2 August 2014

மகிழ்வும் நெகிழ்வும் 1


அங்கீகாரங்களை விரும்பாத படைப்பாளிகள் யார்? நாமும் களத்தில் இருக்கிறோம் என்பதையும் பலராலும் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதையும் நமக்கு உணர்த்துபவை அங்கீகாரங்கள். வெறும் முகத்துதியாக அல்லாமல் சரியான விதத்தில் சரியான விகிதத்தில் அது வந்துசேரும்போது படைப்பாளியின் திறன் பன்மடங்கு அதிகமாகிறது. எழுத்தின் மீதான பொறுப்பை அதிகரித்து தொடர்ந்து படைக்கும் வல்லமையை வழங்குகிறது. அந்த வகையில் சமீபத்தில் எனக்குக் கிடைத்த அங்கீகாரங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்கிறேன்.

அங்கீகாரம் 1

குங்குமம் தோழியில் நட்பு சிறப்பிதழாய் மலர்ந்திருக்கும் (1-15 ஆக. 14)

 இதழில் என் ஜன்னல் பகுதியில் கீதமஞ்சரி வலைப்பூ பற்றிய 

கவிஞர் உமா மோகன் அவர்களின் அறிமுக உரை கண்டு மகிழ்வில் 

நிறைகிறது மனம். எத்தனையோ அருமையான வலைப்பூக்களுக்கு

 மத்தியில் கீதமஞ்சரி அவரது மனத்தில் இடம்பிடித்தமை ஒரு

 சிறப்பான அங்கீகாரமல்லாது வேறென்ன? தோழி உமா மோகன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த 
அன்பும் நன்றியும்.

அங்கீகாரம் 2கவியரசு கண்ணதாசன் அவர்களது 88-வது பிறந்தநாளை முன்னிட்டு பம்மல் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் சார்பில் வல்லமை இணைய இதழில் நடைபெற்ற 'என் பார்வையில் கண்ணதாசன்' கட்டுரைப் போட்டியில் பங்கேற்ற பல அற்புதமான படைப்பாளிகளின் மத்தியில் என்னுடைய கட்டுரை மூன்றாமிடம் பெற்றுள்ளதை மிகவும் மகிழ்வுக்கும் பெருமைக்கும் உரியதாகக் கருதுகிறேன். சென்ற பதிவில் கட்டுரையை வெளியிட்டிருந்தேன். இந்தப் பதிவில் கட்டுரை குறித்த நடுவர் முனைவர் திரு.வ.வே.சு.ஐயா அவர்களின் கருத்தையும், இப்போட்டியை முன்மொழிந்த திரு. காவிரிமைந்தன் ஐயா அவர்களின் கருத்தையும் இங்கு பகிர்வதில் மகிழ்கிறேன். 


என் கட்டுரை குறித்து நடுவர் முனைவர் திரு. வ.வே.சு ஐயா அவர்களின் கருத்து இதோ.

"இலக்கியத் தரம் வாய்ந்த இனிய  கட்டுரை.இலக்கியப் பாற்கடலைக் கடைய கதியற்ற பாமரர்களுக்காக கவிஞர், தானே கடைந்தெடுத்துக் கொண்டுவந்த கவி வெண்ணெயை நம் நாவிலும் தடவி ருசிக்கச்செய்கிறார். அத்தன்மையதான அமரத்துவம் வாய்ந்தவையன்றோ இலக்கியஞ்சார்ந்த அவரது அமுதகானங்கள்?” என ஒரு களம் அமைத்துக் கொண்டு சங்க காலம் தொடங்கி பல அழகிய இலக்கிய வரிகளை கவிஞரின் வரிகளோடு ஒப்பிட்டிருக்கிறார். இலக்கியத்தின்பால் என்னை வழிநடத்தி அழைத்துச்சென்றவை கண்ணதாசன் பாடல்களில் காணப்பட்ட இலக்கியச்சுவடுகளே.என்று தனது எழுத்து அனுபவத்திற்கான பின்னணியையும் கொடுத்துள்ளார். முதல் தரமான இந்தக் கட்டுரையும் இடநெருக்கடியால்தான் மூன்றாவதாக உள்ளது.அங்கீகாரம் 3
கட்டுரை குறித்து கவிஞர் காவிரிமைந்தன் ஐயா அவர்களது கருத்து

