வலையுலகில் இதுவரை
எவரும் எண்ணியிராத வகையில் ஒரு புதுமையான போட்டியாக தொடர்ச்சியாக நாற்பது வாரங்களுக்கு
சிறுகதைகளுக்கான விமர்சனப் போட்டியை அறிமுகப்படுத்தி அதை இன்றுவரை தொய்வில்லாது, சிறு
தடங்கலில்லாது சிறப்புற நடத்திவரும் திரு.வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கு என் முதற்கண்
நன்றி.
தனியொருவராய் இச்சாதனையை நிகழ்த்திவரும் கோபு சார் அவர்களுடைய சிரத்தையும் திட்டமிடலும் உழைப்பும் நேரமேலாண்மையும் நம்மை வியப்பிலாழ்த்துவது உண்மை. இந்த வயதுக்கான அயர்வு, உடல்நிலை, குடும்பக் கடமைகள், பிற பணிகள் இவற்றுக்கிடையே குறிப்பிட்டப் பதிவுகளை ஒரு இராணுவக் கட்டுக்கோப்புடன் குறித்த நேரத்தில் குறித்தபடி பதிவிடும் அவருடைய அசாத்தியத் திறன் கண்டு வியக்கிறேன். அவருக்கு நம் அனைவரின் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.
தனியொருவராய் இச்சாதனையை நிகழ்த்திவரும் கோபு சார் அவர்களுடைய சிரத்தையும் திட்டமிடலும் உழைப்பும் நேரமேலாண்மையும் நம்மை வியப்பிலாழ்த்துவது உண்மை. இந்த வயதுக்கான அயர்வு, உடல்நிலை, குடும்பக் கடமைகள், பிற பணிகள் இவற்றுக்கிடையே குறிப்பிட்டப் பதிவுகளை ஒரு இராணுவக் கட்டுக்கோப்புடன் குறித்த நேரத்தில் குறித்தபடி பதிவிடும் அவருடைய அசாத்தியத் திறன் கண்டு வியக்கிறேன். அவருக்கு நம் அனைவரின் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.
நம் கண்களுக்குப்
புலப்படாது, இப்போட்டியின் நடுநாயகமாக அமர்ந்து போட்டிக்கு வரும் ஏராள விமர்சனங்களை
வாசித்து, உரிய காலத்தில் அவற்றுள் பரிசுக்குரியவற்றைத் தேர்ந்தெடுத்து அளித்து கோபு
சாரின் திட்டமிடலுக்கேற்பத் தானும் திட்டமிட்டு நேரம் வகுத்து, மேற்கொண்ட பொறுப்பை
சிரமேற்கொண்டு சிரத்தையுடன் செயல்பட்டுவரும் நடுவர் அவர்களுக்கும் நம் நன்றிகளைத் தெரிவிப்போம்.
சிறுகதை விமர்சனப்
போட்டியின் மூலமாக பல புதிய பதிவர்களையும் புதிய விமர்சகர்களையும் நம்மால் அடையாளங்காண
முடிகிறது. பரிசு பெற்ற, பெற்றுக்கொண்டிருக்கும், பெறவிருக்கும் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.
விமர்சனம் என்றாலே அது நமக்கு கைவராத கலை என்று காத தூரம் விலகிநின்ற நான்
இதுவரையிலான போட்டிகளில் அதிகப் போட்டிகளில் பரிசுபெற்று உயரிய பரிசுத்தொகைக்கு உரியவளாகியிருக்கிறேன்
என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. பரிசுமழையில் தொடர்ந்து நனைந்து இப்போது மகிழ்ச்சி
வெள்ளத்தில் நீந்திக்களித்துக் கொண்டிருக்கிறேன். 20 போட்டிகளில் 18 போட்டிகளில் கலந்துகொண்டு 14 போட்டிகளில் பரிசு பெற்றுள்ளேன் என்பது எனக்கே மலைப்பு தரும் செய்தி.
போட்டிகளுக்கு
முன்பு அறிவித்திருந்த பரிசுத்தொகை அல்லாது ஹாட்ரிக் பரிசு, போனஸ் பரிசு போன்ற ஊக்கப்பரிசுகளையும்
அளித்து மேலும் மேலும் நம்மை உற்சாகப்படுத்தும் கோபு சார் அவர்களின் அன்புக்கு மனமார்ந்த
நன்றி. இதுவரையிலான ஹாட்ரிக் பரிசு பெற்றவர்களின் விவரத்தை கீழே காணலாம்.
