நிலவொளி
ஊடுருவிக்கொண்டிருக்கும் வாட்டில் மரத்தின் கீழே தங்கள் பழங்கதைகளைப் பேசியபடி இரவைக்
கழித்துக்கொண்டிருந்தனர் இரு வழிப்போக்கர்கள். மிச்செலின் நண்பன் சற்றுமுன்தான் தன் வாழ்க்கையில்
நிகழ்ந்த ஒரு விறுவிறுப்பான சம்பவத்தைப் பற்றி சொல்லி முடித்திருந்தான். இப்போது மிச்செலின் முறை. மிச்செல் உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டுக்
கொண்டிருந்தான். அவன் புகைபிடித்தபடி சற்றுநேரம் யோசித்துக்கொண்டிருந்தான்.
பின்பு சொல்ல ஆரம்பித்தான்.
“ஒரு சின்னப்பெண்
என்னை ஈர்த்திருந்தாள். அவள் என் தங்கையைப் பார்க்க எங்கள் வீட்டுக்கு வருவாள். உலகிலேயே மிக அழகான யுவதி அவளாகத்தான் இருந்திருப்பாளென்று நான் நினைக்கிறேன்.
அவளுக்கு அப்போது பதினெட்டு வயதுதான். அவள் என்
தோள் உயரம் கூட வரமாட்டாள். அவளுடைய நீல நிறக் கண்களைப் போல்
நீ வேறெங்கும் பார்த்திருக்க முடியாது. பளபளப்பான பொன்னிறக் கூந்தல்
அவள் முழங்காலைத் தொடும். அதை உன்னுடைய இருகைகளுக்குள் அடக்கிவிட
முடியாது. ரோஜா,
அல்லி மலர்களைப் போல் மென்மையான தேகம் அவளுக்கு.
அப்படிப்பட்டவள், கரடுமுரடான தோற்றம் கொண்ட,
அவலட்சணமான, படிக்காத, நாகரிகமற்ற
என்னை ஏறெடுத்தும் பார்ப்பாளென்று என்னால் நினைத்தும் பார்க்க முடியவில்லை.
அதனால் எப்போதும் அவள் வழியிலிருந்து விலகியும், அவளைப் பார்த்தால் சற்று விறைப்புடனும் நடந்துகொண்டேன். நான் அவள் பின்னால் அலைவதாக என்னைப்
பற்றி மற்றவர்கள் நினைப்பதை நான் விரும்பவில்லை. ஏனெனில் எனக்குத்
தெரியும் அது நகைப்புக்கிடமான செய்தியாகிவிடும் என்பது. மற்றவர்களை
விடவும் அவளே என்னைப் பார்த்து அதிகமாய் நகைக்கவும் கூடும்.
அவள் தானாகவே
என்னிடம் வந்து பேசுவாள். என்னருகில் பலகையில் அமர்வாள். ஆனால் அவையெல்லாம் அவளுடைய
இயல்பான சுபாவம் என்று நினைத்திருந்தேன். மேலும் ஒரு அவலட்சணமான
அறிவிலியான என்மீது கொண்ட பரிதாபமும் காரணமாக இருக்கலாம் என்றும் நினைத்தேன்.
நான் அந்தப்
பெண்ணால் ஈர்க்கப்பட்டிருந்தேன்,
விளையாட்டல்ல, உண்மைதான். கற்பனையில் என் மனைவியாய் அவளை நினைத்து பெருமிதமும் அடைந்திருந்தேன்.
ஆனால் அதை அவளறியாமல் பார்த்துக்கொண்டேன். ஏனெனில்
எனக்கு உறுதியாகத் தெரியும் அவள் அதைக் கேட்டால் சிரிப்பாள் என்று.
நிலைமை
இப்படியே போய்க்கொண்டிருக்கும்போதுதான் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு எல்லைப்பகுதியில்
உள்ள கால்நடைப் பண்ணையில் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் கட்டாயம் போயாகவேண்டிய
சூழலிருந்தேன். ஏனெனில் என்னிடம் அப்போது பணமே இல்லை.
மேலும் நான் அங்கிருந்து வெளியேற விரும்பினேன். அவள் வளையவரும் இடத்திலேயே நான் இருப்பது என்னை மேலும் சிரமப்படுத்தியது.
நான் புறப்பட்ட
இரவன்று அனைவரும் என்னை வழியனுப்ப புகைவண்டி நிலையத்துக்கு வந்திருந்தனர். அந்தப்பெண்ணும் வந்திருந்தாள்.