இலக்கியங்களில் உள்ளம்புகுந்து இனியபல செய்யுள்களை மேற்கோள்காட்டி.. அட.. இதோ பாருங்கள் நம்ம கண்ணதாசன் பாடல் என்று சொல்லியிருக்கும் நேர்த்தி வாசகரை உங்கள் ரசிகராக்கிவிடும்!

கண்ணதாசனை.. என் நெஞ்சத்துடிப்போடு வைத்து நடைபோடும் என்னால் உங்கள் தனித்திறனை பாராட்டாமல் இருக்க முடியாது!  எளிமையான உங்கள் எழுத்தோட்டம்.. ம்..ம்.. அப்புறம் என்று உடனோடி வரச் சொல்கிறது..  கட்டுரையின் முகப்பிலேயே சொல்லிவிடுகிறீர்கள் இலக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்ட விஷயங்கள் என்பதற்கும் சரியான உவமையோடு!

எதார்த்தமாக.. இன்றைய காலக்கட்டத்தில் எவருமே வாசித்திருக்க வாய்ப்பில்லாத.. அல்லது தங்கள் வாழ்வில் அப்பகுதிகளை காணவோ.. கேட்கவோ.. முடியாத சராசரி உள்ளங்களுக்கு கண்ணதாசன் பாட்டுவரிகள் நிச்சயமாக இலக்கியத்தின் சாரத்தை எளிமையாக.. இனிமையாக.. இனிவரும் சந்ததிகளுக்கும் கொடுத்துக் கொண்டே இருக்கும்! உங்களின் கட்டுரை இந்த வகையில் போற்றுதலுக்குரிய சேவையைச் செய்திருக்கிறது!  தடம் பார்த்து நடந்திருக்கிற பெண்போல.. இலக்கியங்களின் வழிநின்று அவற்றை எடுத்தியம்ப கண்ணதாசன் போல் இன்றைக்கு யார் இருக்கிறார்கள் என்கிற கேள்வியும் எழாமல் இல்லை! 

சீரோடும் சிறப்போடும் உங்கள் எழுத்துப்பணி மேம்படட்டும்.. அதற்கு கவியரசர் ஆத்மா ஆசி வழங்கட்டும்!  


போட்டியின் நடுவர் பொறுப்பை ஏற்றுத் திறம்பட முடிவுகளை அறிவித்துள்ள கவிஞர் திரு. வ.வே.சு. ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. 
இப்படியொரு போட்டியை அறிவித்து எண்ணத்தில் இருப்பவற்றை எழுத்தாய் வடிக்கத் தூண்டிய கவிஞர் திரு. காவிரி மைந்தன் ஐயா அவர்களுக்கும் வல்லமை ஆசிரியருக்கும் குழுவினருக்கும் அன்பார்ந்த நன்றி. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு வென்றவர்களுக்கும்
மனங்கனிவான இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்டுரைப் போட்டி முடிவுகளைக் காண: http://www.vallamai.com/?p=47553
என் கட்டுரையை வல்லமையில் வாசிக்க:  http://www.vallamai.com/?p=46200
கட்டுரையை இந்த வலைத்தளத்தில் வாசிக்க  http://geethamanjari.blogspot.com.au/2014/07/blog-post_45.htmlஅங்கீகாரம் 4


இதுவரை பதிவுலகில் இல்லாத வகையில் புதுமையாக 

சிறுகதைகளுக்கென்று விமர்சனப் போட்டியைத் துவங்கி தொய்வின்றி

வெற்றிகரமாய்த் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கும் கோபு சார் 