என்னுடைய மீள்பார்வைக்காக,
இதுவரையில் நான் பரிசு பெற்ற விமர்சனங்கள் மற்றும் அவற்றுக்கான கதைகளின் சுட்டிகளைப்
பதிவு செய்துகொண்டு வருகிறேன்.
பதினொன்று முதல் இருபது வரையிலான அடுத்த பத்துப்
போட்டிகளில் நான் பரிசு பெற்ற விமர்சனங்கள் மற்றும் கதைகளுக்கான சுட்டிகளை இப்போது
பதிகிறேன்.
17. சூழ்நிலை
தொடர்ந்து பரிசுகளைப்
பெற்றுக்கொண்டிருக்கும் சூட்சுமம் என்னவென்று தெரிவித்தால் போட்டியில் கலந்துகொள்ளும்
மற்றவர்களுக்கு உதவியாக இருக்குமென்று ஒரு பதிவின் பின்னூட்டத்தில் கருத்துத் தெரிவித்திருந்த திரு. இளங்கோ ஐயா மற்றும் திரு. ஜீவி சார் இருவரின் வேண்டுகோளை ஏற்று அந்தப் பதிவின் பின்னூட்டத்திலேயே
என் பதிலைத் தெரிவித்திருந்தேன். வாசிக்காதவர்கள் கவனத்துக்காக.. மறுபடியும் இங்கே
பதிவிடுகிறேன்.
\\விமர்சனம் எழுதுவதில் நான் ஒன்றும் வித்தகி இல்லை என்பது எனக்கு நன்றாகவே
தெரியும். தேர்ந்த விமர்சகர்கள் பலர் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்பது
மறுக்கமுடியாத உண்மை. இருப்பினும் தி.தமிழ் இளங்கோ ஐயா மற்றும் ஜீவி சார் இருவரின்
வேண்டுகோளை ஏற்று நான் விமர்சனம் எழுதும் முறையைச் சொல்கிறேன்.
சிறுகதை
வெளியானவுடனேயே அதை ஒருமுறைக்கு இருமுறை ஊன்றி வாசித்துவிடுவேன். அதற்குப்பிறகு
அதைத் திரும்பியும் பார்க்கமாட்டேன். விமர்சனம் எழுதுவதற்கு ஒருவார கால அவகாசம்
உள்ளதே… ஆனால்
அந்த நேரத்தில்… வீட்டு வேலைகள் செய்யும்போதும், நடை பயிலும்போதும், ஓய்வாயிருக்கும்போதும்
உள்ளுக்குள் அந்தக் கதையைப் பற்றிய அலசலை மேற்கொள்வேன். என்ன விமர்சனம் எழுதலாம்,
எப்படி எழுதலாம், கதையின் சிறப்பம்சங்கள் என்ன,
குறை என்ன, வித்தியாசம் என்ன, கதாசிரியர் சொல்லவிரும்புவது என்ன, பாத்திரப்
படைப்புகளின் குணாதிசயம், எழுத்துநடை போன்றவற்றை அசைபோட்டபடியிருப்பேன்.
தொடர்போட்டிகள்
என்பதால் ஒரேமாதிரி இல்லாமல் ஒவ்வொரு முறையும் சிற்சிறு மாற்றங்களுடன் எழுதினால்
சுவாரசியமாக இருக்கும் என்பதால் அதில் கொஞ்சம் சிரத்தை எடுத்துக் கொள்வேன்.
எல்லாம் மனத்துக்குள் முடிவானதும் மறுபடி ஒருமுறை கதையை வாசித்து என்
எண்ணக்கோர்வையை உறுதிப்படுத்திக்கொண்டு எழுத ஆரம்பிப்பேன். கிட்டத்தட்ட
முதல் முயற்சியிலேயே நான் எண்ணியவற்றை சீராக எழுதிவிடமுடியும். அப்படித்தான்
இதுவரை செய்கிறேன்.
