பதிவுலகில் நான் பெறும் முதல் விருது. விருதுகளுக்காய் மனம்
ஏங்காவிடினும் விருது என்பது ஒரு அங்கீகாரம். நம்மை நம்பி அளிக்கப்படும் விருதின் பெருமையை
நிலைநாட்டுவதும் அதன் பெருமையைக் குலைக்காவண்ணம் நடந்துகொள்வதும் நமது கடமை.
'தமிழ்க்கவிதைகள் தங்கச்சுரங்கம்’ வலைப்பூவின் மூலம் தோழி ஸ்ரவாணியிடம் இருந்து ‘Liebster’ என்னும் விருதினைப் பெறுவதில் மிகவும் மகிழ்கிறேன்.குறுகிய காலத்திலேயே அவரது அபிமான வலைப்பூக்களுள் ஒன்றாய் கீதமஞ்சரி இருப்பது குறித்து பெருமிதம் கொள்கிறேன். மனமார்ந்த நன்றி ஸ்ரவாணி. அவருடைய பதிவைக் காண இங்கே சொடுக்கவும்.
'Liebster’ என்றால் ஜெர்மானிய மொழியில் ‘எனக்குப் பிடித்த’
என்னும் பொருள்படுமாம். எனக்குக் கிடைத்த இவ்விருதினை விதிகளுக்குட்பட்டு எனக்குப்
பிடித்த வலைப்பூக்களுள் ஐந்தினுக்குப் பகிர்வதில் மிகவும் மகிழ்கிறேன். அவர்கள் இவ்விருதினைத் தாங்கள் ஏற்றுக்கொண்டதன் அடையாளமாகத் தங்கள் வலைப்பூவில் இதனை நகலை ஒட்டிக்கொள்ளவும். தொடர்சங்கிலி அறுந்துவிடாமலிருக்க, தாங்கள் விரும்பும் ஐந்து வலைப்பூக்களுக்குப் பரிந்துரைக்கவும். நன்றி.'தமிழ்க்கவிதைகள் தங்கச்சுரங்கம்’ வலைப்பூவின் மூலம் தோழி ஸ்ரவாணியிடம் இருந்து ‘Liebster’ என்னும் விருதினைப் பெறுவதில் மிகவும் மகிழ்கிறேன்.குறுகிய காலத்திலேயே அவரது அபிமான வலைப்பூக்களுள் ஒன்றாய் கீதமஞ்சரி இருப்பது குறித்து பெருமிதம் கொள்கிறேன். மனமார்ந்த நன்றி ஸ்ரவாணி. அவருடைய பதிவைக் காண இங்கே சொடுக்கவும்.
யான் பெற்ற இன்பமும் ஊக்கமும் பெறுக இவ்வலைப்பூக்களும்! அனைவரையும் மேலும் மகிழ்விக்க ஆர்க்கிட் மலர்களின் அணிவகுப்பு.
1. உளவியல்
தொடர்பான கட்டுரைகளாகட்டும், உளம் கவர் கவிதைகளாட்டும், அழகான மனம் வசீகரிக்கும் வாழ்வியல்
வழிமுறைகளாகட்டும், என் மனம் கவர்ந்த வலைப்பூவென முதலில் மணம் வீசுவது, மகிழம்பூச்சரம்.
தோழி சாகம்பரிக்கு என் மனங்கனிந்த வாழ்த்து.
2. அருமையான இலக்கியப்பகிர்வுகள், அந்தக்கால நினைவுகள், நாம் அறியாத அயல்மொழி இலக்கியங்கள், அவற்றுக்கான தேர்ந்த மொழிபெயர்ப்புகள் இவற்றால் நித்தமும் நனையவைக்கும் இலக்கியச்சாரல் என் அடுத்தத் தேர்வு. இறகுப்பேனாக்காலம் முதல் கணினிக்காலம் வரை தமிழுடன் தொடர்ந்திருப்பதோடு, தன் முதிய வயதிலும் புத்துணர்வுடன், பதிவுலகில் நம்மோடு கைகோர்த்திருக்கும் என் மதிப்பிற்குரிய மாமனார் சொ.ஞானசம்பந்தன் அவர்களுக்கு என் உளம் நிறைந்த வாழ்த்து.
