என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய மூத்த
பதிவர்களுள் ஒருவரும் என் பிறந்தகமான திருச்சியைச் சார்ந்தவருமான தமிழ் இளங்கோ ஐயா
அவர்களைப் பற்றி அறியாதவர்கள் பதிவுலகில் இருக்கமுடியாது. தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர், அரசு வங்கியில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். அவர்தம் பதிவுகளில் இலக்கியமும் அனுபவ அறிவும், சமூகநலன் சார்ந்த பதிவுகளும் பிரதானமாய் இடம்பெறும். அவர் ‘எனது எண்ணங்கள்’ என்னும் தன்னுடைய வலைப்பூவில், என்னுடைய மொழிபெயர்ப்பு நூலான
‘என்றாவது ஒருநாள்’ குறித்த விமர்சனத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். புதுக்கோட்டை
பதிவர் சந்திப்பின்போது என்னுடைய நூலை தமிழ் இளங்கோ ஐயா விலை கொடுத்து வாங்கிய செய்தி அறிந்து மிகவும் மகிழ்ந்தேன்.
வாசித்து முடித்த கையோடு அதற்கான விமர்சனமும் எழுதிப் பதிவிட்டுள்ளமை என்னை இரட்டிப்பு
மகிழ்வடையச் செய்துள்ளது.
மொழிபெயர்ப்பின்
வகைகள் குறித்தும் இந்நூலில் நான் மேற்கொண்ட மொழிபெயர்ப்பு குறித்தும் கருத்துரைத்துள்ள
அவர், நூலிலுள்ள கதைகள் தொடர்பான தன்னுடைய கருத்துகளையும் பகிர்ந்துள்ளமை சிறப்பு.
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்ததைப் போன்று தமிழிலக்கியங்களையும் ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்திடல் வேண்டுமென்ற வேண்டுகோளை தற்போதைக்கு மறுக்கும் நிலையில் இருப்பதற்காக
மிகவும் வருந்துகிறேன். அவருடைய கருத்துரைக்கான என் பதில் இது...
என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய மூத்த பதிவரான
தங்களிடமிருந்து ‘என்றாவது ஒருநாள்’ நூலுக்கான விமர்சனம் கிடைத்திருப்பதை என்னுடைய பேறாகவே கருதுகிறேன். மிகுந்த
மகிழ்வும் நன்றியும் ஐயா. இந்த நூலில்
நான் மேற்கொண்டிருப்பது தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல
நேரடி மொழிபெயர்ப்புதான். அப்போதுதான் நுணுக்கமான விஷயங்களிலும் நான் வியந்து ரசித்த
மூல ஆசிரியருடைய எழுத்து பற்றி தமிழ்
வாசகர்களுக்கு அறியத்தரமுடியும் என்று நம்பினேன்.
கதைகள்
குறித்த சிறு அறிமுகமும் வாசகரை
வாசிக்கத் தூண்டும்வண்ணம் தாங்கள் இங்கு அவற்றைக்
குறிப்பிட்டிருப்பதற்கு மிகவும் நன்றி. ஒற்றை
சக்கரவண்டி கதையின் தலைப்போடு கவியரசரின்
வரிகளையும் குறிப்பிட்டிருப்பது சிறப்பு. கதைகளையும் கதைகளின் பின்னணியையும் மிக அழகாக உள்வாங்கி
எழுதப்பட்ட விமர்சனத்துக்கு மனமார்ந்த நன்றி.
ஆங்கிலத்தில்
எனக்குப் போதுமான புலமை இல்லாதபோதும்,
நான் ரசித்தவற்றைத் தமிழில் தரவேண்டும் என்னும்
முனைப்பே மொழிபெயர்ப்பில் ஈடுபடத் தூண்டியது. தமிழிலிருந்து
ஆங்கிலத்துக்கு மாற்றும் அளவுக்கு ஆங்கிலப்புலமை இல்லையென்பதை இங்கு நான் குறிப்பிட்டே
ஆகவேண்டும். பின்னாளில் என்றேனும் நான் அந்த முயற்சியில்
ஈடுபட முடியுமானால் அந்தப் பெருமை தங்களுக்கே
உரித்தாகும். நன்றி ஐயா.
இறுதியில்
நான் குறிப்பிட்டுள்ள வரிகள்
என்றாவது ஒருநாள் மெய்ப்படலாம்..
அதற்கான விதை இங்குதான் விதைக்கப்பட்டது
என்பதை
அப்போதும் மகிழ்வுடன் நினைவுகூர்வேன்.
மிக்க நன்றி ஐயா.
வாழ்த்துகள் சகோதரி...
ReplyDeleteமிக்க நன்றி தனபாலன்.