வேறெந்த சிறப்புப் பயிற்சிகளோ, முயற்சிகளோ இல்லை... பலரும் இப்படித்தான்
யோசித்து விமர்சனம் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன். அப்படி இல்லாதவர்களுக்கு
இந்தப் பதிவு பயன்படும் எனில் மிகவும் மகிழ்வேன். பரிசு
பெறும் மற்றவர்களது விமர்சனங்களையும் வாசிக்கும்போது இன்னும் சில யுத்திகள்
கிடைக்கின்றன. அவற்றையும் நாம் உபயோகப்படுத்திக் கொள்வதால் வெற்றி கிட்டும்.
எழுதத்
தூண்டிய திரு. தமிழ் இளங்கோ ஐயா அவர்களுக்கும் ஜீவி சார் அவர்களுக்கும் எழுதவைக்கும்
கோபு சார் அவர்களுக்கும் மிக்க நன்றி.\\
என்ன நண்பர்களே…
என்னுடைய இந்த பதில் உங்களுக்கு ஏற்புடையதுதானே?
முயற்சி செய்யுங்கள்.. முயன்றால் முடியாதது
உண்டோ?
முயற்சிக்கும் உழைப்புக்கும் முன்னுதாரணமாய் நம் கண்முன்னே நிற்கிறாரே வை.கோபாலகிருஷ்ணன் சார்!
முன்னே
ஓடிக்கொண்டிருக்கிறேன் உண்மைதான்..
என்னைத் தொட்டுவிடும் தூரத்தில்தானே நீங்களும்…
சோர்வுறாது ஓடி வந்து
இணைந்துகொள்ளுங்கள்.
சேர்ந்தே சிகரம் தொடுவோம்.
(படங்களுக்கு நன்றி: கோபு சார்
வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கு மிகவும் நன்றி தனபாலன்
Deleteசிறப்பான விமர்சனங்கள் மூலம் முதலிடம் பிடித்த தங்களுக்கு
ReplyDeleteஇனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்.!
தங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மேடம்.
Deleteவாழ்த்துக்கள். தொடரட்டும் வெற்றிகள்.
ReplyDeleteதங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி மாதேவி.
Deleteஉங்கள் திறமைக்கு பாராட்டு. எதையும் ஆழ்ந்து சிந்தித்து எழுதுபவர் நீங்கள் என்பது உங்கள் பதிவுகள் பலவற்றைப் படித்தவன் என்ற முறையில் எனக்குத் தெரியும். மேன்மேலும் பரிசு பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களுடைய ஊக்கமிகு வார்த்தைகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteசிறப்பான போட்டியில் பங்கேற்று பரிசு பெற்றமைக்கு என் அன்பான வாழ்த்துகள். ஆம் கோபு சார் வேகத்துக்கு என்னால் ஓட முடியாமல் அந்த பக்கமே நான் செல்வதில்லை. அந்த அளவு அவரது அசுரவேகம். பரிசு பெற்ற உங்களுக்கும் கோபு ஐயா அவர்களுக்கும். போட்டி நடுவர்களுக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்..
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி பாண்டியன்.
Delete//வலையுலகில் இதுவரை எவரும் எண்ணியிராத வகையில் ஒரு புதுமையான போட்டியாக தொடர்ச்சியாக நாற்பது வாரங்களுக்கு சிறுகதைகளுக்கான விமர்சனப் போட்டியை அறிமுகப்படுத்தி அதை இன்றுவரை தொய்வில்லாது, சிறு தடங்கலில்லாது சிறப்புற நடத்திவரும் திரு.வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கு என் முதற்கண் நன்றி.//
ReplyDeleteதங்களின் ஆத்மார்த்தமான புரிதலுக்கும் நன்றிகளுக்கும் அடியேனின் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
>>>>>
தங்களது வருகையும் வரிசையான ஊக்கமிகு கருத்துகளும் கண்டு மிக மிக மகிழ்ச்சி. நன்றி கோபு சார்.
Delete//தனியொருவராய் இச்சாதனையை நிகழ்த்திவரும் கோபு சார் அவர்களுடைய சிரத்தையும் திட்டமிடலும் உழைப்பும் நேரமேலாண்மையும் நம்மை வியப்பிலாழ்த்துவது உண்மை. இந்த வயதுக்கான அயர்வு, உடல்நிலை, குடும்பக் கடமைகள், பிற பணிகள் இவற்றுக்கிடையே குறிப்பிட்டப் பதிவுகளை ஒரு இராணுவக் கட்டுக்கோப்புடன் குறித்த நேரத்தில் குறித்தபடி பதிவிடும் அவருடைய அசாத்தியத் திறன் கண்டு வியக்கிறேன். அவருக்கு நம் அனைவரின் பாராட்டுகளும் உரித்தாகட்டும். //
ReplyDeleteஇதை என் இல்லத்தரசி படித்துவிட்டு தனக்குள் சிரித்துக்கொண்டாள். "ஏன் சிரிக்கிறாய்?" என நான் கேட்டேன்.