3. நம் பாரம்பரியங்களின் மேல் கொண்ட அலாதிப்பிரியங்களை, தன் ஆழ்மனப் பரிதவிப்புகளை, காலமாற்றத்தின் அவதிகளை அழகாக நேர்த்தியாக நம் மனம் தொடும் விதத்தில் கவிதைகளாய்ப் நகலெடுத்து என் மனதில் எதிரொலிக்கச் செய்யும் சக்தியின் குரல். சக்தி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்து.
4. கதை, கவிதை, கட்டுரை, பயணம், அனுபவம், ஆல்பம் என்று பல்சுவை கொண்ட எழுத்துக்களால் பல தளங்களில் அறியப்பட்டவரும், பதிவுலகில் புதிதாய்க் கால் பதித்திருப்பவரும் என் எழுத்துக்கு உந்துகோலாய், இணைய தளங்களுக்கு வழிகாட்டியாய், என் தோழியாய், உற்ற நட்பாய், நல் ஆலோசகராய் துணைவருபவருமான என் இனிய நாத்தனார் கலையரசி அவர்களின் ஊஞ்சல். அவருக்கும் என் அன்பு வாழ்த்து.
5. இயற்கையை, காதலை, இயல்பை, மனிதத்தை என்று எதை எடுத்தாலும் தன் தனித்துவம் பதித்து, வியக்கவைக்கும் கவிதைகள் மூலம் வெயில்நதியிலும் இதமாய் இளைப்பாறவைக்கும் இயற்கைசிவம் அவர்களுக்கு என் இனிய வாழ்த்து.
2. அருமையான இலக்கியப்பகிர்வுகள், அந்தக்கால நினைவுகள், நாம் அறியாத அயல்மொழி இலக்கியங்கள், அவற்றுக்கான தேர்ந்த மொழிபெயர்ப்புகள் இவற்றால் நித்தமும் நனையவைக்கும் இலக்கியச்சாரல் என் அடுத்தத் தேர்வு. இறகுப்பேனாக்காலம் முதல் கணினிக்காலம் வரை தமிழுடன் தொடர்ந்திருப்பதோடு, தன் முதிய வயதிலும் புத்துணர்வுடன், பதிவுலகில் நம்மோடு கைகோர்த்திருக்கும் என் மதிப்பிற்குரிய மாமனார் சொ.ஞானசம்பந்தன் அவர்களுக்கு என் உளம் நிறைந்த வாழ்த்து.
3. நம் பாரம்பரியங்களின் மேல் கொண்ட அலாதிப்பிரியங்களை, தன் ஆழ்மனப் பரிதவிப்புகளை, காலமாற்றத்தின் அவதிகளை அழகாக நேர்த்தியாக நம் மனம் தொடும் விதத்தில் கவிதைகளாய்ப் நகலெடுத்து என் மனதில் எதிரொலிக்கச் செய்யும் சக்தியின் குரல். சக்தி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்து.
4. கதை, கவிதை, கட்டுரை, பயணம், அனுபவம், ஆல்பம் என்று பல்சுவை கொண்ட எழுத்துக்களால் பல தளங்களில் அறியப்பட்டவரும், பதிவுலகில் புதிதாய்க் கால் பதித்திருப்பவரும் என் எழுத்துக்கு உந்துகோலாய், இணைய தளங்களுக்கு வழிகாட்டியாய், என் தோழியாய், உற்ற நட்பாய், நல் ஆலோசகராய் துணைவருபவருமான என் இனிய நாத்தனார் கலையரசி அவர்களின் ஊஞ்சல். அவருக்கும் என் அன்பு வாழ்த்து.
5. இயற்கையை, காதலை, இயல்பை, மனிதத்தை என்று எதை எடுத்தாலும் தன் தனித்துவம் பதித்து, வியக்கவைக்கும் கவிதைகள் மூலம் வெயில்நதியிலும் இதமாய் இளைப்பாறவைக்கும் இயற்கைசிவம் அவர்களுக்கு என் இனிய வாழ்த்து.
