12 June 2017

சிட்னியில் சித்திரைத் திருவிழா 2017

சிட்னியில் உள்ள தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் கடந்த ஐந்து வருடங்களாக ஒருநாள் கொண்டாட்டமாக சித்திரைத் திருவிழாவை  நடத்திவருகிறது. இருப்பினும் ந்த வருடம்தான் தோழி மணிமேகலாவின் தயவால் பார்த்து ரசிக்கும் கொடுப்பினை அமைந்தது. தோழிக்கும் அன்பும் நன்றியும். 

கடந்த 07-05-2017 அன்று நடைபெற்ற திருவிழாவில் காணுமிடமெலாம் தமிழர் கலாச்சாரம் போற்றும் பாரம்பரிய உடை மற்றும் அலங்காரங்களுடன் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய்.. தமிழ்நாட்டில் இருப்பதைப் போன்ற உணர்வு.. கூடுதலாய் பாரம்பரியக் கொண்டாட்டங்களும் ஆடற்கலைகளும்.. நாசி துளைத்து நாவூற வைக்கும் தமிழர் உணவும்.. செவிக்கு உணவாக செந்தமிழ் சிறப்புரைகளும்...

முத்தாய்ப்பாய்.. தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்து தமது கணீர்க்குரல்களால் கட்டிப்போட்ட திரு. புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருமதி அனிதா குப்புசாமி குழுவினரின் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் தெள்ளிய தமிழ்ப்பாடல்களாலான இசை விருந்து. தமிழ்நாட்டிலிருந்து வந்து பங்கேற்ற மற்றுமிரு சிறப்பு விருந்தினர்கள் எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்களும் சிலம்பாட்டக் கலைஞர் திரு. எல்லாளன் அவர்களும். திருவிழாவின் அங்கமாக தமிழர் வாழ்வியல் சார்ந்த பொருட்காட்சியும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டரங்கும் இடம்பெற்றிருந்தன. அன்றைய காட்சிகளுள் சில இங்கே உங்கள் பார்வைக்கு.. 



படம் 1

படம் 2
குத்துவிளக்கேற்றி பாரம்பரிய முறைப்படி
விழா துவக்கிவைக்கப் பட்டது. 

படம் 3

படம் 4

படம் 5

படம் 6

படம் 7

 படம் 8


படம் 9
புஷ்பவனம் குப்புசாமி தம்பதியினர்

படம் 10


படம் 11


படம் 12


படம் 13


படம் 14
சிலம்பாட்டக் கலைஞர் திரு.எல்லாளன் அவர்கள்


படம் 15
கலாநிதி ஆறு திருமுருகன் ஐயா அவர்கள்.


படம் 16
எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்கள் 

படம் 17
இசைவிருந்துக்கு முன்னரான ஆயத்தம்... 

படம் 18
பொருட்காட்சி அரங்கத்திலிருந்து.. 

படம் 19

படம் 20

படம் 21


படம் 22

படம் 23
தமிழக நாட்டுப்புறக் கலைகள்...

படம் 24
செயலாளர் திரு. அனகன் பாபு அவர்கள்

படம் 25

படம் 26
அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன்.. 

படம் 27
கலை வாரிசு.. 

22 comments:

  1. இந்தச் செய்திகளைக் கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    காட்டியுள்ள படங்கள் அத்தனையும் அழகோ அழகு !

    பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் உடனடி வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோபு சார். தாமத பதிலுக்காய்ப் பொருத்தருள்க.

      Delete
  2. படங்கள் அனைத்தும் ப்ளீச் ப்ளீச்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      Delete
  3. புகைப்படங்களுடன்
    பதிவு மிக மிக அற்புதம்
    நீங்கள் நேரடியாகச் சென்றதால்
    நிச்சயமாக அற்புதமான தொடர் பதிவுகள்
    காணொளி மற்றும் ஒலி நாடாவுடன்
    கிடைக்கச் சாத்தியம் என நம்புகிறோம்
    பதிவுகளை எதிர்பார்த்து...
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் நம்பிக்கைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரமணி சார். காணொளிகளை யூட்யூபில் பதிவேற்றிவிட்டு இணைப்பு தருகிறேன்.