பிரபல எழுத்தாளர்களாகிய உங்களைப் போலெல்லாம் என்னால் எதையும் எடுத்துச் சொல்லிப் பாராட்டத் தெரியவில்லையே ............... ஸ்வாமீ” என்று சொல்லி மழுப்பி விட்டாள்.
>>>>>
பாராட்டு என்பதை அவர்கள் வாய்திறந்துதானா சொல்லவேண்டும். செயல்களாலேயே நிரூபித்துக்கொண்டிருப்பவர் அல்லவா! அவர்களுக்கும் என் அன்பான நன்றி.
Delete//நம் கண்களுக்குப் புலப்படாது, இப்போட்டியின் நடுநாயகமாக அமர்ந்து போட்டிக்கு வரும் ஏராள விமர்சனங்களை வாசித்து, உரிய காலத்தில் அவற்றுள் பரிசுக்குரியவற்றைத் தேர்ந்தெடுத்து அளித்து கோபு சாரின் திட்டமிடலுக்கேற்பத் தானும் திட்டமிட்டு நேரம் வகுத்து, மேற்கொண்ட பொறுப்பை சிரமேற்கொண்டு சிரத்தையுடன் செயல்பட்டுவரும் நடுவர் அவர்களுக்கும் நம் நன்றிகளைத் தெரிவிப்போம்.//
ReplyDeleteஉயர்திரு நடுவர் அவர்களின் அறிவும், ஆற்றலும், பழுத்த அனுபவமும், ஈடுபாடும், கடின உழைப்பும், என்னுடனான ஒத்துழைப்பும் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவைகள்தான்.
அதை இங்கு அழகாகச் சுட்டிக்காட்டி நன்றி தெரிவித்துள்ள தங்களுக்கு என் நன்றிகள்.
>>>>>
போட்டிகள் சிறப்புற நடைபெறுவதில் நடுவர் அவர்களின் பங்கு அலாதியல்லவா?
Deleteசிறுகதை விமர்சனப் போட்டியின் மூலமாக பல புதிய பதிவர்களையும் புதிய விமர்சகர்களையும் நம்மால் அடையாளங்காண முடிகிறது.//
ReplyDeleteஆம், இது உண்மைதான். இருப்பினும் என்னுடன் மிகவும் நன்கு பழகிவந்த + பழகிவரும், மிகச்சிறந்த பழைய எழுத்தாளர்கள் சிலர் இந்தப்போட்டியில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்து வருகிறார்கள். நானும் அவர்கள் யாரையும் வற்புருத்தி அழைக்கவில்லை.
>>>>>
ஆம். பல நல்ல திறமைசாலிகள் இப்போட்டியில் கலந்துகொள்ளாத காரணத்தாலேயே நான் இந்த இடத்தைப் பெற்றிருக்கிறேன் என்பது எனக்கு நன்றாகவே புரிகிறது. இனிவரும் போட்டிகளில் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கவேண்டுமென்பதே என்னுடைய விருப்பமும்.
Delete//விமர்சனம் என்றாலே அது நமக்கு கைவராத கலை என்று காத தூரம் விலகிநின்ற நான் இதுவரையிலான போட்டிகளில் அதிகப் போட்டிகளில் பரிசுபெற்று உயரிய பரிசுத்தொகைக்கு உரியவளாகியிருக்கிறேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. பரிசுமழையில் தொடர்ந்து நனைந்து இப்போது மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்திக்களித்துக் கொண்டிருக்கிறேன். 20 போட்டிகளில் 18 போட்டிகளில் கலந்துகொண்டு 14 போட்டிகளில் பரிசு பெற்றுள்ளேன் என்பது எனக்கே மலைப்பு தரும் செய்தி.//
ReplyDeleteதங்களின் எழுத்துக்கள் உண்மையிலேயே மிகவும் நன்றாக உள்ளன. படிக்க சுவாரஸ்யமாக உள்ளன. ஒவ்வொருமுறையும் குறை / நிறைகளை வித்யாசமான முறையில் விமர்சனமாக எழுதிவருகிறீர்கள். அவை நடுவர் அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றதாக அமைந்து விடுகின்றன. அதனால் அவைகள் பரிசுக்குத் தேர்வாகி விடுகின்றன. You are well deserved for all these Prizes.
