நான் ரசித்த சில மலர்கள்
உங்கள் ரசனைக்காகவும் இங்கே...
1. யூகலிப்டஸ் பூக்கள் (Eucalyptus) |
2. பாப்பி பூ (poppy) |
3. பாட்டில் பிரஷ் பூ (callistemon) |
4. மஞ்சள் மலர்கள் (aeonium arboreum) |
5. கற்றாழைப் பூக்கள் (aloe vera) |
6. ஐரிஸ் ஜாப்பனிகா (Iris Japonica) |
7. அஸேலியா பூக்கள் (Azalea flowers) |
8. மஞ்சள் பாப்பி மலர் (poppy) |
9. கிறிஸ்துமஸ் கள்ளிப்பூ (christmas cactus) |
10. செவ்வந்தி (marigold) |
11. சாமந்தி (daisy) |
12. மேக்னோலியா மலர்கள் (magnolia) |
13. ரோஜா (rose) |
14. தீக்குச்சிப் பூக்கள் (Aechmea gamosepala) |
15. அல்லிப்பூ (water lily) |
16. பாப்பி பூ (poppy) |
17. சைக்ளமென் (cyclamen) |
18. ஃப்யூஷியா (fuchsia) |
19. அலமாண்டா (allamanda) |
20. மந்தாரை (Bauhinia) |
அழகான மலர்களின்அணிவகுப்பு கண்டு அசந்து நிற்கிறேன் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு.
ReplyDeleteவருகைக்கும் மலர்களை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி சசி.
Deleteஒவ்வொரு முறையும் உங்களால் தான் அரிய அழகிய மலர்கள், பறவைகள், விலங்குகளை நான் அறிந்துகொள்கிறேன். மிக்க நன்றி அக்கா!
ReplyDeleteமிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது மைதிலி. உங்களுடைய ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு மிகவும் நன்றிம்மா.
Deleteவித்தியாசமான மலர்கள், அழகான புகைப்படங்கள். தங்களின் ரசனைக்குப் பாராட்டுக்கள். நன்றி.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் மலர்களை ரசித்துப் பாராட்டியமைக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteபூவை தருகின்ற பூக்களின் பேரழகு!
ReplyDeleteதேவையே இங்குநற் தேர்வு!
அத்தனையும் கொள்ளை அழகு தோழி!
நன்றியுடன் வாழ்த்துக்கள்!
த ம +
வருகைக்கும் பூக்களை ரசித்தமைக்கும் அழகிய பாவால் பாராட்டியமைக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி தோழி.
Deleteமலர்கள் எல்லாம் கொள்ளை அழகு.
ReplyDeleteவருகைக்கும் மலர்களை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி மேடம்.
Deleteஒவ்வொன்றும் தனி அழகு,,,,,,,, தீக்குச்சி பூக்கள் அழகு,,,,
ReplyDeleteவருகைக்கும் பூக்களை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி மகேஸ்வரி. தீக்குச்சிப் பூக்களை முதன்முறையாகப் பார்த்து நானும் வியந்தேன்.
Deleteபல மலர்கள் கண்டிராதவை. என் முந்தைய பதிவொன்றில் சில பூக்களின் படம் போட்டு பெயர் கேட்டிருந்தேன் நீங்கள் அவற்றின் பெயர்களைக் குறிப்பிட்டு பின்னூட்டம் இட்டது நினைவில்.
ReplyDeleteநானும் பல மலர்களை இங்குதான் முதன்முறையாகப் பார்த்து வியந்தேன். அதை அனைவரோடும் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சி. பூக்களின் மேலுள்ள ஆர்வம்தான் உங்கள் தோட்டத்துப் பூவின் பெயரையும் கண்டுபிடிக்க உதவியது. அதைத் தாங்கள் இங்கு நினைவுகூர்ந்திருப்பது மகிழ்வளிக்கிறது. நன்றி ஐயா.
Deleteஇங்கு எல்லாமே கோடையில் காணக்கிடைக்கும்- புட்டித் தூரிகை அதுதாங்க பாட்டில் பிரஷ் பூ- அழகான காரணப் பெயர்.
