விரக்தியின் விளிம்பு நோக்கி
விரையுந்தோறும்
வீசப்படுகிறது ஒரு பாசக்கயிறு.
விடுக்கப்படுகிறது ஒரு விநோத விளிப்பு!
மதியாமல் முன்னேகும் மனக்கயிற்றைக்
இழுத்துப் பிடித்துத் திணறடிக்கிறது ஒரு இறைஞ்சல்.
முரண்டும் திமிறியும் ஆக்ரோஷித்தும் ஆங்கரித்தும்
இளங்கன்று போலத்துள்ளியும் துவண்டும் எனப்
பலவாறாய் முயன்றும்
பலவாறாய் முயன்றும்
பலனற்றுச் சோர்ந்துவிழுமொரு பொழுதில்
கைவிரித்து தன் தளைகளைக் கழற்றிவிட்டு
கள்ளச் சிரிப்பொன்றை உதிர்த்துக்கொண்டே
கண்மறைந்து போகிறது
வெறுமையின் கடைசித்தடமும்.
**************************************
வெறுமையின் கடைசித்தடமும்.
**************************************
அருமை.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅழகான கவித்துவம்.... எழுதிய விதம் நன்று வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வெறுமையின் கனத்தை உணர்ந்தேன்
ReplyDeleteமனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
tha.ma 2
ReplyDeleteஅருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
உங்கள் தளத்திற்கு நீண்டநாட்களுக்குப் பிறகு வருகிறேன்...கவிதை அருமை..
ReplyDeleteபாறை இடுக்கிலும் ஓர் பூ பூத்ததென்ன ?
ReplyDeleteசில் நேரங்களில் கவிஞர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரியாமல் போகிறது. புரியாவிட்டால் என்ன ?சொல்லத் துடிக்கும் உள்ளத்தின் ஏதோ வெளிப்பாடு என்று நினைத்து அருமை என்று பாராட்டிச் செல்கிறேன். வாழ்த்துக்கள்
ReplyDeletemmm....
ReplyDeleteethaarththa nadai...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி...
’கண்மறைந்து போகிறது வெறுமையின் கடைசித்தடமும்’ என்ற இறுதி வரிகள் விரக்தியின் விளிம்பினை நன்கு எடுத்துக்கூறுவதாக உள்ளது.
ReplyDeleteசோக கீத படைப்புக்கும், பதிவுக்கும் பாராட்டுக்கள்.
விரக்தியின் விளிம்பில் மனத்தின் நிலை குறித்து மிக அருமையாக
ReplyDeleteஉணர்வுக் கவிதை ஒன்றினைத் தந்துள்ளீர்கள் தோழி !! வாழ்த்துக்கள்
தொடரட்டும் மென்மேலும் இன்பக் கவிதைகள் மகிழ்வுடனே .
எவ்வளவு இருந்தாலும் சில நேரங்களில் வெறுமையான சூழல் வந்து கொஞ்சம் மனதை அசைத்து பார்க்கும். கவிதை அருமை.
ReplyDeleteகாரணமே புரியாமல் சில கணங்களில் மனதில் வெறுமை சூழ்வதை நானும் அனுபவித்ததுண்டு. நிதர்சனமான கவிதையின் கனம் என்னுள்ளும்! அருமை!
ReplyDeleteஅருமை....
ReplyDeleteத.ம. 5
மிக அருமை...
ReplyDeleteவணக்கம்...
நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?
அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..
சரியா...?
உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?
அப்போ தொடர்ந்து படிங்க...
ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!
வெறுமை ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு கணத்தில் விரக்தியின் விளிம்புக்குத் துரத்தவே செய்கிறது. ஆனால் கடைசி நிமிடத்தில் பெரிய மனது பண்ணித் தன் தளைகளை அவிழ்த்து விட்டு அது கண்மறைந்து போவதால் தான் பெரும்பாலோர் இவ்வுலகில் உயிர்பிழைத்திருக்கிறோம். நிதர்சனமான உண்மையை வெளிப்படுத்தும் நல்லதொரு கவிதைக்குப் பாராட்டு கீதா!