இருப்பினும் நகைச்சுவை விரும்பியான எனக்கு, தாங்கள் VGK-07 மற்றும் VGK-13 க்கு எழுதி அனுப்பிய விமர்சனங்கள் இரண்டும் மிக மிகப் பிடித்துப்போய் என்றும் என் நினவலைகளில் நீங்காத இடம் பெற்று விட்டன.
இரண்டுமே என்னால் என்றும் மறக்க முடியாத பொக்கிஷங்களாகும். ;)))))
அடிக்கடி நான் அவற்றை படித்து மகிழ்வதுண்டு.
>>>>>
நகைச்சுவை விரும்பியான தங்களுக்கு அந்த இரண்டு விமர்சனங்களும் பிடித்திருப்பதோடு அவற்றை அடிக்கடி வாசித்து மகிழ்வேன் என்பது எனக்குப் பெருமை தரும் செய்தி. மிகவும் நன்றி கோபு சார்.
Delete/போட்டிகளுக்கு முன்பு அறிவித்திருந்த பரிசுத்தொகை அல்லாது ஹாட்ரிக் பரிசு, போனஸ் பரிசு போன்ற ஊக்கப்பரிசுகளையும் அளித்து மேலும் மேலும் நம்மை உற்சாகப்படுத்தும் கோபு சார் அவர்களின் அன்புக்கு மனமார்ந்த நன்றி.//
ReplyDeleteஹாட்-ட்ரிக் பரிசு + போனஸ் பரிசு என்பவை என்னால் போட்டி அறிவிப்புக்குப்பின், அதுவும் முதல் 3-4 கதைகள் வெளியானபின், புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டவைகளே.
என்னால் மிகவும் யோசித்து திட்டமிட்டு அறிவிக்கப்பட்டதால் அவற்றின் பலன்கள் அதிகமாகவே என்னால் உணரப்படுகின்றன.
அதாவது தங்களைப்போலவே கஷ்டப்பட்டு சிந்தித்து நன்றாக விமர்சனம் எழுதி அனுப்புபவர்களுக்கு, நடுவில் சோர்வு ஏதும் ஏற்படாமல் இருக்கவும், அவர்கள் தொடர்ந்து உற்சாகமாக போட்டிகளில் கலந்துகொள்ளவும் இந்த உபரிப்பரிசுகள் அவர்களை சிறப்பித்து அங்கீகரிக்க பெரிதும் உதவி வருகின்றன.
வெறும் தயிர் சாதம் மட்டும் சாப்பிட்டால் போதுமா, தொட்டுக்கொள்ள வடுமாங்காயும் இருந்தால் தானே ருசித்து ரஸித்து இன்னும் கொஞ்சம் கூடுதலாகச் சாப்பிட முடியும் !
பொதுவாக அறிவிக்கப்பட்ட பரிசுகள் தயிர் சாதம் என்றால், ஹாட்-ட்ரிக் பரிசுகள் வடுமாங்காய் ஊறுகாய் போல உதவி வருகின்றன என்பதே உண்மை.
>>>>>
கரும்பு தின்னக் கூலியாக மேலும் மேலும் பரிசுகள் கொடுத்து அசத்தும் தங்களுடைய பெருந்தன்மைக்கு மீண்டும் நன்றி தங்களுக்கு.
Deleteஎன் அருமை நண்பர் திருச்சி திருமழபாடி தி. தமிழ் இளங்கோ அவர்களுக்காகவும் திரு. ஜீவி ஐயா அவர்களுக்காகவும் ‘சிறுகதை விமர்சங்களுக்கு பரிசு பெறுவதில் உள்ள சூட்சுமம்’ பற்றி தாங்கள் எழுதியுள்ள கருத்துக்கள் மிக அருமையாகவும் பலருக்கும் பயன்படும் விதமாகவும் உள்ளன. மிக்க நன்றி.
