எழுத்துக்கான அங்கீகாரம் ஏதோ கொஞ்சம் கிடைத்திருக்கிறது.
ஒளிப்படங்களுக்கான அங்கீகாரம் புதிதாய் ஒளிரத் துவங்கியிருக்கிறது.
தேர்ந்த
எழுத்தாளர், சிறந்த
இலக்கியவாதி, இலங்கையின்
சாகித்ய மண்டல விருது பெற்றவர், முற்போக்கு
சிந்தனையாளர், அரசியல்
விமர்சகர், நேர்மையான
பத்திரிகையாளர், தமிழ்ப்பற்றாளர்
என எழுத்தாளர் முருகபூபதி அவர்களுக்குப் பற்பல அடையாளங்கள் இருந்தாலும்
பாசத்தையும் நட்பையும் கொண்டாடும் ஒரு அற்புதமான மனிதர் என்ற ஒற்றை அடையாளம்
அத்தனையையும் வென்றுவிடும். அவருக்கு என்பால் உள்ள அன்பு மற்றும் நம்பிக்கை
காரணமாக அவரது சமீபத்திய நூல்கள் சிலவற்றுக்கான அட்டைப்படங்கள் வடிவமைக்கும்
பொறுப்பை என்னிடம் அளித்திருந்தார். அவற்றுள் ஒன்றுதான் ‘சொல்லத்தவறிய கதைகள்’. சமீபத்தில் சிட்னியில் நிகழ்வுற்ற அந்நூல்
வெளியீட்டு விழாவில் சிறப்புப் பிரதியை எனக்கு வழங்கி சிறப்பித்த அன்னாருக்கு என்
பணிவு கலந்த அன்பும் நன்றியும்.
12 Aussie Christmas Crackers of Nature என்ற தலைப்பில் The Nature Conservancy Australia இணையதளத்தில் வெளியான பன்னிரண்டு
புகைப்படங்களுள் என்னுடைய ‘Australian brush turkey’-ம் ஒன்று என்பது இன்னொரு மகிழ்வான அங்கீகாரம்.
வெளியாகி மாதங்கள் பலவானாலும் ஆவணப்படுத்திக்கொள்ள இது ஒரு வாய்ப்பு.
வல்லமை
படக்கவிதைப் போட்டிகளில் சமீபத்தில் இடம்பெற்ற என் ஒளிப்படங்கள் சில மற்றுமொரு
சிறப்பான அங்கீகாரம்.
அசுவாரசியமாய்க் கழியும் இவ்வாழ்வை அவ்வப்போது சுவாரசியமாக்கிவிடுகின்றன இதுபோன்ற சில எதிர்பாரா சந்தோஷங்கள். வறண்ட நிலம் எதிர்கொள்ளும் வான்மழைத் தூறலாய் சட்டென்று உள்ளம் நனைத்துக் குழைத்து உயிர்ப்பிக்கின்றன அன்பின் துளி அங்கீகாரங்கள். பாரில் எத்தனை முல்லைக்கொடிகளுக்குக் கிட்டக்கூடும் பாரியின் தேர்?
கொசுறு - வானளக்கும் அழகிய கொரெல்லா பறவைக் கூட்டத்தின் அதிஉற்சாக ஆரோகணம்.
வாழ்த்துக்கள் கீதமஞ்சரி.
ReplyDeleteஅனைத்துக்கும் வாழ்த்துக்கள்.
காணொளி அருமை.வானளக்கும் அழகிய கொரொல்லா பறவைக் கூட்டத்தின் அதிஉற்சாக ஆரோகணம் கேட்டு மகிழ்ந்தேன்.
ப
வருகைக்கும் வாழ்த்துக்கும் மனம் ரசித்திட்டக் கருத்துக்கும் மிக்க நன்றி கோமதி மேடம்.
Deleteஆஹா.... மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வெங்கட்.
