26 February 2016

ஓவியக்கிறுக்(கு)கல்


என் பதின்ம வயதிலும் திருமணமான துவக்க வருடங்களிலும் நான் கிறுக்கிய சில ஓவியக்கிறுக்கல்கள்  இவை.  படம் வரைவதில் ஆர்வம் உண்டு என்றாலும் முகங்கள் தவிர வேறெதுவும் தன்னிச்சையாய் வரையத்தெரியாது. இங்கிருக்கும் எல்லாவற்றையும் எதையோ பார்த்துதான் வரைந்திருக்கிறேன். இந்தியாவை விட்டு வரும்போது உடன்கொண்டுவரமுடியாத பொக்கிஷங்களை பாதி பிறந்தவீட்டிலும் பாதி புகுந்தவீட்டிலுமாய் பத்திரப்படுத்தி வந்தேன். இப்போது நானே அவற்றை மறந்த நிலையில் என்னை வந்து சேர்ந்திருக்கிறது புகுந்த வீட்டில் பத்திரப்படுத்திய பொக்கிஷங்களுள் ஒன்று.  வரையப்பட்ட தாள்கள் மக்கிக்கொண்டிருக்கும் நிலையில் அவற்றை ஆவணப்படுத்தும் பொருட்டும், என் மகிழ்தருணங்களை உங்களோடும் பகிரவேண்டியும் .. இங்கு கொஞ்சம். 


அனைவரையும் அன்புடன் வரவேற்கிறார் 
ஏர் இந்தியா மகாராஜா..




துஷ்யந்தனின் வரவுக்காகக் காத்திருக்கும் 
சகுந்தலை என்று நினைவு.. 



அந்நாளைய பொங்கல் வாழ்த்து அட்டையிலிருந்து... 



 ஓவியர் ம.செ. அவர்களின் கையொப்பத்தை மட்டும்
விட்டுவைத்திருக்கிறேன் போலும். 



வளையல், தோடு மட்டுமல்லாது, 
கொண்டையிலும் தன் பெயரை நாட்டிய அந்நாளையத் தாரகை.  



புடவை விளம்பரமாக இருக்கலாம்... 



மணிமேகலையா.. 
அல்லது வேறேதும் சரித்திரக் கதாபாத்திரமா 
சரியாக நினைவில்லை. 



இந்தப்பாப்பாவை பலரும் அறிந்திருப்பீர்கள்.. 
நிர்மா விளம்பரத்தில் வருமே.. 
அந்தப் பாப்பாவைப் பார்த்துதான் வரைந்தேன். ஆனால் என்ன...  குண்டுப்பாப்பாவை ஒல்லிப்பாப்பா ஆக்கிவிட்டேன். 
(அந்த நிறுவன உரிமையாளரின் மகளும் நிர்மாவின் விளம்பர மாடலுமான நிருபமா இளவயதிலேயே மறைந்துவிட்டார் என்றறியும்போது மிகவும் வருத்தமாக உள்ளது)



இந்த கோபிகையைக் கண்டெடுத்த புத்தகம் கோகுலம். 



வண்ணம் உதிர்ந்துகொண்டிருக்கும் நிலையிலும் 
நடையில் என்னவொரு ஒய்யாரம்.



இந்தப்பாப்பாவை எத்தனை முறை வரைந்திருப்பேன் என்று 
எனக்கே தெரியாது. மிகவும் பிடித்த படம். ஒரிஜினல் படம் 
பிரமாதமாக இருக்கும். முகத்தைக் காட்ட மறுக்கிறாளே 
என்று இவள்மேல் செல்லக்கோபம் வருவதுண்டு. 



காமதேனு.. இதுவும் கோகுலம் புத்தகத்தில் பார்த்து 
வரைந்தது என்று நினைவு. 



என்ன, எல்லாவற்றையும் ரசித்தீர்களா? 
 விடைகொடுக்க வந்திருக்கிறார் ஏர் இந்தியா மகாராஜா.. 
(இப்போது மாற்றிவிட்டார்களாமே இவரை.. 
யுவராஜாவிடத்தில் அவ்வளவாக ஈர்ப்பில்லை.. 
மகாராஜாவிடம் இருக்கும் பணிவு + கம்பீரம் அவரிடம் துளியும்  இல்லை) 



இந்தப் பொக்கிஷங்களைப் பத்திரமாய்ப் பாதுகாத்து ஒப்படைத்த 
கலையரசி அக்காவுக்கு என் கனிவான நன்றி. 




