புதுக்கோட்டையில்
மலரவிருக்கிறது ஒரு
பூந்தோட்டம் - ஆம் இது வண்ணவண்ண
மலர்களால் ஆன பூந்தோட்டமன்று... வகை
வகையான வலைப்பூக்களால் ஆன பூந்தோட்டம்.
நேரிலே வந்து வண்ணங்களைக்
கண்டுகளிக்கவும் வாசங்களை முகர்ந்து ரசிக்கவும் என்னால் இயலவில்லையே என்ற ஏக்கம் மேலிட்டாலும்
இணையவழி
அத்தனையும் இனிதே என்னைச்சேரும் என்ற மகிழ்வெண்ணம் மத்தாப்பூவாய் மலர்ந்து மனம் நிறைக்கிறது.
பதிவுலகில் கடந்த
நான்காண்டுகளாக தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கிவரும் வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா
இவ்வருடம் அக்டோபர் மாதம் பதினொன்றாம் நாள் புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள மகிழ்வான
செய்தியை பதிவர்கள் அனைவரும் அறிந்திருக்கிறோம். இதற்கான பலதரப்பட்ட முன்னடப்புகளும்,
சிறப்பான திட்டமிடல்களும், புதுமையான முயற்சிகளும், ஒற்றுமையான செயல்பாடுகளும், ஒழுங்குமுறைகளும்
பதிவர்களாகிய நம்மைப் பெருமைப்படுத்தும் விஷயங்கள்.
நூல் வெளியீட்டுடன் குறும்படவெளியீடுகள், தமிழிசைப் பாடல்கள், விருதுகள், சான்றோர் சிறப்புரைகள், புத்தகக் கண்காட்சி & விற்பனை போன்ற புதுப்புது முயற்சிகளோடு பதிவர்களுக்கான பல போட்டிகளையும் களமிறக்கியிருக்கும் புதுக்கோட்டைப் பதிவர்களுக்கும் உறுதுணையாயிருக்கும் மற்ற மாவட்டப் பதிவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். இந்த பதிவர் சந்திப்புத் திருவிழாவுக்கென்றே புதிதாக ஒரு வலைத்தளம் வலைப்பதிவர் சந்திப்பு -2015 திறக்கப்பட்டு திருவிழா தொடர்பான தகவல்களை அங்கு பரிமாறிக்கொள்வது சிறப்பு.
வலையுலகில் எத்தனையோ
பதிவர்கள் இருந்தாலும் ஒருசிலருடன் மட்டுமே நமக்குப் பரிச்சயம் இருக்கும். பலரைத் தெரிந்துகொள்ள
வலைப்பதிவர் கையேடு ஒரு பெரும் வாய்ப்பு. நம்மைப் பற்றிய விவரங்களோடு நம் வலைத்தளத்தை
ஒரு ஆவணமாக பதிவு செய்யும்வகையில் தமிழ் வலைப்பதிவர் கையேட்டு முயற்சி பெரிதும் வரவேற்கத்தக்க
ஒன்று. இதுவரை கையேட்டில் தங்களுடைய வலைத்தளத்தைப் பற்றிப் பதிவு செய்யாதவர்கள் இங்கு
சென்று 20-09-15 --க்குள் பதிந்துகொள்ளுங்கள்.
விழா சிறப்புற நடைபெற ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற நிதியை கீழுள்ள வங்கிக்கணக்குக்கு அனுப்பி உதவவேண்டுமாய்க் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுவரை நிதியுதவி
வழங்கியவர்களின் பட்டியல் இங்கே.
NAME - MUTHU
BASKARAN N
SB A/c Number
- 35154810782
CIF No. -
80731458645
BANK NAME -
STATE BANK OF INDIA,
PUDUKKOTTAI
TOWN BRANCH
BRANCH CODE -
16320
IFSC -
SBIN0016320
நித்தம் நித்தம்
ஒரு புதிய தகவலோடும் அறிவிப்போடும் நம்மை சுறுசுறுவென திருவிழாவுக்குத் தயாராக்கும்
பதிவர் சந்திப்புத் திருவிழாவின் தற்போதைய புதிய அறிவிப்பின்படி புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள
வலைப்பதிவர் சந்திப்புத்திருவிழாவின் மற்றொரு அங்கமாக வலைப்பதிவர் திருவிழா - 2015 - புதுக்கோட்டை
மற்றும் தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தும் உலகளாவிய மின்தமிழ்
இலக்கியப் போட்டிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மொத்தப் பரிசுத்தொகை ரூ.50,000/-
போட்டிவிவரம் கீழே.
