8 July 2014

ஆசிரியர் செய்த பிழை - ஆஸ்திரேலிய காடுறை கதை 7


திரு. ஹென்றி லாசன்

பில் என்று அழைக்கப்படும் வில்லியம் ஸ்பென்சர், ஒரு கோடை நாளில் பள்ளிக்குப் போகாமல் குளத்தில் நீச்சலடிக்கச் சென்றுவிட்டான். ஆசிரியர் அவன் பள்ளிக்கு வராததைப் பற்றி அவன் தந்தைக்கு ஒரு கடிதம் எழுதி அதை வில்லியத்தின் தம்பியான ஜோ என்று அழைக்கப்படும் ஜோசப்பிடம் அவன் வீட்டுக்குச் செல்லும்போது கொடுத்துச் சொன்னார்.

ஜோசப், இதை இன்றிரவு உன் அப்பாவிடம் கொடுக்கவேண்டும்.”

சரி ஐயா.”

ஜோ பள்ளிவிட்டு வரும்வரை ஒரு சந்தில் காத்திருந்த பில் அவன் வந்ததும் அவனுடன் இணைந்துகொண்டான்.

நீ அப்பாவிடம் கொடுக்க ஒரு கடிதம் வைத்திருக்கிறாய் என்று நினைக்கிறேன்.”

ஆமாம்.” ஜோ சொன்னான்.

அதில் என்ன இருக்கிறதென்று உனக்குத் தெரியுமா?”

ம்..தெரியும். நீ ஏன் இன்று பள்ளிக்கு வரவில்லை, பில்?”

அதை அப்பாவிடம் கொடுக்குமளவுக்கு நீ ஒன்றும் மோசமானவன் இல்லைதானே, ஜோ?”

நான் கட்டாயம் கொடுக்கவேண்டும். கொடுப்பேன். நான் ஆசிரியரிடம் உறுதியளித்திருக்கிறேன்.”

நீ கொடுக்காதது ஒருநாளும் அவருக்குத் தெரியவராது.”

இல்லை. அவர் தெரிந்துகொள்வார். அவர் நம் வீட்டுக்கு சனிக்கிழமை வருவார். மேலும் நாளை என்னிடம் கேட்பார்.”

சற்று நேர மௌனம்.

இங்கே பார், ஜோ. அடிவாங்கிக்கொண்டு, இன்றிரவு பட்டினி கிடக்க நான் விரும்பவில்லை. ஜானி நோலெட்டுடன் போஸம் வேட்டையாட வருவதாய் உறுதியளித்திருக்கிறேன். அவன் அவனுடைய துப்பாக்கியை எனக்கு சுடத் தருவதாக சொல்லியிருக்கிறான். விரும்பினால் நீயும் என்னுடன் வரலாம். நான் அந்த வாய்ப்பைத் தவறவிட விரும்பவில்லை. இல்லையானால்… முன்பு போல் நான் மீண்டும் வீட்டை விட்டு ஓடிப்போய்விடுவேன்.”

பில் சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டான். ஜோ குழப்பத்தோடு அமைதியாக வந்தான்.

பில் மறுபடியும் முயன்றான். பயமுறுத்தியும், வாதிட்டும், கெஞ்சியும் பார்த்தான். ஆனாலும் ஜோ மிகவும் பிடிவாதமாக இருந்தான்.

ஆசிரியர் என்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார், பில்!”

ஜோ.. நான் உன்னைத் தர விடமாட்டேன்.”

ஜோ சங்கடத்தில் ஆழ்ந்தான்.

நான் உன்னைத் தரவிடமாட்டேன், ஜோ.”

சென்ற வாரம் பில் தன்னிடம் எப்படி சண்டையிட்டான் என்பதை ஜோ நினைத்துப் பார்த்தான்.

என்னால் அந்தக் கடிதத்தை சுக்குநூறாகக் கிழிக்கமுடியும். என்னால் நூறு பொய்கள் சொல்லமுடியும். ஒரு டஜன் பிரம்படி கூட என்னால் வாங்கிக்கொள்ளமுடியும். ஜோ, என்னால் முடியும்.”