42 comments:

  1. இவையெல்லாம் இன்னும் பத்திரமாக இருந்ததே பெரிய விடயமே வாழ்த்துகள் எனக்கும் ஓவியம் விதம் விதமாக வரைய ஆசையுண்டு ஆனால் வரையத் தெரியாது ஆகவே முயலவில்லை
    தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. ஆசை இருக்கிறதென்றால் நிச்சயம் வரைய வரும். முயற்சி செய்துதான் பாருங்களேன். வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      Delete
  2. தமிழ் மணம் மறுக்கிறதே...

    ReplyDelete
    Replies
    1. என்னவென்று தெரியவில்லையே. அப்போதுதான் இணைத்தேன் என்பதால் சற்று நேரம்பிடிக்கிறது போலும்.

      Delete
  3. Replies
    1. வருகைக்கும் ரசித்தமைக்கும் மிகவும் நன்றி தனபாலன்.

      Delete
  4. அனைத்துப்படங்களும் அருமையாக வரைந்துள்ளீர்கள்.

    எனக்கும் யானை, தாமரை, இலைகள், மலைகள், மரங்கள் போன்ற ஒருசில படங்களைத்தவிர மற்றவற்றை (குறிப்பாக மற்றவர்களின் உருவங்களைக்) கற்பனையில் வரைய வராது. வேறு ஏதேனும் ஒரு படத்தைப் பார்த்து வரைவது என்றால் அப்படியே இப்போதும் வரைந்து விடுவேன்.

    நம் மனதை ஒருமுகப்படுத்த சித்திரங்கள் வரைவது ஓர் நல்ல பயிற்சியே. அதில் ஓர் தனி மகிழ்ச்சியே :)

    தாங்கள் வரைந்து இங்கு காட்டியுள்ளதில் ஏர்-இந்தியா மஹாராஜாவின் படமும், மானுடன் அமர்ந்துள்ள சகுந்தலை படமும் எனக்கு மிகவும் பிடித்துள்ளன.

    நானும் இதுவரை வரைந்துள்ள எவ்வளவோ படங்களை, நான் என்னிடம் பத்திரமாக சேமித்து வைக்கத் தவறி விட்டேன்.

    சகலகலாவல்லியான தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    என் ப்ளாக்கர் பிரச்சனை தொடர்ந்துகொண்டே தான் உள்ளது. தொடர்ச்சியாக 100 முறை முயற்சித்தால் ஒருமுறை மட்டுமே பிறரின் பதிவுகள் ஓபன் ஆகி படிக்க முடிகிறது. படித்துவிட்டு பின்னூட்டம் கொடுப்பதற்குள், மீண்டும் மறைந்து போய் விடுகிறது.

    இந்தப்பின்னூட்டமாவது ஒழுங்காகப் போய்ச்சேருமோ சேராதோ என்ற கவலையில்தான் அடித்து அனுப்பியுள்ளேன்.

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் இங்கிருக்கும் படங்களை ரசித்து இட்ட நீண்டதொரு அழகான கருத்துக்கும் மிகவும் நன்றி கோபு சார். உங்களுடைய ஓவியத்திறன் நான் அறிவேனே... தங்களுடைய பல கதைகளுக்குத் தாங்களே ஓவியம் வரைந்து அசத்தியிருக்கிறீர்களே... மறக்கமுடியுமா?

      Delete
  5. வா..வ் கீதா. எல்லாமே சூப்பரா, அழகா இருக்கு. ஏன் நீங்க இப்ப வரைவதில்லையா. தொடர்ந்து முயற்சிக்கலாமே.இங்கு கொஞ்சம் அதிகமா பார்க்கமுடிகிறது.மகாராஜா சான்ஸே இல்லை. அழகு. கவனமா அங்கிருக்கும் மிச்சம் மீதியையும் பத்திரப்படுத்துங்க. நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா.. இன்னும் ஆர்வம் உள்ளது. ஆனால் வெவ்வேறு கவனச்சிதறல்களில் இது பின்தங்கிப் போய்விடுகிறது. விரைவில் மீண்டும் ஆரம்பிக்கிறேன். நன்றிப்பா.

