5 August 2018

ஒருபொழுதும் நிறையா ஓடேந்தி...




பிறவியெடுத்தக் காரணம் தேடித்தேடி சலித்தவள்
பிச்சி பேதையெனும் அழைப்புகளால்
மனம் பிறழ்த்தப்பட்டவள்.

ஆடைமுதற்கொண்டு
அத்தனையும் தானமருளியவள்
மனிதாபிமானத் தேடலில்
மானாபிமானங்கள் துறந்தவள்..

தனிமைச்சுழியில் சுழன்றுகிடப்பவள்..
சிறுசுவாசத்தில் பூக்களை மலர்த்துபவள்.
பெருமூச்சில் மலைகளைத் தகர்ப்பவள்..
கண்ணீரால் நதிகளைப் பெருக்குபவள்..

ரோமச்சிலிர்ப்பில் வனமசைப்பவள்..
விரல்வீச்சில் வானமளப்பவள்
அரூபவெளியில் ஆனந்தித்திருப்பவள்..

ஒருபொழுதும் நிறையா ஓடேந்தி
பேரன்பைப் பிச்சையென வேண்டிநிற்பவள்.
*******

(தோழி கவிதாவின் ஓவியம் தோற்றுவித்த வரிகள். நன்றி Kavitha Jeyakumar)

12 comments:

  1. பேரன்பைப் பிச்சையென வேண்டி நிற்பவள்....

    படக் கவிதை வெகு சிறப்பு. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி வெங்கட்.

      Delete
  2. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      Delete
  3. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  4. //ஒருபொழுதும் நிறையா ஓடேந்தி
    பேரன்பைப் பிச்சையென வேண்டிநிற்பவள்.//

    அருமையான வரிகள்.
    கவிதை மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோமதி மேடம்.

      Delete
  5. கவிதை அருமை என்று சொல்லிச் செல்வது போதாது ஆனால் ரசிக்கவும் அதுகுறித்து எழுதவும் எனக்கு தகுதி இல்லை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  6. மனிதாபிமானத் தேடலில்
    மானாபிமானங்கள் துறந்தவள்..
    என்ற வரிகள் மிகச் சிறப்பு. படக்கவிதை மிக நன்று. பாராட்டுகள் கீதா!

    ReplyDelete
    Replies
    1. ரசித்த வரிகளைச் சுட்டி பாராட்டியதற்கு மிக்க நன்றி அக்கா.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.