ஆதிகாலக் கனவுகளின் வண்ணங்களைக்
குழைத்தென் அன்பின் வார்ப்பில்
பிரத்தியேகமாய் வார்க்கப்பட்டவன் நீ!
மேனி போர்த்த வண்ணங்களில்
பிரதிபலித்துக்கிடக்குமென்
பிரேமைக்கும்
பேராரவாரப் பெரும்புயலென
உன்னுள் புகும் தருணமெதிர்பார்த்து
என்னிதழ்க்கடையில் குந்திக்கிடக்கும்
அமுதவீச்சுக்குமாய்
அந்தரங்கத் தனிமையில் காத்திருக்கிறாய்
அசோகவனத்து ராமனாட்டம்!
உன் உயிர்ப்பின் மந்திரத்தை
ஒளித்துவைத்த
கவிதையின் முகவரியைத் தொலைத்தலையும்
இப்பிச்சிக்காய் இன்னும் சில காலம்
காத்திரு…
வந்துவிடுவேன் என்றேனும் ஒருநாள்…
ஏதேனும் ஒரு சென்மத்தில்!
*******
(கல்கி வார இதழின் தலைமை துணையாசிரியர் திரு.அமிர்தம் சூர்யா அவர்கள் சென்ற மாதம் முகநூலில் மேலே உள்ள ஓவியத்தைக் கொடுத்து அதற்கொரு கவிதை எழுதும்படி ஒரு ஜாலி போட்டி வைத்திருந்தார். அவற்றுள் அவரது ரசனை சார்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு கவிதைகளுள் என்னுடைய இந்தக் கவிதையும் ஒன்று என்பதில் எனக்கு மிகவும் மகிழ்வும் பெருமையும். அவருக்கு என் மனம் நிறைந்த நன்றி.)
(படம்: நன்றி இணையம்)
மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் சகோதரி...
ReplyDeleteவாழ்த்துக்கு மிக்க நன்றி தனபாலன்.
Deleteபாராட்டுகள். வாழ்த்துகள். அருமையாக இருக்கிறது கவிதை. முக நூலிலேயே படித்தேன் (திருமதி இஷா மாலா ஷேர் செய்திருந்தார்கள்)
ReplyDeleteதிரு அமிர்தம் சூர்யாவுக்கு ரொம்ப நாட்களுக்கு முன்னாலேயே நட்பு வேண்டுகோள் அனுப்பியிருந்தேன். மனிதர் அதை மதிக்கவேயில்லை! :)))
வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி ஸ்ரீராம்.
Deleteமுரண்களில் தலைப்பின் உள்ளாய் முகிழ்க்கிறது,..
ReplyDeleteபுதிய சீதாயணம்!
மாயமானும் எல்லைக்கோடும் துரத்தச்சென்ற சீதையும்
தன் அபத்தம் நினைத்து நிரந்தரக் காத்திருப்பில் சோகவன இராமன்!
வாசிப்பின் முடிவில் தொடங்கி நீளும் சலனப் பெரும்வளையங்கள் நீங்கள் நிறைவித்த ஆச்சரியப் புள்ளியில் மையம் கொண்டிருக்கின்றன!
பகிர்வுக்கு நன்றி
தங்கள் கருத்துரை கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி ஊமைக்கனவுகள்.
Deleteகல்கி இதழின் தலைமைத் துணை ஆசிரியர் அவர்களால் முகநூலில் தங்கள் கவிதை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.
ReplyDeleteகவிதை வரிகளும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி கோபு சார்.
Deleteவாழ்த்துக்கள் சகோதரி!
ReplyDeleteமிக்க நன்றி சுரேஷ்.
Deleteவாழ்த்துக்கள் கீதமஞ்சரி.
ReplyDeleteகவிதை நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கு மிகவும் நன்றி மேடம்.
Deleteவாழ்த்துக்கள் சகோதரியே... தொடரட்டும் தங்களது கவிப்பணி.
ReplyDeleteவாழ்த்துக்கு மிகவும் நன்றி கில்லர்ஜி.
Deleteஅசோகவனத்துச் சீதை தெரியும். ஆனால் இந்த அசோகவனத்து ராமனும் வசீகரம் உங்கள் வரிகளில்.
ReplyDeleteஇந்த வரி உங்களைக் கவர்ந்துள்ளது குறித்து எனக்கு மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துரைடேனியல்.
Deleteஅருமையான கவிதை!
ReplyDeleteபோட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு இனிய வாழ்த்துக்களும் அன்புப்பாராட்டுக்களும்!!
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்.
Deleteசிறந்த பகிர்வு
ReplyDeleteதொடரட்டும்
மிக்க நன்றி ஐயா.
Deleteகவிதை அருமை. வாழ்த்துகள் கீதா.
ReplyDeleteமிகவும் நன்றி ராமலக்ஷ்மி.
Deleteஅசோகவனத்து இராமனா பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு கீத்ஸ். :)
ReplyDeleteபாராட்டுக்கு மிகவும் நன்றி தேனம்மை.
Deleteவாழ்த்துக்கள் கவிதாயினி அவர்களே!
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
Deleteபாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
ReplyDeleteமிகவும் நன்றி சீராளன்.
Deleteகவிதை அருமை. வாழ்த்துக்கள் கீதாம்மா!
ReplyDeleteமனமார்ந்த நன்றி ராஜி.
Deleteவாழ்த்துக்களும், பாராட்டுக்களும் சகோதரி.
ReplyDeleteமிகவும் நன்றி சொக்கன்.
Deleteஅடடா.. அற்புதம் கீதமஞ்சரி!
ReplyDeleteதலையங்கமும் கவிதையும் என்னைத்தூக்கி விழுங்கியே விட்டது.
எடுத்தியம்ப இயலாமல் இருக்கின்றேன் நான்.
கற்பனை அதி சிறப்பு! வாழ்த்துக்கள்!
அன்பான நன்றி இளமதி.
Deleteஇனிய வாழ்த்துக்கள்!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அனுராதா.
Deleteஎப்படி இந்தப் பதிவு என் கண்களில் படாமல் போனது.?Better late than never. ! இந்த மாதிரி கற்பனையும் சொல்லாடல்களும் என்னால் நினைத்தும் பார்க்க முடியாதது. பாராட்டுக்கள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : இனியா அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : இனியா
வலைச்சர தள இணைப்பு : ஆலயம் தொழுவது சாலவும் நன்று
தகவல் தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி தனபாலன்.
Delete