அவர்களுடைய இன்றைய பதிவு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. போட்டியில்

 கலந்துகொண்டு பரிசுபெறும் ஒவ்வொருவருக்கும் தனித்ததொரு

அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் வழங்கிக்கொண்டிருப்பவை 

அவருடைய போட்டிகள் என்றால் மிகையில்லை. அவ்வகையில்

 எனக்கென்று ஒரு இடம் வாசகர் மத்தியில் உருவாகக் காரணமான

 கோபு சார் அவர்களுக்கு என் அன்பான நன்றி. பரிசு அறிவிப்போடு எனக்கு மணநாள் வாழ்த்தையும்

 தெரிவித்து அவர் இட்டிருக்கும் பதிவு மனம் நெகிழ்த்துகிறது. 

நெகிழும் மனத்தோடு மீண்டும் அவருக்கு என் நன்றியைத் தெரிவித்து 

மகிழ்கிறேன். 
(படங்களுக்கு நன்றி - இணையம்)

34 comments:

 1. இத்துடன் எமது வாழ்த்துக்களும் சகோதரி
  எனது பதிவு ''சுட்டபழம்''

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி கில்லர்ஜி.

   Delete
 2. வாழ்த்துக்கள் சகோதரி! மேலும் பல உயரங்களை உங்கள் எழுத்துக்கள் தொடும்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி சுரேஷ்.

   Delete
 3. திறமைகளை என்றும் மறைத்து வைக்க முடியாது. சமயங்களில் அவை திமிறி வந்து தனது இருப்பை பறை சாற்றும் அத்தகைய திறன் படைத்த உங்களுக்கு அங்கீகாரம் ஆச்சரியம் அளிக்கவில்லை. மேலும் மேலும் மெருகேற்ற நீங்கள் பாடுபடுவீர்கள் என்றும் தெரிகிறது. மனம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஊக்கம் தரும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 4. வாழ்த்துக்கள் கீதமஞ்சரி.
  அங்கீகாரம் கிடைப்பதனால் மேலும் மேலும் பல வெற்றிகளை பெற உத்வேகம் பிறக்கும். உங்கள் தேடுதலுக்கும், உழைப்புக்கும் கிடைத்த வெற்றி.
  எந்த செயலையும் திறம்பட செய்ய வேண்டும் என்ற உங்கள் ஆரவமும் வெற்றிகளை தேடி தருகிறது.
  இன்னும் பல விருதுகள் கிடைக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஊக்கம் தரும் தங்கள் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்.

   Delete
 5. மனம் நிறைந்த வாழ்த்துகள், கீதா!

  ReplyDelete
 6. நாடியே வந்தது நல்லஅங் கீகாரம்!
  தேடிவந்த சீரெனவே சேர்ந்து!

  மிக்க மகிழ்ச்சி கீதமஞ்சரி!
  ஏறிவிட்டீர்கள் சிகரத்தில் இன்று!

  உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. வணக்கம்

  இன்னும் பல அங்கிகாரங்கள் தேடிவர எனது வாழ்த்துக்கள்..

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 8. உங்களுக்கு கிடைத்து இருக்கும் அங்கீகாரத்தினால் மகிழ்ந்து ,நானும் தங்களுக்கு தமிழ்மண வாக்களித்து வாழ்த்துகிறேன் !
  த ம 2

  ReplyDelete
 9. சீரோடும் சிறப்போடும் கிடைத்த அங்கீகாரங்களுக்கு
  மனம் நிறைந்த வாழ்த்துகள்..

  ReplyDelete
 10. மிகமிக மகிழ்வோடு உங்களுக்கு என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் தோழி.