புகைவண்டி கிளம்பத் தயாராக இருந்தது. அவள் நிலையத்தின்
கோடியில் இருளில் தனியாக நின்றிருந்தாள். என் தங்கை என்னை முழங்கையால்
இடித்தும் கண்சாடை காட்டியும் எனக்கு எதையோ புரியவைக்க முயன்றாள். ஆனால் என்னால் அவள் குறிப்பைப் புரிந்துகொள்ள இயலவில்லை. முடிவில் அவள் சொன்னாள்,
“போய் அவளிடம் பேசு, மரமண்டை, போய்
ஏடியிடம் விடைபெற்றுக்கொள்”
அவள் சொன்னதால் பிறர் அறியாமல் நான் ஏடி
நின்றிருந்த இடத்துக்குப் போனேன்.
“சரி, நான் போய்வருகிறேன் மிஸ். ஏடி பிரவுன்” கை கொடுத்தபடி சொன்னேன். “நான் மறுபடியும் உன்னைப் பார்ப்பேனா என்று தெரியவில்லை. ஏனென்றால் நான் எப்போது திரும்பிவருவேன் என்பது கடவுளுக்குதான் தெரியும்.
என்னை வழியனுப்ப வந்ததற்கு நன்றி.”
அவள் வெளிச்சத்தில் முகத்தைத் திருப்பியபோதுதான்
கவனித்தேன், அவள் அழுதுகொண்டிருப்பதை. அவள் உடல் முழுவதும் நடுங்கிக்கொண்டிருந்தது.
சட்டென்று அவள் ‘ஜாக்..ஜாக்..’
என்று சொல்லிக்கொண்டே என் கைகளை இறுக்கமாய்ப் பற்றிக்கொண்டாள்.”
மிச்செலின்
குரல் அவனுடையதைப் போலவே இல்லை.
மிச்செல் நிச்சலனத்துடன் நெருப்பின்மீது நிலைக்குத்திய கண்களுடன் இருந்தான்.
“நீ அவளை அணைத்து முத்தமிட்டிருப்பாய் என்று
நான் நினைக்கிறேன்” என்றான் நண்பன் அவனைக் கவனித்தபடி.
“நானும் அப்படி சொல்லத்தான் நினைக்கிறேன். ஆனால் ஆண்கள் பொய் சொல்ல
விரும்பாத சில விஷயங்களும் இருக்கின்றனவே… ம்.. இப்போது கெட்டிலை சூடுபடுத்தி கொஞ்சம் தேநீர் அருந்தலாம் என்று நினைக்கிறேன்.”
“என்றாவது ஒருநாள் நீ போய் அவளைத் திருமணம்
செய்துகொள்வாயல்லவா?”
“ஹூம்… என்றாவது ஒருநாள்! அந்தநாள்
என்று? நாம் எல்லோருமே சொல்லிக்கொண்டிருக்கிறோம் ‘என்றாவது ஒருநாள்’. நான் இதை பத்து வருடங்களுக்கு முன்
சொல்லிக்கொண்டிருந்தேன். இப்போது என்னைப் பார். ஐந்து வருடங்கள் அங்குமிங்கும் அலையாய் அலைந்து கொண்டிருந்தேன். கடந்த இரண்டு வருடங்களாக இங்கு நிலையாக இருக்கிறேன். இதை விட்டு வெளியேறும் அறிகுறி தெரியவில்லை. வேறொன்றுக்குப்
போனாலும் இதுவரை உழைத்த உழைப்பினால் என்ன லாபம்?
கையில் ஒரு பைசாவும்
இல்லாமல் பையில் ஒரு கந்தைத்துணியும் இல்லாமல் நான் வீட்டுக்குப் போய் திருமணம் செய்வதென்பதை
யோசித்துப் பார். பணப்பட்டுவாடா முடியாமல் நான் இங்கிருந்து போகப்போவதில்லை.
பணப்பட்டுவாடா செய்யும் நாளும் கடந்துவிட்டது. இந்தக் காலணிகளைப் பார். நகரத்தில் நாம் போய் நின்றால்
நம்மை பரதேசி அல்லது பிச்சைக்காரர்கள் என்பார்கள்.
உண்மையில்
நமக்கும் அவர்களுக்கும்தான் பெரிதாய் என்ன வித்தியாசம்? நான் ஒரு முட்டாளாக இருந்திருக்கிறேன்.
எனக்கே தெரிகிறது. அதற்கான பலனைத்தான் இப்போது
அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். இப்போது செய்வதற்கு ஒன்றுமில்லை…
ஒருவேளை உணவுக்காக அங்கும் இங்கும் ஓடியோடிக்கொண்டிருக்கிறோம்.
