நானே புரிந்துகொள்ள இயலாத
சில திரைமறைவு ரகசியங்களை…
விளக்கப்படாத விவரங்களை…
ஒருவேளை…
உனக்கு நான் புரியவைக்கக்கூடும்.
உன் பார்வை துளைத்த
வினாக்களுக்கான விடைகளை
ஒருவேளை..…
என்றேனும் நான் உனக்குக்
கையளிக்கக்கூடும்.
உள்ளுக்குள் பின்னிப் பின்னி
குமைந்துகொண்டிருக்கும் கனவுகளின்
முறுக்கிழைச் சிக்கல்களை
ஒருவேளை…..
என்றேனும் நான் எளிதாய்
விடுவிக்கக்கூடும்.
மின்மினிகள் சிதறிக்கிடக்கும்
நிலாக்கால இரவுகளில்
கையோடு கை பிணைத்திருந்த
அத்தருணங்களோடு மற்றுமிரண்டை
ஒருவேளை….
நான் மறுபடியும் பெறக்கூடும்.
நான் காணும் சொப்பன உலகின்
கண்கவர் காட்சியழகை
மனமயக்கும் மாட்சியழகை
ஒருவேளை…
உன்னையும் நான் காணச்செய்யக்கூடும்.
திருப்பமொன்று வந்துவிட,
இணைந்திருந்த நாமிருவரும்
தனித்தனியாய் ஆனோம் என்னும்
அந்த கசப்பான உண்மையை
ஒருவேளை…
நான் பொய்யென மறுக்கவும் கூடும்.
*******************
*******************
(கமலேஷ் பாண்டே அவர்கள் எழுதிய ‘காஷ்’ என்னும் இந்திக்கவிதையின் தமிழாக்கம். அதீதம் இதழில் வெளிவந்தது.)
படம்: நன்றி இணையம்.
மொழிப்பெயர்ப்பு மிகவும் அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
இந்த ' ஒருவேளை ' என்ற சொல்லில்தான் எத்தனை
ReplyDeleteஎத்தனை அர்த்தங்கள்.!
வேலையிடையே 'ஒரு வேளை ' நான் வராமல் போயிருந்தால் இந்த அழகான கவிதையை ரசிக்க முடியாமல் போயிருக்குமோ?
ReplyDeleteஅற்புதமான உணர்வு பூர்வமான கவிதை
ReplyDeleteதமிழாக்கம் மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
tha.ma 2
ReplyDeleteசிறப்பான மொழிபெயர்ப்பு அருமை.
ReplyDeleteஅருமையான வரிகள்..!
ReplyDeleteஅதீதம் இதழில் வெளிவந்தது. வாழ்த்துகள்
அருமை. கடைசி பாரா விளக்குகிறது ஆசைக் கனவுகளின் காரணத்தை.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteகவிதையின் வரிகள் மிக உணவு மிக்கவை. அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-.
வணக்கம்
ReplyDeleteகவிதையின் வரிகள் மிக உணர்வு மிக்கவை. அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-.
வணக்கம்
ReplyDeleteத.ம 4வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-.
//நான் காணும் சொப்பன உலகின்
ReplyDeleteகண்கவர் காட்சியழகை
மனமயக்கும் மாட்சியழகை
ஒருவேளை…
உன்னையும் நான் காணச்செய்யக்கூடும்.//
மிகவும் ரஸித்தேன். அருமையான தமிழாக்கம். இனிமையான சொல்லாடல்.
அதீதம் இதழில் வெளிவந்ததற்கு வாழ்த்துகள்
சிறப்பான மொழிபெயர்ப்பு.. பாராட்டுகள்..
ReplyDeleteஒருவேளை என்றான உணர்வோலை மிக அருமை!
ReplyDeleteஉணர்வும் மெருகும் அப்படியே வருமாறு
மொழியாக்கம் செய்வதில் மிகத் திறமைசாலிதான் நீங்கள்!
வாழ்த்துக்கள் தோழி!
த ம.5
தங்களின் மொழியாக்கமும் கவிதையும் கண்டு பெருமைப்படுகின்றேன் .