      Delete
  6. அட்டகாசம் கீதா !மஹாராஜா டேஷ்போர்டில் பார்த்தப்போ கிளிப் ஆர்ட் என்று நினைச்சேன் அவ்ளோ தத்ரூபம்பா ..நல்லவேளை உங்களுக்கு பத்திரமா சேமிக்க கிடைச்சதே இவையெல்லாம் ..எனக்கு எதிரியே என் தங்கை தான் எனது பல ஆர்ட் வொர்க்கை தூக்கி எரிந்திருக்கா நான் மணமாகி வெளிநாட்டுக்கு வந்ததும் ..எல்லா படங்களும் சூப்பர்ப் .இப்பவும் தூரிகை தொடுகிறீர்களா !
    நான் பெயிண்டிங் செய்வதில்லை ..எத்தனை பேருக்கு படங்கள் ரெக்கார்ட் நோட்டில் வரைந்திருப்பேன் !!பழைய நினைவுகள் வந்துவிட்டது :)

    இதெல்லாம் கிறுக்கலா கர்ர்ர் ரொம்ப அருமையா வரைந்திருக்கிங்க

    ReplyDelete
    Replies
    1. போனவை போக மீதம்தான் ஏஞ்சல் இவையெல்லாம். அந்நாளில் அவற்றையெல்லாம் பத்திரப்படுத்தவேண்டும் என்று நமக்குத் தோன்றவே இல்லை பாருங்க.. இணையம், ஊடகம் எல்லாம் இப்போதுதானே நமக்கு அறிமுகம். உங்களுடையவை எல்லாம் எறியப்பட்டுவிட்டது பெரும் இழப்புதான். உங்களுடைய க்வில்லிங் கலை பார்த்து எனக்குப் பெரும் பிரமிப்பு. அதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை இருந்தாலும் இப்போதைக்கு ஒத்திவைத்திருக்கிறேன்.

      Delete
  7. வணக்கம்
    படங்கள் எல்லாம் மிக அழகு பாதுகாத்து வைத்திருந்த படங்களை பார்வைக்கு பகிர்ந்தமைக்கு நன்றி த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகவும் நன்றி ரூபன்.

      Delete
  8. நிஜமாகவே அற்புதமான ஓவியங்கள்
    இதன் மதிப்பறிந்து பாதுகாத்து வைத்து
    அனுப்பிய சகோதரி மிகவும் பாராட்டுக்குரியவர்கள்
    பதிவாக்கித் தந்தமைக்கு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். கலை இலக்கியத்தில் ஈடுபாடு உள்ள அவர்கள் இவற்றைப் பாதுக்காத்து அனுப்பியதில் ஆச்சர்யமில்லை. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரமணி சார்.

      Delete
  9. எல்லா ஓவியமும் அழகா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி மேடம்.

      Delete
  10. அருமையாக வரைந்திருக்கிறீர்கள்! முகநூலில் இப்பகிர்வுகளை இரசித்தேன். ‘நிர்மா’ விளம்பரத்தில் வரும் சுட்டிப்பெண் என உடனேயே தெரிந்து விட்டது. ஆனால் ஏற்கனவே அப்பதிலை சிலர் சொல்லி விட்டிருந்தனர்:)!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ராமலக்ஷ்மி. பலருக்கும் அப்பெண்ணை நினைவிருப்பது ஆச்சர்யம்தான். பார்த்தவுடன் அடையாளம் தெரியும் அளவுக்கு வரைந்திருக்கிறேன் என்பதும் எனக்கு மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  11. ஓவியங்கள் அனைத்தும் அழகு
    வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  12. அபாரத் திறமை. இதை அப்புறம் நீங்கள் தொடரவில்லையா? நான் என்ன செய்வேன் என்றால் அந்த ஒரிஜினல் படங்களின் அவுட்டர் லைனை பிரதி எடுத்துக் கொள்வேன். உள்ளே இருக்கும் முகத்தை அப்படியேவோ மாற்றியோ வரைய முயல்வேன். கோரமாக வரும்! நான் நடத்திக் கொண்டிருந்த கையெழுத்துப் பத்திரிகையில் இப்படியான 'என் ஓவியங்கள்' வரும்!

    துஷ்யந்தன்-சகுந்தலையின் ஒரிஜினல் மிகச் சமீபத்தில் வாட்சப்பிலோ எங்கோ வலம் வந்து, பார்த்த நினைவு!

    மான் படம் அற்புதம். நிர்மா விளம்பரச் சிறுமி பற்றிய தகவல் புதிது.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம். என்னுடைய ஆர்வம் மாறி மாறி வரும் ஒன்று. கொஞ்சநாள் கவிதை.. ஓவியம்.. கதை.. கட்டுரை.. என்று இப்போது புகைப்படத்தில் வந்து நிற்கிறது. மீண்டும் ஓவியத்தின் பக்கம் போக ஆசை உண்டு. வாழ்த்துகளுக்கு நன்றி.

