சிறுநதியொன்றின் சன்னப் பிரவாகத்தில்
என் விருப்பமின்றியே கொண்டு சேர்த்தது
காலம்.
கரடுமுரடாய்க் கிடந்து முரண்டுபிடித்த
என்னை
வாரியணைத்தும் வருடிக்கொடுத்தும்
வாழ்க்கைப் பாடங்களைக்
கற்றுக்கொடுக்கிறது ஆறு.
நிலைகொண்டால் பாசத்துக்காளாகி பாழாவாய்,
ஓடிக்கொண்டிருந்தால் மட்டுமே
உருப்படுவாய்
என்று செவியோரம் போதித்தபடி
ஓடிக்கொண்டிருக்கும் அதன் கூடவே
உருண்டோடி உருப்பெறுகிறேன் நான்.
ஈரிரண்டு எடுக்கவே இலந்தை
பழுக்கவேயென்று
கழங்காடும் சிறுமியரின்
கையிலாடிமுடித்து
பேருவகையோடு மாளுவேன் ஒருநாள்.
*************
படம் உதவி; இணையம்
ஓடிக்கொண்டிருந்தால் மட்டுமே உருப்படுவாய்
ReplyDeleteஎன்று செவியோரம் போதித்தபடி
ஓடிக்கொண்டிருக்கும் அதன் கூடவே
உருண்டோடி உருப்பெறுகிறேன் நான்.
எண்ணங்கள் எங்கெங்கோ ஓட்டம் பிடித்தன சகோ.
நல்ல கவிதை.
ReplyDeleteஆஹா! என்ன அற்புதமான கவிதை!
ReplyDeleteபோதனை எத்தனை எளிமையாய்! நகர்ந்து செல்லும் நதியின் ஆழமாய்!
நிலைகொண்டால் பாசத்துக்காளாகி பாழாவாய்,
ReplyDeleteஓடிக்கொண்டிருந்தால் மட்டுமே உருப்படுவாய்
அற்புதமான கவிதை
குறிப்பாக இறுதி வரிகள்
மனம் தொட்ட கவிதை
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 1
ReplyDeleteநிலைகொண்டால் பாசத்துக்காளாகி பாழாவாய்,
ReplyDeleteஓடிக்கொண்டிருந்தால் மட்டுமே உருப்படுவாய்
என்று செவியோரம் போதித்தபடி
ஓடிக்கொண்டிருக்கும் அதன் கூடவே
உருண்டோடி உருப்பெறுகிறேன் நான்.//
இரசித்தேன்! அருமை!
மனிதா
ReplyDeleteதொடர்ந்து இயங்கு
இல்லையேல் துருப்பிடித்து
இந்த உலகில்
தொலைந்து போவாய்!
- எங்கோ என்றோ படித்த இந்த கவிதைதான் நினைவுக்கு வருகிறது தங்களது கவிதையைக் கண்டவுடன். அருமையான சொற்பிரவாகம்... உணர்வுகளை வருடிச் செல்கிறது. இலட்சியக் கனவையும் ஊட்டுகிறது. அருமை. வாழ்த்துக்கள்!
நல்ல கவிதை கீதம்ஞ்சரி.
ReplyDeleteஆறு போல் ஓடிக்கொண்டு இருக்க வேண்டும்.
குட்டையாக தேங்கி விட்டால் ஆபத்து.
கழங்காடும் சிறுமியரின் படம் அருமை யார் வரைந்தது?
இந்த விளையாட்டு எல்லாம் இப்போது பல குழந்தைகளுக்கு தெரியாது.
என் அம்மா இந்த விளையாட்டுக்கு பாட்டு வைத்து இருந்தார்கள் அந்த காலத்தில் பாடிக் கொண்டு ஆடுவார்கள் .
முடிவு வரிகள் மிகவும் அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteபேருவகை கொள்ள வைத்தது கவியழகு!
ReplyDeleteவிளையாட்டாய் கற்பித்த வாழ்க்கை பாடமெல்லாம் வழக்கொழிந்து போச்சே!
