8 July 2012

முக்கால் நூற்றாண்டுக்குப் பின் நூலகம் திரும்பிய புத்தகம்



1934 இல் மெக்கி என்னும் சிறுவனுக்கு வயது 13. அந்த வயதில் கதைப்புத்தகங்களை விரும்பாத குழந்தைகள் யார்? அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் உள்ள மெளண்ட் கிளமெண்ட் பொது நூலகத்திலிருந்து அவன் எடுத்துச் சென்ற ஒரு கதைப்புத்தகம் அவனை வெகுவாக ஈர்த்தக் காரணத்தால் அதைத் திருப்பிக் கொடுக்கும் மனமில்லாமல் போய்விட்டது. நாளை நாளை என்று ஒத்திப்போடப்பட்டு ஒரு தருவாயில் அது அவனது சொத்தாகவே மாறிவிட்டது.

இப்போது மெக்கியின் வயது 89. தன் பொக்கிஷங்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த அவருக்கு இப்புத்தகத்தை இப்போதாவது நூலகத்திடம் ஒப்படைத்துவிடச் சொல்லி மனசாட்சி படுத்தியதாம். உடனே செயல்படுத்திவிட்டார். எப்படி?

இந்தப் புத்தகத்தை இத்தனை நாள் தான் வைத்திருந்ததற்காக ஒரு மன்னிப்புக் கடிதமொன்றை எழுதி இந்தப்புத்தகத்துடன் வைத்து நூலகத்துக்கு தபாலில் அனுப்பிவிட்டார். ஏன் நேரில் போகவில்லைங்கறீங்களா? அவருக்குத் தெரியுமே, இந்தப் புத்தகத்துக்கான அபராதம் கட்டவேண்டியிருந்தால் அவருடைய சொத்தையே அழித்தாலும் முடியாது என்பது!

ஆனால் நூலகம் என்ன சொன்னது தெரியுமா? "அவர் அபராதம் கட்டத் தேவையில்லை, அவருடைய இந்தக் கடிதத்தையும், அவர் அனுப்பிய புத்தகத்தையும் மக்கள் பார்வைக்கு வைக்கப்போறோம்" அப்படின்னு சொல்லி அந்தப் புத்தகத்தின் புதிய பிரதி ஒன்றையும் இலவசமா அவருக்கு அனுப்பியிருக்காங்களாம். எத்தனை வியப்பான செய்தி!

சரி, அப்படி திருப்பித் தரமுடியாதபடி அந்தப் புத்தகத்தில் அப்படி என்ன விசேஷம்? இருக்கிறது. ஒரு பாவப்பட்ட சிறுவனின் கதை அது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரபல பெண் எழுத்தாளர் மேரி லூயிஸ் எழுதிய ‘A Dog Of Flanders’  என்ற புத்தகம்தான் அது.

குழந்தையிலேயே அநாதையாக்கப்பட்ட ஒரு சிறுவன் அவனது வறிய தாத்தாவால் வளர்க்கப்படுகிறான். அவனுக்குத் துணை ஒரு நாய். அதுவும் அவனைப்போலவே ஒரு பாவப்பட்ட ஜீவன். இருவருக்குள்ளும் உண்டான நட்பும் அதனோடு இழையோடும் அவன் வாழ்வும் அவர்களின் துயரமுடிவுமே கதை! இந்தக் கதை 1975 வாக்கில் தொலைக்காட்சித் தொடராகவும் 1999 இல் திரைப்படமாகவும் வந்துள்ளது. வாய்ப்பு அமைந்தால் கட்டாயம் காணுங்கள். ஒரு கட்டத்திலாவது நம்மையறியாமல் கண்ணீர் வெளிப்பட்டுவிடும்.


  youtube இணைப்பு கொடுத்திருக்கிறேன். முழுத்திரைப்படமும் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. 

மேரி லூயிஸ் எழுதிய பல புத்தகங்கள் குழந்தைகளுக்கானவை. அவர் இயல்பிலேயே வாயில்லாஜீவன்களின்பால் பிரியமுள்ளவராகவும் அவற்றின் காப்பாளராகவும் இருந்திருக்கிறார். ஒரு சமயத்தில் இப்படிக் காப்பாற்றப்பட்ட 30 நாய்கள் அவரால் வளர்க்கப்பட்டு வந்தனவாம். இப்படியொரு இளகிய மனம் படைத்தவர் மெக்கியின் இளகிய மனத்தை அவரது இளவயதில் ஈர்த்ததில் அதிசயம்தான் என்ன?
 ----------------------------------------------------------------------------------------------------

38 comments:

  1. வியப்பான செய்திதான் . ஆனால் படம் வந்தாலும் நான் பார்க்க இயலாதே ! ஏனென்றால் நான் திரைப்படம் பார்ப்பதில்லை .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிகவும் நன்றி. தேர்ந்த வாசிப்பனுபவம் நிறைந்தவர் தாங்கள், ஒருவேளை முன்பே இப்புத்தகத்தை வாசித்திருந்தாலும் இருக்கலாம். இல்லையெனில் புத்தகம் கிடைத்தால் வாசித்துப் பாருங்களேன்.

