(படம் உதவி:இணையம்)
வேடிக்கை விளையாட்டுகள் வழியே
மழலை மனங்களை வசீகரிப்பது
மன்னை மாமாவின் மனமுவந்த வாடிக்கை.
செப்படி வித்தை போல் சோடாமூடியொன்று
தொலைந்தும் மீண்டும் கைவரப்பெற்றும்
நிலாவைக் கவரும் முயற்சியிலிருந்தது அன்று.
சூ…. என வீசப்படும் சோடாமூடி
கண்மறைவாய் கக்கம் புகும் ரகசியம் அறியாதபோதும்,
கைவரும் அதிசயம் ஆராயப் புகுந்தாள்.
ஐந்து முறை அவதானித்தவள், ஆறாம்
முறை
தானே பிடுங்கி எறிந்தாள் தப்படி தூரம்.
இப்போ வரவழைங்க, பார்ப்போம்…
கண்முன் கிடந்தும் கைக்கொணரவியலாத மாமா ,
காண்போரிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார்,
இவள்… மகா ஜாலக்காரி!
ஜாலம்?
புரியாமல் சிரிக்கிறாள் நிலா.
ஐ லவ் யூ....
என ஆங்கிலத்தில் எழுதி,
என ஆங்கிலத்தில் எழுதி,
இரண்டாம் வகுப்புச் சிறுமிக்கு
இரண்டாம் வகுப்புச் சிறுவனால்
கொடுக்கப்பட்ட ஒரு காகிதம்
காதல்கடிதமெனவே கருத்தில் கொள்ளப்பட்டு
கடுந்தண்டனைக்கு ஆளானது
கட்டுப்பாடு நிறைந்த பள்ளிநிர்வாகத்தால்!
சிறுமியின் தாயார் சீறியதில்
சிறுவனவன் சின்னாபின்னப்படுத்தப்பட்டான்.
சிறுவனின் அம்மாவிடம்
பிள்ளையின் லட்சணம் பரிகசிக்கப்பட,
முகம் கருத்து தலை கவிழ்ந்தாள்.
தண்டனைகளுக்கும், பிராயச்சித்தங்களுக்கும்
பிறகு,
பள்ளியில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்காய்
பரிதாபங்கொண்டாள் நிலா.
தோழியின் செயல் முட்டாள்தனமென்றாள்.
என்னிடத்தில் ஒருவன் இப்படிக்கொடுத்திருந்தால்
என்ன செய்திருப்பேன் தெரியுமா?
என்ன செய்திருப்பாய்?
பதைப்புடன் கேட்கப்படும் கேள்விக்கு
படுநிதானமாய் பதில் சொல்கிறாள்.
ஐ லவ் யூ என்றெழுதி ஒரு தாளை அவன் கொடுத்தால்,
ஐ டோன்ட் லவ் யூ என்றெழுதி
இன்னொரு தாளை நான் கொடுத்திருப்பேன்.
காகிதத்துக்கா பஞ்சம்?
கவலைப்படலாமா அம்மா அப்பா நெஞ்சம்?
ஏழுவயதுக்காரியின் எண்ணமுதிர்ச்சி கண்டு
எதிர்காலக் கவலைகள் யாவும்
ஏறக்கட்டப்பட்டது அன்றே.
*******************************************
சொல்லப்பட்டதற்கு பதிலளித்தால் போயிற்று... முடிந்ததல்லவா பிரச்னை? ஹப்பா... பிரமிக்க வைக்கிறது ஏழு வயதுக்காரியின் மனமுதிர்ச்சி..! அந்தப் பொல்லாத மாயக்காரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் அழகானப் பின்னூட்டத்துக்கும் நன்றி கணேஷ்.
Delete//இப்போ வரவழைங்க, பார்ப்போம்…// சுட்டி
ReplyDeleteஇறுதியில்
மனம் பிசக்கிறது
நிலா உள்ளம்
வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி செய்தாலி.
