உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர்கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும் என்ற தன் முகப்பு வரிகளுக்கேற்ப தன் உள்ளத்து உணர்ச்சிகளை மிக அழகாக எழுத்தால் வடிக்கும் திறம் பெற்றவர் gmb writes தளத்தில் எழுதிவரும் G.M. பாலசுப்ரமணியம் ஐயா அவர்கள். 'என்றாவது ஒரு நாள்' என்னும் என்னுடைய நூலுக்கான கருத்துரையை அவரது தளத்தில் பதிந்துள்ளார். விமர்சனத்தை வாசிக்க இங்கே செல்லவும்.
இதுவரை எந்த நூலுக்கும்
கருத்துரையோ விமர்சனமோ எழுதியிராத தான், என்னுடைய இந்த 'என்றாவது ஒருநாள்' என்னும்
மொழிபெயர்ப்பு நூலுக்கு கருத்துரை எழுதியிருப்பதாகக் குறிப்பிட்டிருப்பது மிகவும் மகிச்சியும் பெருமையும் தருவதாக உள்ளது. கண்ணில்
சிலகாலமாய் பிரச்சனை ஏற்பட்டு வாசிக்க சிரமப்படும் நிலையிலும் புத்தகத்தை முழுமையாய்
வாசித்து உடனடியாக கருத்துரையும் எழுதியிருப்பதை என் பாக்கியமாகவே கருதுகிறேன்.
இந்தக் கதைகளை
மொழிபெயர்க்குமுன் எனக்கு அந்தக் காலகட்டத்து வாழ்க்கைமுறை பற்றிய புரிதல் நிறைய தேவைப்பட்டது.
பல கதைகள் மற்றும் கட்டுரைகளை வாசித்ததன் மூலம் அப்புரிதல் ஓரளவு சாத்தியமானது. ஆனால் களம் பற்றிய
புரிதல் இல்லாத வாசகர்களுக்கு இக்கதைகளைப் புரிந்துகொள்வது கடினம்தான். சரியான புரிதல்
உண்டாக நேரடி மொழிபெயர்ப்பை விடவும் கதைக்கருவை உள்வாங்கி என்னுடைய பாணியில் தமிழாக்கம்
செய்திருந்தால் எளிதாக இருந்திருக்கும் என்ற ஐயாவின் கருத்து ஏற்புடையது. ஆனால் மூல
ஆசிரியரின் எழுத்தாற்றல் என்னை வியப்பில் ஆழ்த்தியதால் அந்த எழுத்தை அப்படியே தமிழுக்கு
இடமாற்றம் செய்வதே மூல ஆசிரியருக்கு செய்யும் மரியாதை என்று நினைத்ததால் நேரடி மொழிபெயர்ப்பைத்
தேர்ந்தெடுத்தேன்.
மொழிபெயர்ப்பின்
நோக்கம் மூல ஆசிரியர் மீதான என் அபிமானத்தைப் பறைச்சாற்றலும், முற்றிலும் காதுகேளாத,
வாழ்க்கையில் தொடர்ச்சியாய்ப் பல தோல்விகளையும் துயரங்களையும் சந்தித்த ஒரு மனிதரின்
படைப்புகள் எனக்குள் ஏற்படுத்திய அதிர்வுகளை வாசகர்க்கு உணர்த்துவதும், ஆஸ்திரேலிய
மண்ணில் ஆரம்பகால வந்தேறிகளின் வாழ்க்கைமுறையையும் அம்மாந்தர்தம் குணாதிசயங்களையும்
அழகாகவும் நேர்த்தியாகவும் அவர் புனைந்திருக்கும் விதம் பற்றிய என் ஆச்சர்யத்தை அனைவருடனும்
பகிர்ந்துகொள்வதுமாகும். அந்த வகையில் ஜீ.எம்.பி. ஐயா வழங்கியிருக்கும் கருத்துரை (அ) விமர்சனம் எனக்குப்
பெருநிறைவு தருவதாய் அமைந்துள்ளது. அவருக்கு என் மனமார்ந்த நன்றி.
படித்தேன் சகோ ஐயா மிகவும் சிறப்பாக எழுதியிருந்தார்கள் வாழ்த்துகள்.