Deleteஅனைத்தும் பாராட்டுக்குரிய பகிர்வு. மனமார்ந்த வாழ்த்துகள். புத்தக வடிவமைப்பு கச்சிதம், அழகு. பறவைகளின் உற்சாக ஆரோகணம் அருமை. ஒளிப்படத் தெரிவுகளுக்கும் வாழ்த்துகள். இங்கே காண முடியாத அபூர்வ பறவைகளைத் தொடர்ந்து உங்கள் ஃப்ளிக்கர் பக்கத்தில் கண்டு மகிழ்கிறேன்.
ReplyDeleteஒவ்வொன்றையும் ரசித்து இட்டக் கருத்துக்கும் வாழ்த்துக்கும் ஃப்ளிக்கர் பக்கத்தில் கருத்திட்டு ஊக்கமளிப்பதற்கும் மனம் நிறைந்த நன்றி ராமலக்ஷ்மி.
Deleteமனம் நிறைந்த வாழ்த்துக்களும்,அன்பும் கீதா. உங்கள் போட்டோகிராபி மிக அழகாவும்,அருமையாகவும் இருக்கு.
ReplyDeleteபுத்தகத்தின் வடிவமைப்பு மிக அழகாக இருக்கு. வாவ்..மிகவும் அருமையா இருக்கு பறவைகூட்டத்தின் வீடியோ.
மென்மேலும் உங்க திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். வாழ்த்துக்கள் கீதா.
வருகைக்கும் அனைத்தையும் ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் அன்பும் நன்றியும் ப்ரியா.
Deleteவாழ்த்துகள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteவாழ்த்துகள் பல...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.
Deleteவீரியத்தோடு ஒளிரட்டும் அங்கீகாரங்கள்!
ReplyDeleteவாழ்த்துக்களும் பாராட்டுக்களும் கீதா.
உங்களுடய மிகப்பெரிய சாதனை ‘என்றாவது ஒருநாள்’ புத்தகம் கீதா.ஹென்றி லோஷனை மகிமைப்படுத்திய எழுத்துக்கள் அவை! அந்த மனிதன் இருந்திருந்தால் உங்களை தன் மதுவாசனை வீசும் வாயோடும் தன் நாய் மீதான விலகாத நேசத்தினூடும் காது கேளாத குறைபாடுகளோடும் கிளிந்த ஆடைகளோடு இருந்த போதும் நெடுந்தூரம் நடந்து வந்து; தேடி உங்களைக் கண்டடைந்து; உச்சிமோர்ந்து; தன் அன்பாலான வாஞ்சையை வெளிப்படுத்தி இருப்பார்.
\\தேடி உங்களைக் கண்டடைந்து; உச்சிமோர்ந்து; தன் அன்பாலான வாஞ்சையை வெளிப்படுத்தி இருப்பார்.\\ அவர் சார்பாகத்தான் உங்களை என்னிடம் அனுப்பி வைத்திருக்கிறாரோ என்று எண்ணுகிறேன் தோழி.. அத்தனை அன்பும் வாஞ்சையும் மிக்க உங்கள் நட்பு கிடைத்திராவிடில் 'என்றாவது ஒருநாள்ய அத்தனை இலகுவில் சாத்தியமில்லை.
Deleteவருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நெஞ்சம் தளும்பும் அன்பும் நன்றியும் மணிமேகலா.
வாழ்த்துகள்! அனைத்திற்கும் வாழ்த்துகள் கீதா!
ReplyDeleteகொரால்லா பறவைக் கூட்டத்தின் உற்சாக ஆரோகணம் நம் மனதிலும் ஆரோகணமாய்!!! ரிதமிக்கா சங்கீதம் இசைக்கிறது.
கீதா
வருகைக்கும் வாழ்த்துக்கும் பதிவை ரசித்தமைக்கும் மனம் நிறைந்த அன்பும் நன்றியும் தோழி.
Delete