Deleteஏழுவயதுக்காரியின் எண்ணமுதிர்ச்சி வியக்கத்தான் வைக்கிறது.
ReplyDeleteஅருமையான படைப்பு.
வாழ்த்துகள் உங்களுக்கும் அந்த ஏழுவயதுக் குழந்தைக்கும். vgk
வருகைக்கும் வாழ்த்துக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் நன்றி வை.கோ.சார்.
Deleteஇரண்டுமே புன்னகையை வரவழைக்கின்றன. இரண்டாவதில் வியப்பையும் சேர்த்து.
ReplyDeleteவருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி ஹூஸைனம்மா.
Deleteவியப்பாய்தான் இருக்கிறது . இக்கால சந்ததியை நினைத்து கவலைப் படத் தேவையில்லை .
ReplyDeleteஉண்மைதான். பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமிடையில் சரியான புரிதலும் தோழமையுணர்வும் இருந்தால் எதற்கும் கவலைப்படத்தேவையே இல்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசிகலா.
Deleteகுழந்தைகள் செட்டைகளின்-
ReplyDeleteகவிதை மொழி!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனி.
Deleteபதினேழு வயசுல எப்படி?
ReplyDeleteபதினேழு வயது நிலாவைப் பற்றிய கவிதையும் விரைவில் வெளிவரும். வருகைக்கு நன்றி கோவி.
Deleteகுழந்தைகள் சிந்தனையே வேறு. நானும் அவர்களது சேட்டைகளையும் மனமுதிர்ச்சியையும் கண்டு வியந்திருக்கிறேன். மகிழ்ந்திருக்கிறேன்.நிலாவுக்கு என் அன்பு ........ I DON'T LIKE IT என்று சொல்லி விடுவாளோ.?
ReplyDeleteஹா..ஹா.. நிச்சயம் சொல்லமாட்டாள். என் கணக்கில் இன்னொரு தாத்தா என்று கூடுதலாய் மகிழ்வாள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
Deleteவியப்புத்தான் ஆனாலும்
ReplyDeleteமகிழ்ச்சி...............
வருகைக்கும் ரசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றி எஸ்தர்.
Deleteஏழுவயதுக்காரியின் எண்ணமுதிர்ச்சி கண்டு வியப்புதான்....
ReplyDeleteஇரண்டு நிகழ்வுமே மகிழ்ச்சியைத் தரும் விஷயம்....
வருகைக்கும் அழகானப் பின்னூட்டத்துக்கும் நன்றி வெங்கட்.
Deleteஏழுவயதுக்காரியின் எண்ணமுதிர்ச்சி கண்டு
ReplyDeleteஎதிர்காலக் கவலைகள் யாவும்
ஏறக்கட்டப்பட்டது அன்றே//
.எங்களுக்கும் தான்
குட்டி நிலாவின் சேஷ்டைகள் என் இல்லாமல்
குட்டி நிலாவிடம் கற்றவை எனக் கூட
தலைப்பிருக்கலாமோ எனத் தோன்றியது
மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்
குழந்தைகள் அதிகப்படியாய் பேசுவது அதிகப்பிரசங்கித் தனமென்று சிலரால் கொள்ளப்படும். அதனால்தான் அப்படித் தலைப்பிட்டேன். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகவும் நன்றி ரமணி சார்.
DeleteThama.3
ReplyDeleteஇவள்... மகா ஜாலக்காரிதான்.
ReplyDeleteவிளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள்.
பழமொழிக்குத் தகுந்த பெண்தான் சின்ன நிலா.
வாழ்த்துகிறேன் அவளை.
வருகைக்கும் வாழ்த்துக்கும் அழகானக் கருத்துரைக்கும் நன்றி அருணாசெல்வம்.
Deleteமெல்லவரும் தென்றலவள்
ReplyDeleteகள்ளமில்லா மொழியழகில்
துள்ளலுடன் ஓடிவந்து
சொல்லிச்சென்ற செய்தியெல்லாம்
அள்ள அள்ள குறையாத
முள்ளில்லா ரோசாக்களே!!
