தோழி கவிதா ஜெயக்குமார் வரைந்த ஓவியம் |
முடிவிலாது
நீளுமிந்த வனாந்திரப்பாதையில்
நம்
பிணைப்பின் இறுக்கம் கண்டு
பொருமித்தீர்க்கின்றன கானகப்பட்சிகள்..
ஏங்கி
சலசலக்கின்றன நெடிதுயர்ந்த மரங்கள்…
சள்ளென்று
வெம்பித் தீண்டுகிறது காற்று.
வான்மழை
தடுக்கும் சின்னஞ்சிறு குடைக்குள்
இடையறாது
பொழிந்து பிரவாகிக்கும் உன்
பேரன்பின்
பெருமழையில் ஊறிக்கிடக்கிறேன்.
இலையுதிர்
வண்ணங்களைப் பிரதிபலிக்கும்
என்
மனமுதிர் எண்ணங்களைக்
கொஞ்சம்
கொஞ்சமாய்க் குழைத்துவைத்திருக்கிறேன்.
வா…
ஈரம் காயுமுன் நாமொரு ஓவியமாகலாம்
அல்லது
தூரிகை தொட்ட வண்ணங்களை
ஆடையாய்த்
தரித்து அரூபமாகலாம்.
&&&&&
(ஓவியத்தைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்த தோழி கவிதாவுக்கு நன்றி)
கொசுறாய் ஒரு சந்தோஷப்பகிர்வு
‘நடு’ பத்தாவது
இதழின் கலைக்கூடத்தில் சிறப்பு அங்கீகாரமாக… நான் எடுத்த சில புகைப்படங்கள் இங்கே இடம்பெற்றுள்ளன.
நடு ஆசிரியர்க்கும் இதழ்க்குழுவினர்க்கும் மிக்க நன்றி.
வாழ்த்துகள் சகோதரியாரே
ReplyDeleteஉடனடி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.
Deleteஅருமை. ரசித்தேன்.
ReplyDeleteஉடனடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.
Delete’மூங்கில் தோட்டம் மூலிகை வாசம் நிறைந்த மெளனம் உன்னோடு பொடிநடை; இது போதும் எனக்கு இது போதுமே....வேறென்ன வேண்டும் நீ போதுமே....’அது போலவே இக்கவிதையும் உள்ளம் நிறைக்கிறது.’வா, ஈரம் காயுமுன் நாமோர் ஓவியமாகலாம்; தூரிகை தொட்ட வண்ணங்களால் அரூபமாகலாம்....’ - இதில் கவிதை தேன்சொட்டுது..:)
ReplyDeleteஇப்படம் கவிதா ஜெயக்குமார் வரைந்ததா? அல்லது கிளிக்கியதா? இப்படத்தையோ அல்லது இது போன்ற ஒன்றையோ படக்கடைகளில் கண்டிருக்கிறேன்....
’நடு’ இதழ் படங்களில் உங்கள் இயற்கை மீதான ஆர்வம் மிளிர்கிறது. வாழ்த்துக்கள் கீதா!
ஆஹா.. அழகு கொஞ்சும் பின்னூட்டம். அன்பும் நன்றியும் தோழி.
Deleteதோழி கவிதா ஜெயக்குமார் வரைந்த அழகான ஓவியம் அது. பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்திருந்தார். அவரது பல ஓவியங்கள் ஓவியக்காட்சியில் இடம்பெறுகின்றன. விற்பனைக்கும் உள்ளன என்று நினைக்கிறேன். அப்படி எங்காவது பார்க்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிட்டியிருக்கலாம்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி.
இப்போது பதிவில் திருத்தம் செய்துள்ளேன். நன்றி தோழி.
Deleteஎழில் கொஞ்சும் இடத்தில் பிடித்தவரோடு கைக்கோர்த்தபடி நடப்பதைவிடவா சொர்க்கம் இனிக்கும்?!
ReplyDeleteஅதுவே சொர்க்கம்தானே... :)) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி.
Deleteரசித்தேன்...
ReplyDeleteவாழ்த்துகள் சகோதரி...
வருகைக்கும் ரசித்தமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.
Delete