ReplyDelete// விரக்தியின் விளிம்பு நோக்கி
ReplyDeleteவிரையுந்தோறும வீசப்படுகிறது
ஒரு பாசக்கயிறு.//
பாறைகளின் இடுக்கில் மலர்ந்திட்ட பாசமலர் போல விரக்தியின் இடையே ஒரு பாசக்கயிறு. எல்லோருக்கும் அவ்வப்போது தோன்றும் இனம்புரியாத கவலையை கவிதை வரிகளில் தந்ததற்கு நன்றி!
@ஸ்ரீராம்.
ReplyDeleteஉடனடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.
@2008rupan
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரூபன்.
@Ramani S
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கவிதையை ரசித்தமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்.
@திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.
@kaliaperumalpuducherry
ReplyDeleteநீண்டநாட்களுக்குப் பிறகான வருகைக்கும் கவிதையை ரசித்தமைக்கும் மிக்க நன்றி கலியபெருமாள்.
விரக்தியின் விளிம்பில் உள்ளவர்களுக்கு அதை தடை செய்ய பாசம் இரைஞ்சல் போன்றவையும் தேவைதான் . ஒருவிதத்தில் நல்லதும் கூட .
ReplyDeleteஆழமான பொருளுடைய கவிதை
@ஸ்ரவாணி
ReplyDeleteஅழகாய்ப் பற்றிக்கொண்டீர்கள் கவிமையத்தை. நன்றி ஸ்ரவாணி.
@G.M Balasubramaniam
ReplyDeleteசிலநேர மனநிலைகள்... இதுபோல் சில பிதற்றல்களை உருவாக்கும். பொறுத்துக்கொள்ளவும்.
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.
@Seeni
ReplyDeleteவருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி சீனி.
@திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteதகவலுக்கு நன்றி தனபாலன். சென்று பார்க்கிறேன்.
@வை.கோபாலகிருஷ்ணன்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கவிதை பற்றியக் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி வை.கோ.சார்.
@அம்பாளடியாள் வலைத்தளம்
ReplyDeleteவருகைக்கும் கவிதை பற்றியக் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.
@கோமதி அரசு
ReplyDeleteஅழகாகச் சொன்னீர்கள். தங்கள் வருகைக்கும் கவிதை பற்றியக் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.
@பால கணேஷ்
ReplyDeleteவருகைக்கும் கவிதையை அனுபவித்துக் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி கணேஷ்.
@வெங்கட் நாகராஜ்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குப்பதிவுக்கும் மிக்க நன்றி வெங்கட்.
@suppudu
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுப்புடு.
@கலையரசி
ReplyDeleteமிக அழகான ரசனையான பின்னூட்டம். வருகைக்கும் கவிதையை ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அக்கா.
@தி.தமிழ் இளங்கோ
ReplyDeleteதங்கள் அருமையான கருத்துரை கண்டு மகிழ்ந்தேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
விரக்தியும் வெறுமையும் வாராமல் இருக்காது வாழ்வில். பாசப்பிணைப்புகள் பற்றி இழுக்கும் போது வெறுமை காணாமல் போக அங்கு நிறைவு திரும்ப வந்துவிடும். சக்கரம் போல் சுழன்று கொண்டு தான் இருக்கப் போகிறது. நாம் யாரும் தப்பமுடியாது இதற்கு.
ReplyDeleteஅர்த்தமுள்ளவை பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் ....! தொடர்ந்து வருகிறேன்.
வெறுமைகளின் ஆக்கிரமிப்பு இருந்தாலும் மீறி எழும் தேடல் உணர்ச்சிதான் வாழ்க்கையை இழுத்துச் செல்லும் ரயில் எஞ்சினாய் வாழக்கை வண்டியை இழுத்துச் செல்கிறது. பாறைகளின் கடுமை பூக்களின் எழுச்சியை தடுத்து விடுமா என்ன? அருமையான கவிதை.
ReplyDeleteவெறுமை வெற்றிடமல்ல.எண்ணங்களின் ஓய்வு.பூக்கள் மலரவே .கவிதை உணர்வு பூர்வமாயுள்ளது. வாழ்த்துக்கள் தோழி
ReplyDelete@Iniya
ReplyDeleteவருகைக்கும் அழகான ஆழமானக் கருத்துரைக்கும் மிக்க நன்றி இனியா.
@துரைடேனியல்
ReplyDeleteவருகைக்கும் அற்புதமானக்கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி துரைடேனியல்.
@Geetha M
ReplyDeleteவருகைக்கும் மேலானக் கருத்துரைக்கும் மிக்க நன்றி கீதா.