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழி .
கசப்பான உண்மையை எதிர்கொள்ள முடியாவிட்டால் அதை பொய் என்று கூறுவதிலும் மக்ழ்ச்சி இருக்கலாம். (நான் புரிந்து கொண்ட விதத்தில் )
ReplyDeleteசுவையாக உள்ளது! மொழி பெயர்ப்பு!
ReplyDeleteதாங்கள் ரசித்ததை
ReplyDeleteரசனை குறையாமல்
யாமும் ரசிக்கும் படி!
நேர்த்தியான மொழிபெயர்ப்பு !!
நினைவைவிட்டு அகலா
மொழிபெயர்ப்பு !!
இரசித்தேன்! அருமை! நன்றி!
ReplyDeleteநல்ல கவிதை. அருமையான தமிழாக்கம்.
ReplyDeleteஒருவேளை பலரும் பயன்படுத்தும் சொல்லே ஆனாலும் கவிதைப் பரிமளிக்கும் போது இத்தனை வண்ணத்தைக் காட்டி விடுகின்றது . பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஅருமையான கவிதை கீதமஞ்சரி..... வாழ்த்துகள்.
ReplyDeletePadithen; rasithen!
ReplyDeleteநல்ல கவிதை...
ReplyDeleteதிருப்பத்தின் திடீர் முடிவு நினைவில் நிற்கும்..
அருமையான உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளுறையாக சோகத்தைகாட்டுகிறது.நன்றி
ReplyDeleteதிருப்பமொன்று வந்துவிட,
ReplyDeleteஇணைந்திருந்த நாமிருவரும்
தனித்தனியாய் ஆனோம் என்னும்
அந்த கசப்பான உண்மையை
ஒருவேளை…
நான் பொய்யென மறுக்கவும் கூடும்.///
மறக்கவும் கூடுமோ...!
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!
@திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteமுதல் வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி தனபாலன்.
@ஸ்ரவாணி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.
@உஷா அன்பரசு
ReplyDeleteஅழகானப் பின்னூட்டம். ரசித்தேன். மிக்க நன்றி உஷா.
@Ramani S
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்.
@Ramani S
ReplyDeleteநன்றி ரமணிசார்.
@கவியாழி கண்ணதாசன்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
@இராஜராஜேஸ்வரி
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்.
@ஸ்ரீராம்.
ReplyDeleteசரியான புரிதல். நன்றி ஸ்ரீராம்.
@Rupan com
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரூபன்.
@2008rupan
ReplyDeleteநன்றி ரூபன்.
@வை.கோபாலகிருஷ்ணன்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி வை.கோ.சார்.
@ADHI VENKAT
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஆதி.
@இளமதி
ReplyDeleteஉங்கள் பாராட்டு இன்னும் உத்வேகம் தருகிறது. நன்றி இளமதி.
@அம்பாளடியாள் வலைத்தளம்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.
@G.M Balasubramaniam
ReplyDeleteமிகச்சரி ஐயா. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தங்களுக்கு.
@புலவர் இராமாநுசம்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.
@Mythily kasthuri rengan
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசித்துமகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி மைதிலி.
@Seshadri e.s.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.
@ராமலக்ஷ்மி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
@சந்திரகௌரி
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கவிதையை ரசித்தமைக்கும் மிக்க நன்றி சந்திரகௌரி.
@வெங்கட் நாகராஜ்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வெங்கட்.
@ஆறுமுகம் அய்யாசாமி
ReplyDeleteதங்கள் வருகைக்கும் படித்து ரசித்தமைக்கும் மிக்க நன்றி தங்களுக்கு.
@Mathu S
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கவிதையை ரசித்து இட்டக் கருத்துக்கும் மிக்க நன்றி தங்களுக்கு.
@Geetha M
ReplyDeleteவருகைக்கும் நேரிய புரிதலுக்கும் மிக்க நன்றி கீதா.
@இராஜராஜேஸ்வரி
ReplyDeleteநன்றி மேடம்.