ReplyDeleteஇந்த மஞ்சள் பூ என்னிடம் உண்டு. இது பாலை வனப் பூவாம், எனக்கு என் அடுத்த வீட்டு அல்யீரிய நண்பர்கள் தந்தார்கள். கடும் குளிரையும் தாங்கும். ஆண்டுக்கு ஒரு தடவை பூக்கும்.
கற்றாளைப் பூ - சமைக்கலாம் போலுள்ளது.
கிருஸ்மஸ் கள்ளிப்பூ- இதன் அழகுக்காக பல நிறத்தில் வாங்கியுள்ளேன். அவை பூக்கும் மார்கழியில் வீட்டுக்குள் வைக்கவேண்டும். அவற்றுக்கு 12 சி யில் வெப்பமிருக்க வேண்டும். அதிகரித்தால் மொட்டுக்கள் உதிர்ந்து விடும்.
மார்கழியில் வீட்டுக்குள் வெப்பம் 20+. மரங்கள் இன்னும் உண்டு.
ஃப்யூஷியா (fuchsia)- இந்தத் தொங்கு தோரணப்பூ எனக்கு மிகப் பிடிக்கும், வளர்ப்பதும் இலகு, நிறையப் பூக்கும்.
மொத்தத்தில் - பூக்கள் இயற்கையின் கொடை. ரசிப்போம்.
வருகைக்கும் மலர்களை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி யோகன் ஐயா.
Deleteபாட்டில் பிரஷ் பூவுக்கு புட்டித்தூரிகை என்ற என்னவொரு அழகான தமிழ்ச்சொல்லை இட்டிருக்கிறீர்கள்... மிகவும் நன்றி. பல பூக்களின் பெயரை இணையத்திலிருந்துதான் அறிந்து எழுதியிருக்கிறேன்.
கற்றாழைப்பூ சமைக்கலாமா என்று தெரியவில்லை... ஆனால் கிட்டே போகமுடியாமல் தேனீக்கூட்டம் மொய்த்துக்கொண்டிருக்கிறது.
ஃப்யூஷியா பூவைப் பார்க்கையில் பெண்களின் காதிலாடும் குட்டித் தொங்கட்டான் போலவும், கவுனை விரித்துச் சுழன்றாடும் குட்டிப்பெண்ணைப்போலவும் காட்சியளிப்பது பார்க்கவே அழகு தரும் காட்சி.
இறுதியாய்த் தாங்கள் சொல்லியிருப்பது உண்மை. இயற்கையை ரசித்தால் வாழ்க்கையும் ரசனையுடையதாக இருக்கும் என்பதில் மறுப்பேது?
அடடா என்ன அழகு எத்தனை அழகு ஸூப்பர் சகோ
ReplyDeleteதமிழ் மணம் ஐந்தருவி
தங்கள் வருகைக்கும் அழகிய மலர்களை ரசித்தமைக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றிங்க கில்லர்ஜி.
Deleteபடங்கள் எல்லாமே அழகு! தீக்குச்சி பூக்கள் வித்தியாசமாய் இருக்கின்றன! பாட்டில் பிரஷ் என்பதற்கு புட்டி தூரிகைப் பூ என்ற யோகனின் அழகிய சொல்லாடல் பூவை விட என்னை மிகவும் கவர்ந்தது! படம் எடுப்பதிலும் கைநேர்த்தி தெரிகிறது. பாராட்டுக்கள் கீதா!
ReplyDeleteவருகைக்கும் பூக்களை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி அக்கா. தீக்குச்சிப் பூக்களை நானும் முதன்முறையாகப் பார்த்தபோது மிகவும் வியந்தேன். நீங்களும் ரசித்திருப்பதில் மகிழ்ச்சி. புட்டித்தூரிகை என்ற பெயரை நானும் ரசித்தேன். இனி அப்படியே சொல்லிப் பழகுவோம். தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி அக்கா.