  ReplyDelete
 11. வாழ்த்துகள்
  சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  படியுங்கள் இணையுங்கள்
  தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!
  http://eluththugal.blogspot.com/2014/08/2014.html

  ReplyDelete
 12. //மகிழ்வு தரும் அங்கீகாரங்கள்

  அங்கீகாரங்களை விரும்பாத படைப்பாளிகள் யார்? நாமும் களத்தில் இருக்கிறோம் என்பதையும் பலராலும் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதையும் நமக்கு உணர்த்துபவை அங்கீகாரங்கள். வெறும் முகத்துதியாக அல்லாமல் சரியான விதத்தில் சரியான விகிதத்தில் அது வந்துசேரும்போது படைப்பாளியின் திறன் பன்மடங்கு அதிகமாகிறது. எழுத்தின் மீதான பொறுப்பை அதிகரித்து தொடர்ந்து படைக்கும் வல்லமையை வழங்குகிறது. //

  அங்கீகாரத்திற்கே தாங்கள் ஓர் அங்கீகாரம் கொடுத்தது போல அழகாக வெகு அழகாக உண்மையாக முற்றிலும் ஏற்றுக்கொள்ளும் விதமாக ஓர் விளக்கம் [Definition] கொடுத்துள்ளீர்கள்.

  இதனால் மட்டுமே தங்களின் எழுத்துக்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புக் கிடைத்து வருகிறது.

  எழுத்து என்பது எல்லோருக்கும் அமைந்துவிடுவது இல்லை. அப்படியே அமைந்தாலும் அவை பிறர் ரசிக்கும்படியாகவோ, அப்படியே ஏற்றுக்கொள்ளும் விதமாகவோ, அங்கீகரிக்கும் விதமாகவோ அமைந்து விடுவதும் இல்லை.

  தங்கள் எழுத்துக்களுக்கு எல்லாச்சிறப்புக்களும் இயற்கையாகவே அமைந்து நாளுக்கு நாள் அவை மெருகேறி வைரமாக ஜொலிக்கின்றன என்பதே உண்மை. அவை மேலும் மேலும் தொடர்ந்து மின்னிட என் அன்பான நல்வாழ்த்துகள்.

  >>>>>

  ReplyDelete
 13. குங்குமம் ’என் ஜன்னல்’ பகுதியில் தங்கள் வலைத்தளத்தினைச் சிறப்பித்து எழுதியுள்ள தோழி கவிஞர் உமா மோகன் அவர்களின் அறிமுக உரைக்கு, அவருக்கு என் நன்றிகள்.

  தங்களுக்குப் பாராட்டுக்களும் .... வாழ்த்துகளும். ;)

  >>>>>

  ReplyDelete
 14. நடுவர் முனைவர் திரு. வ.வே.சு ஐயா அவர்களின் கருத்தான ‘முதல் தரமான இந்தக் கட்டுரையும் இடநெருக்கடியால்தான் மூன்றாவதாக உள்ளது’ எனக் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளது மிகவும் பாராட்டத்தக்கது.

  அவருக்கும் என் நன்றிகள்.

  >>>>>

  ReplyDelete
 15. ”சீரோடும் சிறப்போடும் உங்கள் எழுத்துப்பணி மேம்படட்டும்.. அதற்கு கவியரசர் ஆத்மா ஆசி வழங்கட்டும்!” என வாழ்த்தியுள்ள கவிஞர் காவிரிமைந்தன் ஐயா அவர்களுக்கும், வல்லமை ஆசிரியருக்கும் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  >>>>>

  ReplyDelete

 16. //இதுவரை பதிவுலகில் இல்லாத வகையில் புதுமையாக சிறுகதைகளுக்கென்று விமர்சனப் போட்டியைத் துவங்கி தொய்வின்றி வெற்றிகரமாய்த் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கும் கோபு சார் அவர்களுடைய இன்றைய பதிவு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. போட்டியில்
  கலந்துகொண்டு பரிசுபெறும் ஒவ்வொருவருக்கும் தனித்ததொரு
  அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் வழங்கிக்கொண்டிருப்பவை
  அவருடைய போட்டிகள் என்றால் மிகையில்லை. //