வகை-(1) கணினியில் தமிழ்வளர்ச்சி - கட்டுரைப் போட்டி- கணினியில் தமிழ்வளர்ச்சி
குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வ யோசனைகள் -ஏ4 பக்க அளவில் 4பக்கம். இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்.
வகை-(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி -சுற்றுச்சூழல் அறியாமை
தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு
ஆக்கபூர்வ யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4பக்கம் பொருத்தமான தலைப்பும் தருதல்
வேண்டும்.
வகை-(3) பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி -பெண்களை சமூகம் நடத்தும்
விதம், பெண் முன்னேற்றம் குறித்த
யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4பக்கம், தலைப்பும் பொருத்தமாகத்
தருதல் வேண்டும்.
வகை-(4) புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில்
பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25வரி அழகியல் மிளிரும் தலைப்போடு.
வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி- இளைய சமூகத்திற்கு
நம்பிக்கை யூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 24 வரி. அழகொளிரும் தலைப்போடு.
போட்டிவிதிகள் இங்கே
ஐந்து வருடங்களாக
வலையில் தொடர்ந்து எழுதிவந்தாலும் இதுவரை பதிவர் எவரையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் இதுபோன்ற
நிகழ்வுகள் மூலம் பொதுவாகப் பதிவுலகில் மட்டுமல்லாது ஒவ்வொரு பதிவரின் உள்ளத்திலும்
உற்சாகத்தன்மையும் குதூகலமும் குடிகொள்வதை மறுக்கமுடியாது. இம்முயற்சிகள் மூலம் புதிதாய்ப்
பல வலைத்தளங்கள் துவங்கப்பட்டு இணையவழித் தமிழ் இன்னடை போடும் என்பதிலும் சந்தேகமில்லை.
பதிவர்களின் கூட்டுமுயற்சியால் இவ்வருடம் மட்டுமல்ல, வரும் வருடங்களிலும் பதிவர் சந்திப்புத்
திருவிழா சிறப்புற நடைபெற நம்முடைய இதயபூர்வ ஒத்துழைப்பை இனிதே நல்கி, செயலூக்கத்துடன்
பாடுபடுவோம்.. இணையத்தமிழின் இன்வளர்ச்சிக்குதவுவோம்.
கண்டிப்பாய், எப்பொழுதும் இணைந்து தமிழ் போற்றுவோம் .
ReplyDeleteஅனைத்தையும் தொகுத்து அருமையைப் பகிர்ந்திருக்கிறீர்கள்,வாழ்த்துகள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கிரேஸ். புதுகைப் பதிவர்களின் ஆர்வமும் உற்சாகமும் ஒவ்வொருவரையும் தொற்றிக்கொள்வது உண்மை.
Deleteஅருமையான தொகுப்பு சகோ எனது புதுக்கோட்டை பதிவையும் காண வரவும்
ReplyDeleteதமிழ் மணம் 2
நன்றிங்க கில்லர்ஜி. உங்கள் பதிவையும் வாசித்துக் கருத்திட்டேன். தமிழ்மண வாக்குக்கும் மிகவும் நன்றி.
Deleteபூந்தோட்டம் பூத்துக் குலுங்குதம்மா,,,,
ReplyDeleteஅருமையாக சொல்லியுள்ளீர்கள்,
வாழ்த்துககள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மகேஸ்வரி.
Deleteஅழகாக பதிவு செய்துள்ளீர்கள்... மிக்க நன்றி சகோதரி...
ReplyDeleteபதிவர் சந்திப்புக்கான விழா ஏற்பாடுகளில் உங்கள் செயல்பாடுகள் வியக்கவைக்கின்றன. மனம் நிறைந்த நன்றியும் பாராட்டும் தனபாலன்.
Deleteபுதுக்கோட்டை விழாவிற்காகக் கைகோர்க்கும் தங்களுக்கு நன்றி.
ReplyDeleteமிகவும் நன்றி ஐயா.
Deleteஆஹா மிகவும் அருமைமா..உங்களையெல்லாம் உறவாக்கி தந்த வலைப்பூவிற்கு மிக்க நன்றி ....வலைப்பதிவர் விழா நேரலையில் ஒலிப்பரப்ப முயற்சி எடுத்துள்ளோம்...நீங்கள் நேரிலேயே அனைவரையும் பார்க்கும் படிம்மா...
ReplyDeleteஇனியதொரு செய்தி கீதா. நேரலை வழியே நானும் உங்களுடன் கலந்துகொள்ள ஆர்வமாய்க் காத்திருக்கிறேன். தகவலுக்கு நன்றி கீதா.
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.