ReplyDeleteவிமர்சனம் வாசித்துக் கருத்திட்டமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கில்லர்ஜி.
Deleteமனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஅவரின் பதிவுப்பக்கம் போய் கீழ்க்கண்டவாறு பின்னூட்டம் இட்டுள்ளேன். இது தங்களின் தகவலுக்காக மட்டுமே:
-=-=-=-=-
'என்றாவது ஒரு நாள்' என்ற நூல் என் கைவசம் இருப்பினும், நேரமின்மையால், மொழிபெயர்ப்பாளர் குறிப்பு + நன்றி அறிவிப்பு என, முதல் 14 பக்கங்களையும் மட்டுமே இதுவரை என்னால் ரஸித்து ருசித்துப் படிக்க முடிந்துள்ளது.
எதையுமே நான் முற்றிலுமாக மனதில் வாங்கிக்கொண்டு, முழுவதுமாகப் படித்து, அது என் மனதில் ஏறினால் மட்டுமே, அடுத்த பக்கத்தினை புரட்டும் பழக்கமுள்ள ஆசாமி நான். அதனால் மட்டுமே படிக்க தாமதமாகிறது. அதிலுள்ள கதைகள் எதையும் இன்னும் நான் படிக்கவே ஆரம்பிக்கவில்லை.
தங்களின் நூல் விமர்சனத்தை இங்கு கண்டதும் ‘என்றாவது ஒரு நாள்’ முழுவதுமாக இதற்கெனவே ஒதுக்கி ‘என்றாவது ஒரு நாள்’ நூலினில் உள்ள கதைகள் அனைத்தையும் படிக்க ஆரம்பித்து விடவேண்டும் என ஓர் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.
-=-=-=-=-
பிரியமுள்ள கோபு
தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி கோபு சார். நேரமும் சூழலும் சாதகமாக அமைந்தால்தான் வாசிப்பில் பிடிப்பு ஏற்படும். இயலும்போது வாசியுங்கள். தங்களுடைய வலைச்சரப்பணியைத் திட்டமிட்டபடி சிறப்பாக செய்துமுடிக்க என் வாழ்த்துகள்.
Deleteஐயா அவர்களின் வலைப் பூவிலேயே விமர்சனத்தைப் படித்தேன் சகோதரியாரே
ReplyDeleteவாழ்த்துக்கள்
விமர்சனைத்தை வாசித்துக் கருத்திட்டமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.
Deleteவிமர்சனத்தைப் படித்து அவர் தளத்தில் கருத்து சொல்லியிருக்கிறேன்! பாராட்டுக்கள் கீதா!
ReplyDeleteவிமர்சனத்தை வாசித்துக் கருத்திட்டமைக்கும் பாராட்டுக்கும் அன்பான நன்றி அக்கா.
Deleteமனம் திறந்த வெளிப்படையான விமர்சனம்...
ReplyDeleteபாராட்டுகள்...
வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
Deleteசகோதரி!
ReplyDeleteவலைப்பூவுலகில் வணங்கத்தக்கவர் அய்யா ஜி.எம்.பி. அவர்கள்
அவரது எழுத்தொளி பட்டு மேலும் மேலும் சிறப்புறும் தங்களது
என்றாவது ஒரு நாள் நூல்.
நூல் அறிமுகம் ஒரு கொடுப்பினை!
நன்றி
நட்புடன்,
புதுவை வேலு
தங்கள் வருகைக்கும் கருத்துரை வழங்கி சிறப்பித்தமைக்கும் நன்றிங்க புதுவை வேலு.
Deleteஅன்பு வலைப்பூ நண்பரே!
ReplyDeleteநல்வணக்கம்!
இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.
முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்
அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
"குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
ஆம்!
கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.
http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form
சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.
தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.
மற்றும்!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
குழலின்னிசை தொடர்ந்து இனிதே ஒலிக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.
Deleteஉங்கள் மொழிபெயர்ப்பு ஆக்கங்களை இணையத்தில் தொடர்ந்து வாசித்து மகிழ்ந்திருக்கிறேன். வாசிக்கும் ஆவலைத் தரும் விமர்சனம்! வாழ்த்துகள் கீதா.
ReplyDeleteஊக்கம் தரும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி ராமலக்ஷ்மி.
Delete