  இதுவரை நடைபெற்றுள்ள இந்த என் தொடர் போட்டியில், உயர்திரு நடுவர் அவர்களால், அதிகமான முறைகள் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சாதனையாளராகத் திகழும் தங்கள் மூலம், இதனைக்கேட்க எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

  இதுவே வித்யாசமாக, விசித்திரமாக, புதுமையாக, மிக நேர்மையாக நடைபெற்றுவரும் என் ’சிறுகதை விமர்சனப் போட்டி’களுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரியதோர் அங்கீகாரமாக நினைத்து நானும் என்னுள் மகிழ்கிறேன்.

  தங்களின் இந்தக்கருத்துக்களுக்கு என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

  >>>>>

  ReplyDelete
 17. //அவ்வகையில் எனக்கென்று ஒரு இடம் வாசகர் மத்தியில் உருவாகக் காரணமான கோபு சார் அவர்களுக்கு என் அன்பான நன்றி. //

  தங்களின் அன்பான நன்றிக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

  >>>>>

  ReplyDelete
 18. //இன்றைய பதிவில் பரிசு அறிவிப்போடு எனக்கு மணநாள் வாழ்த்தையும் தெரிவித்து அவர் இட்டிருக்கும் பதிவு மனம் நெகிழ்த்துகிறது. நெகிழும் மனத்தோடு மீண்டும் அவருக்கு என் நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன். //

  தாங்கள் இதே சந்தோஷத்தோடு இன்றுபோல் என்றும் வாழ இறைவன் அருள் புரியட்டும்.

  உத்தம தம்பதியினரான தங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகளும் ஆசிகளும்.

  பிரியமுள்ள கோபு

  oooOooo

  ReplyDelete
 19. தொடர்ந்து உங்களுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது அறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்!தொடரட்டும் உங்கள் பணி.

  ReplyDelete
 20. ஆஸ்திரேலியாவில் இருந்தாலும் அருமைத் தமிழில் அற்புதமான கட்டுரைகளை தமிழ் உணர்வோடு படைக்கும் உங்களுக்கு இந்த அங்கீகாரங்கள் மற்றும் பரிசுகள் பொருத்தமானவைகளே! மேலும் மேலும் வெற்றிகளை அடைந்திட வாழ்த்துக்கள்!
  த.ம.3

  ReplyDelete
 21. வாவ்!!!!! மனம் நிறைந்த இனிய வாழ்த்து(க்)கள்.

  ReplyDelete
 22. மனம் கனிந்த வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
 23. வாழ்த்துக்கள் சகோதரி............

  ReplyDelete
 24. உங்களின் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரங்கள்! மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் தோழி!
  எளிமையாக அதே நேரத்தில் பல விசயங்களைச் சொல்வதாகவும் அமைகின்றன உங்கள் படைப்புகள். மேலும் பல அங்கீகாரங்கள் கிடைக்க வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 25. தாங்கள் மேலும் இம்மாதிரியான கட்டுரைகளை படைப்பதற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. Anonymous6/8/14 19:21

  மனம் கனிந்த வாழ்த்துக்கள் தோழி! ... கீதமஞ்சரி
  Vetha.Elanagthilakam.

  ReplyDelete
 27. வாழ்த்துக்கள் அக்கா! உண்மையில் உடன்பிறந்த அக்காவின் வெற்றி போலவே உணர்கிறேன். பெருமையா இருக்கு:))

  ReplyDelete
 28. மேலும்,மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி. நேரம் இருக்கும் போது என தளம் வந்து செல்லுங்கள். நன்றி.

  ReplyDelete
 29. மனம் கனிந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 30. மேலும் மேலும் வெற்றி பெற என் இதயபூர்வமான வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.