இடித்தலும்
புடைத்தலும் அரைத்தலும்
இன்னபிற
அடுக்களைப்பணி
யாவும்
கையெந்திரம்
விடுத்து மின்னெந்திரமானது.
இடுப்பொடிந்த
காலம் விடுப்பெடுத்துப்போனது.
உடுப்பு
கசங்கா அடுப்பு வேலை கண்டு
உள்ளம்
கசங்கிப்போகும் உருவம் பலவுண்டு.
பொருள்
கொணர அவளும் புறப்பட்டப்பின்னரும்
அருள்கூர்ந்து அடுக்களையேக
அன்பாய்ப் பணிக்கிறது.
அன்று
போல் இன்று அத்தனை ருசியில்லையென்று
தின்றுமுடித்து தினம்தினம்
பாட்டு படிக்கிறது.
கூட்டுக்குள்
புழுவாய் வீட்டுக்குள் முடங்காது
திறமையும்
பெருமையும் உரிமையும் வளர்த்தும்
கூடு
சுமந்தலையும் நத்தை போல் பெண்டிர்
வீடு
சுமந்தலையும் வித்தை கண்டு வியக்கிறது.
&&&&&
(புகைப்படம் - ஆச்சி)
அருமை! என்ன இருந்தாலும் ஒரு பெண் செய்வது போல வருமா என்று சொல்லியே அவள் தலையில் வேலையை சுமத்தும் வித்தை.
ReplyDelete(நானும் இந்த வித்தை கற்றவன், வருத்தத்துடன் ஒத்துக்கொள்கிறேன்.)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. ஒரு செயல் விரும்பி ஏற்கப்படுவதற்கும் வலிந்து சுமத்தப்படுவதற்கும் உள்ள வித்தியாசம் அறிந்தால் யாவும் சுகமே. :)))
Deleteசிறப்பான கவிதை. பாராட்டுகள்.
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி வெங்கட்.
Deleteகாலமும் சரி, சமூகமும் சரி இந்த ஒரு விஷயத்தில் பெண்கள் மேல் கருணை கொள்ளவேயில்லை. /கூடு சுமந்தலையும் நத்தை போல் / அருமையான உவமை.
ReplyDeleteநலம்தானே? நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு. மகிழ்ச்சி.
நலமே ராமலக்ஷ்மி. இனி தொடர்ந்து வர உத்தேசித்துள்ளேன். :)))
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அருமை... தொடர்ந்து வாருங்கள்...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன். தொடர்ந்து வர எண்ணியுள்ளேன்.
Deleteவீடு சுமந்தலையும் விந்தை
ReplyDeleteகூடு சுமந்தலையும் நத்தை! - எத்தனை அழகான உவமை.
பெண் எங்கு போனாலும் அவள் விரும்பியோ விரும்பாமலோ தன்னோடு தன் வீட்டையும் சுமந்து கொண்டுதானே போகிறாள்....எங்கு தொடங்குகிறது இந்த வட்டம்?
பல நாட்களுக்குப் பின் கீதாவை இங்கு கண்டு கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.தொடர்ந்து வாருங்கள்; கீதமஞ்சரியின் தேன் நுகர தேனியாய் நான் காத்திருக்கிறேன்.
\\பெண் எங்கு போனாலும் அவள் விரும்பியோ விரும்பாமலோ தன்னோடு தன் வீட்டையும் சுமந்து கொண்டுதானே போகிறாள்....எங்கு தொடங்குகிறது இந்த வட்டம்?\\ வட்டம் என்பதை விடவும் சுழல் எனலாம். சிக்கியபின் மீள்தல் அத்தனை எளிதல்ல தோழி.
Deleteவருகைக்கும் ஊக்கந்தரும் கருத்துக்கும் அன்பும் நன்றியும் தோழி.
எந்த வேலையையும்மகிழ்வோடு ஏற்கும் பெண் இனத்துக்கு வாழ்த்துகள்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteநத்தை தன் வீட்டை தன் முதுகில் சுமப்பதுபோல் பெண் தன் வீட்டை மனசில் சுமந்தே அலைகிறாள். எந்த நேரத்திலும், எந்த சூழலிலும், எந்த பதவியிலும்...
ReplyDeleteமிகச்சரியான புரிதல். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி.
Deleteமிக மிகச் சிறப்பான கவிதை!
ReplyDeleteதுளசிதரன், கீதா
வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி துளசி சார் & தோழி கீதா.
Deleteஅருமை ...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அனு.
Delete