1 April 2017

கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவால்...





கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசு 2017
- புலம்பெயர் இணைய வலைப்பதிவர் தேர்வில் கீதமஞ்சரி மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன். 


முடிவு அறிவிப்பிலிருந்து... 

இப்போட்டியின் வழிகாட்டு நெறியாளர் 
மதிப்புக்குரிய பத்மநாப ஐயர் (இங்கிலாந்து)

இப்போட்டியில் நடுவர்கள்
இரா எட்வின் (இந்தியா)
கானாப்பிரபா (அவுத்திரேலியா)
கவிதா லட்சுமி (நோர்வே)
முகிலன் (பிரான்சு)
ஆகியோர் கலந்து கொண்டனர்.

பரிசுக்குரியவர்கள் :

முன்மொழிவு : அருந்தா


முன்மொழிவு: ரூபன் சிவராசா


முன்மொழிவு: யசோதா.பத்மநாதன்.


புலம்பெயர்பெயர்வு வாழ்வில் கனவுகள் சுமந்தவராக எம்மோடு பயணித்த கவிஞர் கிபி அரவிந்தன் நினைவேந்தலாக நடைபெறும் இப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகள். மூன்று பரிசுகள் எனவாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தமையால் பரிசுகள் பின்வருவோருக்கானதாகச் சென்றடைகிறது.

புலம்பெயர்ந்த வாழ்வில் தொடரும் தமிழ்த் தடத்துடன் சுயம்புகளாக இணைய வலைப் பதிவுகளைப் பொறுப்புடன் நிகழ்த்தும் அனைவருக்குமான பரிசுகளின் மாதிரியாகவே இதனைக் கொள்ளல் பொருத்தம். வாழும் தமிழாக இணையவலைகளூடாக தன்னலமற்ற சேவையாக இவர்கள் ஆற்றும் தமிழ்த் தொண்டு காலம் கடந்தும் நிலைபெறும்.

பரிசுக்குரியவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். பொறுப்புடன் இவர்களை அறிமுகம் செய்த வாசகர்களுக்கு மிக்க நன்றிகள். இந்த வாசகர்களுக்கு ஓராண்டு காக்கை இலவசமாக அனுப்பப்படும்.

தெரிவான இணையவலைப் பதிவர்களது வெளிப்பாடுகளை இனி வெளிவர இருக்கும் காக்கை பதிவுசெய்யும்.

&&&&&&&


இப்பரிசுக்கு கீத மஞ்சரியைத் தெரிவு செய்த நடுவர்களுக்கும் காக்கை சிறகினிலே இதழ் பொறுப்பாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி. இந்த வலைப்பூவைப் பரிந்துரைத்தவர் அட்சயப்பாத்திரம் வலைப்பதிவரும் என் தோழியுமான மணிமேகலா (எ) யசோதா பத்மநாதன் அவர்கள். தொடர்ந்து என்னையும் என் எழுத்தையும் முன்னிலைப்படுத்தும் அவருடைய முயற்சிகளுக்கு நன்றி என்ற ஒற்றைச்சொல் போதாது. எனினும் அவர்க்கு என் அன்பான நன்றி. 


&&&&&&

கி. பி. அரவிந்தன் அவர்கள் பற்றி...




ஈழத்தின் குறிப்பிடத்தக்க புலம்பெயர் எழுத்தாளரும், கவிஞரும், மூத்த அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் பி.பி.சி. தமிழோசையின் பாரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றி வந்தார். அத்துடன் ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டுள்ளார். அப்பால் தமிழ் எனும் இணையத் தளத்தினை நடத்தி வந்தார். புதினப்பலகை இணையத்தளத்தின் முக்கிய பங்காளர்.

அரவிந்தனின் இயற் பெயர் கிறிஸ்தோபர் பிரான்சிசு. நெடுந்தீவைச் சேர்ந்த பேதுறு கிறிஸ்தோப்பர், மாசிலாமணி ஆகியோருக்கு 1953 செப்டம்பர் 17ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை ஆரம்ப காலத்தில் நெடுந்தீவிலும் பிறகு மட்டக்களப்பிலும் முடித்தார். 1972 ஆம் ஆண்டில் 1972 அரசமைப்புச் சட்டம் தமிழருக்கு ஏற்றதல்ல என்ற துண்டறிக்கை விநியோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைதான மூன்று இளைஞர்களில் அரவிந்தனும் ஒருவர். 1976 ஆம் ஆண்டில் மீண்டும் கைதாகி டிசம்பரில் விடுதலையானார். இவர் தோழர் சுந்தர் என்றும் ஈரோஸ் இயக்கத்தின் விடுதலைப் போராளியாக அறியப்பட்டவர். 1977 இல் இலங்கையை விட்டு வெளியேறி, புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்து வந்தார். இவரது படைப்புக்களில் ஈழவிடுதலைப் போராட்டமும், ஈழத்தமிழரின் புகலிட வாழ்வியலும் முனைப்புடன் காணப்படுகின்றன. கி. பி. அரவிந்தன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பாரிசில் உள்ள ஒரு மருத்துவமனையில் 2015 மார்ச் 8 அன்று காலமானார்.

இனி ஒரு வைகறை, கனவின் மீதி, பாரிஸ் கதைகள், முகம் கொள், மிச்சமென்ன சொல்லுங்கப்பா போன்றவை இவர் எழுதிய நூல்கள். 