ஜோ என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தான். அவனுடைய இதயம் வேகமாகத் துடித்தது. அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

என்னால் அதைவிடவும் அதிகமாக செய்யமுடியும். அது உனக்கும் தெரியும், ஜோ.”  ஜோவுக்குத் தெரியும்.

அவர்கள் அப்போது ஒரு பழைய சுரங்கநிலப்பகுதியைக் கடந்துகொண்டிருந்தார்கள். அவர்களுடைய பாதையை ஒட்டி முப்பது அல்லது நாற்பது அடி ஆழ சுரங்கப்பள்ளமொன்று இருந்தது. ஏற்றங்கால் சட்டங்கள் உடைந்து புனல் வடிவில் சுரங்கப்பள்ளத்தின் உள்நோக்கி விழுந்துகிடந்தன. பழைய மரச்சட்டங்கள் சில ஐந்தடி ஆழத்தில் பள்ளத்துள் தாறுமாறாக சிக்கிக்கிடந்தன.

ஜோ சட்டென்று தன் சட்டைப்பைக்குள் கைவிட்டு கடிதத்தை எடுத்து அந்தப் பள்ளத்துள் வீசியெறிந்தான். அது படபடத்துப்போய் ஒரு பழைய மரச்சட்டத்தின் மீது நிலைகொண்டுவிட்டது. பில் அதைப்பார்த்தான். எதுவும் சொல்லவில்லை. தொலைவில் அவர்களுடைய தந்தை வேலைவிட்டு வருவதைப்பார்த்த இருவரும் அவசரமாக அகன்றனர்

ஜோ மிகுந்த கவலையில் ஆழ்ந்தான். பில் அவனைத் தேற்றி உற்சாகப்படுத்த முனைந்தான். ஆனாலும் பலனில்லை. பில், தான் இனிமேல் ஒருபோதும் பள்ளிக்குச் செல்லாமல் வெளியில் சுற்றமாட்டேன் என்றும் ஒருபோதும் சண்டைபோட மாட்டேன் என்றும் திருடமாட்டேன், பொய்சொல்லமாட்டேன் என்றும் பலவாறாக உறுதியளித்தான். ஆனால் ஜோ முதன்முறையாக, தான் ஒரு நம்பிக்கைத் துரோகத்தை செய்துவிட்டதை எண்ணி எண்ணி மருகினான். அவனால் அவ்வளவு எளிதில் சமாதானமடைய இயலவில்லை.

பில்லுக்கு இரவில் விழிப்பு வந்து பார்த்தபோது, ஜோ அவனுடைய படுக்கையில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தான்.

ஏன், என்ன விஷயம், ஜோ?”

நான் இதுபோன்ற ஒரு மோசமான செயலை இதுவரை செய்ததே இல்லை. அந்தக் கடிதத்துடன் சேர்ந்து நானும் அந்தக் குழிக்குள் குதித்திருக்கவேண்டும். ஆசிரியர் என்னை மிகவும் நம்பியிருந்தார், பில்நாளை அவர் கேட்கும்போது நான் பொய் சொல்லவேண்டும்.” விசும்பியபடியே ஜோ சொன்னான்.

அப்படியானால் உண்மையைச் சொல், ஜோ. சொல்லிவிட்டு அடி வாங்கிக்கொள். எல்லாம் சீக்கிரம் முடிந்துவிடும். இரண்டே இரண்டு பிரம்படிகள்! பிறகு எல்லாம் முடிந்துவிடும்.”

இல்லை, என்னால் முடியாது. அவர் என்னை ஒருபோதும் இனி நம்பவே மாட்டார். நான் இதுவரை பள்ளியில் பிரம்படி வாங்கியதே இல்லை, பில். அப்படி நான் அடிவாங்க நேர்ந்தால் அதன்பின் பள்ளிக்குப் போகவே மாட்டேன். நீ ஏன் வீட்டை விட்டு ஓடிப்போகிறாய்? விஷம விளையாட்டுகளில் ஈடுபடுகிறாய்? திருடுகிறாய்? எங்கள் எல்லோருக்கும் பிரச்சனை உண்டாக்குகிறாய்? அம்மா இதையெல்லாம் எப்படி சகித்துக்கொள்கிறார்கள் என்றோ அப்பாவை இது எவ்வளவு வேதனைப்படுத்துகிறது என்றோ உனக்குத் தெரியாது. இன்று உன்னால் ஆசிரியர், அம்மா, அப்பா அனைவருக்கும் நான் துரோகமிழைத்துவிட்டேன். எல்லாம் உன்னால்தான்... நீ இப்படி நடக்கும் காரணத்தால்தான். நீ ஒரு சுயநலமி!” சொல்லிவிட்டுப் படுத்துக்கொண்ட ஜோ அழுதபடியே உறங்கிப்போனான்.

