ஆசையாய்
உனை வளர்த்த நல்லதம்பி
முட்டி
அழுதுகொண்டிருக்கிறான்
மூன்றுநாளாய்த்
தேம்பித்தேம்பி!
அண்ணன்
எங்கே எங்கே என்று
அங்குமிங்கும்
தேடிக்கொண்டிருக்கிறான்
முட்டிப்பாலருந்துமுன்
உன் குட்டித்தம்பி.
மண்சட்டியில்
துண்டுகளாகி..
வெந்த குழம்பின் வாசத்திலும்
உப்புத்தூவிய
கண்டங்களாகி..
வெய்யிலில்
காயும் மீதத்திலும்
வீசும்
உன் பிணவாடையை…
தாங்குமா
இத்தாயாடு?
கறியுணவாய்ப்போன
கண்மணியின்
கரியுருவை
முகர்ந்து முகர்ந்து
கவலை மறக்கிறதே தாயவள் உயிர்க்கூடு…
வல்லமை
மின்னிதழின் இவ்வாரப் படக்கவிதைப் போட்டியில் என்னுடைய கவிதை சிறந்த கவிதையாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதறிந்து மகிழ்ச்சி. அனைத்துக்
கவிதைகளையும் அலசி ஆய்ந்து விமர்சனங்களோடு
சிறந்த கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வழங்கிய மேகலா இராமமூர்த்தி
அவர்களுக்கும் வாய்ப்பளித்த வல்லமை குழுவுக்கும் மிகவும்
நன்றி. சிந்திக்கத்தூண்டும் படத்தை வழங்கிய புகைப்படக்கலைஞர்
வெங்கட் சிவா அவர்களுக்கும் படத்தைத்
தேர்ந்தெடுத்த தோழி சாந்தி மாரியப்பன்
அவர்களுக்கும் மிக்க நன்றி.
//(வல்லமை படக்கவிதைப்போட்டி - 42 - இல் பங்கேற்றது)//
ReplyDeleteமனம் நிறைந்த பாராட்டுகள். இனிய நல் வாழ்த்துகள்.
தங்கள் உடனடி வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி கோபு சார்.
Deleteதாங்குமா இத்தாயாடு?
ReplyDeleteதலைப்பும்,
அதற்கேற்ற ஆக்கமும்,
மிகப்பொருத்தமான படமும் ஜோர் ஜோர். :)
இந்தப் படத்தைப் பார்த்தவுடனேயே எழுதத் தூண்டியது. புகைப்படக் கலைஞரையே அப்பெருமை சாரும். நன்றி சார்.
Delete//அங்குமிங்கும் தேடிக்கொண்டிருக்கிறான்
ReplyDeleteமுட்டிப்பாலருந்துமுன் உன் குட்டித்தம்பி.//
மிக அருமையான வரிகள் .... ஸ்பெஷல் பாராட்டுகள்.
ஒவ்வொரு வரியையும் ரசித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி கோபு சார்.
Delete//வல்லமை மின்னிதழின் இவ்வாரப் படக்கவிதைப் போட்டியில் என்னுடைய கவிதை பாராட்டுக்குரியதாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதறிந்து மகிழ்ச்சி.//
ReplyDeleteஎங்களுக்கும் அதைவிட மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. வல்லமையாளரின் ஆக்கத்தால் வல்லமை மேலும் வல்லமை பெற்றுவிட்டது. :)
வாழ்க !
அவசரத்தில் பாராட்டுக்குரிய கவிதை என்று குறிப்பிட்டுவிட்டேன். உண்மையில் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இப்போது மாற்றிவிட்டேன். தங்கள் வருகைக்கும் ஊக்கமளிக்கும் தொடர் கருத்துகளுக்கும் மிக்க நன்றி கோபு சார்.
Delete//அவசரத்தில் பாராட்டுக்குரிய கவிதை என்று குறிப்பிட்டுவிட்டேன். உண்மையில் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.//
Deleteமுதலில் பாராட்டுக்குரியதாகத் தனியே தேர்ந்தெடுக்கப்பட்டு, இறுதிச்சுற்றில் அதுவே மிகச்சிறந்த கவிதை எனத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். :)
கேட்க மேலும் மகிழ்ச்சியாக உள்ளது. மீண்டும் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள கோபு
அருமை....
