்பும் தளவம். குறிஞ்சிப்பாட்டில் கபிலர் குறிப்பிடும் 99 மலர்களுள் தளவம் எனப்படுவதும் தற்காலத்தில் பிச்சிப்பூ எனப்படுவதும் இந்த Jasminum polyanthum தானாம்.
![]() |
| பிச்சிப்பூ |
![]() |
| பிச்சிப்பூ |
![]() |
| பிச்சிப்பூ |
அவரைக்கு மட்டுமல்ல,
முள்ளங்கிக்கும் பூ அழகு. முள்ளங்கி விளைச்சலில் தொடர்ச்சியாகத் தோல்வியைத் தழுவினாலும்
பூக்களின் அழகு அதை மறக்கச் செய்துவிடுகிறது.
![]() |
| முள்ளங்கிப் பூக்கள் |
![]() |
| முள்ளங்கிப் பூக்கள் |
![]() |
| calendula |
![]() |
| calendula |
![]() |
| calendulas |
வசந்தகாலத்தின் முதல் பூக்கள்
![]() |
| snapdragon flower |
![]() |
| white rose |
களையிலும் கலையழகு
காட்டும் குட்டிப்பூ
(பிரதாபங்கள் தொடரும்)
அம்மாச்சியும் மகிழம்பூக்களும் கதைதான் நான் முதலில் எழுதி வெளியான சிறுகதை. அதன்பிறகு நிறைய கதைகள் எழுதினாலும் முதல் கதை எழுதியபோதும் அது நிலாச்சாரல் இணையதளத்தில் வெளியானபோதும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. என் சிறுகதைகளை நூல் வடிவில் காணவேண்டும் என்பது அம்மாவின் ஆசை. எனக்கு அப்படி ஏதும் தனிப்பட்ட ஆசை இல்லை என்றாலும் ஒருவேளை அம்மாவின் ஆசைப்படி நூல் வடிவாக்கினால் அதற்கு அம்மாச்சியும் மகிழம்பூக்களும் என்றுதான் தலைப்பிடவேண்டும் என்று மனத்துக்குள் முடிவுசெய்திருந்தேன். சிறுகதைகள் நூலாக்கம் பெறும் வாய்ப்பு கோதை பதிப்பகம் வாயிலாய்த் தேடிவந்தபோது, எதிர்பாராது கிடைத்த இந்த வாய்ப்பினைத் தவறவிட மனம் துணியவில்லை. அம்மாவின் ஆசையும் நிறைவேறிற்று. என்னுடைய ஆசையும் நிறைவேறிற்று. கூடவே அம்மாவுக்கு இந்நூலை சமர்ப்பணமும் செய்தாயிற்று.

அம்மாச்சியும் மகிழம்பூக்களும் கதையை ஒரு கவிதையாகத்தான் ஆரம்பித்தேன். நினைவும் புனைவுமாய் வரிகள் வளர்ந்து வளர்ந்து கதையாக உருமாறிவிட்டது. சிவப்பிக்கு உயிர் கொடுத்தவள் இப்போது உயிரோடு இருக்கமாட்டாள் எனினும் என் மனக்கண்ணில் இன்னமும் தண்ணீருக்கு மேலே தலை காட்டியபடி நான் சில காலமே அறிந்த அந்த ஊரின் சகதிக்குளத்தில் முங்கியிருக்கிறாள். அப்புவை வளர்த்த ஆறுமுகம் அச்சு அசல் என் பாட்டனார். குருகாணிக்கையில் வரும் அந்த ஆசிரியருக்கு வித்திட்டவர் அடிக்கடி எங்கள் வீட்டுவாசலில் நின்று உரிமையோடு அப்பாவை பெயர் சொல்லியழைத்த அப்பாவின் உடன் படித்த, ஏதோ காரணத்தால் பின்னாளில் மனம் பிறழ்ந்த நண்பர். அலமேலுவின் ஆசைக்குள்ளிருப்பது கிட்டத்தட்ட அதே மாதிரியான என் ஆத்தாவின் ஆசை. இந்த சிறுகதைகளுக்குள் ஏன் ஒவ்வொரு சிறுகதைக்குள்ளும் நான் இருப்பேன், நீங்கள் இருப்பீர்கள், அவள் இருப்பாள், அவர் இருப்பாள், அவர்கள் இருப்பார்கள், அதுவும் இருக்கும். புள்ளிகளை சிறைப்படுத்தும் இழைக்கோலம் போல சில… புள்ளிகளின் தேவையற்ற பூக்கோலம் போல சில..
வாழ்வின் சிக்கல்களைப் பேசும் ஒவ்வொரு பாத்திரத்திலும் பொருந்தியும் விலகியும் எட்ட நின்றும், கிட்ட நின்றும் கடந்த பத்து வருடங்களாக நான் வாழ்ந்தெழுதிய இக்கதைகள் நிலாச்சாரல், தமிழ்மன்றம், வல்லமை, அதீதம், பதிவுகள், பிரதிலிபி என பல இணைய தளங்களில் அவ்வப்போது வெளியாகி பற்பல விமர்சனங்களைப் பெற்றுத்தந்து எழுத்தை சீர்படுத்தியவை. முக்கியமாக தமிழ்மன்றத்தை என்னுடைய சிலேட்டுப்பலகை என்பேன். எழுதியெழுதி அழித்தெழுதி எழுத்தைப் பழகியது அங்கேதான். தமிழ்மன்ற நட்புகளுக்கு இவ்வேளையில் நன்றியறிவித்து மகிழ்கிறேன். இத்தொகுப்பை மிகுந்த சிரத்தையுடன் அழகாக வடிவமைத்துள்ள ஷாஜஹான் சார் அவர்களுக்கும் வெளிக்கொணர்ந்துள்ள கோதை பதிப்பக உரிமையாளர் தோழி நான் ராஜாமகள் அவர்களுக்கும் என் உள்ளார்ந்த அன்பும் நன்றியும்.
புத்தகம் வேண்டுவோர் facebook-ல் இருந்தால் Naan Rajamagal அவர்களையும், ஃபேஸ்புக்கில் இல்லாதவர்கள் geethamathibooks@gmail.com என்ற மின்னஞ்சலில் என்னையும் தொடர்பு கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