Deleteகண்கள் குளிர்ந்தன
ReplyDeleteநன்றி சகோதரியாரே
தம +1
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteஅழகோ அழகு கொள்ளை அழகு .ரெட் ரோஸ் ப்ளீட்ஸ் வைத்த பட்டு சேலை போல இதழ்கள் செம க்யூட் .யூகலிப்டஸ் பூ இப்போ தான் பார்க்கிறேன் .மலர்கள் என்றாலழகு தானே
ReplyDeleteவருகைக்கும் பூக்களை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி ஏஞ்சலின். ரோஜாவை வர்ணிக்கும் உங்கள் வரிகள் அசத்தல். யூகலிப்டஸ் பூக்கள் வெள்ளை, மஞ்சள், ரோஸ், சிவப்பு என்று பல நிறங்களில் உள்ளன. நானும் முதன்முறையாகப் பார்த்து வியந்து படம்பிடித்தேன் ஏஞ்சலின்.
Deleteபாட்டில் பிரஷ் பூ, கற்றாழைப் பூ வியக்க வைத்தது. 'புட்டித் தூரிகை' அழகு சொல்... பூவைப் போன்றே. கடைசி மூன்றும் மிகப் புதுசு எனக்கு. சிவப்பு ரோஜா பார்த்தது தானே என்று தாண்டி வந்து, ஏஞ்சலின் கருத்தைப் படித்தபின் மீண்டும் சென்று மீண்டேன்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிலாமகள். ரோஜா பற்றிய ஏஞ்சலினின் வர்ணனைகள் உங்களையும் இழுத்துச்சென்றது அறிந்து மிகவும் மகிழ்ச்சி.
Deleteஉள்ளம் கவரும் வண்ண மலர்கள்! அருமையான படங்கள்!
ReplyDeleteவருகைக்கும் மலர்களை ரசித்தமைக்கும் நன்றி ராமலக்ஷ்மி.
Deleteஇயற்கை மீது தங்களுக்கு இருக்கும் ஆர்வம் மெய்சிலிர்க்க வைக்கிறது. அழகான பல மலர்களை அற்புதமாக கேமராவில் சிக்க வைத்துள்ளீர்கள்.
ReplyDeleteஅழகு!
த ம 9
வருகைக்கும் பூக்களை ரசித்துப் பாராட்டியதற்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகவும் நன்றி செந்தில்குமார்.
Deleteஆஹா! அழகு! இத்தனை விதமான பூக்களை அழகாகப் படமெடுத்துப் பகிர்ந்ததற்கு நன்றி கீதமஞ்சரி.
ReplyDeleteதீக்குச்சிப் பூ இப்போதான் பாக்குறேன், அழகாய் இருக்கிறது.
வருகைக்கும் பூக்களை ரசித்தமைக்கும் நன்றி கிரேஸ். தீக்குச்சிப் பூக்கள் உங்களையும் கவர்ந்திருப்பது மகிழ்வளிக்கிறது.
Deleteஅழகு மலர்கள்...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பூக்களை ரசித்தமைக்கும் நன்றி ஜனா சார்.
Deleteஅடடா ....எத்தனை விதமான பூக்கள் ....அழகு ..
ReplyDeleteவருகைக்கும் பூக்களை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி அனுராதா ப்ரேம்.
Deleteஅடடா எத்தனை விதமான அழஅழகான பூக்கள். ரொம்ப ரசித்தேன் ....நன்றிம்மா !
ReplyDeleteபூக்களை ரசித்தமைக்கு மிகவும் நன்றி இனியா.
Deleteபூக்கள் மீதுள்ள ஆர்வம் நாளுக்கு நாள் அதிகமாகவே ஆகின்றது..வட்ஸ் அப் குரூப் ஒன்று ஆரம்பித்தால் மிகவும் பயனாக அமையும் அம்மணி. ...
ReplyDeleteஆஹா... அத்தனை பூக்களுமே அருமை... ஓவ்வொன்றும் கண்களில் ஊடுருவி மனதை கிள்ளுகின்றன....
ReplyDeletehttps://www.scientificjudgment.com/