வணக்கம் நண்பர்களே...
தைப்பொங்கலை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்திய மாபெரும் கட்டுரைப் போட்டியில் 'இன்றைய சினிமாவும் சமூக பாதிப்புகளும்' என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட என் கட்டுரை மூன்றாம் பரிசு பெற்றுள்ளது என்பதை, தொடர்பரிசுகளால் மகிழும் இவ்வேளையில் அறிவிப்பதில் மேலும் மகிழ்கிறேன்.
கட்டுரைக்கான கால அவகாசம் கடைசித்தருணத்தில் கவனத்துக்கு வர அவசர அவசரமாக எழுதிப் பதிவிட்டேன். நான் எழுத நினைத்திருந்த இன்னும் சில விஷயங்கள் கட்டுரையில் விடுபட்டுப்போயின என்பதை நண்பர்கள் பின்னூட்டக் கருத்துரைகளின்மூலம் எடுத்துரைத்தபோது உணர்ந்தேன். அனைவருக்கும் என் அன்பான நன்றி.
எடுத்துக்கொண்ட தலைப்பை ஒட்டிய என் எண்ணவோட்டங்களைத் தெளிவாகவே முன்வைத்தேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் உள்ளது. சிந்தனையை செப்பனிடும் வகையில் சிறப்பான களம் அமைத்துக் கொடுத்து, பலருடைய எழுத்துத் திறமையையும் வெளிக்கொணரும் வகையில் நல்லதொரு நட்புணர்வுடன் நடத்தப்பட்ட இப்போட்டியின் மூலம் வலையுலக நட்புறவு பலப்படுத்தப்பட்டிருக்கிறது என்றால் மிகையில்லை.
ஆக்கபூர்வமானதொரு போட்டியை அறிவித்து,
அதை முன்னிறுத்தி சிறப்பாக நடத்திய
சகோதரர் ரூபன் அவர்களுக்கும்
சகோதரர் பாண்டியன் அவர்களுக்கும்
மற்றும் பின்னணியில் உழைத்த
திரு. ரமணி சார் அவர்களுக்கும்
சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும்
மற்றும் பல நண்பர்களுக்கும்
மனமார்ந்த பாராட்டுகள்.
பொறுப்பினைத் திறம்பட வகித்து,
பரிசுக்குரிய கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்துள்ள நடுவர்கள்
கவிஞர் திரு. முத்துநிலவன் அவர்கள்,
கவிஞர் திரு.இராய செல்லப்பா அவர்கள்,
கவிஞர் திரு. வித்யாசாகர் அவர்கள்
அனைவருக்கும் நம் உளப்பூர்வ நன்றி.


பரிசு பெற்ற சக பதிவர்களுக்கும், கலந்துகொண்ட அனைவருக்கும் இதயப்பூர்வ நல்வாழ்த்துக்கள்.
பதிவர் திறமையை மேம்படுத்தச் செய்வதான
முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும்
பதிவுலகின் சார்பில் பாராட்டுகள்!
***************
(படங்கள்: நன்றி இணையம்)
தங்கள் கட்டுரையைப் படித்த போதே
ReplyDeleteநிச்சயம் இது பரிசுக்கானது என நான்
முடிவு செய்துவிட்டேன்
மிகச் சிறந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்த
நடுவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வணக்கம்,
ReplyDeleteநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
உங்களுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தோழி .
ReplyDeleteகட்டுரைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றதற்கு
ReplyDeleteஇனிய நல்வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!
பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்கள் எழுத்து என்றுமே சோடை போனதில்லை. மேலும் உங்கள் பதிவுகளில் நீங்கள் எடுத்தாளும் பொருள் கூட உங்கள் பொறுப்புணர்ச்சியைக் காட்டும் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி...
ReplyDeleteஉங்கள் விருப்பம் விரைவில் என் பகிர்வில்...
மிகமிக மகிழ்வுடன் என் நல்வாழ்த்துகள் கீதா... இன்னும் பல சிகரங்கள் நீங்கள் எட்டக் காத்திருக்கின்றன.
ReplyDeleteபரிசு பெற்றமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் கீதமஞ்சரி.
ReplyDeleteமகிழ்வுடன் மனமார்ந்த வாழ்த்துகள்!
ReplyDelete@Ramani S
ReplyDeleteதங்கள் வாழ்த்துக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்.
@நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
ReplyDeleteமிக்க நன்றி.
@அம்பாளடியாள் வலைத்தளம்
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பான நன்றி தோழி.
@இராஜராஜேஸ்வரி
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் அன்பான நன்றி மேடம்.
@டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி முரளிதரன்.
@G.M Balasubramaniam
ReplyDeleteதங்கள் வாழ்த்துக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் மனம் நிறைந்த நன்றி ஐயா.
@திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteவாழ்த்துக்களுக்கும் விரைவில் என் ஐயம் தீர்த்து பகிரவிருக்கும் தகவல்களுக்கும் மனமார்ந்த நன்றி தனபாலன்.
@பால கணேஷ்
ReplyDeleteதங்கள் அன்பான வாழ்த்துக்கு உளமார்ந்த நன்றி கணேஷ்.
@வெங்கட் நாகராஜ்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி வெங்கட்.
@கே. பி. ஜனா...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
இதோ இணைப்பு :
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2014/04/how-to-add-mp3-in-blogger.html
பரிசு வென்றமைக்கு வாழ்த்துக்கள் கீதமஞ்சரி.
ReplyDelete@திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteமனமார்ந்த நன்றி தனபாலன். செய்முறைகள் அனைத்தையும் செய்திருக்கிறேன். விரைவில் பதிவில் பயன்படுத்துகிறேன். மிக மிக நன்றி தங்களுக்கு.
@புவனேஸ்வரி ராமநாதன்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்.