இவற்றில் என் உறவுகள் இருவர் இருந்தாலும் உறவினைப் பின்னிறுத்தி
அவர்களின் எழுத்துக்களையே முன்னிறுத்தி இவ்விருதினைப் பரிந்துரைக்கிறேன். இளம்பதிவர்களுக்கு
மகிழ்வையும் ஊக்கத்தையும், பிரபல பதிவர்களுக்கு இது மேலும் உற்சாகத்தையும் வழங்குமென்று
நம்புகிறேன். அனைவருக்கும் மீண்டும் எனது நல்வாழ்த்துக்கள்.
விருதினைப் பெற்றமைக்கும்
ReplyDeleteதகுந்த நபர்களைத் தேர்ந்தெடுத்து
விருதினைப் பகிர்ந்தமைக்கும்
மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
விருது பெற்றமைக்கும்,வழங்கியமைக்கும் வாழ்த்துகள்.உங்கள் உறவினர் என்று குறிபபிட்டிருப்பவர்கள் எனக்கு மிகவும் புதிது.அவர்களின் லிங்க் தெரிவித்தால் நேரம் இருக்கும்போது சென்று பார்க்கிறேன்.
ReplyDeleteவிருது பெற்ற உங்களுக்கும் உங்களிடம் பெறும் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்..நானும் இது குறித்துதான் பதிவிட்டிருக்கிறேன்.முடிந்தால் பார்வையிடவும்..
ReplyDeleteவிருது பெற்றதுக்கு வாழ்த்துகள்..
ReplyDeleteவிருதிற்கு மிக்க நன்றி கீதா. உணரவுபூர்வமான எழுத்துக்களை பதியப்பெற்ற கீதமஞ்சரி ஆரம்பத்திலிருந்தே என் மனம் கவர்ந்தது. இங்கிருந்து பரிந்துரைக்கப்படும் விருது பெருமைக்குரியது. Liebster என்பதன் பொருளுக்கேற்ப மகிழம்பூச்சரத்தின் இனி வரும் பதிவுகளும் இருக்கும் என்று உறுதி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு பிடித்த வலைப்பூக்களுக்கு இந்த விருதினை வழங்கும் பதிவை தொடர்கிறேன். நன்றி.
ReplyDeleteவிருதுபெற்ற உங்களுக்கும் ,உங்களிடமிருந்து விருது பபெறும் மற்ற ஐவருக்குமாய் வாழ்த்துக்கள்,நன்றி வணக்கம்.
ReplyDeleteமிக்க நன்றி கீதா !ஆயிரம் தத்துவங்கள் சொல்லும் மனதும்
ReplyDeleteசிறு தலையசைப்பை எதிர்பார்க்கிறதே !நான் எம்மாத்திரம்?
மகிழ்ச்சியில் மனம் தளும்புகிறது .ஏதோ ஒரு நேரம் ...மின்னலாய்
ஓடும் கவிதையை எழுதாக்கி மின்வெளியில் பதியமிட்ட நேரங்களை
தன பின்னூட்டங்களால் அர்த்தப் படுத்திக் கொண்டிருந்த கீதா
அங்கீகாரமும் தந்திருக்கிறார் ...நன்றி...நன்றி...
வெகு அற்புதமான, நெகிழ்வான செய்தியும் பரிசும் இது, தங்களின் அடர்ந்த வாசிப்பனுபவத்திற்க்கும், ஈரம் நிறைந்த படைப்புகளுக்குமான அங்கீகாரம் இது, இதில் தன்னடக்கம் எதுவும் கூட அவசியமில்லை என்றே தோன்றுகிறது, ஒரு செறுக்குடன் பெருமிதத்துடன் இந்த அருமையான செய்தியை பகிர்ந்திருந்தாலும் தவறில்லை தோழி, மேலும் மேலும் தங்களின் படைப்புலகம் விரிந்து அதனுள் இவ்வுலகம் சுருங்கட்டும்... வாழ்த்துக்கள்..., மேலும் வெயில்நதியோடு பகிர்ந்த உங்களின் செயல் எல்லாமும் கடந்த எழுத்துக்களின் மீதான பற்றுதலை வெளிச்சமிடுகிறது, தவிர என்னுடைய இயங்குதலை இன்னும் நேர்த்தியாக்க வேண்டியதின் அவசியத்தையும் இந்நேரத்தில் உணர்கிறேன்... தங்களுக்கு என் நன்றிகளும், அன்பும்.... என்றும்...
