நிலவென்றொரு பெயர்தமிழுக்கு உண்டாம்;நிலவின் தன்மையும், தமிழின் இனிமையும்,நிழலாய் நல்லொழுக்கமும்,நீங்காத நகையுணர்வும்நிலைகொண்ட உனக்கிட்டேன்,அப்பெயரினை, அன்பு மகளே!வெண்ணிலா!சொல்லவும் உன்பெயர் வெல்லமடி!உன் உள்ளமோ, பாசத்தின் வெள்ளமடி!
என்னைத் தாயாக்கிய பெண்ணே,நீயும் தாயாகிறாய்,என்னைத் தாலாட்டும் தருணங்களில்!கணினிப்பாடம் கற்பிக்கிறாய் எனக்கு,கண்டிப்பான ஆசிரியையாய்!கணிதம் கற்றுக்கொள்கிறாய் என்னிடம்,கவனம் சிதறா மாணவியாய்!தலைவலித்தைலம் தடவும்
தளிர்விரல்களில் காண்கிறேனடி,உன்னை ஓர் தாதியாய்!குழம்பிய மனநிலையிலும், குமுறி அழும்போதும்,இதமாய் அணைத்து, கண்ணீர் துடைத்து,இதுவும் கடந்துபோகுமென்றேஆறுதல் சொல்கிறாய்,அனைத்தும் அறிந்த தோழிபோல்!
பிறர் என்னைப் பரிகசித்தாலும்பொறுக்கமாட்டாமல் பாய்ந்தெழுகிறாய், என்பாதுகாவலனென பதவியேற்று!
சுட்டித் தனம் செய்யும் குட்டித்தம்பியிடம்அம்மாவை வருத்தாதேயடா என்றுஅவ்வப்போது அறிவுரைக்கும்ஆசானாகவும் ஆகிறாய்!
பள்ளியிலே சிறப்புற்று பெற்றவரை முன்னிறுத்திபெருமிதத்தில் எனையாழ்த்திபெற்ற பலனைப் பெறச்செய்கிறாய்!
'இவளல்லவோ பெண்!' என்று
அத்தனைப் பேரும் உரைக்கக்கண்டுபெறுகிறேனடி பெண்ணே, உன்னால் பேரின்பம்!
இத்தனையும் செய்துமுடித்தபின்போனால் போகிறதென்றுஒருநாளுக்கு ஓராயிரம் முறைஅம்மா, அம்மா என்றழைத்து,என் செல்ல மகளுமாய் வலம் வருகிறாய்!
எங்கிருந்தோ வந்தான், பாரதிக்கோர் கண்ணன்;என் வயிற்றில் வந்துதித்தாய்,எனையாள்கிறாய் உன் அன்பால்!பதினாறாம் ஆண்டில் பாதம் பதிக்கும் உனக்குபதினாறு பேறும் தவறாமல் சேரும் என்றேவாழ்த்துகிறேன் கண்ணே!பாசப்பைங்கிளியே! பல்லாண்டு நீ வாழி!******************
(இரண்டு வருடங்களுக்கு முன் நிலாவின் பதினாறாம் பிறந்தநாளுக்கு அம்மாவின் பரிசென எழுதி தமிழ்மன்றத்தில் பதிவிட்ட கவிதை இது. )
படம் உதவி: இணையம்.
சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சுரேஷ்.
Deleteஇயல்பாய் அழகாய் அருமையாய் மனதை வருடி சென்றது இந்த கவிதை .ஆச்சர்யப்பட்டுபோனேன் நீங்க சொல்லிய அனைத்தும் எங்கள் வீட்டிலும் நடப்பவை
ReplyDelete(கணினி /SPELLINGS/ காபிடல் லெட்டர்ஸ் அனைத்தையும்எனக்கு திருத்துவது என் சுட்டிப்பென்தான்)
தாய்க்கும் மகளுக்குமான பந்தம் தோழமையாய் மாறிவருவது எவ்வளவு அழகான ஒரு மாற்றம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஏஞ்சலின்.
Deleteவெண்ணிலா பெயரும் அழகு, இந்தக்கவிதையும் அழகு, காட்டியுள்ள அசையும் படமும் அழகு. மொத்தத்தில் அனைத்துமே அழகோ அழகு; அழகு நிலா தான். மனமார்ந்த வாழ்த்துகள் தங்கள் மகளுக்கு. அழகு நிலா போலக் கவிதை தந்த தங்களுக்கு என் பாராட்டுக்கள்.
ReplyDeleteஅங்குலம் அங்குலமாய் அனைத்தையும் ரசித்த அழகுக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி வை.கோ.சார்.
Deleteஅழகான பரிசு.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ராமலக்ஷ்மி.