      Delete
  2. மனசாட்சி உருத்தியிருக்கு அவருக்கு.. நம்ம நாட்டில பலபேறு மனசாட்சியை ராஜஸ்தான் சேட் கடையில் அடகு வைத்துவிட்டதால் இந்தியாவில் நூலகங்களிளில் இருந்து களவாடப்படும் புத்தகங்கள் மீண்டும் நூலகம் திரும்புவதேயில்லை.!

    ReplyDelete
    Replies
    1. நூலகங்கள் மட்டுமல்ல, நம்மிடம் இரவல் பெற்றாலும் சிலர் திருப்பித் தருவதே இல்லை. வலைச்சரப் பணியினூடே வந்திருந்து கருத்திட்டமைக்கு நன்றி வரலாற்று சுவடுகள்.

      Delete
  3. நல்ல செய்தி. யூவில் பார்க்க முயற்சிக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. கட்டாயம் பாருங்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.

      Delete
  4. வியப்பான செய்திகளுடன் நல்லதொரு பகிர்வு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் பாராட்டுக்கும் நன்றி வை.கோ. சார்.

      Delete
  5. adengappa!?
    appadiyaa!?

    pakirvukku nantri!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனி.

      Delete
  6. இங்கே எங்க நூலகங்களில் திரும்பி வராமல் போன புத்தகங்களைக் கணக்கெடுக்கும்போது, புத்தகத்தைத் திருப்பித்தரணுமே என்ற கவலையிலும் அபராதத் தொகைக்கு பயந்து புத்தகத்தைத் தாங்களே வச்சுக்கிட்டு, நூலகம் பக்கமே தலை காட்டாமல் இருக்கும் அங்கத்தினர் கணக்கெடுப்பும் நடத்துவோம்.

    அவுங்களுக்குத் தொலைபேசி புத்தகத்தைத் திருப்பித்தரச்சொல்வதும் என் வேலையாக இருந்துச்சு நான் நூலகத்தில் வேலை செய்த காலங்களில்.

    எப்படியாவது புத்தகங்களை மீட்டெடுக்க, வருடம் ஒருமுறை அம்னெஸ்டி என்று விளம்பரம் செய்து, என்ன ஏதுன்னு ஒன்னுமே கேக்கமாட்டோம். புத்தகங்களைக் கொண்டுவந்து நூலகத்தின் வெளியே வச்சுருக்கும் பொட்டியில் போட்டுருங்கன்னு சொல்வோம்.
    இப்படி நிறைய புத்தகங்களை மீட்டு வச்சோம்.

    இது இல்லாம வருசா வருசம் weeding என்ற வகையில் மூணு வருசத்துக்கு மேல் நூலகம் விட்டு வெளியே போகாத புத்தகங்களைக் களையெடுக்கும் பணி உண்டு.
    அப்போது கழிச்சுக்கட்டும் புத்தகங்களை பத்து செண்ட் ஒன்னு என்று விற்பது உண்டு. இது சும்மாக் கொடுப்பதற்குச் சமம் என்றாலும்........... சும்மாக் கிடைச்சால் அதன் அருமை தெரியாதே என்பதால்தான்:-))))

    நூலகத்தில் 13 ஆண்டுகள் தன்னார்வலராக பணி புரிந்ததில் நான் கற்றவையும் பெற்றவையும் ஏராளம்.

    பழைய நினைவுகளில் தோய உங்கள் பதிவு உதவியது:-))))

    நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நூலகப் பணி பற்றிய விவரங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டதற்கு மிகவும் நன்றி மேடம்.

      Delete
  7. தங்கள் பதிவும் காணொளியும் அருமை
    படித்தும் பார்த்தும் ரசித்தேன்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் மிகவும் நன்றி ரமணி சார்.