ReplyDeleteஅந்த லேபிளை வெயில்நதியில் எப்படி பயன்படுத்துவது என புரியவில்லை, நேரம் கிடைக்கையில் உதவுங்கள்...
ReplyDeleteவிருது பெற்ற உங்களுக்கும், உங்களிடமிருந்து விருது பெறும் ஐவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.
ReplyDeleteஇனிய வாழ்த்துகள். மகிழ்ச்சிப்பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள்.vgk
இப்போது தான் நான் பதிவர் உலகத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறேன். அதற்குள் எனக்கு விருதா?
ReplyDeleteஎல்லோருக்கும் விருது கொடுத்து விட்டு நாத்தானாருக்கு இல்லையென்றால் அவரது சாபத்துக்கும் கோபத்துக்கும் ஆளாகவேண்டுமே என்ற பயமா? (எல்லோரும் ஒரு நிமிடம் கண்களை மூடி தமிழ்த் தொலைக்காட்சி வில்லி நாத்தனார் பாத்திரத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்)
எப்படியோ எனக்கும் விருது கிடைத்ததில் மகிழ்ச்சியே. நான் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகமிருந்தாலும்,இது என் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அதிகப்படுத்தியிருக்கிறது என்பதால் உனக்கு என் உளமார்ந்த நன்றி கீதா!
மகிழ்ச்சியை வாசமுடன் பகிர்ந்து இருக்கிறீர்கள் கீதா.
ReplyDeleteஅழகு. அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அவசியம் அவர்களின் தளம் சென்று பார்வை
இடுகிறேன் விரைவில்.
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் உரமேற்றி மேலும் மேலும் வளர்வீராக
ReplyDeleteவாழ்த்துக்கள் கீதா. உங்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும்.
ReplyDeleteமீண்டும் நன்றி.பொறுப்பை அதிகப்படுத்தி இருக்கிறீர்கள்
ReplyDelete!சங்கிலியைத் தொடரும்பணிக்கு பணிவான நன்றி!
மகிழ்ச்சியில் மறந்துவிட்டேன்..
.!முன்னோடிகளுக்கும் உடன் விருது பெற்றோருக்கும்
வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@ Ramani
ReplyDeleteதங்கள் வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ரமணி சார்.
@ thirumathi bs sridhar
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஆச்சி. பதிவில் குறிப்பிட்டுள்ள வலைத்தளங்களின் மேல் க்ளிக் செய்தால் நேரே அந்த அந்தத் தளத்துக்கு செல்லும். நேரமிருக்கும்போது சென்று பாருங்கள்.
@ மதுமதி,
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. வலைச்சர ஆசிரியர் பணிக்கு என் வாழ்த்துக்கள். தங்கள் தளத்துக்கு வந்தேன். பட்டியல் கண்டு மகிழ்ந்தேன்.
@ சேகர்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.
@ சாகம்பரி,
ReplyDeleteதங்கள் வருகைக்கும் விருது ஏற்புக்கும் மனமார்ந்த நன்றி சாகம்பரி. தொடர்ந்து ஊக்கத்துடன் எழுத என் வாழ்த்துக்கள்.
@ விமலன்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.
@ சக்தி,
தங்கள் வருகைக்கும் விருது ஏற்புக்கும் மனமார்ந்த நன்றி சக்தி. தங்கள் படைப்புகள் பலரையும் சென்றடைந்து பயனளிக்க வாழ்த்துகிறேன்.
@ இயற்கைசிவம்,
என்ன இப்படி சொல்லிட்டீங்க? விருது கிடைத்ததில் எனக்கு மிகவும் பெருமையே. ஆனாலும் அப்படி என்ன பெரிசா சாதித்துவிட்டோம் என்று உள்ளுக்குள் சின்னதாய் ஒரு கேள்வி. அதன் வெளிப்பாடுதான் அந்த சிறு தயக்கம்.
தங்கள் வாழ்த்துக்கு நன்றி. இந்தப் பதிவில் இருக்கும் விருதுப் படத்தினை உங்கள் கணினியில் சேமித்துக்கொள்ளவும். பின் உங்கள் வலைத்தளத்தின் லே அவுட் பகுதிக்குச் சென்று அதில் add a gadget தேர்ந்தெடுக்கவும். அதில் add a picture என்றிருப்பதன் மூலம் முன்பே கணினியில் சேமித்த இந்தப் படத்தை upload செய்யலாம். நான் இப்படிதான் செய்தேன். வேறுவழிமுறைகள் இருக்கிறதா என்று தெரியவில்லை.
