1 June 2015

பறவைகள் பலவிதம் - 4


கண்ணியில் அல்ல, 
கண்ணில்  சிக்கிய சில பறவைகள்
(படங்களின் மேலே சொடுக்கிப் பெரிதாக்கிப் பார்க்கலாம்)


ஆஸ்திரேலிய காக்கை (Australian Raven)



கொண்டைப்புறா (Crested Pigeon)



தாழைக்கோழி (Dusky moorhen)



நாமக்கோழி (Common coot)






கடற்புறா (Silver gull)




ஆட்காட்டிக்குருவி (Spur winged plover)




முக்குளிப்பான் (Little Grebe)




வெள்ளை வாத்து (Pekin duck)




பசிபிக் கருப்பு வாத்து (Pacific black duck)




மஞ்சள் கொண்டை காக்கட்டூ (Sulphur crested cockatoo)




ஆஸ்திரேலிய மேக்பை (Australian Magpie)




ஆஸ்திரேலிய காட்டுவாத்து (Australian wood duck)




கருப்பு வெள்ளை கரவாங் (Pied currawong)




வெள்ளை அரிவாள் மூக்கன் (Australian white ibis)




இளைப்பாறல்




(தாழைக்கோழி, நாமக்கோழி, ஆட்காட்டிக்குருவி, கடற்புறா, முக்குளிப்பான், அரிவாள் மூக்கன் போன்ற பறவைகளுக்கான தமிழ்ப்பெயர் உதவி - பறவையியல் வல்லுநர் சலீம் அலி அவர்களுடைய பறவை உலகம் நூல்)

46 comments:

  1. Replies
    1. வருகைக்கும் பறவைகளை ரசித்தமைக்கும் நன்றி ஸ்ரீராம்.

      Delete
  2. ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பறவைகளை ரசித்தமைக்கும் நன்றி உமையாள்.

      Delete
  3. அனைத்துப்டங்களும் அருமையாக உள்ளது. சூப்பர். எம் பக்கத்திலும் சில படங்கள் உண்டு வாருங்களேன் பார்க்க, நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலமகி. தங்கள் பக்கம் வந்து வாசித்துக் கருத்திட்டேன். அழைப்புக்கு நன்றி.

      Delete
  4. நீங்கள் எடுத்த படங்களா.? பிரமாதம். பல பறவைகளின் பெயரே கேட்டதில்லை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நான் எடுத்த படங்கள்தாம் ஐயா. பல பறவைகள் நம் நாட்டிலும் உள்ளவைதாம் என்றாலும் இங்குதான் இந்தப் பறவைகளைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்துள்ளது. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.

      Delete
  5. புகைப்படம் எடுத்த விதற்திற்காக எமது சபாஷ் வாழ்த்துகள்.
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி கில்லர்ஜி.

      Delete
  6. படங்கள் ஒவ்வொன்றும் அருமை சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பறவைகளை ரசித்தமைக்கும் நன்றி ஐயா.

      Delete
  7. படங்கள் அத்தனையும் அழகு! புகைப்படக்கலையிலும் நல்ல தேர்ச்சி பெற்று வருகிறாய். பாராட்டுக்கள் கீதா! நாமக்கோழி பெயர் மிகப்பொருத்தம்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அக்கா.. நூறில் பத்து தேரும் அளவில்தான் இப்போதைக்கு என் புகைப்படப்பயிற்சி இருக்கிறது. இருப்பினும் பறவைகளின் மேல் உள்ள ஆர்வம் தொடர்ந்து பயிற்சிக்கு வழிவகுக்கிறது. நாமக்கோழி பெயரைக் கேட்டு நானும் வியந்தேன். பறவைகளை ரசித்தமைக்கு நன்றி அக்கா.

      Delete
  8. அன்புடையீர் வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால் தங்களின் வலைத்தளத்தின் ஒருசில பதிவுகள், வலைச்சரத்தில் இன்று (02.06.15) அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் + இனிய நல் வாழ்த்துக்கள்.

    வலைச்சர இணைப்பு இதோ:
    http://blogintamil.blogspot.in/2015/06/2.html

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி ஐயா. தங்கள் தூண்டுதலால் வலைச்சரம் களைபெற்றிருக்கிறது. நன்றி.

      Delete
  9. அன்புடையீர்! வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (02/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    வலைச்சர இணைப்பு: http://blogintamil.blogspot.fr/2015/06/2.html
    திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்
    வலைத்தளம்: கீதமஞ்சரி
    http://geethamanjari.blogspot.in/2013/08/blog-post_7.html
    ஆசை
    http://geethamanjari.blogspot.in/2015/04/blog-post_19.html
    அழைப்புமணி
    http://geethamanjari.blogspot.in/2013/04/blog-post.html
    பெரிய மனுஷியாகிவிட்டாளாம்
    http://geethamanjari.blogspot.in/2011/08/blog-post_20.htm
    சிவப்பி
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE.