Deleteகண்ணனை பாரதி பல ரூபங்களில்
ReplyDeleteகண்டு மகிழ்ந்து படைத்த கவிதைகள் போல்
பெண்ணைத் தாய் கண்டு மகிழ்ந்து கொண்டாடும்
கவிதை அருமையிலும் அருமை
மனம் கவர்ந்த பதிவு
வாழ்த்துக்கள்
தங்கள் தொடர் வருகைக்கும் ஊக்கம்தரும் பின்னூட்டத்துக்கும், தமிழ்மண வாக்குப்பதிவுக்கும் மனம் நிறைந்த நன்றி ரமணி சார்.
Deletetha.ma 1
ReplyDeleteஅன்பான வரிகள்... அழகான கவிதை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
பகிர்வுக்கு நன்றி சகோ...தொடருங்கள்... (த.ம. 2)
வருகைக்கும் வாழ்த்துக்கும் ஊக்கத்துக்கும் மிகவும் நன்றி தனபாலன்.
Deleteசொல்வதற்கு வார்த்தைகள் இல்லை சகோதரி..
ReplyDeleteபடிக்க படிக்க எனக்கு இப்படி ஒரு பெண்பிள்ளை இல்லையே என
மனம் ஏங்குகிறது....
தங்கள் ஏக்கம் உணர்த்திய வரிகளே போதும், வேறொரு பாராட்டு வரிகள் தேவையில்லை. வருகைக்கும் நெகிழ்வானக் கருத்துக்கும் நன்றி மகேந்திரன்.
Deleteஅழகான கவிதையொன்றை பரிசாக கொடுத்துவிட்டீர்கள் அருமை..
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மதுமதி.
Deleteவாழ்கையின் ஒவ்வொரு சிறிய சந்தோசமான நிகழ்வுகளையும் மிகவும் ரசித்து ரசித்து அனுபவிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.! உங்கள் கவிதை வரிகள் அதைத்தான் பறைசாற்றுகின்றன! வாழ்த்துக்கள் சகோதரி (TM 4)
ReplyDeleteஆமாம், வரலாற்று சுவடுகள். அதில்தானே மகிழ்வும் மனநிறைவும் வாழ்வதற்கான பொருளும் அடங்கியிருக்கிறது. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.
Deleteanpaana thaayin-
ReplyDeletepaasa velipaadu!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சீனி.
Deleteமகளை ரசித்த தாயின் கவிதையையும் கவிதையின் ஊடாக மகளின் பாசத்தையும் நன்கு ரசித்தேன். மகளாய், தோழியாய், தாயாய் பல ரூபங்களில் வெண்ணிலாவைக் கண்டு மகிழ்வது பாசத்தின் உச்சம். கொடுத்து வைத்த வெண்ணிலா. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
ReplyDeleteவருகைக்கும் ரசித்து மகிழ்ந்து இட்டப் பின்னூட்டத்துக்கும், வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி கணேஷ்.
Delete''...சொல்லவும் உன்பெயர் வெல்லமடி!
ReplyDeleteஉன் உள்ளமோ, பாசத்தின் வெள்ளமடி!...
மிக இனிய வெளிப்பாடு!. நன்று!. ரசனை!.
நல்வாழ்த்து சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி.
Deleteதங்கள் வரிகளை மீண்டும் மீண்டும் படித்தேன் சகோ எனக்கும் பெண் பிள்ளையில்லை ஏக்கமே மிஞ்சுகிறது. படம் அழகு பார்த்தபடி வெகு நேரம் இருந்துவிட்டேன்.
ReplyDeleteதங்கள் ஏக்கம் எனக்குள் உண்டாக்கியது நெகிழ்வு. வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் நன்றி சசிகலா.
Deleteபெண்மையின் உள்ளம்
ReplyDeleteபொங்கும் பரவசம் .......
தாய்மையின் தித்திப்பு
மகளின் மருந்து ......
அறுசுவை உணர்வு ............
வளர்க உம புலமை
வருகைக்கும் ரசித்து மகிழ்ந்து இட்டப் பின்னூட்டத்துக்கும் மனம் நிறைந்த நன்றி சரளா.
Delete'இவளல்லவோ பெண்!' என்று
ReplyDeleteஅத்தனைப் பேரும் உரைக்கக்கண்டு
பெறுகிறேனடி பெண்ணே, உன்னால் பேரின்பம்!
கீதாக்கா....
தாயே மகளாக... மகளே தாயாக...
அருமை அருமைங்க...
எழுத வார்த்தையைத் தேடுகிறேன்.
வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிகவும் நன்றி அருணா செல்வம்.
Deleteமிக அழகான கவிதை.இவ்வளவு சிறப்பாக எழுத முடியுமா என்று என்னை வியப்பில் ஆழ்த்தி விட்டீர்கள்.உங்கள் மகளுக்கு என் வாழ்த்துகள் எல்லாம் பெற்று இன்புற வாழ
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி ஐயா. மகளிடம் வாழ்த்தினை சேர்ப்பித்துவிட்டேன். மகிழ்வான நன்றி தங்களுக்கு.