ReplyDelete>>>>>
பலருக்கும் பயன்படும் எனில் எனக்கும் மகிழ்ச்சியே. குறிப்பிட்டுப் பாராட்டியுள்ள தங்களுக்கு மனமார்ந்த நன்றி கோபு சார்.
Deleteஇந்தத்தங்களின் பதிவினை வெகு அழகாக வடிவமைத்து, சிரத்தையுடன் வெளியிட்டுள்ளீர்கள். தங்களின் மகிழ்ச்சி எங்கள் அனைவரையும் தொற்றிக்கொள்ளும் விதமாக பதிவிட்டு அசத்தியுள்ளீர்கள். தாங்கள் மேலும் மேலும் இதே போட்டிகளில் தொடர்ந்து பல்வேறு சாதனைகள் செய்து உச்சத்தை எட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
ReplyDeleteபாராட்டுக்கள். வாழ்த்துகள். ஆத்மார்த்தமான அழகான அசத்தலான பதிவுக்கும் பகிர்வுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
பிரியமுள்ள கோபு [VGK]
ஒவ்வொரு பத்தியையும் ரசித்துப் பாராட்டி மேலும் எழுதும் ஊக்கத்தை அளிக்கும் தங்கள் கருத்துப் பின்னூட்டங்களுக்கு உளம் நிறைந்த நன்றி சார்.
Deleteபரிசு மழையில் நீங்கள்
ReplyDeleteமகிழ்ச்சி மழையில் நாங்கள்
அனைவருக்கும் பயன்படும்
விளக்கப்பகிர்வு மிக மிக அருமை
பரிசுகளும் சாதனைகளும் தொடர
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்கள் வருகைக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.
Deletetha.ma 2
ReplyDeleteதமிழ்மண வாக்குக்கு மிகவும் நன்றி ரமணி சார்.
Deleteதங்களின் திறமைக்கு மற்றுமொரு அங்கீகாரம்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சொக்கன்.
Deleteஎண்ணம்போல் எல்லாம் கிடைக்க இறையருள் கிடைக்கட்டும்.
ReplyDeletewww.killergee.blogspot.com
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி கில்லர்ஜி.
Deleteஇன்று இப்போதுதான் படிக்க நேரம் கிடைத்தது. அய்யா V.G.K. அவர்களும் இந்த பதிவை நினைவுபடுத்தி இருந்தார். உங்கள் தொடர் வெற்றிகளைப் பற்றி சாதாரணமாகத்தான் கேட்டு இருந்தேன். இதற்கு தனியே ஒரு பதிவைப் போட்டு எனது பெயரையும் குறிப்பிட்டமைக்கு நன்றி! மேலும் மேலும் தங்களுக்கு வெற்றிப் பரிசுகள் வந்திட வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇந்தப் போட்டியில் விமர்சனம் எழுதுவது குறித்த என்னுடைய பாணியைத் தெரிவித்தேன். பலருக்கும் பயன்படுமானால் மிகவும் மகிழ்வேன். அதற்கான வாய்ப்பினை அளித்த தங்களுக்கு நன்றி சொல்லவேண்டுமல்லவா? தங்களுடைய வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteநீங்கள் விமரிசனம் எழுதிய முறையைச் சொன்னது அழகு. அதனால் தான் இதற்கும் ஒரு விமரிசனம் எழுதலாமோ என்று கை துறுதுறுக்கிறதோ என்னவோ!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பதிவை ரசித்து இட்டக் கருத்துக்கும் மிகவும் நன்றி ஜீவி சார்.
Deleteசிறப்பான உங்கள் விமர்சனம் மூலம் தொடர்ந்து பரிசு மழையில் நனையும் உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்......
ReplyDeleteமேலும் பல பரிசுகள் உங்களை வந்தடையட்டும்...
பாராட்டுக்கு மிக்க நன்றி வெங்கட்.
Deleteமுயற்சிக்கும் உழைப்புக்கும் முன்னுதாரணமாய் நம் கண்முன்னே நிற்கிறாரே வை.கோபாலகிருஷ்ணன் சார்!//
ReplyDeleteநீங்கள் சொல்வது உண்மை.
உங்கள் விமர்சனம் மிக அருமை.
அதை எழுதும் விதத்தை சொன்னது அருமை.
கேள்விகள் கேட்ட ஜீவி சாருக்கும், இளங்கோ சாருக்கும் நன்றி.
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மேடம்.
Delete