நிறைவில்லை, குறைவுமில்லை,
மத்தியில் நிலைத்திருக்கிறது
மகிழ்ச்சித் துலாக்கோல்!
வெள்ளமில்லை, வற்றவுமில்லை,
தேங்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது
தினசரி வாய்க்கால்!
பொன்னும் பொருளும் இன்னபிறவும்
என்றுமே கையிருப்பில் இருந்ததில்லை,
உண்ணும் உணவுக்காய் ஓரிடம்
கையேந்தும் நிலையிலும் இருந்ததில்லை.
கண்ணே மணியே முத்தே என்று
அன்பின் ஆராதனைகள் அனுபவமில்லை,
நாயே பேயே பிசாசே என்று
நாராசப்பேச்சையும் செவிகள் கேட்டதில்லை.
உச்சாணிக் கொம்பேறி ஆட்டமாட
உன்மத்தம் எந்நாளும் கொண்டதில்லை,
அச்சாணி முறிந்தவண்டியினைப் போல்
முடங்கிக் கிடக்கவும் விருப்பமில்லை.
சாதனையோ, வேதனையோ சந்திப்பதில்லை,
சராசரி மனித வாழ்க்கைகள்!
கடலையோ, ஆற்றையோ சிந்திப்பதில்லை,
கிணறு வாழ் மண்டூகங்கள்!
***********************************
படம் உதவி: இணையம்
sariyaana vari!
ReplyDeletesaattaiyaana vari!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனி.
Deleteசாதனையோ, வேதனையோ சந்திப்பதில்லை,
ReplyDeleteசராசரி மனித வாழ்க்கைகள்!
கடலையோ, ஆற்றையோ சிந்திப்பதில்லை,
கிணறு வாழ் மண்டூகங்கள்!//
வெற்றியோ தோல்வியோ
வீரனுக்கானதுதானே அது
வீணருக்கு இரண்டும் ஏது
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தங்கள் வருகைக்கும் விரிவான அழகான விமர்சனத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரமணி சார்.
Deleteநன்றாக உள்ளது உங்கள் கவிதை.வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அவர்கள் உண்மைகள்.
Deleteசாதாரண விஷயங்கள் பற்றிக்கூட அருமையாய்க் கவிதை இயற்றும் ஆற்றலுடையவர்க்கு என் மனமார்ந்த பாராட்டு .
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி.
Deleteகிணற்றுத்தவளை சிந்திக்கத் தூண்டுகிறது..
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மேடம்.
Deleteஒருவகையில் நானும் மண்டூகம் தான். ஆழ்ந்து யோசிக்க வைக்கிறது கீதா உங்களின் இந்தக் கவிதை. மிக்க நன்றி.
ReplyDeleteநீங்கள் மட்டுமல்ல, சராசரி வாழ்க்கையை விரும்பக்கூடிய நாம் ஒவ்வொருவரும் அதில் அடங்குவோம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கணேஷ்.
Deleteயதார்த்தம்
ReplyDeleteரெம்ப யதார்த்தமா சொல்லிடீங்க
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க செய்தாலி.
Deleteசிறப்பான கவிதை! சாதாரண மனிதர்களை படம் பிடித்து காட்டியது! அருமை!
ReplyDeleteஇன்று என் தளத்தில் வெற்றி உன் பக்கம்! தன்னம்பிக்கை கவிதை! http:// thalirssb.blogspot.in
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சுரேஷ்.
Deleteசாதனையோ, வேதனையோ சந்திப்பதில்லை,
ReplyDeleteசராசரி மனித வாழ்க்கைகள்!
கடலையோ, ஆற்றையோ சிந்திப்பதில்லை,
கிணறு வாழ் மண்டூகங்கள்!
அருமை அருமைங்க கீதமஞ்சரி அக்கா.
என்ன செய்வது... ஒரு சிலருக்கு ஜான் ஏறினால் முழம் வழுக்கிறது என்றே
முயற்சிக்காமலேயே விட்டுவிடுகிறார்கள்...
யோசிக்கத் துாண்டும் பதிவு அக்கா.
வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் நன்றி அருணா செல்வம்.
Deleteநல்ல கவிதை!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி வரலாற்று சுவடுகள்.
Deleteஉங்கள் சிந்தனை வளத்திற்கு வாழ்த்துகள்.தவளையை வைத்து மனித வாழ்வையும் சொல்லியிருக்கிறீர்கள்.அப்படித்தானே!
ReplyDeleteவெகுநாளைக்குப் பின் வருகை தந்துள்ள உங்களை அன்போடு வரவேற்கிறேன் ஆச்சி. நீங்கள் நினைப்பது சரிதான். மனித வாழ்க்கையோடான ஒப்பீடுதான் அது. கருத்துக்கு நன்றி.
Deleteகடைசி வரி.. அருமை..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க கோவி.
Deleteநல்ல வரிகள்... அருமையாக முடித்துள்ளது சிறப்பு...
ReplyDeleteநன்றி…
(த.ம. 2)
பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)
வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் நன்றி தனபாலன்.