நிலாவின் சேட்டைகளை (புத்திசாலித்தனம்)
இன்றைய குழந்தைகள் நிறைய பேரிடம் பார்க்கலாம்
நாளைய மன்னர்கள் அல்லவா...
இத்திருநாட்டை தாங்கப் போகும்
வலிமையான தூண்கள் அல்லவா...
ரசித்தேன் சகோதரி..
சொல்லச் சொல்ல இனிக்கும்
நிலாவின் சேட்டைகளை....
அழகான கவிதையில் வாழ்த்திய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி மகேந்திரன். இன்னும் ஆறு மாதங்களில் என்னை விட்டுப்பிரிந்து கல்லூரி செல்லவிருக்கும் அவளுக்காய் எழுதியவை. தாயென்னும் பெருமிதம் தலைதூக்கும்படி செய்த அவளுக்கான வாழ்த்தினை பதிவு செய்யும் வாய்ப்பு இது.
Deleteஏழுவயதுக்காரியின் எண்ணமுதிர்ச்சி கண்டு
ReplyDeleteஎதிர்காலக் கவலைகள் யாவும்
ஏறக்கட்டப்பட்டது அன்றே.
கள்ளம் இல்லா பிள்ளை நெஞ்சம் உள்ளம் கொள்ளை கொண்டது !
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் மிகவும் நன்றி மேடம்.
Deleteஎவரையும் காயப்படுத்தக்கூடாது என்கின்ற தங்கள் குழந்தையும் நல்லெண்ணம் கண்டு வியக்கிறேன், இந்த பண்பும் தீர்க்கமும் என்றென்றும் நிலைத்து நிற்கட்டும் நிலாவின் நெஞ்சில் ..!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி வரலாற்று சுவடுகள்.
Deleteஎது எப்படியோ கீதா..
ReplyDeleteஅற்புதமாய் அனுபவிக்கிறேன் நிலாவின் விளையாட்டுக்களை. எது எப்படியோ எனற்து எதையும் விமர்சிக்காமல் அனுபவித்தல் இருக்கு பாருங்க அது கோடி கொடுத்தாலும் கிடைக்காது. எந்த வார்த்தை போட்டும் எழுது முடியாது போங்க. இநத் சோடா மூடியை வைத்து என் அப்பா கக்கத்தில் மறைத்திருக்கிறார். நான் என் பிள்ளைக்காக மறைத்திருக்கிறேன். என் பிள்ளையும் பெண்ணும் அதில் பிரமிப்புக் காட்டி அப்பா சூப்பர் என்கிற பாராட்டைப் பொக்கிஷம் போல நினைவில் சேகரித்து வைத்திருக்கிறேன்.
சூ…. என வீசப்படும் சோடாமூடி
கண்மறைவாய் கக்கம் புகும் ரகசியம் அறியாதபோதும்,
கைவரும் அதிசயம் ஆராயப் புகுந்தாள்.
ஐந்து முறை அவதானித்தவள், ஆறாம் முறை
தானே பிடுங்கி எறிந்தாள் தப்படி தூரம்.
இப்போ வரவழைங்க, பார்ப்போம்…
இந்த வரிகளில் மெய்மறந்துபோகிறேன். வெகு இலகுவாக மனதினுள் நுழைகின்றன சொற்கள். வாழ்த்துக்கள். உங்களுக்கு குழந்தை கவிஞர் விருது அளிப்பதில் இரண்டாவது கருத்து இல்லை. இதற்குப் பொருத்தமாக நிலா படத்தையே வைத்துக்கொள்ளுங்கள். வாழ்த்துக்கள் மறுபடியும்.