Deleteதங்கை கீதா சொன்னது போல நிகழ்ச்சியின் நேரலை ஒளிபரப்பும் உண்டு.
ReplyDeleteபோட்டியில் பங்கேற்க அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியில் தங்கள் பதிவிட்டது மகிழ்ச்சியளிக்கிறது சகோதரி. நன்றி நன்றி.
வரமுடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்தாலும் அதை மீறி உள்ளுக்குள் உற்சாகம் பொங்குவது உண்மை. தங்கள் அனைவருடைய ஓயாத உழைப்பையும் உற்சாகமான செயல்பாடுகளையும் கண்டு வியக்கிறேன். அனைவருக்கும் என் அன்பான பாராட்டுகள்.
Deleteபூக்களைக் கொண்டு புதுக்கோட்டை விழாவை
ReplyDeleteஅலங்கரித்துவிட்டீர்கள் தோழி!
அழகுன்னா அப்படி அழகு! மிகச் சிறப்பு!
வாழ்த்துக்கள்!
உங்கள் பாவோடு ஒப்பிடும்போது இந்தப்பூவெல்லாம் எம்மாத்திரம்? எனினும் அழகான ரசனைக்கும் வாழ்த்துகளுக்கும் அன்பான நன்றி தோழி.
Deleteஅழகாக நந்தவனம் போலவே பூக்களோடு பகிர்ந்துள்ளீர்கள் நிகழ்ச்சி நிரல்களை தொகுத்து அருமை அருமை நன்றி! வாழ்த்துக்கள்.... நன்றி !
ReplyDeleteபூந்தோட்டம் பூக்கள் இல்லாமலா? :)) வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி இனியா.
Deleteஅக்கா! அருமையாக செய்திகளை எடுத்துரைத்திருக்கிறீர்கள்!!! புதுகை விழாக்குழுவின் சார்பாக என் நன்றிகள்!! ஆனாலும் உங்களை நேரில் காணமுடியவில்லையே எனும் வருத்தம் இருக்கவே செய்கிறது!
ReplyDeleteஅடுத்த பதிவர் சந்திப்பின்போதாவது அந்த இனிய தருணம் வாய்க்கிறதா என்று பார்ப்போம். இப்போதைக்கு நேரலை இருக்கிறதே.. இனிதே விழாவில் நானும் பங்கேற்பேன் மைதிலி. வருத்தம் வேண்டாம்.
Deleteஅருமையாய் பகிர்ந்துள்ளீர்கள் சகோதரியாரே
ReplyDeleteநன்றி
மிகவும் நன்றி ஐயா. விழா சிறக்க உழைக்கும் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.
Deleteசிறப்பான பகிர்வு.....
ReplyDeleteவிழா சிறக்க எனது வாழ்த்துகளும்....
நன்றி வெங்கட்.
Deleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ஜனா சார்.
Deleteஎதையும் ந்சேர்த்ட்க்ஹியாய்ச் சொல்லும் உங்கள் திறனுக்கு இது எடுத்துக்காட்டு. வாழ்த்துகள்.
ReplyDeleteதங்கள் ரசனையான கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி ஐயா.
Deleteமேலே நேர்த்தியாய் சொல்லும் என்றிருந்திருக்க வேண்டும் தட்டச்சில் தவறு.
ReplyDeleteபதிவர் விழா நிகழ்ச்சிகள் பற்றிய விபரங்களை பூமாலையாய்த் தொடுத்த விதம் அழகு! பாராட்டுக்கள் கீதா!
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி அக்கா.. விழாவில் கலந்துகொண்டு நல்லதொரு இன்னனுபவம் பெற என் வாழ்த்துகள்.
Deleteஎன்ன அழகாச் சொல்லிருக்கீங்க கீத்ஸ்... இதுலருந்து கொஞ்சத்த சுட்டு இன்னிக்கு நான் பதிவு போடப் போறேன். ஹி... ஹி... ஹி... இவ்வளவும் சொன்ன நீங்க, இந்த முறையாவது வந்து எங்களைல்லாம் சந்திக்கறீங்களான்னு சொல்லலையே...
ReplyDeleteமுதல் பத்தியிலேயே வரமுடியவில்லையே என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். நீங்கள் என்னடாவென்றால் வருவேனா மாட்டேனா என்று கேட்கிறீங்க. இம்முறை வரமுடியாதது குறித்து எனக்கு மிகவும் வருத்தம்தான். அடுத்த முறையாவது வரமுடிகிறதா என்று பார்க்கிறேன் கணேஷ்.
Deleteமிக அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள் கீதமஞ்சரி!
ReplyDeleteநன்றிங்க மனோ மேடம்.
Delete