பில் உறங்காமல் யோசித்தபடியே விடியும்வரை விழித்திருந்தான். பிறகு சத்தமில்லாமல் எழுந்து உடைகளை அணிந்துகொண்டு வீட்டை விட்டு எவரும் அறியாமல் வெளியே வந்தான். அவன் போஸம் வேட்டைக்குப் போவதாக நினைத்து, நாய் அவனைத் தொடர்ந்தது. அவன் வீட்டை விட்டு வெளியேறும்வரையிலாவது நாய் அமைதியாக இருக்கவேண்டுமே என்று பில் நினைத்தான். அவன் அந்த சுரங்கப் பள்ளமிருந்த இடத்துக்குப் போனான். மிகவும் எச்சரிக்கையாக மரச்சட்டங்களில் காலை வைத்து உள்ளே இறங்கினான்

கோடைக்கால அதிகாலையின் வெளிச்சத்தில், மங்கிய வெண்ணிறத்தில் தென்பட்ட அந்தக் கடிதத்தைக் குனிந்து கையிலெடுத்தான்.  அந்த உளுத்துப்போன மரச்சட்டம் எவ்வித முன்னறிவிப்புமின்றி சட்டென முறிந்து உள்வாங்கியதில், அவன் பிடிநழுவிப் பள்ளத்தில் வீழ்ந்தான். 

வீட்டினர் அவனை காலை ஒன்பது மணிவாக்கில்தான் கண்டுபிடித்தார்கள். பழைய சுரங்கப்பள்ளங்களைக் கிளறித்தோண்டி ஆதாயம் தேடுபவன் ஒருவன் அந்தப்பக்கமாய் வர, நாய் குரைத்து அவன் கவனத்தைக் கவர்ந்து பில்லின் இருப்பைக் காட்டியது. பில்லை அவர்கள் மேலே கொண்டுவந்தபோது அவனுடைய வலக்கைக்குள் கடிதத்தை இறுகப்பிடித்து மறைத்திருந்தான். அவர்கள் அவனை வீட்டுக்குக் கொண்டுசென்றார்கள். தந்தை மருத்துவரை அழைத்துவரச் சென்றார்

பில் இயல்புநிலைக்கு வந்தபோது தாயிடம் சொன்னான், “அம்மா, நான் வீட்டை விட்டு ஓடிப்போகவில்லை. நான் தரையில் அமர்ந்திருந்த ஒரு போஸத்தைப் பிடிக்கத்தான் முயன்றேன் என்று அப்பாவிடம் சொல்லுங்கள். ஜோ எங்கே? ஜோவை நான் பார்க்கவேண்டும். அம்மா நீங்கள் ஒருநிமிடம் வெளியே போய் ஜோவை அனுப்புங்கள்.”

பில், நான் இங்குதான் இருக்கிறேன்.” ஜோ பயத்தில் தொண்டை அடைக்கச் சொன்னான்.

 “ஆசிரியர் வந்துவிட்டாரா?”

இல்லை.”