    ReplyDelete
    Replies
    1. தகவல் அறிவிப்புக்கும் பதிவுகள் விவரத்துக்கும் மிகுந்த நன்றி.

      Delete
  10. பறவைகளின் படங்கள் அத்தனையும் அழகோ அழகு.

    நாமக்கோழி :)))))))

    பெயர் மிகவும் பொருத்தமாகவே உள்ளது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வலைச்சரப் பொறுப்போடு தவறாமல் என் பதிவையும் ரசித்துக் கருத்திட்டதற்கு மிகவும் நன்றி கோபு சார்.

      Delete
  11. ஆட்காட்டிக்குருவி மூக்கு வான்கோழி மாதிரி இருக்கு ..பறவைகளில்தான் எத்தனை வகைகள் ! அத்தனையும் அழகுப்பா !

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்... ஆட்காட்டிக் குருவியின் தாடை வான்கோழி தாடை போலத்தான் இருக்கிறது. வருகைக்கும் பறவைகளை ரசித்ததற்கும் நன்றி ஏஞ்சலின்.

      Delete
  12. அட! இந்த பெயர்கள் கேள்விபட்டிருக்கிறேன், பறவையை இப்போதான் பார்க்கிறேன். கண்ணை நிறைகின்றன படங்கள்!

    ReplyDelete
    Replies
    1. கிராமப்புறங்களிலும் நீர்நிலைகளின் பக்கத்திலும் காணக்கிடைக்கும் பறவைகளை நகர்ப்புறங்களில் வசிக்கும் நாம் பார்க்கும் வாய்ப்பு குறைவுதான். வருகைக்கும் பறவைகளை ரசித்தமைக்கும் நன்றி மைதிலி.

      Delete
  13. அன்புடையீர்,

    வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பாராட்டுகள். வாழ்த்துகள்.

    இணைப்பு: http://blogintamil.blogspot.in/2015/06/2.html

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு மிகவும் நன்றி ஆதி. இன்றைய அறிமுகப் பதிவரான உங்களுக்கும் என் இனிய வாழ்த்துகள்.

      Delete
  14. வாவ்! எவ்வளவு அழகான பறவைகள்!

    மொழு மொழு எனவும் பட்டுப் போலவும் வண்ணங்களிலும் வடிவங்களிலும்.... இயற்கையின் அழகு முகங்கள்.....

    வாத்து வகை பறவை இனங்கள் இல்லையென்றாலும் (என்று தான் நினைக்கிறேன்) பறவைகளுக்கும் அவைகளுக்கும் இடையே ஏதோ ஒரு வித ஒற்றுமைப்பாடு தெரிகிறது.

    மேலும் பல இயற்கை அழகுகள் வரவேண்டும் உங்களிடம் இருந்து. உங்கள் படங்களைப் பார்த்தவுடன் தான் நினைக்கத் தோன்றுகிறது. மயில் அந்தப் பெரிய தோகையை வைத்துக் கொண்டு எவ்வளவு தூரம் பறக்கிறது. ஏன் கோழிக்கு அந்த மாதிரி பறக்க முடியவில்லை? :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பறவைகளை ரசித்தமைக்கும் சிந்தனை தூண்டும் கருத்துரைக்கும் நன்றி மணிமேகலா. வாத்து வகை பறவையினம் இல்லையென்று எப்படிப்பா சொல்றீங்க? நீண்ட தூரம் வலசை வரும் பறவைகளில் சில வாத்தினங்களும் அடங்கும்தானே?

      மயில் அவ்வளவு பெரிய தோகையுடன் பறக்கும்போது கோழியால் ஏன் அப்படிப் பறக்கமுடிவதில்லை என்று கேட்டிருக்கீங்க. பரிணாம வளர்ச்சிதான் காரணமாக இருக்குமோ? காடுகளில் வாழும் பறவைகளுக்கு ஆபத்துகள் அதிகம். அவை தங்களைக் காப்பாற்றிக்கொள்ள பறத்தலைச் சார்ந்திருக்கின்றன. ஆனால் வீடுகளில் வைத்து பத்திரமாக வளர்க்கப்படும் பறவைகளுக்கு அப்படியான ஆபத்துகளும் அவற்றிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்வதற்கான வாய்ப்புகளும் குறைவல்லவா? அதுதான் காரணமென்று எனக்குத் தோன்றுகிறது. வேறு காரணங்கள் இருந்தாலும் அறியத் தாருங்கள்.

      Delete
  15. Replies
    1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  16. வெள்ளை வாத்து முதல் அனைத்து படங்களும் மனதை கொள்ளை கொண்டன தோழி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பறவைகளை ரசித்ததற்கும் நன்றி சசி.

      Delete
  17. படங்கள் அனைத்தும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பறவைகளை ரசித்தமைக்கும் நன்றி ஐயா.

