பாசத்தின் தவிப்பூறும்
பிஞ்சுநெஞ்சமது
நேசத்தின் தகிப்பில்
நெக்குரும் நேரமிது!
பள்ளிவிட்டு வந்தவுடன்
சொல்ல
பலப்பல கதைகள்
உண்டு என்னிடம்..
பாந்தமாய் பக்கம்
அமர்ந்து
கேட்கவொரு செவியில்லை
இவ்விடம்!
கதவின் பூட்டுக்கான
சாவிமட்டுமே என்னிடம்
இதயப்பூட்டுக்கான
சாவிகளின் இருப்பு எவ்விடம்?
முதியவர் இல்லத்தில்
கூட்டாய் வாழ்கிறது
என் மூத்த தலைமுறை
முந்தைய வாழ்வை
தமக்குள் பகிர்ந்தபடி!
தனித்திருக்கிறது
என் தலைமுறை
தாழ்வாரத்தில்
ஒற்றையாய் அமர்ந்தபடி!
உட்கார நேரமின்றி
ஓடிக்கொண்டிருக்கிறார்
எந்தையும் தாயும்
என் எதிர்காலத்தை
இலக்குவைத்து!
வெதும்பிக்கழியும்
என் நிகழ்காலம் குறித்த
பிரக்ஞையற்றவர்களுக்கு
ஒருபோதும் புரியப்போவதில்லை
என் பிரியம்!
தெருவில் கிடப்பதோடு
என்ன கொஞ்சலென்று
விருட்டென்று என்
கைப்பிடித்து
வீட்டுக்குள் இழுத்துப்போக
வெகுநேரம் ஆகப்போவதில்லை.
அதுவரையிலும்…
கொஞ்சிக்களித்து
கூடியிருப்போம்.. வா!
அருமையான சொல்லாடல் வாழ்த்துகள் சகோ மென்மேலும் தொடர....
ReplyDeleteதமிழ் மணம் 1
உடனடி வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றிங்க கில்லர்ஜி.
Deleteஅன்பு செலுத்தவும்கட்டுப்பாடு காணும் ஒரு பிஞ்சு நெஞ்சத்தின் பரிதவிப்பு வெகு இயல்பாய். என் தளத்துக்கு வரவில்லையே. உங்கள் கற்பனைத் திறனுக்கு ஒரு சோளப் பொரி. வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா. கதைப்போட்டியில் கலந்துகொள்ள முயற்சி செய்கிறேன். அழைப்புக்கு நன்றி.
Deleteஅருமையான சொல்லாடல்,
ReplyDeleteஅனுபவமாய்,,,,,,,,,,, மனம் கனக்கிறது, இதற்குள் நானும் எனும் போது,,
பா அருமை, வாழ்த்துக்கள். இன்னும் தொட,,,,,,,,
பல குழந்தைகளின் இன்றைய நிலையை நினைக்கையில் மனம் படும் பாடுதான் எழுத்தானது. அது உங்களையும் பாதித்திருக்கிறது என்று அறியும்போது வருத்தம் மேலிடுகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மகேஸ்வரி.
Deleteகவிதை நடை அருமை. பாராட்டு பெற்ற உங்களுக்கு பாராட்டுகள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteகொஞ்சிக் களித்திருப்போம் வா என்று
ReplyDeleteநெஞ்சம் அள்ளிப் போனீர்கள் உங்கள் கவிதையால்!
மனந்தொட்ட கவிநடை! மிக அருமை கீதா!
வாழ்த்துக்கள்!
த ம +1
உங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ச்சி. நன்றி இளமதி.
Deleteஇன்றைய பிஞ்சு உள்ளங்களின் தவிப்பை சரியாகச் சொன்னீர்கள் தோழி வாழ்த்துகள்.
ReplyDeleteவருகைக்கும் புரிதலுடன் கூடிய கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சசி.
Deleteஅருமை
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரியாரே
தம =1
தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteஅருமை... மனமார்ந்த நல்வாழ்த்துகள்...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தனபாலன்.
Deleteவெதும்பிக்கழியும் என் நிகழ்காலம் குறித்த
ReplyDeleteபிரக்ஞையற்றவர்களுக்கு
ஒருபோதும் புரியப்போவதில்லை என் பிரியம்!//
அன்புக்கு ஏங்கும் குழந்தையின் உள்ளத்தை படம்பிடித்த கவிதை அருமை.
இந்தப் படத்தைப்பார்த்ததும் குழந்தைகளின் தனிமை சூழல்தான் சட்டென்று நினைவுக்கு வந்து எழுதத்தூண்டியது. தங்கள் வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றி கோமதி மேடம்.
Deleteபிரதிபலன் எதிர்பாராமல் சகஉயிர்களிடம் அன்பு செலுத்துவது குறைந்து கொண்டே வரும் இந்நாளுக்குத் தேவையான ஒரு கரு. பிஞ்சு உள்ளத்தின் ஏக்கத்தை வெளிப்படுத்தும் நல்ல கவிதை! வல்லமையில் பாராட்டுக்குரிய கவிஞராய்த் தேர்வு பெற்றமைக்குப் பாராட்டுக்கள் கீதா!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் விரிவான கருத்துக்கும் பாராட்டுகளுக்கும் அன்பான நன்றி அக்கா.
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி புத்தன்.
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteநெஞ்சம் நெகிழ வைக்கும் அழகான கவிதை வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி இனியா.
Deleteபரிசு பெற்றமைக்கு
ReplyDeleteமனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்கள் புத்தகம் அன்பளிப்பாகக்
கிடைக்கப் பெற்றேன்
மிக்க நன்றி
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரமணி சார். புத்தகம் கிடைக்கப்பெற்றது அறிந்து மிகவும் மகிழ்ச்சி. பதிவர் விழா குறித்த தங்கள் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தங்களுடைய பங்கு அளப்பரியது. மனமார்ந்த பாராட்டுகள் ரமணி சார்.
Delete