(தகவல் உதவி - விக்கிபீடியா)


கனவின் மீதி கவிதைத் தொகுப்பிலிருந்து 
மனந்தேம்ப வைக்கும் கவி வரிகள் சில …



நிரையில் வருமுறைக்காய்
காத்திருக்கும் என்தோளில்
கொஞ்சும் சிணுங்கலுடன்
தொங்கும் மகவு.

அப்பா குளுருது வீட்ட போவம்.
சிணுங்கல் வெடிக்கிறது விம்மலாய்
குழந்தையைத் தேற்றத்தான்
கதை சொன்னேன் நான்

ஊரைத் துறந்த அப்பாவாம்
தூர தேசம் வந்தாராம்
வேரைத் தேடித் தவித்தாராம்
யாரை நொந்து கொள்வாராம்

அப்பா என்ரை அப்பாவாம்
அப்பா அம்மா செல்லமாம்
இப்போ நாங்க வந்தோமாம்
எப்போ வீட்ட போவமாம்

அமைதி காணாது போனதாம்
அகதி நாங்களும் ஆனோமாம்
இனிமே போகவும் ஏலாதாம்
இங்கே கதையும் முடிந்ததாம்

இல்லை இல்லை இல்லையாம்
இன்னும் கதை வேணுமாம்
ஒன்றாய் வீட்ட போவமாம்
அப்பா என்ர செல்லமாம்

பிடிபட்ட தாளலயம்
விடாப்பிடியில் குழந்தை
குட்டிக்கதையையும் நீட்டும்
கெட்டித்தனம் அதன் கண்ணில்
ஆறாத மனம் போலும்

என்னையே வெறிக்கின்றது
நிரையோ மெல்ல ஊர்கின்றது
இரைச்சல் காதைப் பிளக்கின்றது
குழந்தை தோளில் சரிகின்றது
நெஞ்சுள் ஏதோ குமைகின்றது

நீங்க அகதியானது உங்களுக்குச் சரி
என்னை ஏன் அகதியாக்கி அலைச்சலாக்கி…

மடிபற்றி எழுகின்றது கேள்வி
ஓ… என் குழந்தைகளே… 

&&&&&


27 comments:

  1. மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். மென்மேலும் இதுபோன்ற பல்வேறு வெற்றிகளை அடைய வாழ்த்துகிறேன். சந்தோஷம் தரும் இந்த இனிய பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் மனம் நிறைந்த பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் அன்பும் நன்றியும் கோபு சார்.

      Delete
  2. எங்கள் ஊராம் திருச்சியைச் சேர்ந்த திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்குப் பரிசளித்துள்ள,
    இப்போட்டியின் வழிகாட்டு நெறியாளர் மதிப்புக்குரிய பத்மநாப ஐயர் (இங்கிலாந்து) அவர்களுக்கு கோபாலகிருஷ்ண ஐயர் (இந்தியா) அவர்களின் ஸ்பெஷல் பாராட்டுகளையும், ’பாரபட்சமற்ற மிகச்சரியான நெறியாளர்’ என்ற பட்டத்தையும் அளித்து மகிழ்கிறேன். :)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... மிகவும் மகிழ்ச்சி.. நன்றிகள் பல கோபு சார்.

      Delete
  3. மிக்க மகிழ்ச்சி
    தொடர்ந்து எழுத்துலகில்
    உச்சத்திலேயே நிலைக்க
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது ஆசிக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ரமணி சார்.

      Delete
  4. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்ப்பா கீதா ...இதைப்போல நிறைய பரிசுகளை வென்றிட வாழ்த்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றியும் ஏஞ்சலின்.

      Delete
  5. பாராட்டும் வாழ்த்தும் உரித்தாகுக.

    ReplyDelete
  6. ஆவ்வ்வ்வ் அஞ்ச்சாயிரம் ரூபாய் கிடைச்சிருக்கு கீதாவுக்கு:) இங்கின கொமெண்ட் போட்டு ஊக்குவிக்கும் எங்களுக்கு ஒண்ணும் கிடைக்காதோ?:) சரி வாணாம் விட்டிடுவோம்...:)

    வாழ்த்துக்கள் கீதா.

    அந்தப் பாடல் மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்று கமெண்ட் போட்டு ஊக்குவிப்பவர்களால்தான் இப்பரிசு சாத்தியமாகியுள்ளது. வாசகர்க்கே சமர்ப்பணம் :)

      அந்தப்பாடல் மனத்தைப் பிசைகிறது. இதைப் போலவே அவரது அனைத்துப் பாடலிலும் புலம்பெயர் வாழ்வின் வேதனை அப்படியே பிரதிபலிக்கிறது.

      Delete
    2. நன்றி அதிரா.

      Delete
  7. வாழ்த்துக்கள் சகோதரி

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றிங்க புத்தன்.

      Delete
  8. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி அபயாஅருணா.

      Delete
  9. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி வெங்கட்.

      Delete
  10. Replies
    1. மிகவும் நன்றி ஐயா.

      Delete
  11. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி ஐயா.

      Delete
  12. கனவின் மீதி என்ற கவிதையின் சில வரிகளை வாசித்தேன். நெஞ்சைப் பிழியும் சோகம் என்னைக் கவ்வுகிறது. மூன்றாம் பரிசு வாங்கியமைக்குப் பாராட்டுகள் கீதா! தொடர்ந்து நல்ல பல பதிவுகள் கொடுத்து முதல் பரிசு வாங்க வேண்டும் என வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. ஊக்கம் தரும் வாழ்த்துரைக்கு மிக்க நன்றி அக்கா.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.