வயதாகும்வரை… நம்மைப் பற்றிய சிரத்தைக்குறையும்வரை…
உடல் அழுக்கடையும்வரை… இந்த ஓட்டம் தொடரும்.
இன்னும் வயதாகும்… இன்னும் சிரத்தைக் குறையும்…
இன்னும் அழுக்கடைவோம். இப்படியே இந்த மண்ணுக்கும்
புழுதிக்கும் வெக்கைக்கும் ஈக்களுக்கும் கொசுக்களுக்கும் பழகிப்போவோம்.
இலக்கைத் தொலைத்து நம்பிக்கையைக் கைவிட்டு ஒரு மாடு மாதிரி கால்நடை வாழ்க்கையில்
ஈடுபடுத்திக்கொள்கிறோம். ஒரு நாயைப் போல போகுமிடமெல்லாம் நம்மோடு
வருகிறது உடலின் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட இந்த முதுகுப்பை. அது
இல்லாவிடில் சுமையற்றத் தோள்களும் எதையோ இழந்தது போலான தவிப்பும் நம்மை இயல்பாயிருக்க
விடுவதில்லை.
இந்த வேலை
முடிந்துவிட்டால் அடுத்த வேலை கிடைக்குமா என்கிற கவலையையும் விட்டுவிட்டோம். ஒரு நாடோடியைப் போல சுற்றித்திரிகிறோம்.
ஒரு மனிதனின் இதயமிருக்கும் இடத்தில் ஒரு எருதின் ஆன்மா இருக்கும்வரை
வாழ்க்கை இப்படித்தான் போய்க்கொண்டிருக்கும்.
நமக்கென்று
கவலைப்பட யார் இருக்கிறார்கள்?
நேற்று இந்தப்பாதையைக் கண்டுபிடிக்க முடியாமல் போயிருந்தால் என்ன நேர்ந்திருக்கும்?
எவர் பார்வையிலும் படாமல் லிக்னம் புதர்ச்செடிகளின் நடுவே பிணமாய் அழுகி
நாறிக் கிடந்திருப்போம். ஒருவேளை யாராவது நம்மைப் பார்க்கநேர்ந்தாலும்
அவர்கள் தங்கள் பயணத்தைக் கைவிட்டுவிட்டு உலகுக்கு நம்மைப் பற்றித் தகவல் தெரிவிக்க
விழையப்போவதில்லை. ச்சே.. என்ன உலகம் இது!”
சங்கடப்படுத்தும்
அமைதியின் நடுவே அவன் புகைபிடித்து ஆசுவாசப்படுத்திக்கொண்டான். தன் புகைக்குழாயிலிருந்து
சாம்பலைத் தட்டியவாறே ஆயாசத்துடன் சொன்னான்.
“ஹூம்… இன்று நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன்.
இப்போது படுக்கைக்குப் போவது நல்லதென்று நினைக்கிறேன். நாளை இந்த வறண்ட நிலத்தில் நீண்டதொரு பயணம் நமக்கிருக்கிறது.”
அவர்கள்
முதுகுச்சுமையாய் சுருட்டிவைக்கப்பட்டிருந்த படுக்கையை மண்ணில் விரித்துப் படுத்தனர். போர்வையால் போர்த்திக்கொண்டனர்.
நிலவொளியும் காற்றும் அவனை தூங்கவிடாமல் விழித்திருக்கச் செய்வதை விரும்பாத
மிச்செல், ஒரு காலிகோ துணியை எடுத்து முகத்தை மூடிக்கொண்டான்.
*********************************************************************************
(மூலம்: ஹென்றி லாசன் எழுதிய ‘Some Day’ என்னும் ஆங்கில ஆஸ்திரேலியக் காடுறை கதை)
முடிவில்லாத வெறுமை.
ReplyDeleteசே.. என்ன உலகம் இது...?
ReplyDeleteபரிதாப வாழ்க்கையொன்றின் நல்ல சித்திரம் . அருமையான மொழிபெயர்ப்பு . பாராட்டுகிறேன் .
ReplyDeleteகதை மாந்தர்கள் படுத்துத் தூங்கினார்களோ இல்லையோ
ReplyDeleteஇதை படித்தவர்களால் நிச்சயம் தூங்குவது கடினமே
அற்புதமான கதை
சொல்லிச் சென்றவிதமும்
வார்த்தைப் பிரயோகங்களும் அற்புதம்
அருமையான பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
tha.ma 3
ReplyDeleteமொழியாக்கம் அருமை. காதல் உணர்வுகள் இனிமை. தூங்க முடியாத துக்கம் தான் இறுதியில் தொண்டையை அடைப்பதாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteமுடிவில்லாத கதை...