கொஞ்சம் குனி, ஜோ. நான் அந்த கடிதத்தை எடுக்கத்தான் போனேன். எல்லோரும் எழுவதற்கு முன்னால் வீட்டுக்குத் திரும்பிவிட எண்ணியிருந்தேன். ஆனால் அந்தக் கட்டைகள் முறிந்ததால் உள்ளே விழுந்துவிட்டேன். கடிதத்தை படுக்கைக்குப் பக்கமாக கீழே போட்டிருக்கிறேன். நீயாகப் பார்த்து எடுப்பது போல் எடுத்துக்கொள். நேற்றிரவு அப்பாவிடம் அதைத் தர மறந்துவிட்டதாக சொல் அல்லது நீ அதைத் தரவிரும்பவில்லையென்று சொல். அது பொய்யாகாது. ஆசிரியரிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாக சொல். இனிமேல் எந்தக் கடிதமும் கொடுத்தனுப்பவேண்டாமென்று சொல், பெண்களிடமிருந்து வரும் கடிதங்களைத் தவிர. அவ்வளவுதான். அம்மா! என் போர்வைகளை அகற்றிவிடுங்கள். எனக்கு மூச்சு முட்டுகிறது.”


*********
(ஆஸ்திரேலியாவின் பிரபல கவிஞரும் கதாசிரியருமான ஹென்றி லாசன் (1867-1922) எழுதிய ‘The Master’s Mistake’ என்ற ஆங்கிலக் கதையின் தமிழாக்கம்)

46 comments:

  1. Anonymous8/7/14 16:54

    தமிழாக்கிய விதம் மிக அருமை கீத்தா..
    இனிய வாழ்த்து. மூச்சு விடாமல் படித்தேன்
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி.

      Delete
  2. பயனுள்ள பதிவுடன் சிறந்த வழிகாட்டல்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  3. தமிழாக்கத்திற்கு ந‌ன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க புத்தன்.

      Delete
  4. நான் ஆங்கில புத்தகம் எல்லாம் படிப்பது கிடையாது. அதனால் நீங்கள் அடிக்கடி இந்த மாதிரி தமிழாக்கம் செய்து பதிவிட்டால் நன்றாக இருக்கும் .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சொக்கன்.

      Delete
  5. சிறப்பான தமிழாக்கம். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. கதையை ரசித்தமைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஆதி.

      Delete
  6. வணக்கம்

    ஆங்கில மொழிக் கதையை தமிழில் மொழிபெயர்த்து சொல்லிய விதம் சிறப்பாக உள்ளது இப்படியான கதைகளை படித்தில்லை படிக்க தந்தமைக்கு நன்றிகள் பல....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கதையை ரசித்தமைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரூபன்.

      Delete
  7. பள்ளிக்குச் செல்லும் இரு சிறுவர்களின் எண்ணங்களை ,உணர்வுகளை மிக அழகாகச் சொல்லிப் போகிறது கதை. சகோதரர்கள் இரு வேறு துருவங்கள் ஆனாலும் பாசப்பிணைப்பு தெரிகிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கதை பற்றிய தங்கள் விமர்சனம் கண்டு மிகவும் மகிழ்கிறேன் ஐயா. வெளியில் சண்டை போட்டாலும் உள்ளே பாசம் இழைவதைக் கண்டு எனக்கும் வியப்புதான். மிக்க மகிழ்வும் நன்றியும் ஐயா.

      Delete
  8. சிறப்பான பயனுள்ள பதிவுக்கு நன்றி.
    சகோதரி எனது பதிவு தற்போது ''எனக்குள் ஒருவன்'' படிக்க வேண்டுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. விரைவில் வருகிறேன். தங்கள் கருத்துக்கு நன்றி கில்லர்ஜி.

      Delete
  9. ரசிக்க வைக்கும் கதை... அருமை சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  10. தமிழாக்கம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி.

      Delete
  11. சிறுகதையே என்றாலும் முடிவு எப்படி இருக்கப் போகிறதோ என்ற ஆர்வம் கடைசிவரை தொடர்ந்து வந்தது. நல்ல தமிழாக்கம். எனது பாராட்டுக்கள்!
    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் கதையை ரசித்துப் படித்ததற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  12. அக்கா ஒவ்வொரு ஆசிரியரும் தெரிந்து கொள்ள வேண்டிய கதை. காலம் முழுவதும் இந்த கதையை பகிர்ந்தமைக்காக உங்களை நன்றியோடு நினைத்துக்கொண்டிருப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. கதை இந்த அளவு உங்கள் மனத்தைத் தொட்டுவிட்டதில் எனக்கு நிறைவாக உள்ளது மைதிலி. மிகவும் நன்றிப்பா.