Deleteபாசத்தின் வலையில் சிக்கிய தாய்ப்பறவை தன் குஞ்சின்
ReplyDeleteசிறப்பைக் கண்டு மகிழ்வுற்றதனால் பிறந்த அழகிய கவிதை
அருமை!...வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் அன்பும் இக் கவிதைபோல்
என்றும் இன்புற்று இருக்க .மிக்க நன்றி பகிர்வுக்கு .
வருகைக்கும் அழகான ரசனையான பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி அம்பாளடியாள்.
Deleteகவிதையும் படமும் அழகோ அழகு..
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசனைக்கும் மிகவும் நன்றி கோவி.
Delete' வெண்ணிலவின்' குளிர்ச்சி ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது! ஒரு மகளுக்கு தாயின் இந்த அருமையான கவிதையை விடவும் அருமையான பரிசு வேறென்ன இருக்கிறது?
ReplyDeleteஅருமையான கவிதை கீதமஞ்சரி!
தங்கள் வருகைக்கும் மிகவும் ரசித்து இட்டப்பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி மனோ மேடம்.
Deleteநிலவின் தன்மையும், தமிழின் இனிமையும்,
ReplyDeleteநிழலாய் நல்லொழுக்கமும்,
நீங்காத நகையுணர்வும்//
மனம் கனிந்த வாழ்த்துக்கள்... வெண்ணிலாவுக்கும் நிலாம்மாவுக்கும்!
வருகைக்கும் மனங்கனிந்த வாழ்த்துக்கும் மகிழ்வான நன்றி நிலாமகள்.
DeleteFACEBOOKல் பகிர்ந்துகொண்டேன்.
ReplyDeleteநான் FACEBOOK பக்கம் போனதே இல்லை. மிகவும் நன்றி விச்சு.
Deleteசிறப்பான கவிதை. வாழ்த்துகள்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வெங்கட்.
Deleteஎன் வயிற்றில் வந்துதித்தாய்,
ReplyDeleteஎனையாள்கிறாய் உன் அன்பால்!
அன்பின் ஆட்சி என்றும் தொடரட்டும்
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ரிஷபன் சார்.
Deleteபொறாமையாக இருக்கிறது.
ReplyDeleteஹா.. ஹா... குழந்தைகள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹூஸைனம்மா.
Deleteபதினாறாம் ஆண்டில் பாதம் பதிக்கும் உனக்கு
ReplyDeleteபதினாறு பேறும் தவறாமல் சேரும் என்றே
வாழ்த்துகிறேன் கண்ணே!
பாசப்பைங்கிளியே! பல்லாண்டு நீ வாழி!//
வெண்ணிலா பல்லாண்டு வாழ்க.
அன்பான மகளுக்கு அன்பு தாயின் கவிதை பரிசு.
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனம் நிறைந்த நன்றி மேடம்.
Deleteஉங்களுக்கும்தானே இத்தனை பெருமையும்.நிலவைப் பெற்ற அம்மா நிலாவுக்கும் வாழ்த்துகள் !
ReplyDeleteபின்னே? எனக்கில்லாமலா? :) வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி ஹேமா.
Deleteமகளைப் பல பரிணாமங்களில் பார்த்து பெரிதுவக்கும் தாய்மனம் அற்புதம்!வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சேஷாத்ரி.
Deleteபதினாறாம் ஆண்டில் பாதம் பதிக்கும் உனக்கு
ReplyDeleteபதினாறு பேறும் தவறாமல் சேரும் என்றே
வாழ்த்துகிறேன் கண்ணே!
பாசப்பைங்கிளியே! பல்லாண்டு நீ வாழி!
தாயின் அன்பு வாழ்த்துகள் தப்பாமல் தங்கப்பெண்ணை சேரட்டும் !
தங்கள் வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிகவும் நன்றி மேடம்.
Deleteமறுபடி வாசித்து மகிழ்ந்தேன். நன்றி.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
தங்கள் மீள்வருகைக்கு மிகவும் நன்றி தோழி. சிலநாளாக வேலைச்சுமையால் வலைப்பக்கம் அவ்வளவாய் வர இயலவில்லை. இனி வருவேன்.
Delete#குழம்பிய மனநிலையிலும், குமுறி அழும்போதும்,
ReplyDeleteஇதமாய் அணைத்து, கண்ணீர் துடைத்து,
இதுவும் கடந்துபோகுமென்றே
ஆறுதல் சொல்கிறாய்,
அனைத்தும் அறிந்த தோழிபோல்!#
அருமையான கவிதை. படித்து, தமிழ் குடித்து மகிழ்ந்தேன். நம்ம தளத்துக்கும் கொஞ்சம் வாங்களேன்?
http://newsigaram.blogspot.com
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. தங்கள் தளத்துக்கு விரைவில் வருவேன்.
Delete