அழகான அன்பான விருது.வாழ்த்துகள் கீதா!
ReplyDelete@ வை.கோபாலகிருஷ்ணன்,
ReplyDeleteதங்கள் வருகைக்கும் மனமார்ந்த பாராட்டுகளுக்கும் மிகவும் நன்றி சார். தங்கள் வாழ்த்துக்களால் மேலும் உற்சாகம் பெறுகிறேன்.
@ கலையரசி,
அக்கா, இது முக்கியமாய் இளம்பதிவர்களை ஊக்குவிக்கும் விருது என்பதால் தங்களையும் தேர்ந்தெடுத்தேன். பதிவுலகத்துக்கு தாங்கள் புதியவர் என்றாலும் படைப்புலகத்துக்குப் பழையவர்தானே. பல தளங்களிலும், பத்திரிகைகளிலும் தங்கள் படைப்புகள் வெளியாகியுள்ளதால் எனக்கு தங்கள் எழுத்துடனான பரிச்சயம் நெடுநாளாய் உள்ளதே. எனவே இவ்விருதினை, தயக்கம் தவிர்த்துப் பெற்றுக்கொள்ளுங்கள்.
@ ஸ்ரவாணி,
தங்களுக்கே என் முதல் நன்றி ஸ்ரவாணி. என் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கினேன் விருதினைப் பகிர்ந்து.
@ dhanasekaran .S
தங்கள் வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.
@ Shakthiprabha
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி ஷக்திபிரபா.
@ சக்தி,
நல்லது சக்தி. மேலும் நிறைய எழுதுங்கள். நான் தொடர்ந்து வருவேன்.
@ ஹேமா,
வருகைக்கும் வாழ்த்துக்கும் மனம் நிறைந்த நன்றி ஹேமா.
அன்பு கீதா,
ReplyDeleteஉனக்கு விருது கிடைத்ததற்கு நேற்றே வாழ்த்து சொல்ல மறந்து விட்டேன். இளம்பதிவர்களை ஊக்குவிக்கும் விருது என்பதால் மகிழ்ச்சியுடன் இதனை ஏற்றுக் கொள்கிறேன். மிக்க நன்றி.
தோழி கீதாவுக்கு... தாங்கள் இந்த விருதைப் பெற்றதற்கும், இன்று ஷக்திப் ப்ரபா அவர்களின் தளத்தில் ‘பன்முக’ எழுத்தாள்ர் விருது பெற்றமைக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்களை மனமகிழ்வுடன் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இரட்டை விருதுகள் பெற்ற நீங்கள் மேன்மேலும் பல விருதுகள் பெற்றுச் சிறப்பதற்கும் வாழ்த்துகிறேன்.
ReplyDeleteவிருது பெற்ற உங்களுக்கும், உங்களிடமிருந்து விருது பெறுபவர்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteவிருது பெற்ற உங்களுக்கும் உங்களிடம் பெறுபவர்களுக்கும் எனது வாழ்த்துகள்...
ReplyDelete@ கலையரசி,
ReplyDeleteதங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி அக்கா.
@ கணேஷ்,
ReplyDeleteமிக மிகப் பெருமையாக உணர்கிறேன் கணேஷ் சார். வாழ்த்துக்கு மிகவும் நன்றி. பதிவுலகில் காலடி வைத்தப்பின் பலரது எழுத்துக்களையும் படிக்கும் பாக்கியம் கிடைத்தது. இன்னும் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. இவ்விருதுகள் மென்மேலும் ஊக்கமளிக்கின்றன.
@ கோவை2தில்லி,
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனம்நிறைந்த நன்றி.
@ ரெவெரி,
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.
அம்மா ஒரு வெல்லக்கட்டி வைத்துப்போனாள்
ReplyDeleteஎறும்பு குழந்தைகளுக்குப் பங்கிட்டது..
குழந்தைகள் சுவைப்பார்கள்....
அம்மாவும் கூட
காத்திருக்கிறது சிற்றெறும்பு.... ..