ஆகாயம் பிளந்துதித்த அண்டரண்டப் பட்சியுமில்லை
ஆவென்று வாய்பிளந்து ஆராதித்துத் தொழுவதற்கு!
பூமி கிளர்ந்து வெளிப்பட்ட புழு பூச்சியுமில்லை
ப்பூவென்று புறந்தள்ளி புழுதியிற் புரட்டுவதற்கு!
உன்னைப் போலவே ஒற்றைத் துளியில் உருவாகி
உயிர்க்குடத்தில் கருவானது!
உன்னைப் போலவே உண்ணவும் கழிக்கவும்
உடுத்தவும் உரிமையுடையது.
உன்னைப் போலவே சிரிக்கவும் அழவும்
சிந்திக்கவும் கூடியது.
உன்னைப் போலவே ஆக்கவும் அழிக்கவும்
அணைக்கவும் தலைப்பட்டது.
உன்னைப் போலவே உணரவும் புணரவும்
மரணிக்கவும் வாய்த்த சக மானுடம் அது!
சாமான்யமாய் எண்ணிவிடாதே…
சாபத்துக்கு ஆளாகிவிடும்
சாத்தியத்துக்கு ஆளாகிவிடக்கூடும்!
*********
(வல்லமையில் வெளியானது. படம் நன்றி இணையம்)
மிக மிக அற்புதம்
ReplyDeleteகருத்தும் சொல்லிச் சென்றவிதமும்
குறிப்பாக முடித்த விதமும்..
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்.
Deletetha.ma 1
ReplyDeleteதமிழ்மண வாக்குக்கு நன்றி ரமணி சார்.
Deleteவார்த்தைகளில் வேண்டாம், வாழ்க்கையில் வேண்டும் சம உரிமை!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
Deleteஉங்கள் கவிதை வல்லமையில் வெளியானதற்கு வாழ்த்துக்கள் கீதமஞ்சரி.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சித்ரா.
Deleteஎளிமையான வரிகளில் சொல்ல வந்த கருத்தை பளிச்சென்று மனதில் பதிக்கிறது உங்கள் கவிதை... அதுதானே கவிதையின் வலிமை..!
ReplyDeleteவருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி கணேஷ்.
Deleteசிறந்த எண்ணங்கள்
ReplyDeleteசிறந்த பகிர்வு
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteச்சக மானுடத்தை வலிமையாய் சித்தரித்து
ReplyDeleteவல்லமையில் பதிந்தமைக்கு வாழ்த்துகள்..!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்.
Deleteயாரையும் சாமான்யமாய் எண்ணக் கூடாது... வல்லமையில் வந்தமைக்கு பாராட்டுகள் சகோதரி...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.
Deleteசாமான்கண் எவனுமில்லை.
ReplyDeleteசகல கலா வல்லவரே..
அருமைப் பதிவு.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி.
Deleteஉதித்தெழுந்த சூரியன் போல் மானிடம் போற்றும் கவிதை! அருவியினின்று தெறித்து விழுந்த நீர்த்திவலைகள் போன்று கவிதை வரிகள்! எனது பாராட்டுக்கள்!
ReplyDeleteத.ம.4
தங்கள் அழகிய வரிகள் கண்டு மிக்க மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி ஐயா.
Deleteதன்னைப் போல் பிறரையும் நேசி அழகிய கவிதை!
ReplyDeleteசொல்லிய விதம் மனதைக் கவர்ந்தது கீதமஞ்சரி!
வாழ்த்துக்கள்!
வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி இளமதி.
Deleteஆணுக்கும் பெண்ணுக்கும் சம வலிமை சம உரிமை உணர்வுகள் எல்லாமும்
ReplyDeleteஇருக்கும் போது பூவென்று எண்ணிப் புழுதியில் புரட்டி எடுக்க முற்படுவோருக்கு சாட்டை அடிக் கவிதை இது ! மிகவும் ரசித்தேன் வாழ்த்துக்கள் தோழி .த .ம .6
தங்கள் வருகைக்கும் ரசித்திட்டக் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி.
Delete
ReplyDeleteஉயர்வு தாழ்வு பற்றி நானும் எழுதி இருக்கிறேன் சாபத்தால் நிவர்த்தி செய்யக் கூடியதா அது. . Love thy neighbor as thyself என்று புரிந்து கொள்வோம் வாழ்த்துக்கள்.
சாபத்துக்கு அஞ்சுபவர்களும் இருக்கிறார்களே ஐயா? தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
Deleteசக மானிடர்களின் உரிமைகளையும் சிந்திக்க வேண்டி கொடுத்துள்ள ஆக்கம் உண்மையில் சிந்திக்கவே வைக்கிறது.
ReplyDeleteசொன்னவிதமும் உபயோகித்துள்ள வார்த்தைக்கோர்வைகளும் மிக அழகாக அமைந்துள்ளன. தலைப்பும் படமும் பொருத்தமாக உள்ளன.
வல்லமை மின்இதழில் வெளியானது மகிழ்ச்சி. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
அன்புடன் கோபு [VGK]
தங்கள் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி கோபு சார்.
Deleteஆழமான கருத்துள்ள கவிதை. வல்லமையில் வந்தமைக்கு பாராட்டுக்கள்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சொக்கன்.
Deleteசிறப்பான வரிகள். ஆழமான கருத்துகள்.
ReplyDeleteவல்லமையில் வெளியானதற்கு பாராட்டுகள்.
வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஆதி.
Deleteஅருமையான வரிகளுடன் கருத்தாழம் மிகுந்த கவிதை. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி கீதமஞ்சரி. வல்லமையில் வெளி வந்தமைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்.
Deleteமானுடம் பயனுற வாழும் வார்த்தைகள் கூடிப் பிறந்த கவிதை அருமை சகோதரி.
ReplyDeleteநன்றி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஊமைக்கனவுகள்.
Deleteமிக மிக அற்புதம்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Delete
ReplyDeleteவணக்கம்!
தமிழ்மணம் 7
உாிமையை எண்ணி உரைத்த கவிதை
அருமை அருமையென ஆடு!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteசிறப்பான கவிதை.
ReplyDeleteபாராட்டுகள் ....
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி வெங்கட்.
Deleteநல்ல வார்த்தைகளில் எழுச்சி விளையாட்டு அருமை, சகோதரியே
ReplyDeleteதங்கள் கருத்துக்கு நன்றி கில்லர்ஜி.
Deleteஉள்ளத்தில் பதிய உரைத்திட்ட கவிதையிது-கால
ReplyDeleteவெள்ளத்தில் கறையாது மறையாது
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteஅருமை..! வாழ்த்துகள்..!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி லோகு.
Deleteவலிமையான வார்த்தைகளாலான மனிதநேயம் போற்றும் கவிதை !
ReplyDeleteநன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
எனது புதிய பதிவு : தமிழன் என்று சொல்லடா... தமிழில் பேசடா !
http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post.html
( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சாமானியன். விரைவில் தங்கள் தளம் வருவேன்.
Deleteஇப்படிப்பட்ட தங்கள் கூர்மையான கவிதைகளுக்கு நான் என்றென்றும் விசிறி!! தம பத்து
ReplyDeleteகவிதையை ரசித்து சிலாகித்தமைக்கு மிகவும் நன்றி மைதிலி. தமிழ் மண வாக்குக்கும் மிக்க நன்றி.
Delete