நினைவடுக்கில் அப்பாடல்களை துழாவுகிறது மனவோட்டம். கையில் சிக்காமல் நழுவி நழுவி... பிடித்துவிடலாம் ஒருநாள்... பிடித்து விடுவோம்.
கீதமஞ்சரி அக்கா....
ReplyDeleteநீங்களும் கியுபிஸ கவிதை எழுதுகிறீர்களோ என்று யோசித்துத் திரும்ப படித்துப்பார்த்தேன்.
அருமை அருமை.
ஆற்றில் அடித்துச்செல்லப்படும் கல்லை
உவமானமாக வைத்து வாழ்வின் அமைப்பை நுழைத்து அமைத்திருக்கும் கவிதையில் உங்களின் நுண்ணறிவைக் கண்டு வியக்கிறேன்.
வாழ்க!
என்னுடைய வலைப்பக்கத்தில் உதயம், கற்காலம் குறுங்கவிதைகள்! முடிந்தால் வருகை தாருங்கள்!நன்றி!
ReplyDelete
ReplyDeleteIF YOU REST, YOU WILL RUST. வெகு அழகாக இயல்பாய் சொல்லிவிட்டீர்கள். முத்தாய்ப்பாக கழங்காடு கல் எனக் கூறி இருக்கிறீர்கள். சிறுமிகள் விளையாடுவது பார்த்திருக்கிறேன். பாட்டெல்லாம் கேட்டதில்லை. முடிந்தால் அப்பாட்டை எழுதலாமே. வாழ்த்துக்கள்.
"ஓடிக்கொண்டிருக்கும் அதன் கூடவே
ReplyDeleteஉருண்டோடி உருப்பெறுகிறேன்.
எண்ணக் கரு அருமை.
ம்ம்ம் ..நல்ல கவிதை
ReplyDeleteவாழ்க்கை ஆற்றில் அனுபவ நீரால் மனிதக்கல் என்படி உருவாகிறது என்பதை,மிக அழகிய கவிதை ஆக்கிய தங்களை வியந்து பாராட்டுகிறேன்!
நல்லதொரு கவிதை.
ReplyDeleteஆஹா.... என்ன வியப்பு. என் மனதில் ஓடிய எண்ணங்கள் இங்கே புலவர் சா.இராமாநுசம் சாரின் எழுத்தில் பதிந்திருக்கக் காண்கிறேன். ஆகவே அதையே நானும் வழிமொழிகிறேன் தோழி.
ReplyDeleteஅக்கா தங்களோடு ஒரு விருதினை பகிர்ந்துள்ளேன்! அதை ஏற்றுக்கொள்ள தங்களை எனது வலைப்பூவிற்கு அழைக்கிறேன்!
ReplyDeletehttp://dewdropsofdreams.blogspot.in/2012/10/2.html
ஈரிரண்டு எடுக்கவே இலந்தை பழுக்கவேயென்று
ReplyDeleteகழங்காடும் சிறுமியரின் கையிலாடிமுடித்து...
அருமை கீதமஞ்சரி
இங்கு கருத்திட்டு உற்சாக ஊக்கமும் பாராட்டும் அளித்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றி. சில பொறுப்புகளை நிறைவேற்றவேண்டிய நிமித்தம் எனக்கு கால அவகாசம் தேவைப்படுவதால் இன்னும் சில மாதங்களுக்கு என் வலைப்பக்கம் என்னால் முன்போல் வர இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். முடியும்போது நண்பர்களின் வலைத்தளம் பார்வையிடுகிறேன். அனைவரின் அன்புக்கும் நன்றி. சிறிய இடைவேளையின் பின் சந்திப்போம்.
ReplyDeleteஅருமை
ReplyDeleteநல்லதொரு கவிதை
நேரமிருந்தால் இங்க வாங்க
http://alakinalaku.blogspot.com/
ஆஹா! என்ன ஒரு அழகுக் கவிதை!!
ReplyDeleteகூழாங்கல்லோடு வாழ்க்கையைப் பொருத்திப் பார்க்க ஒரு கவியுள்ளத்தால் தான் முடியும்.
