ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ
நெருங்கி வந்து சொல்லுங்கள்
|
21. மஞ்சள் லில்லி மலர் (daylily - Hemerocallis) |
|
22. crape myrtle flowers |
|
23. தேவதையின் ஊதுகொம்பாம் (Angel's trumpet - Brugmansia) |
|
24. மஞ்சள் செம்பருத்தி (yellow hibiscus) |
|
25. Hemerocallis red velvet daylily |
|
26. இலவம்பூ வகையுள்
ஒன்று (silk floss flower - Ceiba
speciosa)
|
|
27. சிலந்திப்பூ (spider
flower - grevillea)
|
|
28. துலிப் மலர்கள் (Tulips) |
|
29. பெயர் அறியாப்பூ |
|
30. பெகோனியா (begonia) |
|
31. (Brillantaisia)
|
|
32. (star cluster) |
|
33. நித்திய கல்யாணிப்பூக்கள் (rosy periwinkle) |
|
35. வெட்சியில் ஒரு வகை (ixora) |
|
36. ரோஜாக்கள் (roses) |
|
37. கொலம்பைன் மலர்கள் (columbine flowers) |
|
38. ஆந்திரியம் பூக்கள் (Purple Arc Anthurium) |
|
39. சிலந்திப்பூ - (white grevillea) |
|
40. அடுக்கு செம்பருத்தி (layered hibiscus) |
பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ - 1
ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு அழகாக உள்ளது. இயற்கையின் படைப்பில்தான் எத்தனை எத்தனை நிறங்கள் + வடிவங்கள்.
ReplyDeleteகண்களுக்கு குளிர்ச்சியான + மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் இனிய புஷ்பங்களின் அணிவகுப்பினை மிகவும் அருமையாகவும் அழகாகவும் காட்சிப்படுத்தியுள்ளீர்கள்.
>>>>>
எல்லாவற்றையும் ரசித்தமைக்கும் தொடர்பின்னூட்டங்களால் சிறப்பித்தமைக்கும் மிகவும் நன்றி கோபு சார்.
Delete29. பெயர் அறியாப்பூ
ReplyDeleteமரத்தில் நிறைய பூத்துக்குலுங்கும் [சிவ பூஜைக்குரிய] சொரக்கொன்னை என்ற மஞ்சள் நிறப் புஷ்பம் போன்ற வடிவில் உள்ளது. ஆனால் இது அது இல்லை.
இதன் வடிவம் பலாச்சுளைகள் போலவும் எனக்குத் தோன்றுகிறது. :)
>>>>>
ஆஹா.. என்னவொரு ஒத்த சிந்தனை.. எனக்கும் இப்பூக்கள் பலாச்சுளையை நினைவுபடுத்துவதாகவே உள்ளன. இது செடியில் பூக்கும் பூ.. ஒரு பூந்தோட்டத்தில் படமெடுத்தேன். பெயர் தேடியும் கண்டறிய இயலவில்லை.
Delete31. (Brillantaisia)
ReplyDeleteஇவை இரு பறவைகள் வடிவத்தில் உள்ளது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. :) :)
ஆமாம்.. செடி முழுவதும் பூத்துக்கிடக்கையில் அவ்வளவு அழகு..
DeleteSerial No. 38 ஐக் காணவில்லை. இருப்பினும் Serial No. 39 இருமுறை கொடுக்கப்பட்டுள்ளது.
ReplyDeleteதலைப்பும் அடுத்து வரி பாடல் வரிகளும் இதமாக உள்ளன.
இருபது பூக்கள் கொண்ட இனிமையான பகிர்வுக்கு என் பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள்.
எண் வரிசையில் ஏற்பட்ட தடுமாற்றத்தை சுட்டியமைக்கு நன்றி கோபு சார். திருத்திவிட்டேன். தங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மனம் நிறைந்த நன்றி.
Deleteபூக்களை பார்க்கும்போதே ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது.இயற்கையின் அழகும் அதை படைத்த இறைவனின் மகத்துவமும் ஒரு க்ஷணம் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.மிக்க நன்றி!
ReplyDeleteஎன்றும் தீராத வியப்புதான் இயற்கை.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Deleteமனதை மலரச் செய்யும் அழகிய மலர்களின் அணிவகுப்பு. மிக அருமையான படங்கள்.
ReplyDeleteஎன் புகைப்பட ஆசானிடமிருந்து வரும் பாராட்டு மகிழ்வளிக்கிறது. நன்றி ராமலக்ஷ்மி. :)
Deleteவாவ் !! பூக்கள் அழகா இல்லை உங்கள் காமிராவில் அவற்றின் அழகு அதிகமாக தெரிகிறதா :) எல்லா மலர்களும் கொள்ளை அழகு கீதா ..வண்ணம் வண்ணமாக அத்தனையும் அட்டகாசம்
ReplyDeleteஆஹா.. இந்தப் பாராட்டைக் கேட்டால் பூக்கள் சுணங்கிப்போகுமே... அன்பும் நன்றியும் ஏஞ்சல். :)
Deleteமலர்கள் எல்லாம் மிக அழகு.
ReplyDeleteஉங்கள் கைவண்ணத்தில் மலர்ந்து சிரிக்கிறது.
அன்பும் நன்றியும் கோமதி மேடம்.
Deleteமனதைக் கொள்ளை கொள்ளும்படங்கள்
ReplyDeleteமனமும் கண்களும் குளிர்ந்தன
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ரமணி சார்.
Deleteபூக்களின் வண்ணங்கள்
ReplyDeleteதங்கள் கைவண்ணத்தில்
மின்னுகின்றதே!
