27 June 2012

அது....





உள்ளங்காலை உரசியபடியே

கூச்சம் உண்டாக்கிய அதை

அக்கணமே உதறிவிடாதது

என் தவறென்றுதான் சொல்லவேண்டும்!


சிந்தனை மழுங்கலால் அப்பரிசத்தை

சிறுபிள்ளையின் கைத்துழாவல் என

சிலபோது சிலிர்த்துநின்றேன்!


சுற்றிச்சுற்றி வந்து

தன் மென்ரோமங்களால் பாதம் உராயும்

செல்லப்பூனையின் பாசவெளிப்பாடெனவும்

தவறாய் நினைத்துவிட்டேன்!


மெல்லத் தவழ்ந்து மேலேறியபோதாவது

சற்றே விழிப்புற்று தந்திரமாயேனும்

தரையிறக்கிவிட்டிருக்கவேண்டும்!


சரியாக கணித்திராதது என் மடத்தனமே!


காட்டுக்கொடியென கணப்பொழுதில்

கால்களில் பற்றிப்படர்ந்து இடையை ஆக்கிரமித்த

அதன் இரும்புப்பிடியைக்கூட

இடுப்புக்குழந்தையின் இறுக்கிய கால்பின்னலென்றே

கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன்!


கொஞ்சம் கொஞ்சமாய் என் நெஞ்சக்கூட்டின் மீதமர்ந்து

நிதானமாய் என் கழுத்தைக் கவ்வியபோதுதான்

கவனிக்க நேர்ந்தது,

அதன் கடுமையான ஆக்ரோஷத்தை!


அவதானிக்கும் முன்பாகவே

அழுத்தி என் குரல்வளை நெரித்து

என் மூச்சடக்கி அதுவும் போதாதென்று

ஆரவாரமாய் என் உச்சந்தலைமயிரைப் பிடித்துலுக்கியும்,

கோரப்பல் காட்டியும் கும்மாளம் போடுகிறது அது!


நினைவு மங்கிச்சாயும் என் இறுதித் தருணங்களிலும்

ஒரு கவிதை தோன்றக் காரணமானதால்

அப்போதும் அதனைச் சபிக்காமல்

வாளாவிருக்கிறேன்!

*****************

படம் உதவி: இணையம்

53 comments:

  1. அது எது தோழி இத்தனை நடந்தும் விடமுடியாத அதை வாழ்த்துகிறேன் இப்படி ஒரு கவிதை பிறக்க காரணமென்பதால் .............உள்ளுரை உலுக்கும் உரை

    ReplyDelete
    Replies
    1. முதல் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சரளா.

      Delete
  2. ''அது''
    வரம்பு மீறல்

    கவிதை ம்ம்ம் அருமை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் நன்றி செய்தாலி.

      Delete
  3. அருமை சகோ.!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி வரலாற்று சுவடுகள்.

      Delete
  4. நினைவு மங்கிச்சாயும் என் இறுதித் தருணங்களிலும்
    ஒரு கவிதை தோன்றக் காரணமானதால்
    அப்போதும் அதனைச் சபிக்காமல்
    வாளாவிருக்கிறேன்!//

    நமக்குக் கட்டுப்பட்டது முதல்
    எதற்கும் கட்டுப்படாததுவரை
    அனைத்தையும் மிக நேர்த்தியாக
    ஞாபகப் படுத்துப் போகுது "அது "
    அதுதான் இந்தப் படைப்பின் சிறப்பு
    மனம் கவர்ந்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ஆழ்ந்த விமர்சனக் கருத்துக்கும், தமிழ்மண வாக்குப்பதிவுக்கும் மிகவும் நன்றி ரமணி சார்.

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. படத்தேர்வு வெகு அருமை.

    ஒரு பட்டாம் பூச்சி போலவும், அதே சமயம் ஒரு பெண் நீரில் தன் கால் பாதங்களை நனைத்துக்கொண்டு, முக்காடுபோட்ட தன் தலையைக் கவிழ்த்துக்கொண்டு, எதையோ இழக்கக்கூடாத ஒன்றை தெரிந்தே பறிகொடுத்தது போல அமர்ந்திருப்பது ...........

    ”அது” பற்றிய தங்களின் அருமையான கவிதைக்கு இன்னும் ஒரு அழுத்தத்தைக் கொடுப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

    பாராட்டுக்கள்.
    vgk

    ReplyDelete
    Replies
    1. கவிதையோடு படத்தையும் இணைத்து ரசித்தமைக்கு மிகவும் நன்றி வை.கோ.சார். கவிதைக்கானப் படத்தை இணையத்தில் தேடிப்பிடித்தபோது அடைந்த மகிழ்வினும் அதிகமாய் மகிழ்கிறேன். தங்கள் வருகைக்கும் புரிதலுடனானப் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி.

      Delete
  7. அதுவோ எதுவோ.. கவிதை இது..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகானப் பின்னூட்டத்துக்கும் நன்றி கோவி.

      Delete
  8. அது எதுவாக இருந்தாலும், அதன் காரணமாய் படைத்த கவிதை அற்புதம்....

    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கவிதையை ரசித்து வாழ்த்தியமைக்கும் நன்றி வெங்கட்.

      Delete
  9. // காட்டுக்கொடியென கணப்பொழுதில்

    கால்களில் பற்றிப்படர்ந்து இடையை ஆக்கிரமித்த

    அதன் இரும்புப்பிடியைக்கூட

    இடுப்புக்குழந்தையின் இறுக்கிய கால்பின்னலென்றே

    கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன்!//

    கற்பனையும் உவமையும் அற்புத ஓவியம்

    சா இராமாநுசம் த ம ஓ 3

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி ஐயா

      Delete
  10. பல சூழ்நிலைகள் இப்படித்தான் வளர்ந்து இறுதியில் நம் கையை மீறிச் சென்றுவிடுகின்றன.