கீதா,உங்களை மிஸ் பண்ணப் போகிறோம். விரைவாக வாங்கோ! காத்திருக்கிறோம்
கழங்காடிய காலங்கள் நினைவுக்கு வருகிறது.... ஓட ஓடத் தான் வாழ்க்கை பிடிபடுகிறது...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_14.html) சென்று பார்க்கவும்...
நன்றி...
சிறுவயது ஆங்கிலப் பாடத்தில் படித்த "ஒரு கூழாங்கல்லின் கதை " நினைவுக்கு வருகிறது.
ReplyDeleteமீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றிய அருமையான கவிதை
பாச வலை உன்னை அப்படியே தேங்க வைத்து விடும், ஓடிக்கொண்டேயிருப்பது மட்டுமே துருப்பிடிக்காது உன்னைக் காப்பாற்றும் என்ற அர்த்ததுடன் சொல்லும் கவிதை வரிகள் மிக அருமை கீதமஞ்சரி!
ReplyDeleteகழங்காடும் சிறுமியரின் கையிலாடிமுடித்து
ReplyDeleteபேருவகையோடு மாளுவேன் ஒருநாள்.
கழங்காடு கல்லென்வே ரசிக்கவைத்த கவிதை !
//ஈரிரண்டு எடுக்கவே இலந்தை பழுக்கவேயென்று//
ReplyDeleteநானும் ஆடியிருக்கிறேன் சிறு வயதில்...
கூழாங்கல் தொலைந்து போகலாம் .. ஆனால் வெகு காலம் இருக்கும்..
எளிமையான வரிகளில் கவிதை சிரிக்கிறது
பவழ மல்லிப் பூவாய்..
வாழ்த்துக்கள்!
நிலைகொண்டால் பாசத்துக்காளாகி பாழாவாய்,
ReplyDeleteஓடிக்கொண்டிருந்தால் மட்டுமே உருப்படுவாய்
என்று செவியோரம் போதித்தபடி
ஓடிக்கொண்டிருக்கும் அதன் கூடவே
உருண்டோடி உருப்பெறுகிறேன் நான்.
அருமையான வரிகள்
''...வாரியணைத்தும் வருடிக்கொடுத்தும்வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறது ஆறு...''
ReplyDeleteteaching of life..good! congratz!
Vetha.Elangathilakam.
வணக்கம்!
ReplyDeleteதங்களது ஒரு பதிவினை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்! தங்களுக்கு நேரம் கிடைக்கையில் வலைச்சரம் வரும்படி அழைக்கிறேன்!
http://blogintamil.blogspot.in/2012/11/7_25.html
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/7_25.html) சென்று பார்க்கவும்... நன்றி...
வணக்கம் சகோதரி...
ReplyDeleteஇன்னொரு முறை சிறப்பாக உங்களின் தளம், வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...
நலமா sis ? என்ன சத்தத்தைக் காணோமே?
ReplyDeleteஇனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
தங்களின் படைப்பை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன். வாருங்கள் மேடம்!http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_20.html நன்றி!-காரஞ்சன்(சேஷ்)
ReplyDeleteஉங்கள் தோழமையை நிறைய மிஸ் பண்ணுகிறோம். புது வருஷத்தோடேனும் நேரம் கிட்டக் கூடுமா தோழி?
ReplyDeleteஇனிய புது வருட நல்வாழ்த்துக்கள். புது வருஷம் உங்களை எங்களிடம் அழைத்து வரட்டும்!
தங்கள் வரிகளை காணாது வாடிக்கிடக்கிறேன்.
ReplyDeleteஎன்று வருவீர்கள் சகோ.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
super
ReplyDelete
ReplyDeleteஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு
01.01.2013
kambane2007@yahoo.fr
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDelete2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
ReplyDeleteவணக்கம்!
பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
எங்கும் அளிக்கட்டும் ஈந்து!
அழகான கவிதை ..
ReplyDeleteஇதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
//கரடுமுரடாய்க் கிடந்து முரண்டுபிடித்த என்னை
ReplyDeleteவாரியணைத்தும் வருடிக்கொடுத்தும்
வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது ஆறு.//
அழகான கவிதைக்குப் பாராட்டுக்கள்