Deleteஎன் அருமை நண்பரும், நம் திருச்சிக்காரருமான திரு. தமிழ் இளங்கோ அவர்கள் அவரின் தனிப்பாணியில் வெகு அழகாக விமர்சனம் செய்து எழுதியுள்ளார்கள்.
ReplyDeleteஅவருக்கும், நூலாசிரியரான தங்களுக்கும் மீண்டும் என் பாராட்டுகள், நல்வாழ்த்துகள்.
தங்கள் அன்பான பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோபு சார்.
Delete//புதுக்கோட்டை பதிவர் சந்திப்பின்போது என்னுடைய நூலை தமிழ் இளங்கோ ஐயா விலை கொடுத்து வாங்கிய செய்தி அறிந்து மிகவும் மகிழ்ந்தேன்.//
ReplyDeleteஅவர் எப்போதுமே இப்படித்தான் ..... மிகவும் ஆச்சர்யமான மனிதர் !!
புதுக்கோட்டை பதிவர் திருவிழாவின்போது என்னுடைய புத்தகம் ஒன்றுமட்டும் விற்பனையானது என அறிந்தேன். அதை யார் வாங்கியிருப்பார்கள் என்று தெரியாமலிருந்தேன். தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் வாங்கியிருப்பதை அறிந்தபோது மனம் மிக மகிழ்வில் திளைத்தது.
Deleteவாழ்த்துகள்
ReplyDeleteமிக்க நன்றி ராஜி.
Deleteஇருவருக்கும் வாழ்த்துகளும் என் வணக்கங்களும். உங்கள் புத்தகம் பதிவர் விழாவில் வைக்கப்பட்டதையே இப்பத்தான் தெரிந்து கொண்டேன். என்னென்ன புத்தகம் விற்பனைக்கு வந்தது என்பதை அன்று விழா அமளியில் என்னால் பார்க்கக் கூட முடியாமல் போனது பெரிய சோகம்.
ReplyDeleteஅய்யாவின் தளத்திலும், கரந்மையாரின் எழுத்திலும் மதிப்புரை படித்தேன். அவர்களோடு சேர்த்து நானும் வாழ்த்துகிறேன் சகோதரி. வணக்கம்.
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா. அவ்வளவு பெரிய திருவிழாவினைத் திறம்பட நடத்திய தங்களுக்கு அன்றைய நாளில் எவ்வளவு பணிச்சுமை இருந்திருக்கும் என்று அறிவேன். அதனால்தான் கலையரசி அக்காவால், தங்களுக்கெனக் கொணர்ந்த புத்தகத்தைத் தரமுடியவில்லை என்றும் அறிந்தேன். விரைவில் தங்களுக்கு அப்பிரதியை அனுப்பிவைப்பதாக கலையரசி அக்கா உறுதியளித்துள்ளார்கள்.
Deleteவாழ்த்துகள் சகோ
ReplyDeleteதமிழ் மணம் 2
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
Deleteவாழ்த்துகள் சகோ! இதோ அவரது பதிவை எப்படி தவற விட்டோம்...சென்று வாசிக்கின்றோம் சகோ. மிக்க நன்றி
ReplyDeleteவருகைக்கும் ஐயாவின் தளத்தில் விமர்சனத்தை வாசிக்கிறேன் என்றதற்கும் மிக்க நன்றி சார்.
Deleteஉங்கள் வலைத்தளத்தில் என்னுடைய உங்கள் நூலுக்கான விமர்சனத்தை சுட்டிக் காட்டி, பதிவு ஒன்றினை எழுதிய சகோதரி அவர்களுக்கு நன்றி.
ReplyDeleteமுன்பே எழுதியிருக்கவேண்டியது. மற்றப் பதிவுகளின் வரிசையால் தள்ளிப்போய்விட்டது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
Deleteவணக்கம்
ReplyDeleteவாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரூபன்.
Deleteவாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteவாழ்த்துக்கள் சகோ,
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி.
Deleteதங்களுக்கு வாழ்த்துகள். பகிர்ந்த திரு தமிழ் இளங்கோ அவர்களுக்கு நன்றி. சென்னை நிகழ்வு சோதனைமேல் சோதனை என்றளவில் தொடர்கிறது. இயல்பு நிலை திரும்ப பிரார்த்திப்போம்.
ReplyDeleteபௌத்த சுவட்டைத்தேடி 23 ஆண்டு களப்பணியில் கண்ட 29 சிலைகளைக்காண அழைக்கிறேன். http://www.ponnibuddha.blogspot.com/2015/12/23-29_4.html
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
Deleteவாழ்த்துக்கள் கீதமஞ்சரி.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சாரதா மேடம்.
Deleteவாழ்த்துக்கள் சகோ,
ReplyDelete