ReplyDeleteஅழகாக மொழிபெயர்த்துள்ளீர்கள்...
வணக்கம் தோழி!
ReplyDeleteநலமா? நீண்ண்ண்ட இடைவெளியாயிற்றே...அதுதான் காணாதமையால் கேட்டேன்...:)
மொழிபெயர்புக்கதையானாலும் அதன் கரு என்னை ஆழமாகச் சிந்திக்கவைத்தது.
இல்லாத வர்க்கம் வாழ்க்கைப் போராட்டம், காதல், கனவுகள் என்று மிக மிகத் துன்பம்!..
உள்ளத்தில் உட்புகுந்து ஐயோ என பரிதாபப் படவைக்கும் காட்சிகளைக் மனதில் நிழலாட வைத்த கற்பனை, எழுத்துத் திறமை.
அருமை! வாழ்த்துக்கள்!
த ம.4
ReplyDeletemanathai nekila vaithullathu .nandri
ReplyDeleteஒரு மாக்ரோ லெவல் லேந்து பார்க்கும்போது, நாம் எல்லோருமே
ReplyDeleteஇது போல ஒரு பயணம் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.
எங்கிருந்து வந்தோம், எங்கு செல்கிறோம், எப்போது சென்று அடைவோம் , என எதுவுமே தெரியாது,
வழியில் விழியை ஈர்த்தவர் தம் வசமிழந்து
வலுவிலே தம் வலிகளை க்கூட்டி வசதிகளைப் பெருக்கி
வாழ்வின் மாலையிலே கூட்டிக் கழித்து பார்த்தால்,
வகுத்தான் வகுத்த வழி அல்லார் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது
எனும் உண்மை புரியத்தான் செய்கிறது.
இது முடிவில்லா வெறுமை என ஸ்ரீராம் சொல்கிறார்.
இல்லை.
இது முடிவில்லா மாயை.
சுப்பு தாத்தா.
மனதைத்தொடும் அழகிய மொழிபெயர்ப்பு!
ReplyDelete@ஸ்ரீராம்.
ReplyDeleteஇது கிட்டத்தட்ட நூற்றைம்பது, இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பியர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறிய காலத்தில் நிகழ்ந்த கதை. இந்தக்கதையை வாசிக்கும்போது இன்று மத்தியக்கிழக்கு நாடுகளில் அவதிப்படும் அடிமட்டத் தொழிலாளிகளின் நினைவு வந்து மனம் கனத்தது.
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.
@திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteமிகவும் வருத்தம் தரும் இந்நிலை இன்றும் தொடர்வது வேதனை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.
@சொ.ஞானசம்பந்தன்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கதை பற்றியக் கருத்துக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி.
@Ramani S
ReplyDeleteதங்கள் வருகைக்கும் மனந்தொட்ட அருமையானப் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்.
@Ramani S
ReplyDeleteநன்றி ரமணி சார்.
@வை.கோபாலகிருஷ்ணன்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் நெகிழ்வான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி வை.கோ.சார்.
@வெற்றிவேல்
ReplyDeleteவருகைக்கும் கதை பற்றியக் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி வெற்றிவேல்.
@இளமதி
ReplyDeleteநலமே தோழி. நீண்ண்ண்ட இடைவெளிதான். சில வேலைப்பளுவால் வர இயலவில்லை. இனி தொடர்ந்து வரவியலும் என்று நம்புகிறேன்.
வருகைக்கும் கதை பற்றிய ஆழமானக் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி இளமதி.
@இளமதி
ReplyDeleteநன்றி இளமதி.
@Geetha M
ReplyDeleteவருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பான நன்றி கீதா.
@sury Siva
ReplyDeleteமிக அழகாக கதையின் கருவை உள்வாங்கி விமர்சித்துள்ளீர்கள். தங்கள் அனுபவம் எங்களுக்கு இங்கே வரம். அற்புதமான நெகிழவைக்கும் பின்னூட்டத்துக்கு அன்பான நன்றி சுப்பு தாத்தா.
@Chellappa Yagyaswamy
ReplyDeleteவருகைக்கும் கதை பற்றியக் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா.
மனதை கனக்க வைத்த கதை.
ReplyDeleteஹப்பா... உங்கள் வார்த்தைப்படுத்தலின் காரணமாக மிசசெலின் உணர்வுகள் அப்படியே என்னுள்ளும் உணர முடிந்தது. படித்து முடிக்கையில் மனதில் ஒரு பாரம்!
ReplyDeleteநம்பிக்கை இழந்த அவல வாழ்வு, என்ன செய்வது என்று புரியாத மனம் விரும்பவும் முடியாமல் விடவும் முடியாமல் தொடர வேண்டிய வாழ்க்கை, அழகாக சொல்லிப்போன விதம்.... பாராட்டுக்கள்.