      உங்களுடைய ஓவிய உத்தி மிக வித்தியாசமாக இருக்கிறதே.. :)

      Delete
  13. அழகான ஓவியங்கள் சகோதரி.இரசித்தேன் நன்றி..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.

      Delete
  14. உங்கள் திறமையைக் கண்டு வியப்பும் பிரமிப்பும். இத்தனை வருடங்கள் பத்திரமாக வைத்திருக்கின்றீர்களே!! இப்போதும் வரைகின்றீர்களா? அனைத்துப் படங்களும் அழகு அருமை...

    கீதா: தோழி! எவ்வளவு அழகாக வரைந்துள்ளீர்கள். நானும் பார்த்துதான் வரைவேன். கோலங்கள் தன்னிச்சையாக வரைந்தாலும், படங்கள்ம் ஆயில் பெயின்டிங்க் எல்லாம் பார்த்துத்தான். முன்பெல்லாம் நானே வரைந்து வாழ்த்துகள் அனுப்புவேன். ஆனால் அதன் பின் வரைந்து பலவருடங்கள் ஆகிவிட்டது. ஆம் நிர்மா சோப் பௌடரின் நிறுவனரின் மகள் தான் விம்பரத்தில் வந்துகொண்டிருந்தார். நிருபமா சிறுவயதில் மறைந்ததைக் கேள்விப்பட்ட போது மனம் மிகவும் வருந்தியது. அந்தக் குட்டிப் பெண் அழகாக இருப்பாள், விளம்பரத்திலும் ...மிகவும் பிரபலமான விளம்பரம் அப்போது..

    அருமை தோழி. அனைத்துப் படங்களையும் ரசித்தோம்...பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி துளசி சார் & தோழி கீதா.

      இப்போது வரைவதில்லை. பல படங்கள் திருமணத்துக்கு முன் அதாவது 24, 25 வருடங்களுக்கு முன்பு வரைந்தவை. நானும் உங்களைப் போலவே என் கைப்பட வாழ்த்துப்பா எழுதி படம் வரைந்து நட்புகளுக்கும் உறவுகளுக்கும் வாழ்த்தட்டைகள் அனுப்பிவைத்த காலம் உண்டு. ஆயில் பெய்ண்டிங் ஒரு அழகான கலையாயிற்றே.. தொடரலாமே தோழி.

      Delete
  15. இவை ஓவியக் கிறுக்கல்களா??!!! கிறுக்கல்கள் இல்லை ஓவியங்களே!

    ReplyDelete
  16. கைத் திறன் நன்று! வரைவில் ஓர் உயிர்ப்பு உள்ளது

    ReplyDelete
    Replies
    1. ஊக்கந்தரும் தங்கள் கருத்து மிகவும் மகிழ்விக்கிறது. மிக்க நன்றி ஐயா.

      Delete
  17. Very nice work!! Beautiful !!

    ReplyDelete
  18. மிக நீண்ட காலத்தின் பின் வந்திருக்கிறேன் , மன்னிக்கவும்:). ஓவியங்கள் அத்தனையும் அழகு, இப்பவும் வரையலாமே... நிறுத்தி விட்டீங்களோ?.. தமிழ் மணம் பெயர் பாஸ்வேர்ட் அத்தனையும் மறந்துவிட்டேன், அதனால வோட் பண்ண முடியவில்லை, எப்படி ரீசெட் பண்ணப்போறேனோ தெரியவில்லை, எந்த மெயில் ஐடி கொடுத்தேன் என்பதுகூட மறந்துவிட்டேனே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

    ReplyDelete
    Replies
    1. மிக நீண்ட காலத்துக்குப் பின் உங்கள் வலைப்பக்கம் வந்து தூசு தட்டிய கையோடு இங்கும் வந்து கருத்திட்டமைக்கு மிகவும் நன்றி அதிரா. என்ன காரணம் சொன்னாலும் அஞ்சு விடப்போவதில்லை. மறந்தவற்றை எப்படியாவது கண்டுபிடிங்க.

      Delete
  19. அடடா.... இந்திய மகாராஜா அந்த மாதிரி இருக்கிறார்.எனக்கு மிகப் பிடித்தவர் அவர் தான்.அவரது மீசையும் தலைப்பாகையும் சப்பாத்தும் அசத்தலோ அசத்தல்.... என்ன கீதா நீங்கள் எல்லாத் துறையிலும் விற்பன்னராய் இருக்கிறீர்களே?

