20 September 2018

இலைகளில் இழையும் கலைகள்

இலை என்பது தாவரங்களின்
இயற்கை அழகு ஒப்பனையாகும்.
இலை என்பது சூரிய ஒளியில்
சக்தி சமைக்கும் கூடமாகும்.
இலை என்பது உணவும் நீரும்
சேமித்துவைக்கும் கிடங்காகும்.
இலை என்பது தாவரங்களின்
இருப்பை உணர்த்தும் இயல்பாகும்..
மரங்களின் நிர்வாணம் மனத்துக்கு உவப்பல்ல..
பச்சையோ மஞ்சளோ சிவப்போ பழுப்போ
இலைக்கூட்டமே 
உயிர்ப்பெனும் உணர்வுதரும்.
உளம் புரளும் உற்சாகம் தரும். 
&&&&

நான் ரசித்த சில இலையழகுகள் இங்கே நீங்களும் ரசிக்க...  



படம் 1

படம் 2

படம் 3

படம் 4

படம் 5

படம் 6

படம் 7

படம் 8

படம் 9

படம் 10

படம் 11

படம் 12

படம் 13

படம் 14

படம் 15

படம் 16

படம் 17

படம் 18

படம் 19

படம் 20

படம் 21

படம் 22


ரசித்த அனைவருக்கும் நன்றி. 

10 comments:

  1. எத்தனை விதமான இலைகள்! ஆனால் 8 வது படத்தில் உள்ள இலை பூச்சியால் அரிக்கப்பட்ட இலை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம். அந்த மரத்தில் நிறைய இலைகள் இப்படிதான் இருந்தன. பூச்சி அரித்த இலைகளாயிருக்க வாய்ப்பு அதிகம்.

      Delete
  2. அனைத்தும் ரசித்தேன். அழகிய தொகுப்பு. நானும் நான் வியக்கும் இலைகளின் படங்களை ‘இலைகளும் அழகே’ எனும் ஃப்ளிக்கர் ஆல்பத்தில் சேமித்து வருகிறேன்:).

    தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. பூக்களுக்கு நிகராக இலைகளும் நம்மைக் கவர்கின்றன. நிச்சயம் அவையும் ரசிக்கப்படவேண்டியவையே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

      Delete
  3. wow.. எல்லாமே அழகாக இருக்கின்றன கீதா. வியந்து ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் இலைகளை ரசித்தமைக்கும் அன்பும் நன்றியும் ப்ரியா.

      Delete
  4. இலைகள் அனைத்தும் அழகு. சில இலைகள் பிரமிக்க வைக்கின்றன. நானும் இப்படி இல்லைகளை படம் எடுப்பதுண்டு.

    ReplyDelete
    Replies
    1. வடிவம், வண்ணம், தோற்றம் என பல வகையிலும் நம்மை ஈர்க்கும் அழகு இலைகளுக்குமுண்டு. ரசித்ததறிந்து மிக்க மகிழ்ச்சி. நன்றி வெங்கட்.

      Delete
  5. ஆகா...! ரசித்தேன் பலமுறை...!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் இலைகளை ரசித்தமைக்கும் அன்பும் நன்றியும் தனபாலன்.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.