      Delete
  18. இந்தக் காகம் நம் அண்டக் காகம் போல் உள்ளதே!
    இந்தக் கொண்டைப் புறா நம் நாடுகளிலும் மிக அரிதாக உண்டு.
    இந்தத் தாழை கோழிகளை பிரான்சிலேயே நான் முதற் பார்த்தேன். இங்கு இதை நீர்க்கோழி என்பர்.
    நாமக் கோழி என்பது நாமிட்ட காரணப் பெயரோ?
    கடற் புறாவைக் கண்டுள்ளேன். இது கடற்புறா என இப்போதே அறிந்தேன்.
    ஆட்காட்டி நம்நாடுகளில் சற்று வேறுபாடுள்ளவையே!!
    முக்குளிப்பான் நல்ல பொருத்தமான பெயர். இங்கு தான் கண்டுள்ளேன்.
    இந்த வெள்ளை வாத்து, பசிபிக் கறுப்பு வாத்து- இவற்றைத் தமிழில் தாரா என்பார்களே!, வாத்து சற்றுப் இதை விடப் பருமனானது.
    காக்ககட்டூ- அவுஸ்ரேலிய பறவை வேறு நாடுகளில் இருப்பதாகக் தெரியவில்லை.
    மேக்பை, காகம்போல் உள்ளதே!
    அவுஸ்ரேலிய காட்டு வாத்தின் சாயலில் இங்கும் உள்ளன!
    கரவாங் அவுஸ்ரேலியாவுக்கு உரியதோ?- நம் குயில் போல் உள்ளது.
    இந்த வெள்ளை அரிவாள் மூக்கன் ,வெப்பநிலை மாற்றத்துக்கு இடம் பெயரும் இனம்.
    அருமையான படங்கள்,
    அடுத்து மணிமேகலா- வாத்தைப் பறவை இல்லையென ஏன் கூறுகிறார் எனப் புரியவில்லை. பறப்பதில்லை என்பதாலா?
    அப்படியானால் பென்னாம் பெரிய தீக்கோழியும் பறப்பதில்லை. இறகால் உடல் போற்கப்பட்டு, முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தால்
    பறவை இனத்துள், அடங்கும் எனக் கருதுகிறேன்.
    சில வகை வாத்துக்கள் கண்டம் விட்டுக் கண்டம் பறக்கின்றன.இதை Winged Migration (Special Edition) -
    Jacques Perrin இவ் விபரணத் திரைப்படத்தில் பார்க்கலாம்.
    மயில் கூட அதிக உயரத்தையோ, தூரத்தையோ பறக்கக் கூடிய பறவை அல்ல. மயிலளவு சில வகைக் கோழிகள் பறக்கக் கூடியவை.
    வீட்டுப் பிராணியான பின் கோழி தன் பறக்குமியல்பை குறைத்துக் கொண்டுள்ளது.

    Winged Migration (Special Edition) -
    Jacques Perrin

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ஒவ்வொரு பறவையையும் சிறப்பாக ரசித்துக் கருத்துகள் வழங்கியமைக்கும் நன்றி ஐயா.

      duck என்பதை தாரா என்றும் goose என்பதை வாத்து என்றும் குறிப்பிடுகிறீர்கள். சிறுபிள்ளையிலிருந்து எங்களுக்கு duck - ஐ வாத்து என்றே கற்றுக்கொடுத்துப் பழக்கிவிட்டதால் இங்கும் அப்படியே குறிப்பிட்டிருக்கிறேன்.

      கரவாங், மேக்பை இவற்றின் குரல்கள் இனிமையானவை. மேக்பையை புல்லாங்குழல் பறவை என்றே குறிப்பிடுகிறார்கள். இது ஆஸியின் தனித்துவமிக்கப் பறவைகளுள் ஒன்று.

      பறவைகளின் பறத்தலியல்பு குறித்த கூடுதல் தகவல்களுக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  19. படங்கள் எல்லாமே அருமை. புகைப்பட கலையின் தேர்ச்சி படங்களில் தெரிகிறது.
    த ம +1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பறவகளை ரசித்துப் பாராட்டியதற்கும் மனமார்ந்த நன்றி செந்தில்குமார்.

      Delete
  20. தமிழ்ப் பெயர்களோடு பறவைகள் அருமை கீதா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பறவைகளோடு அவற்றின் தமிழ்ப்பெயர்களையும் ரசித்தமைக்கும் நன்றி தேனம்மை.

      Delete
  21. எல்லா பறவைகளையும் அழகா எடுத்திருக்கீங்க கீதா !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பறவைகளை ரசித்தமைக்கும் நன்றி சித்ரா.

      Delete
  22. அருமையான படங்கள். கண்ணில் சிக்கியவற்றை எங்களுக்கும் காணத் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பறவைகளை ரசித்தமைக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

      Delete
  23. வலைச்சரம் மூலமாகத் தங்களை இன்று தொடரும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்த்துக்கள். எனது வலைத்தளங்களைக் காண அன்போடு அழைக்கிறேன்.
    http://www.drbjambulingam.blogspot.com/
    http://www.ponnibuddha.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் வலைப்பூவைத் தொடர்வதற்கும் மிக்க நன்றி ஐயா. அழைப்புக்கு நன்றி. வருகிறேன்.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.