    உங்களுக்கு காட்டூனும் நல்லா வரும் போலிருக்கே? அதற்கான ஒரு பொருள் என்னிடம் உண்டு. விரைவில் அது வரும் உங்களிடம். சந்திப்போம் விரைவில்

    ReplyDelete
    Replies
    1. விற்பன்னரா? ஐயோ.. அப்படியெல்லாம் இல்லை தோழி. எல்லாம் அந்தந்த பருவத்து சிறுமுயற்சிகள். இத்தனைக்காலம் கழித்து கைவந்து சேர்ந்திருப்பதில் ஒரு அபார மகிழ்ச்சி. அதை இங்கு உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்வதில் கூடுதல் சந்தோஷம்..அதற்காகவே பதிந்தேன். உங்களை சந்திக்கும் நாளை ஆவலுடன் பார்த்திருக்கிறேன். :))

      Delete
  20. இந்த ஓவியங்களைப் பார்க்கும் போது எனக்கும் சிறுவயது நினைவுக்கு வந்தது. எனக்கும் வரைவதில் ஆர்வம் அதிகம். ஆனால் இப்படி ஒரு நோட் போட்டு வரைய வேண்டும் என்று ஏனோ தோன்றவில்லை. எதையும் பாதுகாத்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றாத காலம். தாளில் கிறுக்கித் தூக்கிப் போட்டுவிடுவேன். குழந்தைகளின் ரெக்கார்டு நோட்டுகளில் திறமையைப் பயன்படுத்தி வரைந்து தந்ததுடன் ஆவல் தீர்ந்துவிட்டது. தபாலிலாவது ஓவியம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தீராத ஆசையிருந்தது. இளவயதிலேயே கண்ணில் ஏற்பட்ட பார்வைக் குறைபாட்டால் தந்தை இந்த ஆசையை வளர்க்க விரும்பவில்லை. வீட்டை ஒழிக்கும் போது இந்த நோட்டு தற்செயலாகக் கண்ணில் பட்டது. இதன் மதிப்பை உணர்ந்து பத்திரமாக எடுத்து வைத்தேன். இதை ஆவணப்படுத்துவது மிகவும் அவசியம் தான். தாள்கள் மக்கிப் போய்விட்டன. முத்தாய்ப்பாக மதி வரைந்ததையும் வெளியிட்டு என் கணவர் வரைந்தது என்று சொல்லியிருக்கலாமோ? அவ்வளவு அழகான படம் அது! நிர்மா குழந்தை இளவயதிலேயே இறந்து விட்டது என்பது இப்போது தான் தெரியும். அந்தப் பாட்டும் குழந்தையின் ஆட்டமும் இன்னும் கண்ணிலேயே நிற்கிறது. மகாராஜா படம் பிரமாதம். பாராட்டுக்கள் கீதா!

    ReplyDelete
    Replies
    1. உங்களுடைய பாராட்டுக்கு நன்றி அக்கா. ஓவியத்தில் உங்கள் ஆர்வம் அறிவேன். நம் வீட்டில் எல்லோருமே ஓவியத்தில் அற்புதமான திறமை பெற்றவர்கள். கணவர் வரைந்த அந்தப் பெண்ணின் ஓவியத்தோடு இன்னும் சில படங்களும் உள்ளன. அவற்றுள் சில அரசியல் தலைவர்களின் தத்ரூபமான படங்களும் அடக்கம். அவற்றையும் சேர்த்து வெளியிட விரும்பினேன். ஆனால் இப்போதிருக்கும் அரசியல் சூழலில் அவற்றை வெளியிடுவதா வேண்டாமா என்ற சிந்தனையால் ஒத்திப்போட்டிருக்கிறேன். அந்தப் பெண்ணின் படத்தை மட்டுமாவது அவசியம் வெளியிட்டு ஆவணப்படுத்துவேன். வருகைக்கும் நீண்டதொரு அழகிய கருத்துரைக்கும் நன்றி அக்கா.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. இந்த நோட்டுப்புத்தகத்தை எப்போது உங்களிடம் ஒப்படைத்தேன் என்றே எனக்கு நினைவில்லை. அதை இவ்வளவுகாலம் பத்திரமாய்ப் பாதுகாத்து என்னிடம் சேர்ப்பித்தமைக்கு மிகவும் நன்றி அக்கா.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.