ReplyDeleteவாழ்த்துகள் சகோதரி...
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.
Deleteபடத்துக்குப் பொருத்தமான கவிதை. அதுவும் இன்றைய சூழலில் மிகப் பொருத்தமாக இருக்கிறது. கவிதைப் போட்டியில் பாராட்டுப் பெற்றதற்கு வாழ்த்துகளும் பகிர்ந்ததற்கு நன்றிகளும்.
ReplyDeleteத ம 1
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி செந்தில்.
Deleteஅருமை வாழ்த்துகள் சகோதரி!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteபரிசு பெற்றதுக்காக வாழ்த்துக்கள் முதல் வரியில் ஆசையாய் நீ வளர்த்த என்று இருந்திருக்க வேண்டுமோ உனை வளைத்த தம்பி என்பது சரியா/என் புரிதலில் குறை இருந்தால் பொறுத்தருள்க.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா. முதல் வரியில் ஆசையாய் உனை வளர்த்த நல்லதம்பி என்பது அந்த வீட்டின் சிறுவனைக் குறிப்பிடுவதாகவும் அடுத்து வரும் குட்டித்தம்பி என்பது ஆட்டுக்குட்டியைக் குறிப்பிடுவதாகவும் உள்ளது. ஆட்டுக்குட்டியை இழந்து அழும் சிறுவன், வீட்டுச்சுவரில் வரைந்திருக்கும் கரிக்கோட்டு ஓவியத்திடம் நான் பேசுவதாய் வரிகளை அமைத்தேன்.
Deleteவேதனை
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteஅருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரூபன்.
Deleteஅருமை சகோதரியாரே
ReplyDeleteஅருமை
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteவாழ்த்துகள்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.
Deleteவேதனை வரிகள். இந்த மட்டும் நாம் பிழைத்தோம் என்று கூட அந்தத் தாயாடு நினைத்திருக்கலாம். வல்லமை இதழ்ப் பரிசுக்கு வாழ்த்துகள். தம +1
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
Deleteமண்சட்டியில் துண்டுகளாகி..
ReplyDeleteவெந்த குழம்பின் வாசத்திலும்
உப்புத்தூவிய கண்டங்களாகி..
வெய்யிலில் காயும் மீதத்திலும்
வீசும் உன் பிணவாடையை…
தாங்குமா இத்தாயாடு?//
ஐயோ மனம் பதைத்து நொந்துவிட்டது. கண் முன்னே காட்சி விரிய மனம் என்னவோ செய்து கண்கள் முட்டிவிட்டன. அப்படியே ஸ்தம்பித்துவிட்டது மூளை...நேற்று வாசித்தக் கவிதைக்கு இன்றுதான் கருத்து இடும் அளவிற்கு மனம் ஸ்தம்பித்தது சகோதரி.
வல்லமை இதழில் வெளியாகி பரிசு கிடைத்தமைக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.
கீதா
இந்த வரிகளை எழுதும்போது எனக்கே கண்கள் கசிந்துவிட்டன. தாய்மை என்பது எப்போதும் நெகிழவைப்பதுதானே... நாம் மட்டும் விதிவிலக்கா என்ன? தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனத்தை நெகிழ்வித்தக் கருத்துக்கும் அன்பான நன்றி தோழி.
Deleteநெகிழ வைக்கும் கவிதை.
ReplyDeleteபரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள் கீதா.
வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.
Deleteஅருமையான் படம். நெகிழ வைத்த கவிதை. பரிசு பெற்றமைக்குப் பாராட்டுகள்....
ReplyDeleteபடம் தந்த தாக்கமே எழுதத் தூண்டியது. புகைப்படக் கலைஞருக்கு நம் வாழ்த்தினைத் தெரிவிப்போம். வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி வெங்கட்.
Deleteமுதலில் சிறந்த கவிதியாக தேர்ந்தெடுக்கப்பதற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteகவிதை, உண்மையிலேயே மனதை நெகிழ வைத்து விட்டது.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சொக்கன்.
Deleteவாழ்த்தக்கள் சகோ,
ReplyDeleteவலி மிகு வார்த்தைகள்,,
வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி.
Deleteஅற்புதமான கவிதை
ReplyDeleteபரிசு பெற்றமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்.
Delete