ReplyDeleteமனம் கணக்க வைத்த கதை தோழி..இப்படி தான் இன்றும் பலரின் நிலைமை உள்ளது...
ReplyDeleteஅழகாய் மொழிபெயர்த்துள்ளீர்கள். நன்றி!
மொழியாக்கம் அருமை... மனதை கனக்க வைத்த கதை...
ReplyDeleteகதை நன்றாகவும், வித்தியாசமாகவும் இருந்தது.
ReplyDeleteஇனிமை. மொழிபெயர்ப்பிற்கு நன்றி கீதா.
தாங்கள் கொழும்பில் உள்ள என் தங்கை மகள் பொல உள்ளீர்கள்.
பல காலமாகச் சொல்ல நினைத்து நினைத்து இன்று எழுதுகிறேன் முகநூலிலும் உள்ளார்
வேதா. இலங்காதிலகம்.
அழகிய கதை. font கலர் ஒண்ணுமே தெரியுதில்லையே.. ஹைலைட் பண்ணித்தான் படிச்சேன்ன்.
ReplyDeleteபயந்திடாதீங்க... அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல.. எல்லாம் நல்லாத்தான் இருக்கு:)) அதிரா உப்பூடித்தான் அப்ப அப்ப ஏதும் சொல்லிடுவேன்ன்ன்ன்:)).
ReplyDelete@கோமதி அரசு
ReplyDeleteவருகைக்கும் கதை பற்றியக் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.
@பால கணேஷ்
ReplyDeleteநம்மில் பலருடைய உணர்வுகளுடனும் ஒத்துப்போகும் கதைக்கரு. என்னையும் பாதித்ததன் விளைவே மொழியாக்கம். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கணேஷ்.
@G.M Balasubramaniam
ReplyDeleteகதையைப் பற்றிய நேர்த்தியான விமர்சனம். வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.
@கிரேஸ்
ReplyDeleteவருகைக்கும் கதை பற்றியக் கருத்துரைக்கும் மிக்க நன்றி கிரேஸ்.
@ADHI VENKAT
ReplyDeleteவருகைக்கும் கதை பற்றியக் கருத்துக்கும் மிக்க நன்றி ஆதி.
@kovaikkavi
ReplyDeleteவருகைக்கும் கதை பற்றியக் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி.
முகப்புத்தகத்தில் என் புகைப்படம் பார்த்தபோதே என்னை முன்பே பார்த்ததுபோல் இருக்கிறது என்றிருந்தீர்கள். இப்போதுதான் காரணம் புரிகிறது. மிக்க மகிழ்ச்சி.
@asha bhosle athira
ReplyDelete\\அழகிய கதை. font கலர் ஒண்ணுமே தெரியுதில்லையே.. ஹைலைட் பண்ணித்தான் படிச்சேன்ன்.\\
சிலசமயம் தளம் லோடு ஆக கொஞ்ச நேரம் பிடிக்கும். அப்போது எல்லாப்பகுதியும் கருநீலநிறத்தில் காட்சியளிக்கும். அப்படிப்பட்ட சமயத்தில் கதையை வாசித்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அதனால்தான் வாசித்தலில் சிரமம் இருந்திருக்கிறது. லோடு ஆனபின்பு எழுத்துக்கள் இருக்கும் பகுதி வெள்ளை நிறத்தில் தெளிவாக இருக்கும். எனக்கும் சில சமயங்களில் அப்படி நேர்வதுண்டு. கஷ்டப்பட்டாவது இந்தக் கதையை வாசித்தமைக்கும் கருத்திட்டமைக்கும் அன்பான நன்றி அதிரா.
கொஞ்சநாளாய் வலைப்பக்கம் வரவில்லை. அதற்குள் ஆஷா போன்ஸ்லே ஆகிட்டீங்களே... பாராட்டுகள்.
வெகு நாட்களுக்கு பின்னர் ஒரு அருமையான வாசிப்பனுபவத்தை தந்ததற்கு வெறும் நன்றி என்கிற மூன்றெழுத்து வார்த்தை மட்டும் போதாது என்கிற உறுத்தலுடன் நன்றி ....
ReplyDeleteஇம்மாதிரி வாசிப்பனுபவங்கள் செழுமைதர வல்லவை... அதற்காக ஒரு நெகிழ்ந்த நன்றி..
@Mathu S
ReplyDeleteமனம் நெகிழச்செய்யும் கருத்துரை. உளமார்ந்த நன்றி தங்களுக்கு.