மிகவும் நன்றி ஐயா.
Deleteஅழகு மலர் ஆட.. அபிநயங்கள் கூட.. பூஸ் ஒலியும் முழங்குவதைக் கேளுங்கோ.. அத்தனையும் அயகோ அயகூ... அதிலும் அந்த பிங் அண்ட் வைட் றோஸ் சூப்பர்.
ReplyDeleteஆஹா.. பாட்டாவே பாடிட்டீங்களா... அன்பும் நன்றியும் அதிரா :)
Deleteஆச்சரியமான புதுப் புதுப் பூக்கள் கீதா....சில பூக்களை முதல் தடவையாகப் பார்க்கிறேன். அவற்றுக்கான பெயர்களைத் தேடி எவ்வளவு உழைத்திருப்பீர்கள் என்று எண்ணிப்பார்க்க உங்க ஆர்வம் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது....அழகியல் இயற்கை என்பவற்றின் மீதான ஆர்வமும் ஈடுபாடும் தொடர்வதாக....
ReplyDeleteசங்க காலத்துப் பாடல் ஒன்றில் வரும் 99 பூக்களையும் ( கபிலரின் பாடல்?)பெயர்களோடு கொஞ்சம் இனம் காட்டுங்களேன் கீதா... பிளீஸ்பா...நவீன பெண் கபிலரிடம் நான் அதைக் கேட்பதில் தப்பில்லைத் தானே? :)
பாராட்டுக்கும் பதிவை ரசித்தமைக்கும் அன்பும் நன்றியும் தோழி.
Delete\\சங்க காலத்துப் பாடல் ஒன்றில் வரும் 99 பூக்களையும் ( கபிலரின் பாடல்?)பெயர்களோடு கொஞ்சம் இனம் காட்டுங்களேன் கீதா... பிளீஸ்பா...நவீன பெண் கபிலரிடம் நான் அதைக் கேட்பதில் தப்பில்லைத் தானே? :)\\
இதெல்லாம் அதிமிகை அன்புத்தோழி... :))) கபிலர் காட்டும் மலர்கள் குறித்த பதிவுகளை ஏதோ ஒரு தளத்தில் பார்த்திருந்தேன். முடிந்தால் தேடிப் பதிகிறேன். பல மரங்கள் தற்காலத்தில் அழிந்துவரும் நிலையில் அந்நாளிலிருந்த மலர்கள் அத்தனையும் இப்போது காணக்கிடைக்குமா என்பதே சந்தேகம்தான்.
ஆஹா ஒவ்வொரு பூவும் ஒரு ரகசியம் பேசுகிறது..என்ன ஓர் அழகு!!!!..31...அன்னம். போல். என்ன அழகு..தன் இதயத்தை திறந்து காட்டுவது போல்.. வாவ்....உங்கள் புகைப்படத்திறமை வியக்க வைக்கிறது.....இவ்வொரு வண்ணமும் மிளிர்கிறது.....மிகவும் ரசித்தோம்.மனதை ஷோக்கா வைக்கிறது.
ReplyDeleteநான் ரசித்தவற்றை இங்கே அனைவரும் அறியத் தந்தேன். நீங்களும் ரசித்திருப்பது மகிழ்வளிக்கிறது. அன்பும் நன்றியும் துளசி சார் & தோழி கீதா.
Deleteஅருமை
ReplyDeleteகண்களுக்கு விருந்து
நன்றி சகோதரியாரே
மிகவும் நன்றி ஐயா.
Deletewow
ReplyDeleteshared in facebook
vote +
அன்பும் நன்றியும் சார்.
Deleteஅனைத்து மலர்களையும் இரசித்தேன்.நன்றி சகோ.
ReplyDeleteஅன்பும் நன்றியும் வைசாலி.
Deleteபூக்கள் பூக்கும் தருணம் ...என்ற நா முத்துக்குமாரின் பாடல் நினைவுக்கு வருகிறது. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா - என்றார் பாரதியார். இந்த விதம்விதமான பூக்களைப் பார்த்துத்தான் அவர் சொல்லியிருக்கவேண்டும். பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா - என்ற பாடலும் ஞாபகம் வருகிறது. இந்தப் பூக்கள் எல்லாமே உங்கள் சொந்தமா? அதாவது வீட்டுப் பூக்களா?
ReplyDelete-இராய செல்லப்பா நியூஜெர்சி
வருகைக்கும் ரசனையான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ஐயா. இவையெல்லாம் பூங்காவில் படமாக்கப்பட்டவை. வீட்டு மலர்களை பிறிதொரு பதிவில் பதிவிடுவேன். :)))
Deleteஅத்தனைப் பூக்களுமே அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteரசித்தமைக்கு மிகவும் நன்றி வெங்கட்.
Deleteஉள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகிய மலர்கள்! சிலந்திப்பூ பொருத்தமான பெயர் தான்! படம் 31 உம் இதுவரை பார்த்திராத வடிவம்! புகைப்படக்கலையிலும் தேர்ச்சி பெற்றதை இப்படங்கள் உறுதி செய்கின்றன! பாராட்டுகள் கீதா!
ReplyDeleteவருகைக்கும் ரசனையான கருத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி அக்கா..
Deleteகண்ணுக்கு அரும்பெரு விருந்தளித்தமைக்குப் பாராட்டு , நன்றி .சிலந்திப்பூ என்னும் பெயரில் இரண்டு இருக்கின்றன.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. spider flower என்பதைத்தான் தமிழில் சிலந்திப்பூ என்று குறிப்பிட்டேன். இந்த வகையில் இன்னும் ஏராளமான வண்ணங்கள் உள்ளன.
Delete