      Delete
  8. Anonymous9/7/12 10:50

    அருமையான தகவல் .... !!! குழந்தைகள் கதை புத்தகம் படித்து கற்பனை வளர்த்த காலம் எல்லாம் போய்விட்டது .. !!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகைக்கும் அருமையானக் கருத்துரைக்கும் நன்றி இக்பால் செல்வன்.

      Delete
  9. அந்த நூலகத்தின் பெருந்தன்மை மனதை தொட்டது.மிக அழகாக எழுதி உள்ளீர்கள்.அந்த ஆசிரியரின் புத்தகம் வலையிலோ அல்லது கடைகளிலோ கிடைக்கிறதா என்று முயற்சிக்கிறேன் ,நல்ல பதிவு,நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கும் மிகவும் நன்றி.

      Delete
  10. நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி காஞ்சனா.

      Delete
  11. ஆஹா... இத்தனை வருடங்களுக்குப் பிறகு திருப்பித் தர வேண்டும் என்ற உறுத்தல் அவருக்கு வந்தது பெரிய விஷயம். அந்த நூலகம் அதை வெளியிட்டு அவருக்கு புதிய புத்தகம் தந்த பெருந்தன்மை அதைவிடப் பெரிய விஷயம். நல்லதொரு பகிர்விற்கு நன்றி தோழி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அருமையானக் கருத்துரைக்கும் நன்றி கணேஷ்.

      Delete
  12. மெக்கியின் வயது 89.ஆச்சரியம் தான் . அவருடைய இந்தக் கடிதத்தையும், அவர் அனுப்பிய புத்தகத்தையும் மக்கள் பார்வைக்கு வைக்கப்போறோம்" அபாரம் தோழி .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சசிகலா.

      Delete
  13. அருமையான பதிவுங்க கீதமஞ்சரி அக்கா.

    (தாத்தா... சாகும் வயதில் புண்ணியம் தேடிக்கொண்டார்.)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருணாசெல்வம்.

      Delete
  14. மிக்க நன்றி தோழர்.

    நம்ம வீட்டில்கூட சின்னதாய் ஒரு நூலகம் இருக்கிறது தோழர்.

    எடுத்துப் போகும் நண்பர்கள் திருப்பித் தருவது இல்லை. அதைவிடக் கொடுமை சிலர் எடுத்து போனவற்றைப் புரட்டிப் பார்ப்பதும் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. கஷ்டப்பட்டு புத்தகங்களை சேகரிப்பவர்களுக்குதான் அவற்றின் அருமை தெரியும். நூலகம் என்பது ஒரு புத்தகத்தை பலர் படித்து அனுபவிக்க வழிவகுக்கும் ஒரு அற்புதமான ஏற்பாடு. அதை முறையாய்ப் பயன்படுத்தாதவர்களைப் பற்றி என்ன சொல்வது? கூடுமானவரை எச்சரிக்கையாய் இருப்பதுதான் நல்லது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

      Delete
  15. Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தனபாலன்

      Delete
  16. Readers Digest ல் முன்பு படித்திருக்கிறேன். பல வருடங்கள் கழித்து லைப்ரரி புத்தகத்தை திருப்பி அனுப்பிய ஒருவர், மன்னிப்பு கேட்டு எழுதிய கடிதத்தில்
    "I am a slow reader" என்று குறிப்பிட்டிருந்தாராம்.
    சகாதேவன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கூடுதல் தகவற்பகிர்வுக்கும் நன்றி சகாதேவன்.

      Delete
  17. வியக்க வைக்கும் செய்தி! நூலங்கள் இப்படி இயங்கு மானால் (நம் நாட்டில்) எப்படி இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஐயா.

      Delete
  18. மிகவும் ஆச்சர்யமான தகவல்...
    இவ்வளவு நாட்கள் கழித்து அவருக்கு திரும்ப
    கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் வந்ததே
    மிகப்பெரிய விஷயம்....
    இந்தவகையில் நூலகம் செய்ததை பார்க்கையில்
    மேன்மக்கள் மேன்மக்களே என்று தான்
    சொல்லத் தோன்றுகிறது....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் விரிவானக் கருத்துரைக்கும் நன்றி மகேந்திரன்.

      Delete
  19. நல்ல பகிர்வு! வியக்க வைத்தது! நன்றி!
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  20. புதிதாக வெப்சைட் தொடங்க வேண்டுமா...?

    http://zhosting.in சென்று உங்களின் புதிய வெப்சைட்டை நிறுவுங்கள். உங்களுக்கு தமிழிலேயே உதவிகள் வழங்கப்படும்.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.