தேவையின்
நிமித்தம் தேடப்படும்போதுதான்
தெரியவருகிறது
இருத்தலும் இல்லாமையும்.
ஏனெனில்….
கண்டுபிடிக்கும்
தருணங்களுக்கு நிகராக
கவனங்களை
ஈர்ப்பதில்லை
காணாமற்போகும்
தருணங்கள்!
இன்னவிடத்தில்
இன்ன நேரத்தில்
இன்னாரால்
இன்னவாறாக
காணாமற்போய்விட்டதென்பதை
கண்டிப்பாய்
வரையறுக்கவியலாநிலையில்
அவநம்பிக்கையும்
அசிரத்தையுமான தேடலின் முடிவில்
அயர்ந்தமரவைக்கிறது
இயலாமை.
கவனிப்பாரின்றி
நலிந்து மெலிந்து நாளடைவில்
காலாவதியாகிப்போயிருக்கலாம்.
அதன்
சொல்லொணாத் துயர்மிகு சோகக்கூவல்
உடையவரைச்
சேரமுடியாமல் ஓய்ந்துபோயிருக்கலாம்.
உள்ளேகும்
புத்துருப்படிகளால் உதாசீனப்படுத்தப்பட்டு
புறவாசல்
வழியே போக்கடிக்கப்பட்டிருக்கலாம்.
கண்ணெதிரே
இருக்க நேர்ந்திடினும்
வசீகரமிழந்த
அதனிருப்பு அதுதான் இதுவென்று
வகையாய்
அடையாளங்காட்டத் தவறிப்போகலாம்.
இருத்தலும் இல்லாமையும்
ஒன்றென
உணரப்படுவதான
வலி சாதாரணமானதல்ல.
வரிகளை
வாசித்துக் களைத்தோர்
காணாமற்போனதெதுவென்று
அறியவிரும்புவீராயின்
கிலேசத்துக்காளாக
வேண்டாம்.
உயிராகவோ…. உறவாகவோ…. உடமைப் பொருளாகவோ
ஊகித்தலும் உருவகப்படுத்தலும் உங்கள் உரிமையே!
********************************
********************************
உன்மை தோழி.நம்மால் தேடப்படுபவரும்.தேடப்படுவனவும்,நாமும் கூட இதற்கு ஆளாகும் காலங்கள் கடக்கின்றன.மிக அருமை.நன்றி
ReplyDeleteஅருமை. தொலைத்த் பிறகுதான் எதன் அருமையும் தெரிகிறது!
ReplyDeleteசிறப்பான நற் கருத்து .பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் தோழி .
ReplyDeleteஅழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteபொருட்களைவிட நட்பினை இழந்தால், அதன் பிறகு ஏற்படும் வலி மிக மிகக் கொடுமையாக உணரப்படுகிறது..
// இருத்தலும் இல்லாமையும் ஒன்றென
ReplyDeleteஉணரப்படுவதான வலி அசாதாரணமானதல்ல... //
உண்மை... உண்மை... உண்மை...
கண்டுபிடிக்கும் தருணங்களுக்கு நிகராக
ReplyDeleteகவனங்களை ஈர்ப்பதில்லை
காணாமற்போகும் தருணங்கள்!
ஆழமான சிந்தனையுடன் கூடிய அற்புத வரிகளை
விட்டு மீள வெகு நேரம் ஆனது
மனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
நீங்கள்தான் சொல்லிவிட்டீர்களே காணாமல் போனது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று. எனக்கென்னவோ காணாமல் போனவை நேர்மையும் நாணயமும்தான் என்று தோன்றுகிறது,
ReplyDelete.அவைதான்/
/கண்ணெதிரே இருக்க நேர்ந்திடினும்
வசீகரமிழந்த அதனிருப்பு அதுதான் இதுவென்று
வகையாய் அடையாளங்காட்டத் தவறி /இருப்பவை வாழ்த்துக்கள்.
tha.ma 4
ReplyDeleteசிறப்பான கவிதை.... பாராட்டுகள்.