    எல்லை மீறிய பின்னும் ஒரு கவிதைக்காய் அதை விட்டுக்கொடுப்பதற்கு அசாத்ய தைரியம்தான் கீதமஞ்சரி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகானப் புரிதலுடனானப் பின்னூட்டத்துக்கும் உளமார்ந்த நன்றி சுந்தர்ஜி.

      Delete
  11. அது என்பது எது என்று புரியாதவரை எந்தக் கருத்தும் சொன்னால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்குமா என்பது சந்தேகமே SOME ABSTRACT THINKINGS, SOME TIMES DO NOT ELICIT THE RIGHT REACTIONS. BECAUSE IT IS VERY SUBJECTIVE. மற்றபடி எழுத்தும் எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்தும் நடையும் ரசிக்க வைக்கின்றன. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் நன்றி ஐயா. இங்கே அது என்பதை அவரவர் மனநிலை, சூழலுக்கேற்ப எதையும் கொள்ளலாம். நட்பு, காதல், உறவு, அன்பு எவ்வுணர்வும் வரையறை மீற ஆளுமை, சந்தேகம், குரோதம் என்று எதிர்மறையாய் முடியும் ஆபத்திருக்கிறதே...

      Delete
  12. அது எதுவாக வேண்டுமான◌ாலும் இருந்து விட்டுப் போகட்டும் . நானும் சபிக்காமல் விடுகிறேன் கவி பிறந்ததால்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசனையானப் பின்னூட்டத்துக்கும் நன்றி சசிகலா.

      Delete
  13. Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

      Delete
  14. அது எது என்று அர்த்தம் கற்பித்துக் கொள்வதற்கு அவரவர் வாழ்க்கை அனுபவங்களே அளவுகோல். நான் உணரும் அது மற்றொருவர் உணரும் அதுவும் வேறாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அழகான ஒரு கவிதையை உணர்ந்து ரசிக்க முடிந்தது என்பதில் அனைவரின் கருத்தும் ஒன்றாகத்தான் இருக்கும் கீதா. சூப்பர்ப்.

    ReplyDelete
    Replies
    1. அழகானப் புரிதலுக்கும் அருமையான விமர்சனத்துக்கும் மனமார்ந்த நன்றி கணேஷ்.

      Delete
  15. Anonymous29/6/12 02:44

    ...நினைவு மங்கிச்சாயும் என் இறுதித் தருணங்களிலும்


    ஒரு கவிதை தோன்றக் காரணமானதால்


    அப்போதும் அதனைச் சபிக்காமல்


    வாளாவிருக்கிறேன்!...''
    எனக்குப் புரியவில்லை.....சகோதரி...
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. மனதில் பட்டதை வெளிப்படுத்தியமைக்கு நன்றி தோழி. இங்கே அது என்பது மனோநிலை, சூழல், சுற்றம் எதையும் குறிக்கக்கூடும். எதுவும் நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்வரை சுகம். நாம் தன்னிலை மறந்து அதன் கட்டுக்குள் வந்துவிட்டால் சோகம்தானே...

      Delete
  16. //நினைவு மங்கிச்சாயும் என் இறுதித் தருணங்களிலும்
    ஒரு கவிதை தோன்றக் காரணமானதால்
    அப்போதும் அதனைச் சபிக்காமல்
    வாளாவிருக்கிறேன்!//
    மிக அருமையான கவிதை!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி நண்பரே.

      Delete
  17. Replies
    1. வருகைக்கும் ரசித்துப் பாராட்டியமைக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  18. அணைத்து வரிகளும் அருமை சகோ.. படித்தவுடன் உணரும்படியாக உள்ளது..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசித்துப் படித்தமைக்கும் மிகவும் நன்றி சேகர்.

      Delete
  19. Replies
    1. வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி சீனி.

      Delete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.

    ReplyDelete
  22. வருகைக்கும் ரசனையானப் பின்னூட்டத்துக்கும் நன்றி சசிகலா.

    ReplyDelete
  23. அழகிய கவிதை கீதமஞ்சரி அவர்களே.மிகவும் நன்று.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசித்தமைக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.

      Delete
  24. வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக பொருள் படும் விதத்தில் அமைந்த அழகான குறியீட்டுக் கவிதை. நீ எழுதிய கவிதைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்த கவிதை இதுவே.
    பாராட்டுக்கள் கீதா!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி அக்கா.

      Delete
  25. வணக்கம் சகோதரி..
    சில நாட்களுக்கு முன் நண்பர் ரமணி அவர்களின்
    கவிதை ஒன்று இதே போல அது பற்றி..
    அதன் பிறகு உங்களின் கருத்துக் குவியல்களில்
    என்ன ஓவியங்களில் அது பற்றி இங்கே காண்கிறேன்...

    அது எது என்று
    எண்ணி தேடும் வரையில்
    அது அதுவாக
    இருக்கும் வரையில்
    அது என்றும்
    இனிமையானதே...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துரைக்கும் அழகான விமர்சனத்துக்கும் நன்றி மகேந்திரன்.

      Delete
  26. அருமைங்க கீதமஞ்சரி அக்கா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருணாசெல்வம்.

      Delete
  27. அதன் ‘அத்தனை’ பிடியிலும் சிக்கித் திணறுவதே தனி சுகம் தானே!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகானக் கருத்துக்கும் நன்றி சத்ரியன்.

      Delete
  28. நல்ல பகிர்வு கீதா வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சக்தி.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.