      Delete
  13. சிந்தனையைத் தூண்டும் சிறப்பான கதை.
    அருமையான தமிழாக்கம். இயல்பாக இருந்தது.

    மிக்க நன்றியும் அன்பு வாழ்த்தும் கீதமஞ்சரி!

    த ம +

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இளமதி. தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி.

      Delete
  14. நல்ல ஆக்கம். தமிழில் மொழி பெயர்த்து பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கதையை ரசித்தமைக்கும் நன்றி வெங்கட்.

      Delete
  15. தமிழாக்கம் மிகவும் அருமை. மிகவும் ரஸித்துப் படித்தேன். நானும் பள்ளியில் படிக்கும்போது ’ஜோ’ போன்ற எண்ணங்களும், சுபாவங்களும் கொண்டவனாகவே தான் இருந்தேன்; என்னையும் பலர் ’பில்’ போல மிரட்டியுள்ளனர். அதனால் இதன் ஒவ்வொரு வரிகளையும் என்னால் உணர்ந்து உள்வாங்கிக்கொண்டு படிக்கவும், முடிவு என்ன ஆகுமோ என்ற ஆவலைத் தூண்டுவதாகவும் இருந்தது. பகிர்வுக்கு நன்றிகள். vgk

    ReplyDelete
    Replies
    1. கதையைத் தங்கள் பள்ளிக்காலத்தோடுப் பொருத்தி ரசித்தமைக்கும் அனுபவப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோபு சார்.

      Delete
  16. அவர்கள் இருவரின் உரையாடல்கள் மிக இயல்பாக இருந்தது. எப்படித்தான் முடியப் போகிறதோ என்று சிந்தித்தவாறே படித்தேன். அழகான முடிவு மிகப் பிடித்தது. அருமையான மொழிபெயர்ப்பு. தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. கதையை மிகவும் ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் அன்பான நன்றி கணேஷ்.

      Delete
  17. அருமையான கதை . பகிர்வுக்கு நன்றி கீதமஞ்சரி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி மேடம்.

      Delete
  18. அருமையான மொழி பெயர்ப்பு. ஜோ போன்றவர்களும் பில் போன்றவர்களும் காலம் உள்ளவரை வாழ்வார்கள். நல்ல கதை

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் கௌரி. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

      Delete
  19. அக்கா ! தங்கள் பதிவை இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன். நேரம் வாய்க்கும்போது பார்க்கவும்//http://blogintamil.blogspot.in/2014/07/depth-in-writing-big-b.html?showComment=1405525733281#c2746730877402195880

    ReplyDelete
    Replies
    1. பல அற்புதமான படைப்பாளிகளுக்கு மத்தியில் என்னையும் அறிமுகம் செய்துள்ளமைக்கு மிகவும் நன்றி மைதிலி.

      Delete
  20. இதை எப்படி படிப்பது என்ற ஒரு சாதாரண வாசகனாய் நுழைந்தேன். ஆரம்பித்த ஒவ்வொரு வரியும் ஒரு கயிறாய் என்னை கட்டிப்போட்டு கடைசி வரி வரை படிக்க வைத்து விட்டது. கோர்வையான எண்ண ஓட்டம், அழகிய எழுத்து, கடைசி வரை ஒரு கதைக்கு குறையாத சுவாரசியத்துடனும், கொடுத்த ஒரு மெசேஜும்.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது முதல் வருகைக்கு மிக்க நன்றி பிரகாஷ். கதையை கடைசிவரை வாசித்து ஊக்கம் தரும் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி.

      Delete
  21. இதுவரைப் படித்திராத, மிகச்சிறந்த ஆக்கம் ஒன்றைப் படித்தேன். அருமை.

    ReplyDelete
    Replies
    1. உங்களுடைய இந்தக் கருத்து எனக்கு பெரும் ஊக்கமளிப்பது உண்மை. நன்றி ஸ்ரீராம்.

      Delete
  22. அன்பின் கீத மஞ்சரி - கதை தமிழாக்கம் செய்தது நன்று - நன்றாகவே வந்திருக்கிறது - இன்றைய வலைச்சர அறிமுகம் வேறு - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.