ReplyDeleteத.ம. 5
''..வரிகளை வாசித்துக் களைத்தோர்...''
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள். 4.3 தரம் வாசிக்க வேண்டும்.
அவநம்பிக்கையும் அசிரத்தையுமான தேடலின் முடிவில்
அயர்ந்தமரவைக்கிறது இயலாமை..
ஆழமான வரிகள். இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
காணாமல் போன தருணங்களுக்கான
ReplyDeleteதருண விவரிப்புகள் மிகவும் அருமை...
இப்படியெல்லாம் போயிருக்குமோ என்ற
ஆச்சர்யத்தை ஏற்படுத்திப்போகிறது வரிகள் ...
==
இருத்தலும் இல்லாமையும் ஒன்றென எண்ணுவது
எவ்வளவு பெரிய விஷயம்.. பண்பட்ட பக்குவமும்
போதுமென்ற மனமும் வெகுவாக அவசியமே அப்படிப்பட்ட
மனதிற்கு..
==
காணாமல் போன தருணங்கள் எதுவாக இருந்தாலும்
அதனை ஏதுவாக எடுத்துக்கொண்டு நமக்கான
நிகழில் நம்மோடு பயணிப்பவைகளை காணாமல் போனவைகளின்
மீட்சியை எண்ணி வாழ்தல் நலமென உரைக்கும்
அருமையான கவிதை சகோதரி...
மிக மிக ஆழமா யோசிக்கத் துாண்டும் கவிதை.
ReplyDeleteஅருமை கீதமஞ்சரி அக்கா.
த.ம. 7
ஒவ்வொருத்தருக்கும் அவருக்குள் இருக்கும்
ReplyDeleteஉண்மையான உணர்வுதான் இது! அழகாகப் பதித்தீர்கள் வரிகளில்...
காணாமல் கரைந்து போனவற்றை கிட்டாதென்று தெரிந்தும்
தேடும் முயற்சியில் இருக்கிறதே மனது...
ஆழமாகச் சிந்திக வைத்த அருமையான வரிகள்!
வாழ்த்துக்கள் தோழி!
சிறப்பான வரிகள்...இல்லாத போது தான் அதன் அருமை தெரியும்...
ReplyDeleteஇருத்தலும் இல்லாமையும் ஒன்றென
ReplyDeleteஉணரப்படுவதான வலி அசாதாரணமானதல்ல.
வலிக்கிறது சகோதரி .
இத்தனை நாள் இங்கு
வராது போனேனே ?ஆனாலும் என்ன
இந்த நாளுக்கு நன்றி !
தங்கை மைதிலியின் தளவழியே தங்கள் தள அறிமுகம் கிடைத்தது. தளம் வித்தியாசமாக இருக்கிறது,
ReplyDelete”இருத்தலும் இல்லாமையும் ஒன்றென
உணரப்படுவதான வலி அசாதாரணமானதல்ல”
அசாதாரணமான வரி. ஆனால், சாதாரணமானதல்ல என்று இருநதிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
நன்றி வாழ்த்துகள் சகோதரி.
இருத்தலும் இல்லாமையும் ஒன்றென
ReplyDeleteஉணரப்படுவதான வலி அசாதாரணமானதல்ல.//உண்மைதான்
சிறப்பான சிந்தனைக்கு வாழ்த்துக்கள்
@Geetha M
ReplyDeleteஉடனடி வருகைக்கும் சிறப்பானக் கருத்துரைக்கும் மிக்க நன்றி கீதா.
@ஸ்ரீராம்.
ReplyDeleteஉண்மைதான் ஸ்ரீராம். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
@அம்பாளடியாள் வலைத்தளம்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.
@வை.கோபாலகிருஷ்ணன்
ReplyDeleteஇழப்பு எதுவாக இருந்தாலும் மனவேதனை நிச்சயம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வை.கோ.சார்.
@திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.
@Ramani S
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்.
@G.M Balasubramaniam
ReplyDeleteதங்கள் அனுபவத்தில் விளைந்த கருத்தினை எவராலும் மறுக்கவியலாது ஐயா. தங்கள் வருகைக்கும் சிறப்பானக் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி தங்களுக்கு.
@Ramani S
ReplyDeleteதமிழ்மண வாக்குப் பதிவுக்கு மிக்க நன்றி ரமணி சார்.
@வெங்கட் நாகராஜ்
ReplyDeleteவருகைக்கும் கவிதையை ரசித்தமைக்கும் தமிழ்மண வாக்கிட்டு அளிக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி வெங்கட்.
@kovaikkavi
ReplyDeleteஉள்ளதை உள்ளபடியே உரைத்தமைக்கு நன்றி தோழி. தங்கள் வருகைக்கும் கவிதையை ரசித்தமைக்கும் மனமார்ந்த நன்றி தங்களுக்கு.
@மகேந்திரன்
ReplyDeleteஇவ்வளவு அழகாக ஆழ்ந்த சிந்தனையுடனான கருத்துரைக்கு அகம் நிறைந்த நன்றி மகேந்திரன். மனம் நிறைகிறது.
@அருணா செல்வம்
ReplyDeleteவருகைக்கும் ரசித்தமைக்கும் தமிழ்மண வாக்குக்கும் அன்பான நன்றி அருணா செல்வம்.
@இளமதி
ReplyDeleteவருகைக்கும் விரிவானக் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி இளமதி.
@ADHI VENKAT
ReplyDeleteவருகைக்கும் ரசித்திட்டக் கருத்துக்கும் மிக்க நன்றி ஆதி.
@Mythily kasthuri rengan
ReplyDeleteதங்களுடைய முதல் வருகைக்கும் நெகிழ்வான கருத்துக்கும் மிக்க நன்றி மைதிலி.
@Muthu Nilavan
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி ஐயா. கவிதையில் கண்ட கருத்துப்பிழையைச் சுட்டியமைக்கு அகமார்ந்த நன்றி. இப்போதே திருத்திவிடுகிறேன். தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
@கவியாழி கண்ணதாசன்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.
@கீத மஞ்சரி
ReplyDeleteதங்களின் பெருந்தன்மைக்கு நன்றி சகோதரி. படைப்புகள் தொடரட்டும்.
ஆழமான உணர்வு பூர்வமான வரிகள் நிலா.
ReplyDeleteதுல்லியமாய் ஆனால் தனிமையான தருணங்கள் மற்றும் மழைத்தருணங்களில் சிறப்பாக உணரத்தக்க sharp pain மாதிரியான மனவலி ஒன்றை தமிழால் சிறைபிடித்து விட்டீர்கள்! அபூர்வம்!
ஆச்சரியமாயும் இருக்கிறது. ஏதேனும் அச்சுருவில் வரும் சஞ்சிகைக்கு இக்கவிதையை அனுப்பி வையுங்களேன் கீதா.
சிறப்பான கவிதை.
ReplyDelete@மணிமேகலா
ReplyDeleteஆழமானக் கருத்துரைக்கு மிக்க நன்றி மணிமேகலா.
\\ஏதேனும் அச்சுருவில் வரும் சஞ்சிகைக்கு இக்கவிதையை அனுப்பி வையுங்களேன் கீதா.\\
அங்கே நிராகரிக்கப்பட்டவைதான் இங்கே அரங்கேறிக்கொண்டிருக்கின்றன மணிமேகலா. உங்கள் அன்புக்கு மீண்டும் நன்றி.
@Muthu Nilavan
ReplyDeleteநன்றி ஐயா.
@மாதேவி
ReplyDeleteரசித்தமைக்கு மிக்க நன்றி மாதேவி.