Deleteமண்டூகங்களாய் இருந்து விட்டால் மகிழ்ச்சியும் இல்லை
ReplyDeleteவேதனையும் இல்லை. சிந்தனையும் , கருத்தும் , தேர்ந்தெடுத்த சொற்களும்
அருமை !
[ இன்று என் தளத்தில்
எந்திர உயிர்ப்பு !
http://sravanitamilkavithaigal.blogspot.in/ ]
வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி ஸ்ரவாணி.
Delete’சிலரைத் கிணற்றுத்தவளை’என்று திட்டக் கேட்டிருக்கிறேன்.கவிதை சொல்கிறது அதன் இயல்பை.நல்லதொரு கவிதை கீதா !
ReplyDeleteவருகைக்கும் புரிதலுடனான பின்னூட்டத்துக்கும் நன்றி ஹேமா.
Deleteவந்த இடம்
ReplyDeleteசொந்த இடமென
தங்கிவிட்டு
தன்னிலையை
முன்னிலைப் படுத்தாது
வாங்கிவந்த
வரமென
இருப்பிடம் நகன்றுவிட
எத்தனிக்கா
கிணற்றுத்தவளைதான்
இவ்வாழ்க்கை..
அருமையான கவிதை சகோதரி..
வருகைக்கும் சிறப்பானப் பின்னூட்டக் கருத்துக்கும் நன்றி மகேந்திரன்.
Deleteவணக்கம் தோழர்.
ReplyDeleteஎப்படி இப்படியெல்லாம் மிக நேர்த்தியாக எழுத முடிகிறது?
அற்புதம் தோழர்.
உங்களனைவரின் ஊக்கமிகு வார்த்தைகளே காரணம் நண்பரே. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.
Deleteநல்ல கவிதை. கவிதைக்கேற்ற படம்! வாழ்த்துகள் சகோ.
ReplyDeleteத.ம. 5
வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வெங்கட்.
Deleteசிந்திக்க வைக்கின்றது கிணத்துத் தவளை.
ReplyDeleteவருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் மிகவும் நன்றி மாதேவி.
Delete''...நிறைவில்லை, குறைவுமில்லை,
ReplyDeleteமத்தியில் நிலைத்திருக்கிறது
மகிழ்ச்சித் துலாக்கோல்!
உச்சாணிக் கொம்பேறி ஆட்டமாட
உன்மத்தம் எந்நாளும் கொண்டதில்லை,...''
இப்படியாகப் பல மனிதர்களும் வாழ்கிறார்கள்!
நல்ல கரு ஒன்று எடுத்தாளாப் பட்டுள்ளது.
பாராட்டுகள் சகோதரி.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வருகைக்கும் அழகியக் கருத்துரைக்கும் மிகவும் நன்றி தோழி.
Delete”அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
ReplyDeleteஅவளுக்கு யாரும் நிகரில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறை இல்லை” - இந்தப் பாடலும் கூடவே நினைவுக்கு வந்து போகிறது.
எத்தனை அழகாக சாதாரண மக்களைப் பாடி விட்டீர்கள் கீதா!பாராட்டுக்கள்!!
பாடல் மேற்கோளுடன் கவிதையைப் பாராட்டிக் கருத்திட்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றி மணிமேகலா.
Deleteகடலையோ, ஆற்றையோ சிந்திப்பதில்லை,
ReplyDeleteகிணறு வாழ் மண்டூகங்கள்!....
கிணற்றுத் தவளையின் வாழ்க்கையின் நிம்மதி நமக்கு இல்லாமல் போய்விட்டதே..
உங்கள் கவிதை மிக அருமை.. சொற்ப் பிரயோகங்கள் கவர்கின்றன.. மண்டூகங்கள் . ரொம்ப நாளைக்கு அப்புறம் கேள்வியுறும் மற்றுமொரு தமிழ்ச்சொல் .. !!! தொடர்க..
தங்கள் வருகைக்கும் இனிய கருத்தாக்கத்துக்கும் மிகவும் நன்றி நண்பரே.
Delete'அன்பின் ஆராதனைகள்' போன்ற சொல் அலங்காரங்களைக்கொண்டு உயிர்த்துடிப்புள்ள அருமையான கவிதையொன்றைக் கொடுத்திருப்பதற்கு இனிய வாழ்த்துக்கள் கீதா!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி மேடம்.
Deleteசாதனையோ, வேதனையோ சந்திப்பதில்லை,
ReplyDeleteசராசரி மனித வாழ்க்கைகள்!
கடலையோ, ஆற்றையோ சிந்திப்பதில்லை,
கிணறு வாழ் மண்டூகங்கள்!
அருமையான தேர்ந்தெடுத்த வரிகள் அழகிய கவி மாலை கண்டு மகிழ்ந்தேன்.
தேர்ந்த கவிதாயினியான தங்களின் பாராட்டு கண்டு மகிழ்கிறேன். நன்றி சசிகலா.
Delete