      Delete
  4. ஆஹா படங்கள் மற்றும் கலைக்குழுவினர் பங்குபெற்றோரின்மனதின் சந்தோஷத்தை வெளிப்படுத்துகின்றன ..அந்த சிறுவர் சிறுமியருக்கு என்னே ஆனந்தம் !

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஏஞ்சல்.. ரொம்பவும் உற்சாகத்தோடு ஆடினார்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஏஞ்சலின்.

      Delete
  5. விரிவான தகவல்களுக்கும் படங்களுக்கும் நன்றி ...
    பாரம்பரியத்தை விடாது நினைவு கூர்வது அருமை ...
    பெருமையாக இருக்கிறது
    அமைப்பினருக்கு வாழ்த்துக்களை பதிவு செய்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. அழகான நிகழ்வு.. உண்மையில் எனக்கு நம் ஊரில் இருப்பதைப் போன்றே உணர்வு ஏற்பட்டது. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மது.

      Delete
  6. கொண்டாட்டங்களும் படங்களும் அழகு, சுவாரஸ்யம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete
  7. அழகான படங்களுடன் சித்திரை திருவிழா விவரம் அழகு.

    எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்கள் என் கொழுந்தனார். என் கணவரின் தம்பி.
    (சித்தப்பா, சித்தி மகன்) என் கணவரின் அப்பாவுடன் பிறந்த தம்பி மகன் அவர்கள் அம்மா கணவரின் அம்மாவின் தங்கை.

    முகநூலில் பகிர்ந்து இருந்தார்கள் சிட்னி சித்திரை திருவிழா படங்களை.
    நீங்களும் பகிர்ந்து இருந்தீர்கள் .

    ReplyDelete
    Replies
    1. ஆஹா.. அப்படியா.. மிக்க மகிழ்ச்சி கோமதி மேடம். சார் மிகவும் அருமையாகப் பேசினார். நான் அவரை எடுத்த படத்தோடு இவ்விழா குறித்த செய்தி தமிழ் இந்துவில் வெளியானது மகிழ்வளிக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

      Delete
  8. அழகான படங்களுடன்...அழகிய நிகழ்வு...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் படத்துடன் நிகழ்வினை ரசித்தமைக்கும் நன்றி அனுராதா.

      Delete
  9. கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்பணியாக வெளியூர் சென்றிருந்தேன். தற்போதுதான் வலைப்பக்கம் வரமுடிந்தது. தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம். /// சித்திரைத் திருவிழா சிட்னியில்..அழகான படங்கள்..இவ்வாறான நிகழ்வுகள் நம்மவர்களை ஒன்றுசேர்க்கும். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உண்மை ஐயா.. பலரையும் இவ்விழா மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  10. விழாவை நேரில் பார்த்தது போலிருந்தது, மிகவும் அழகான தெளிவான படங்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நேரில் இன்னும் அதிரசனை அக்கா.. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா.

      Delete
  11. நிகழ்ச்சி வருணனை சிறப்பாக உள்ளது. அனிதா (குப்புசாமி) இளமை மாறாமல், இசையின் இனிமையும் மாறாமல் இருப்பது வியப்பே! கடைசிப்படம் - வாரிசு- அருமையாக உள்ளது. அவர்கள் யாரென்றும் சொல்லியிருக்கலாமே!

    -இராய செல்லப்பா சென்னையில் இருந்து.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்.. இருவரின் குரலும்கூட இன்னமும் அப்படியே இருப்பது கூடுதல் ஆச்சர்யம். கிராமியப் பாடல்களோடு இன்றைய நாட்டுநடப்பையும் தங்கள் பாணியில் சுவைபடப் பாடி அசத்தினார்கள். கடைசிப்படத்தில் இருப்பவர்கள் அங்கே நடந்த நாட்டியநிகழ்ச்சியில் கலந்துகொண்ட தாயும் சேயும். அவர்கள் யாரென்று எனக்குத் தெரியாதெனினும் இந்தக் காட்சி ரசிக்கும்படியிருந்ததால் படம்பிடித்தேன். :)))

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.