ஹரணி சார், அற்புதமான தங்கள் பின்னூட்டம் கண்டு அகம் நெகிழ்கிறேன். குழந்தைகள் வளர்ந்த பின் அவர்களது சிறு வயது நிகழ்வுகளைப் பேசிக் களைக்கும் பெற்றோரிடையே நான் எழுதிக் களிக்கிறேன். தங்கள் வாழ்த்துக்கும் அழகானக் கருத்துரைக்கும், அனுபவப் பகிர்வுக்கும் மிகவும் நன்றி சார்.
Delete///ஏழுவயதுக்காரியின் எண்ணமுதிர்ச்சி கண்டு
ReplyDeleteஎதிர்காலக் கவலைகள் யாவும்
ஏறக்கட்டப்பட்டது அன்றே.///
மகா ஜாலக்காரிதான் சின்ன நிலா .!!!.உண்மையிலேயே சிரிச்சுட்டேன் கீதா !!!. வயற்றில் நெருப்பை கட்டிக்கிட்டு ... என்று நிறையா தாய்மார் சொல்வதை கேட்டிருக்கேன் ,அப்படிபட்டவங்களுக்கு நல்ல பாடம்தான் இது .ஏழு வயதில் தெளிவான சிந்தனை .இலாத ஒன்றை ஊதி பெரிதாக்குவதால் தான் பிரச்சினையே
. இக்கால குழந்தைகள் தெளிவா இருக்காங்க .
வருகைக்கும் மனந்தொட்டக் கருத்துரைக்கும் நன்றி ஏஞ்சலின். அப்படியே உங்கள் வீட்டு தேவதைக் குறும்புகளையும் எழுதுங்களேன்.
Deleteஉச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி! ... வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லையம்மா!
ReplyDeleteஒற்றை வார்த்தையானாலும் உன்னதமாய்ச் சொல்லிவிட்டீர்கள். உன்மத்தம் தலைக்கேறிவிட்டது. நன்றி மோகன்ஜி.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமனம் கொள்ளை போகிறது.
ReplyDeleteவாரியணைக்க தோன்றுகிறது செல்ல நிலாவை.
( பயமாயிருக்கிறது .. இந்தப் பின்னூட்டத்திற்கு நிலாவின் பதில் என்னவாக இருக்கும்?)
வருகைக்கும் நிலாவுக்கான அன்புக்கும் நன்றி சிவகுமாரன். உங்கள் பின்னூட்டம் கண்டு நிலா முகம் மறைத்து நாணுகிறாள்.
Deleteநிலா நிலா நில்லாமல் ஓடி வா..என சேட்டைகளின் ரீங்காரம் காதில் ஒலிக்கிறது.கருத்து உணர்ந்து கவலை நீக்கும் பதில்கள்.ரொம்பவே ரசித்தேன்.
ReplyDeleteவருகைக்கும் ரசித்துக் கருத்திட்டமைக்கும் மிகவும் நன்றி ஐயா.
Deleteநல்ல படைப்பு ! வாழ்த்துக்கள் ! நன்றி !
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி தனபாலன்.
Delete''...ஐ டோன்ட் லவ் யூ என்றெழுதி
ReplyDeleteஇன்னொரு தாளை நான் கொடுத்திருப்பேன்...''
நவீன சிந்தனை. சுட்டித்தனம்.
குழந்தைகள் குமுத மலர்ச் செண்டுகள்.
இனிய பதிவு. பாராட்டகள் சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி தோழி.
Deleteவியப்பாய் இருக்கிறது
ReplyDeleteகுழந்தைகள்!
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி காஞ்சனா.
நிலாவின் சேட்டைகளை மீண்டும் நினைவுகூர்ந்து மகிழ்ந்தேன் . சேட்டை என்பதைவிடப் புத்திசாலித்தனம் எனலே பொருத்தம் . வாழ்க நிலா !
ReplyDeleteதங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.
Deleteசின்ன நிலாவாகி சீரான முடிவெடுக்க ஆசை வைக்கிறது நெஞ்சம்
ReplyDelete